Sign in to follow this  
Followers 0
nunavilan

இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று

2 posts in this topic

இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று. அவர் குறித்து எழுதிய கவிதை ஒன்று

கூப்ரூ மலையின் மகள்

மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க
செம் மல்லிகை பூத்திருக்கும்
கூப்ரூ மலையின் மகளே
நெடிய விரத்தினை முடித்து உணவருந்து!

துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில்
இனியும் பசியோடிராதே!

உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள்
ஒவ்வொரு உணவு வேளையிலும்
கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த 
குற்ற மனம் இனியேனும் தணியட்டும்

வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும்
மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும்
இத்தோடு முடிந்துபோக
நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு

நிர்வாணங்களினால் போரிட்ட
மணிப்பூரிகளின் பசியை சுமந்து
வெறு வயிற்றில் கனவு நிறைத்த 
இரும்புப் பெண்ணே
ஏதுமறியாக் குழந்தை போல
மிதமானது உன் இருதயம்.

சாவு விளையாடப்
பசியால் வறண்டு பாலைபோலத் தகித்த 
உன்னுடல் வலிய ஆயுதம்

மரணம் நெருங்க மறுத்து 
தோல்வியை தழுவச் செய்த
கொதித்தடங்கா உன் குரல் பெருந்தீ

தோழியே, குண்டுகளின் உற்பத்திக்கான பூமியில்
இனியும் உன் மெல்லிய இதயத்தால் போரிடாதே

யோனிகளுக்குள் இராணுவக் குறிகளைச் சொருக
துப்பாக்கிகளை நீட்டும் அதிகாரம்
காரணமேதுமின்றிக் கைதாக்கவும்
காணமல் போகச் செய்தலுக்குமாக ஆண் மக்கள்
எதிர்காலம் மாண்ட குழந்தைகள்
எல்லாத் திசைகளிலும் சூரியனை எதிர்பார்க்கும் விழிகள்
துளியேனும் வேறுபாடற்றன நம் நிலங்கள்

எம் பிரியமிகு
கூப்ரூ மலையின் மகளே
திலீபனைப் புதல்வனாய் பெற்ற எம் தேசமறியும்
நெடிதுயிர்த்தவுன் பசி வேட்கையை போக்கியிராதது 
பல்லாண்டுகளின் பின்னரான உணவு

விடுதலைப் பசியில்
உழலும் உன் இருதயம்
¤

இரோம் சர்மிலாவுக்கு

தீபச்செல்வன்

நன்றி: குமுதம்

17309113_10154772856918801_8631978617444

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

நான்கு வார்த்தையோடு முடிந்த இரோம் ஷர்மிளாவின் அரசியல் வாழ்க்கை!
------------------------ --------- --------------------------
கடந்த 2000-ம் ஆண்டு மணிப்பூரில் உள்ள மலோம் என்ற நகரம். திருமண வயது பெண்மணி ஒருவர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருக்கிறார். அவர் ஒரு கவிஞரும் கூட. தட...தடவென ராணுவ வீரர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் அங்கு ஓடி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி சராமரியாகச் சுடுகின்றனர். பத்து இளைஞர்களின் உயிரற்ற உடல் தரையில் பொத்தென்று விழுகிறது. ரத்தம் ஆறாக ஓடுகிறது. அந்த பெண்ணின் கண் முன்னே இந்த சம்பவம் நடக்கிறது. ஏன்.. எதற்கு என்றே தெரியாமல் சக உயிர்கள் செத்து விழுவதைப் பார்த்து பதை பதைக்கிறார் அந்தப் பெண். கண் முன்னே சக உயிர்கள் பறிக்கப்படுவதைக் கண்டு கதறித் துடிக்கிறார். தனது சொந்த மக்களையே எந்தக் கேள்வி கூட கேட்காமல் சுட்டுக் கொல்லும் அந்த அதிகாரத்துக்கு பெயர்தான் ராணுவத்தின் The Armed Forces (Special Powers) Act, or AFSPA எனப்படுவது. இந்தியாவில் மணிப்பூர் உள்பட சில மாநிலங்களில் நடைமுறையில் இந்த சட்டம் இருக்கிறது. யார் மீதாவது சந்தேகம் எழுந்தால்... ஏன்... என்னவென்று விசாரிக்காமல் சுடலாம். அது 12 வயது சிறுவனாக இருந்தாலும் கூட பின்விளைவுகளை பற்றி ராணுவம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பத்து இளைஞர்களும் செத்து மடிந்ததற்கு இந்த சட்டம்தான் காரணம். கொதித்து எழுந்த அந்தக் கவிஞர் அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்தார். அவர்தான் இரோம் ஷர்மிளா ஷானு.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அந்த சிறப்பு சட்டத்தை நீக்க உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். ஒருநாள் இரு நாள் இல்லை. 16 ஆண்டுகள் உண்ணாவிரதம். போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டு மூக்கு குழாய் வழியாக திரவ உணவு மட்டுமே இத்தனை ஆண்டுகள் செலுத்தப்பட்டது. ஆனால், இரோமின் நோக்கத்துக்கு கடைசி வரை வெற்றி கிடைக்கவில்லை.

''நான் உயிருடன் இருக்க விரும்புகிறேன்... உயிர் வாழ ஆசைப்படுகிறேன்... திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்... அன்பு செய்ய விரும்புகிறேன்... எனது உண்ணாவிரதத்தை கைவிடத் தயார். ஆனால், அதற்கு முன், மணிப்பூரில் AFSPA சட்டம் நீக்கப்பட வேண்டுமென டெல்லி நீதிமன்றத்தில் கடைசியாக இரோம் கோரிக்கை வைத்தார். விடிவு காலம் பிறக்கவில்லை. சட்டத்தின் வாயிலாக முடிவு கிடைக்காத நிலையில்தான் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வழியாக அந்தச் சட்டத்துக்கு முடிவு கட்ட ஷர்மிளா எண்ணிணார். மக்களை நம்பி தேர்தல் களத்தில் குதித்தார்.. துபாள் தொகுதியில் மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார். 
ஆனால், இரோமுக்கு கிடைத்ததோ... வெறும் 90 ஓட்டுகள். நோட்டாவுக்கு கூட ஷர்மிளாவை விட அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது. எந்த மண்ணின் மக்களுக்காக 16 ஆண்டுகளாக உண்ணாமல் உறங்காமல் திருமணம் செய்து கொள்ளாமல் இளமையை தொலைத்துப் போராடினாரோ... அதே மக்கள்தான் ஷர்மிளாவின் கனவை கொடூரமாக கொன்று போட்டுள்ளனர்.

மக்கள் மீது நம்பிக்கை வைத்து போட்டியிட்ட இரோம் இப்போது விரக்தியின் உச்சிக்கே சென்றிருக்கிறார். ராணுவத்தை எதிர்த்துப் போராடிய போது வராத கண்ணீர் இரோமின் கண்களில் இப்போது வழிகிறது. அந்த விரக்தி அவரது ரசிகர்கள் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்திலும் தெரிகிறது. 'அந்த 90 பேருக்கு நன்றி' என்கிறது அந்த வேதனைப் பேஸ்புக் பதிவு, ' இன்னொரு முறை அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கவே மாட்டேன் என்கிற அந்த முகத்தில் எத்தனை வேதனை.

அமான்மணி... மனைவியை கொலை செய்த வழக்கில், சிறை சென்றவர். சிறையில் இருந்தவாறே உ.பி. தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகியுள்ளார். முப்தார் அன்சாரி... இவர் யார் தெரியுமா... மாஃபியா கும்பல் தலைவர்... சிறையில் இருக்கும் இவருக்கும் மக்கள் வெற்றி மாலை சூடியுள்ளனர். இப்படி... குற்றப்பின்னணியுள்ள 143 பேர் உ.பி.யில் தற்போது எம்.எல்.ஏ ஆகியிருக்கின்றனர்.

பதினாறு ஆண்டுகாலம் போராடிய அந்த கவிஞரின் போராளியின் அரசியல் வாழ்க்கையை' 'thanks for 90 votes' என்ற வார்த்தையுடன் முடித்து வைத்திருக்கிறார்கள் ஜனநாயக வாதிகள்,

- எம்.குமரேசன்1f4dd.png📝

Image may contain: 1 person, sitting and indoor

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0