Jump to content

வீகன் டயட் நலம் வாழ நனி சைவம்


Recommended Posts

வீகன் டயட் நலம் வாழ நனி சைவம்

 

ht445004.jpg

நன்றி குங்குமம் டாக்டர்

திடீர் மினி தொடர்

தொடங்கும் முன்...இணையதளங்களைப் பயன்படுத்துவோர் மட்டுமே அறிந்திருந்த ‘பேலியோ உணவுமுறையை, விரிவான அட்டைப்பட கட்டுரையின்மூலம் தமிழ் வாசகர்களுக்குப் பரவலாகக் கொண்டு சேர்த்த முதல் தமிழ் ஊடகம் ‘குங்குமம் டாக்டர்’தான்
என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.அதேபோல், சமீபகாலமாக அடிக்கடி கேள்விப்படும் ‘வீகன் டயட்’ பற்றிய ஒரு புரிதலை வாசகர்களுக்கு ஏற்படுத்துவதற்காகவே இந்த திடீர் மினி தொடர்.

இதனால், குறிப்பிட்ட உணவுமுறையை வாசகர்களுக்கு ‘குங்குமம் டாக்டர்’ பரிந்துரைக்கிறது என்று அர்த்தம் இல்லை. உணவுப்பழக்கம் என்பது தனிநபரின் உடல்நிலை, வாழ்க்கைமுறை, விருப்பம் போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையிலானது. முக்கியமாக மருத்துவ ஆலோசனை இல்லாமல் எந்த உணவுமுறையையும் யாரும் பின்பற்றக் கூடாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். ஆம்... வீகன் என்ற உணவுமுறை பற்றிய அறிமுகத்துக்காகவே இந்த தொடர்.

இனி வீகன் டயட் பற்றி டாக்டர் சரவணன் பேசுகிறார்...‘‘உங்கள் உணவு தவறாக இருந்தால் மருந்துகளினால்கூட பயனில்லை; உங்கள் உணவு சரியாக இருந்தால் மருந்துகள் தேவைப்படுவதில்லை'’ என்கிறது பழமொழி ஒன்று. ஹோமியோபதி மருத்து வத்தில் பட்டம் பெற்ற நான், வீகன் டயட் குறித்து பேசுவதற்கு காரணம் எனது சொந்த அனுபவம்தான்.

சிறுவயது முதல் பல உடல் உபாதைகளால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். பலவிதமான மருத்துவ சிகிச்சைகளாலும் பலனில்லை. 2011-ம் ஆண்டு ‘வீகன் டயட்’ குறித்த புத்தகங்கள் பலவற்றை வாசித்துத் தெரிந்துகொண்டேன். வீகன் டயட் குறித்த கருத்தரங்கில் ஆர்வத்துடன்
கலந்துகொண்டேன். அதன் பின்னர் வீகன் டயட்டைப் பின்பற்ற ஆரம்பித்தேன்.

எனது உடல்நலத்தில் நல்ல மாற்றங்களை உணரத் தொடங்கினேன். உடல்நலத்துக்கான சரியான உணவு வீகன் டயட்தான் என்பதை உணர்ந்தேன். வீகன் உணவியல் குறித்து மருத்துவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்றேன். வீகன் உணவு குறித்த பல அறிவியல் ஆய்வுகள் குறித்தும், வீகன் உணவினால் நோய்களை சரி செய்யும் முறை குறித்தும் தெளிவாக அறிந்து கொண்டேன்.

வீகன் உணவு குறித்த ஆய்வுக்கு கட்டுரைகளையும், புத்தகங்களையும் ஆழ்ந்து படித்தபிறகு உணவுக்கும் நோய்க்கும் உள்ள தொடர்பினை நன்கு அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் பலவிதமான நோய்களினால் பாதிப்படைந்துள்ளவர்களுக்கு வீகன் உணவு குறித்த ஆலோசனைகளை தற்போது வழங்கி வருகிறேன். இந்த உணவு முறையினைப் பின்பற்றி பலரும் நலமடைந்து வருவதையும் காண்கிறேன்.

உலகம் முழுவதும் வீகன் உணவுமுறை மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஹாலிவுட், பாலிவுட், பிரபலங்கள் பலரும் வீகன் டயட்டைப் பின்பற்றி வருகின்றனர். இவர்கள் மட்டுமா? தென்னிந்திய திரை நட்சத்திரங்களான அமலா நாகர்ஜுனாவும், பார்வதி மேனனும்கூட வீகன்ஆதரவாளர்கள்தான்!ஒலிம்பிக் புகழ் கார்ல் லூயிஸ், ஓட்டப்பந்தய வீராங்கனை ரூத் ஹேட்ரிச்,  550  கிலோ எடை  தூக்கி சாதனை புரிந்த உலகின்மிக வலிமையான மனிதர் பாட்ரிக் பாபோமியன் என வீகன் வீரர்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது.

விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களது உடல் வலிமையை இயற்கையான முறையில் அதிகரித்துக்கொள்ள இந்த உணவுமுறைக்கு மாறி வருகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளில், பிரிட்டனில் வீகன் உணவு மற்றும் வாழ்க்கைமுறையினைத் கடைப்பிடிப்பவர்களது எண்ணிக்கை 360 % உயர்ந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் வீகனாக  இருப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 மில்லியன் என்கிறது ஒரு புள்ளி விபரம். நம் நாட்டிலும் பலர் இந்த உணவுமுறைக்கு வேகமாக மாறிவருகிறார்கள்!

அது மட்டுமா? உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சில வகைப் புற்றுநோய்கள் வராமல் தடுப்பதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் மருத்துவர்கள் பலரும் இந்த வீகன் டயட்டினை தங்களது நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர்!அப்படி என்னதான் இருக்கிறது வீகன் உணவுமுறையில்? இந்த வீகன் டயட் ஆரோக்கியமானதுதானா? நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றா? இந்த டயட்டின் அறிவியல் பின்னணி என்ன? இதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன?

(தெரிந்து கொள்வோம்!)

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=11&Nid=5362

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

வீகன் டயட் நலம் வாழ நனிசைவம்

 

ht445052.jpg

நன்றி குங்குமம் டாக்டர்  

திடீர் மினி தொடர்

வீகன் டயட் முறையினை நனி சைவமென்றும் நற்சைவமென்றும் அழைக்கிறார்கள். நனி சைவ உணவுமுறை பல நூறு வருடங்களுக்கு முன்பே சிலரால் பின்பற்றப்பட்டு வந்துள்ளதாக அறிகிறோம். இது மேலைநாட்டு உணவுப்பழக்கமாகத் தோன்றினாலும், நம் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சமண சமய சான்றோர் பலரும் இதற்கு முன்னோடிகளாக விளங்கியவர்கள்.

வீகன் உணவுமுறையில் இறைச்சி, மீன், முட்டை, பால் மற்றும் பால் பொருட்கள், தேன் போன்றவற்றைத் தவிர்த்து தாவர உணவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட உணவுமுறையாகும். விலங்கினங்களிடமிருந்து பெறப்படும் எதுவும் வீகன் உணவில் கிடையாது.

டாக்டர் வில்லியம் லாம்பே(1765 -1848) என்பவர்தான் வீகன் உணவியலின் தந்தையாகக் கருதப்படுபவர். 1806-ம் வருடம் இவர் தனது 41-வது வயதில் அசைவம், பால் மற்றும் பால் பொருட்கள், தேன் போன்றவற்றைத் தவிர்த்து காய், கனிகள், தானியங்கள் போன்ற தாவர உணவுகளை மட்டுமே உண்ணத் தொடங்கினார். சுத்தமான தண்ணீரையும் அருந்தி வந்தார்.

அனுபவத்தில் நல்ல மாற்றங்கள் கண்டபிறகு இந்த உணவுமுறையினை நோயாளிகளுக்கும் பரிந்துரைத்தார். தண்ணீரும் தாவர உணவுகளும் பற்றிய அவரது புத்தகத்தில் ‘பூமியிலிருந்து விளையும் தாவர உணவுகள் மட்டுமே மனித உடலுக்கு ஏற்ற உணவுகளாகும்’ என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து 1874-ம் ஆண்டு டாக்டர் ரசல் டிரால் தாவர உணவுகள் குறித்த சமையல் புத்தகத்தினை வெளியிட்டார்.

‘வீகன்’ என்ற பெயரைக் கொடுத்து பிரபலப்படுத்தியவர்கள் டொனல்ட் வாட்சன் மற்றும் இவரது துணைவியார் டாரதி மோர்கனும்தான். 1944-ம் ஆண்டு பர்மிங்ஹாமில் வாட்சன் ‘வீகன் சொசைட்டி’யினை நிறுவினார். வாட்சன் வீகன் வாழ்வியலின் தந்தையாகப் போற்றப்படுகிறார். அதன் பின்னர் ‘வீகன் டயட் படிப்படியாக பிரபலமடையத் தொடங்கியது.

சரி... மனிதனின் இயற்கையான உணவு எது?மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கத்தை கூர்ந்து கவனித்தால், இயற்கை
மனிதனுக்கு விதித்துள்ள உணவு எதுவென்று தெளிவாக விளங்கும். ஊனுண்ணி, அனைத்துண்ணி மற்றும் தாவரவுண்ணி விலங்குகளுடைய உடல் அமைப்பையும் மனித உடல் அமைப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு தெளிவு கிடைக்கும். நாம் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டுமென்று புரிய வரும்.

மாமிச உணவுகளை உண்ணும் விலங்குகளைப் போன்ற கூர்மையான பற்களோ, நகங்களோ, தாடை அமைப்போ மனிதர்களுக்கு இல்லை. மேலும், மனித இரைப்பையின் அளவு, அமிலத்தன்மை, சிறுகுடலின் நீளம் ஆகியவை அசைவ உணவுகளை ஏற்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கவில்லை. மனித உமிழ்நீரில் காணப்படும் காரத்தன்மை  மாமிச உணவினை ஜீரணிப்பதற்கு ஏற்றதல்ல.

உளவியல் ரீதியாகப் பார்த்தாலும் அசைவ உணவுகள் நமக்கு ஏற்றவையல்ல என்பது புரியும். ஊனுண்ணி விலங்குகளைப்போல் மனிதனால் பச்சை மாமிசம் மற்றும் ரத்தத்தினைப் புசிக்க முடியாது. ஏன் சகிக்கக்கூட முடியாது என்பதுதானே உண்மை. ஒரு விலங்கோ, பறவையோ கொல்லப்படுவதைக் கண்டு பதற்றமடையாதவர்கள் வெகு சிலரே.

ஆக, மனித உடல் அமைப்பு, இயக்கம், உளவியல் மற்றும் உள்ளுணர்வு இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால் மனிதர்களின் இயற்கை உணவு தாவரங்களை அடிப்டையாகக் கொண்டதுதான் என்பது தெளிவாகப் புரியும். பழக்கத்தினால் மட்டுமே அசைவ உணவுகளை உண்டு வருகிறோம் என்பதனை சொல்லவும் வேண்டுமா?

வீகன் கேரட் பாயசம்

ஆரோக்கியமான வீகன் உணவுகளை சமைத்து சுவைத்துப் பாருங்கள்!

தேவையான பொருட்கள்
கேரட் துருவல்     -     1 கப்
பேரீச்சம் பழம்     -     1 கப்
தேங்காய் பால்     -     2 கப்
தண்ணீர்     -     1 கப்
உலர்ந்த திராட்சை     -     1/2 கப்
பாதாம் பருப்பு     -     10
ஏலக்காய் தூள்     -     சிறிதளவு

செய்முறை

முதலில் பேரீச்சம் பழங்களை தண்ணீர் சேர்த்து அரைத்து பேரீச்சம்பழ பேஸ்ட் தயார் செய்யவும். பின்னர் கேரட் துருவலையும் தண்ணீர் சேர்த்து அரைத்து கேரட் விழுது தயார் செய்யவும். பாதாம் பருப்பை எண்ணெய் இல்லாமல் வறுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள கேரட் மற்றும் பேரீச்சம்பழ விழுதுடன் சிறுதளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து வேக விடவும்.

இத்துடன் தேங்காய் பால் மற்றும் ஏலக்காய்த்தூள் சிறிதளவு சேர்த்து, நன்றாகக் கிளறவும். மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். உலர்ந்த திராட்சை மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து அலங்கரித்தால் சத்தான... சுவையான வீகன் கேரட் பாயசம் தயார்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்! சர்க்கரை நோயாளிகளும் சுவைத்துப் பார்க்கலாம் என்பது இதன் கூடுதல் விசேஷம்!

(தெரிந்து கொள்வோம்!)

http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=5410&cat=500

Link to comment
Share on other sites

வீகன் டயட்

 

ld4612861.jpg

நன்றி குங்குமம் டாக்டர்

திடீர் மினி தொடர்

நலம் வாழ நனிசைவம்


மனிதர்களின் உடல் அமைப்பு, இயக்கம், உளவியல் போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாமிச உணவுமுறை நமக்கு எதிரானது என்பதையும், பழக்கத்தினால் மட்டுமே அசைவ உணவுகளை மனிதர்கள் உண்டு வருகிறார்கள் என்பதையும் கடந்த இதழில் பார்த்தோம். மாமிச உணவுகளைப் போலவே பாலும் மனிதர்களுக்கு ஏற்ற உணவு அல்ல என்று கூறினால் அதிர்ச்சி அடைவீர்கள்தானே?ஆமாம்... வீகன் உணவுமுறை பாலையும் முற்றிலுமாகப் புறக்கணிக்கிறது. அதற்கு காரணங்கள் உண்டு.‘நமக்கு நாயின் பாலோ, குதிரையின் பாலோ, ஒட்டகச்சிவிங்கியின் பாலோ தேவைப்படுவதில்லை. அதைப்போலத்தான் பசுவின் பாலும்’ என்கிறார் டாக்டர் மைக்கேல் க்ளாப்பேர். 70 பவுண்ட் எடையுள்ள கன்றுக்குட்டி, 700 பவுண்ட் எடையுள்ள பசுவாக வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பாலில் நிறைந்துள்ளது. வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கான ஹார்மோன்களும் பசும்பாலில் உள்ளன.

அதனால் கன்றுக்குத்தான் பசும்பால் இயற்கையான உணவு. கன்று வளர்ந்தபின் பால் சாப்பிடுவதில்லை. ஏன்? எந்த விலங்கும் வளர்ந்த பின் பால் சாப்பிடுவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமே வளர்ந்த பின்னரும் மற்றொரு இனத்தின் பாலை அருந்தி வருகின்றனர்.குழந்தைப் பருவம் தாண்டியபின் பாலை ஜீரணிக்கக் கூடிய என்சைம்கள் இயற்கையாகவே குறைந்துவிடும். பல குழந்தைகளுக்கு பசும்பாலை செரிக்கும் திறன் இல்லை என்பது குழந்தைகள் நல மருத்துவர்களும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. பசும்பாலில் காணப்படும் புரதம் சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடும். Lactose intolerence என்று சொல்லப்படும் பால் சர்க்கரை அல்ர்ஜியினாலும் சில குழந்தைகள்
அவதிப்படுகின்றனர்.குழந்தைப்பருவ சரும நோய்கள், மலச்சிக்கல் போன்ற உபாதைகள் ஏற்படுத்துவதும் பசும்பால்தான் என்கின்றனர் நிபுணர்கள். பச்சிளம் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் டைப்-1 சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கிறது பின்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

உலக மக்கள்தொகையில் 75 சதவிகிதம் பேருக்கு பால் உணவுகளை சரியாக ஜீரணிக்க முடிவதில்லை. இதனால் பலரும் செரிமானத் தொந்தரவினால் அவதிப்படுகின்றனர். அதிகப்படியான புரதமும், ஹார்மோன்களும் நிறைந்த பசும்பால் மனித உடலுக்கு ஏற்ற உணவில்லை. ஆனால், சிறந்த ஆரோக்கிய உணவு பசும்பால் என்றே நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம்.பசும்பாலில் உள்ள கொலஸ்ட்ரால்(Saturated fats), சாச்சுரேட்டட் கொழுப்புகள் காரணமாக உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இயற்கையான பசும் பாலில் காணப்படும் கேஸியீன்(Casein) என்ற புரதம் சில வகை புற்றுநோய்கள் உட்பட பல நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர் மேலைநாட்டு அறிவியல் ஆய்வாளர்கள். கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும் அறிவியல் ஆய்வுகள் கூறும் உண்மை இதுதான்.

தற்போது கிடைக்கும் பசும்பாலில் இந்த கேஸியீனுடன் ஆன்டிபயாடிக் மருந்துகள், ஹார்மோன்கள், யூரியா மற்றும் சீழ் போன்றவையும் கலந்துள்ளன என்பதனை நினைவில் கொள்ளவும்.அப்படியானால் பாலில் கால்சியம் சத்துள்ளதாகவும், எலும்புகள் பலமடைய பால் சாப்பிடவேண்டும் என்ற கருத்தும் தவறா என்ற கேள்வி எழலாம்.பால் அதிகம் சாப்பிடும் பெண்களுக்குத்தான் எலும்புத் தேய்மானம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறுகிறது. ‘ஹார்வார்ட் நர்சஸ் ஹெல்த் ஸ்டடி’ என்னும் 12 வருட ஆய்வு. பால் சாப்பிடுவதால் எலும்புத் தேய்மானம் ஏற்படுவதாக, பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியான உப்சலா பல்கலைக்கழக ஆய்வும்  தெரிவிக்கிறது.

எலும்புகள் பலமடைய கால்சியம், வைட்டமின் டி உட்பட 17 வகையான ஊட்டச்சத்துக்கள் அவசியம். கால்சியம் சத்தினை தாவர உணவுகளிருந்தே பெற்றுக்கொள்ளலாம். பசும்பாலைவிட எள்ளில் உள்ள கால்சியம் அளவு அதிகம். கீரை மற்றும் பயறு வகைகளிலும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. தாவர உணவுகளில் எலும்புகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் டி சத்தினை சூரிய ஒளியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.பால் புரதமாகிய கேசீன் சரியாக ஜீரணிக்கப்படுவதில்லை. இது ஜீரணத்தின்போது கேஸோ மார்பீன் என்னும் பொருளாக மாற்றம் அடைகிறது. இந்தக் கேஸோ மார்பீன் போதையூட்டக்கூடிய ஓப்பியாய்டு மருந்தைப் போன்ற  தன்மையுடையது. சுருக்கமாகச் சொன்னால் போதை ஊட்டக்கூடிய உணவுதான் பால் மற்றும் பால்சார்ந்த உணவுப் பொருட்கள் என்று சொல்லலாம்.

சரி... பால் சாப்பிட்டு பழகிவிட்ட நாம் எப்படி அதனை நிறுத்தலாம் என்று யோசிப்பீர்கள்தானே? 3 வாரங்கள் பால் மற்றும் பால் பொருட்களை நிறுத்திவிட்டால் போதும். அதன் பிறகு அவை நமக்குத் தேவைப்படாது. பாலுக்கு மாற்றாக சோயா பால், தேங்காய்ப் பால், பாதாம் பால், எள்ளுப்பால் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.பாயசம் முதல் ஐஸ்கிரீம் வரை அனைத்தையும் இந்த மாற்றுப்பொருட்கள் கொண்டே தயார் செய்ய முடியும். தயிர் மற்றும் மோருக்கு மாற்றாக வேர்க்கடலை மற்றும் சோயா தயிர்/மோர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சோயா டோபு, முந்திரி சீஸ் போன்றவற்றை பனீர்/சீஸுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5121&Cat=501

Link to comment
Share on other sites

  • 4 months later...
 

திடீர் மினி தொடர்
 
நலம் வாழ நனிசைவம்


பால் என்பது கால்சியம் உள்படஎண்ணற்ற சத்துமிகுந்த ஓர் உணவுப்பொருள் என்ற நம்பிக்கை நம்மிடம் இருந்து வருகிறது. நிலைமை அப்படியிருக்க, பால் உணவுப்பொருட்களையே முற்றிலுமாக வீகன் டயட்டில் தவிர்க்கச் சொல்கிறார்களே... அப்படியென்றால் அதனால் ஏற்படும் சத்து இழப்பை எப்படி ஈடு செய்வது? இந்த சந்தேகத்துக்கான பதிலைக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்...
29.jpg
எலும்புகள் பலமடைய கால்சியம், வைட்டமின் டி உட்பட பல வகையான ஊட்டச்சத்துக்கள் அவசியம். அதுமட்டுமல்ல; நல்ல உடற்பயிற்சியும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையும் மிக அவசியம். கால்சியம் சத்தினை தாவர உணவுகளிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

கேழ்வரகு, ராஜ்மா பயறு, கொள்ளு, சன்னா, உளுந்து, தட்டைப்பயறு, பச்சைப்பயறு, சோயா பீன்ஸ், எள், வெந்தயக் கீரை, சேப்பங்கிழங்கு இலைகள், உலர் பழங்கள் போன்ற தாவர உணவுகளில் கால்சியம் நிறைந்துள்ளது. தாவர உணவுகளில் எலும்புகளுக்குத் தேவையான பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் டி சத்தினை சூரிய ஒளியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

பாலுக்கு மாற்றாக தேங்காய்ப் பால், பாதாம் பால், எள்ளுப்பால் போன்றவற்றை மிக எளிதாக தயார் செய்து பயன்படுத்தலாம். பாயசம் முதல் ஐஸ்கிரீம் வரை அனைத்தையும் இந்த மாற்றுப்பொருட்கள் கொண்டு தயார் செய்ய முடியும். தயிர் மற்றும் மோருக்கு மாற்றாக அரிசி - வேர்க்கடலைத்  தயிர்/மோர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
29a.jpg
ஹம்முஸ்(கொண்டைக்கடலை/ சன்னாவை அரைத்து செய்யப்படும் ஒரு சீஸ் மாற்று உணவு), முந்திரி சீஸ் போன்றவற்றை பனீர்/சீஸுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். வெண்ணெய்க்கு மாற்று உணவாக வேர்க்கடலை மற்றும் எள் வெண்ணெய் பயன்படுத்தலாம். இவற்றில் கொலஸ்ட்ரால் சிறிதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது! 

நம் நாட்டில் வீகன் உணவுப் பழக்கம் உடையவர்கள் பலரும் இந்த மாற்று உணவுகளை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுகின்றனர். இந்த மாற்று உணவுகளை பயன்படுத்தி பலவித உணவுகளை சமைத்து சுவைக்கின்றனர்.வீகன் டயட் கடைப்பிடிப்பவர்கள் சிலர் சோயா பால், சோயா பனீர் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். சோயா குறித்து பல கருத்துக்கள் நிலவுகின்றன. இது ஆரோக்கியத்துக்கு நல்லதுதானா என்ற சந்தேகமும் எழலாம்.

ஆசிய நாடுகளின் பாரம்பரிய உணவுகளில் பதப்படுத்தப்படாத பிராசஸிங்செய்யப்படாத இயற்கையான சோயா உணவுகளான டோபு, டெம்பே, நேட்டோ, மீசோ போன்றவற்றை பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். உலகில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழும் மக்கள் குறித்து செய்யப்பட்டது ப்ளூ சோன் ஆய்வு.

ஒகினாவா பகுதியில் வாழும் மக்கள், தங்களது பாரம்பரிய உணவான டோபு மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவுகளை உண்டு நீண்ட நாட்கள்
ஆரோக்கியமாக வாழ்வதாக இந்த ஆய்வுமுடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிராசஸிங் செய்யப்பட்ட சோயா உணவுகள் மற்றும் ஐசோலேட் சோயா புரதம் போன்றவை ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றனர் தாவர உணவியல்நிபுணர்களும், மருத்துவர்களும். பசும்பாலை போல சிலருக்கு சோயா உணவுகளும்ஒவ்வாமை ஏற்படுத்தலாம். இவர்களும் சோயாவைத் தவிர்க்க வேண்டும்.

மேற்கண்ட உணவுப்பொருட்கள் கட்டாயம் இல்லை. இவைகள் இல்லாவிட்டாலும் கால்சியம் சத்து கிடைக்க கீரைகள், உலர் பழங்கள், கேழ்வரகு, எள் மற்றும் கொள்ளு போன்றவற்றை சாப்பிடுவதே போதுமானது என்று பரிந்துரைக்கிறார்கள் வீகன் நிபுணர்கள்.

சரி, இந்த தாவரங்களை அடிப்படையாகக்கொண்ட வீகன் டயட் சாப்பிடுவதால் உடல் நலத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? வீகன் டயட் கடைப்பிடிப்பது உடல் நலத்துக்கு எந்த விதத்தில் ஏற்றது? நோய்களின் பிடியிலிருந்து விடுபட முடியுமா? வீகன் டயட் மூலம் உடல் எடையைக் குறைக்கமுடியுமா? அறிவியல் ஆய்வுகள் என்னசொல்கின்றன?

வீகன் வரகு புலாவ்

ஆரோக்கியமான வீகன் உணவுகளை சமைத்து, ருசித்துப் பாருங்கள்!

தேவையான பொருட்கள்:
கேரட் (துருவியது)    - 2
பட்டர் பீன்ஸ்    -    1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது    -    2 மேசைக்கரண்டி
சீரகம்    -    1 தேக்கரண்டி
கிராம்பு    -    3
லவங்கப்பட்டை    -    2
மிளகு    -    1/2  தேக்கரண்டி
வரகு    -    1 கப்
மல்லி இலை    -    சிறிதளவு
தண்ணீர்    -    3 கப்
தேங்காய்ப்பால்    -    1/4 கப்
இந்து உப்பு    -    தேவைக்கேற்ப

செய்முறை: கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி, சீரகம், கிராம்பு, பட்டை, மிளகு ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும். கேரட் துருவல், பட்டர் பீன்ஸ் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை இத்துடன் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் சாமை மற்றும் இந்து உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து,  மூடி வைத்து வேகவிடவும். சாமை வெந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும். புலாவ் தயார்!

சோயா கீமா

தேவையான பொருட்கள்:
வேகவைத்த சோயா
உருண்டைகள்     -    1 கப்
பச்சைப் பட்டாணி    -    100 கிராம்
வேகவைத்து நறுக்கிய
உருளைக்கிழங்கு     -     2
பெரிய வெங்காயம்
நறுக்கியது    -    2
ஏலக்காய்     -     2
நட்சத்திர சோம்பு     -     1
வர மிளகாய்     -     1
வெள்ளைப்பூண்டு     -     5 பற்கள்
மிளகாய் பொடி     -     1 தேக்கரண்டி
சீரகப் பொடி     -     1/2 தேக்கரண்டி
மல்லிப்பொடி     -     1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா     -     1/2 தேக்கரண்டி
மல்லி தழை     -     சிறிதளவு
உப்பு     -  தேவையான அளவு

செய்முறை: கடாயை சூடாக்கி ஏலக்காய்  மற்றும் நட்சத்திர சோம்பை மிதமான சூட்டில் வறுக்கவும். வெங்காயம் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். பின்னர் வெள்ளைப்பூண்டு, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். இவற்றுடன் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, ஜீரகப்பொடி, கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும்.

பச்சைப் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பின்னர் சோயா உருண்டைகள் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தேவையான  அளவு உப்பு சேர்த்து, மிதமான சூட்டில் கிளறி, தண்ணீர் சிறிது வற்றும் வரை வேக வைக்கவும். கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். சப்பாத்தியுடன் சோயா கீமாவை சுவைத்து மகிழுங்கள்!
 

(தெரிந்து கொள்வோம்!)

kungumam.co.i

Link to comment
Share on other sites

 
 

வீகன் டயட்

 
 

திடீர் மினி தொடர்

நலம் வாழ நனிசைவம்


பெரும்பாலான வாழ்க்கைமுறை நோய்களைத் தவிர்ப்பது என்பது சாத்தியமே என்கின்றனர் தாவர உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை இதற்கு மிகவும் உதவியாக அமையும். தாவர உணவுகளை அடிப்படையாகக் கொண்ட உணவுமுறை குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் சில முக்கியமான ஆய்வுகளின் முடிவுகளைக் காண்போம்.
5.jpg
காய், கனிகள், கீரைகள், முழு தானியங்கள், பயறு மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட முழுமையான தாவர உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 34% குறைவதாக ஹார்வர்டு டி.எச் சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. குறைந்த கொழுப்பு மற்றும் கிளைசெமிக்இண்டெக்ஸ்(Glycemic Index) குறைவாக உள்ள வீகன் உணவுமுறை(Low fat vegan  diet)  ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுவதாக டாக்டர் நீல் பர்னார்ட் செய்த ஆய்வில் தெரியவந்தது.

உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து செய்யப்பட்ட கோஹோர்ட் ஆய்வுகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது EPIC OXFORD ஆய்வு. 65 ஆயிரத்து 500 பேர் பங்கேற்ற மிகப்பெரும் ஆய்வு இது. இந்த ஆய்வில் வீகன் டயட் கடைப்பிடித்தவர்களுடைய பி.எம்.ஐ(BMI) சீராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
5a.jpg
வீகன் உணவுப்பழக்கம் உள்ளவர்களது ரத்த அழுத்தமும் சீராக இருப்பதும் கண்டறியப்பட்டது. வீகன் உணவுமுறையைப் பின்பற்றும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகதெரிவிக்கிறது இந்த ஆய்வு முடிவு. அதேபோல ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவுதான் என்கிறது இந்த ஆய்வு.

டைப் 2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய், கார்டியோ வாஸ்குலர் இதய நோய் போன்றவை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு வீகன் டயட் உதவியாக இருக்கும் என்று லோமா லிண்டா பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிடுகிறது. ஆரோக்கியமான வீகன் டயட்டை கடைப்பிடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 60% குறைவதாக AHS 2 என்னும் ஆய்வு தெரிவிக்கிறது.

முழுமையான தாவர உணவுகளை அடிப்படையாகக் கொண்ட உணவுமுறை சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்றவற்றுக்கான காரணிகளைக் குறைப்பதாக கனடியன் ஜர்னல் ஆஃப் டயடெட்டிக் ப்ராக்டிஸ் மற்றும் ரிசர்ச்(Canadian journal of dietetics & research) இதழில் வெளியான சிப் புரோக்ராம்(CHIP Program) ஆய்வு தெரிவிக்கிறது. ஐரோப்பியன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கில் நியூட்ரிஷன்(European Journal of Clinical Nutrition) இதழில் வெளியான ஆய்வு ஒன்று, வீகன் டயட் கடைப்பிடிப்பவர்களிடையே டோட்டல் கொலஸ்ட்ரால் மற்றும் அபோலிபோபுரோட்டீன் பி (Apolipo protein B) அளவுகள் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கிறது.

Low fat plant based diet என்று சொல்லக் கூடிய வீகன், இதய நலம் காக்க உதவுவதாக டாக்டர் கால்டுவெல் எஸ்செல்ஸ்டைன் செய்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அதேபோல டாக்டர் டீன் ஆர்னிஷ் செய்த ஆய்வும் இதய நலம் காக்க தாவர உணவு, உடற்பயிற்சி மற்றும் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் பயிற்சிகள் உதவுவதாகத் தெரிவிக்கிறது.

இவற்றைப்போல இன்னும் பல ஆய்வுகள் வீகன் உணவு முறையின் நன்மைகளைப் பட்டியலிடுகின்றன. முழுமையான தாவர உணவுகளில் நிறைந்துள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவினைக் குறைக்கவும் உதவும். தாவர உணவுகளில் கொலஸ்ட்ரால் சிறிதும் இல்லை. மாறாக ஒமேகா 3 போன்ற நன்மை தரும் கொழுப்புகள் நிறைய உள்ளன.

பழங்கள் காய்கறிகள் மற்றும் கீரைகளில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், பிளான்ட் ஸ்டீரால்ஸ்(Plant sterols), பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்(Phytonutrients) மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்துக்கு ஏற்றவை. ஐசோபிளவோன்ஸ்(Isoflavones), ஐசோதயோசயநெட்ஸ்(Isothiocyanates), ரெஸ்வெராட்ரால்(Resveratrol), லிக்னின்ஸ்(Lignins),  லைகோபீன்(Lycopene)  போன்ற பைட்டோ நியூட்ரியன்ட்கள் சிலவகை புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க உதவும்.

பெரும்பாலான வாழ்க்கைமுறை நோய்களைத் தவிர்க்கவும், ஒருசில நோய்களைக் கட்டுப்படுத்தவும் இந்த தாவர உணவுமுறை உதவியாக அமையும் என்பது இதுபோல பல மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

உடல் பருமன் என்பது ஒரு உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கிறது. இது அழகியல் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தையும்
நிர்ணயிக்கக் கூடியது. அதிக உடல் எடை ஆபத்துதான். அதிக உடல் எடை உடையவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரித்தல், சில வகை புற்றுநோய், பித்தப்பை கற்கள், ஃபேட்டி லிவர், மூட்டு வலி, ஸ்லீப் ஏப்னியா போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உடல் எடையைக் குறைப்பதற்காகப் பலரும் பல முயற்சிகள் செய்வதை நாம் பார்க்கிறோம். சிலர் கடுமையான உடற்பயிற்சிகள் செய்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாட்டினைக் கடைப்பிடிக்கிறார்கள். உணவின் அளவைக் குறைத்து கலோரிகளைக் கணக்கிட்டு கட்டுப்பாட்டுடன் உண்பது மிகவும் சிரமம்தான். இன்னும் சிலர் எடைக்குறைப்பு என்ற பெயரில் புரோட்டீன் சப்ளிமென்ட்களும், மாஜிக் மருந்துகளும் சாப்பிட்டு தங்கள் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.

எவ்வளவு முயன்றாலும் ஏறிய எடையைக் குறைப்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை என்பது பலரது அனுபவம்.
ஆனால், இவ்வளவு கஷ்டப்படாமல் எளிமையாக உடல் எடை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு நல்ல வழி ஆரோக்கியமான வீகன் டயட்டை
பின்பற்றுவதுதான்.

சவுத் கரோலினா பல்கலைக்கழகத்தின் அர்னால்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வு ஒன்று அசைவ உணவு உண்பவர்களைவிட தாவர உணவுகள் உண்பவர்கள் உடல் எடையை எளிதாகக் குறைக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்திருக்கிறது. 6 மாதங்கள் நடந்த இந்த ஆய்வில் வீகன் டயட்டை கடைப்பிடித்தவர்கள் கிட்டத்தட்ட 16.5 பவுண்ட் எடை குறைக்க முடிந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்ல உடலில் உள்ள
சாச்சுரேட்டட் கொழுப்பின் அளவும், பி.எம்.ஐ-ம் குறைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஆய்வில் பங்குபெற்ற வீகன் உணவுப் பழக்கமுடையவர்கள் அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த தானியங்களைச் சாப்பிட்டபோதும் எடைக்குறைப்பு சாத்தியமாயிற்று என்பதுதான். இவர்கள் கலோரிகளைக் கணக்கிட்டு உண்ணவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் பிசிசியன்ஸ் கமிட்டி ஃபார் ரெஸ்பான்சிபிள் மெடிசின் அமைப்பு நடத்திய ஆய்வும் வீகன் டயட் உட்கொண்டவர்களுடைய எடை குறைந்ததை நிரூபித்தது. அசைவம், பால் மற்றும் முட்டை போன்ற உணவுகளிலும், ஜங்க் உணவுகளிலும்தான் அதிக கலோரிகளும், கொழுப்புகளும் உள்ளன. மாறாக முழுமையான தாவர உணவுகளில் கலோரிகள் குறைவாகவே உள்ளன. தாவர உணவுகளில் நிறைந்துள்ள நார்ச்சத்து சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வளிக்கிறது. நார்ச்சத்து தாவர உணவுகளில் மட்டுமே உள்ளது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, வீகன்டயட்டை கடைப்பிடிப் பவர்கள் கலோரி கணக்கு பார்த்துச் சாப்பிட வேண்டியதில்லை. கார்போஹைட்ரேட்டை கண்டு அச்சப்படத் தேவை இல்லை. தவிர்க்க வேண்டியது மைதா, வெள்ளை அரிசி போன்ற ரீபைன்ட் கார்போஹைட்ரேட்களைத்தான். தானியங்களில் நிறைந்துள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் உடலுக்குத் தேவையானதுதான்.

வீகன் டயட்டைப் பின்பற்றும்போது உணவின் அளவைக் குறைக்க வேண்டிய தேவையும் இல்லை. இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைக்கலாம். அதுமட்டுமல்ல நமக்கு விருப்பமான வீகன் உணவுகளை ஆரோக்கியமான முறையில் சமைத்து உண்டும் மகிழலாம்.

வீகன் வெள்ளரி ராய்தா

ஆரோக்கியமான வீகன் உணவுகளை சமைத்து, ருசித்துப் பாருங்கள்!

தேவையான பொருட்கள்
தேங்காய்ப்பால்     :     200 மிலி
எழுமிச்சை சாறு     :     1 மேசைக்கரண்டி
வெள்ளரிக்காய்
பொடியாக நறுக்கியது    :  1/4 கப்
புதினா இலை நறுக்கியது    :    சிறிதளவு
உப்பு    :    தேவைக்கேற்ப
சோம்புத்தூள்     :    1/2 தேக்கரண்டி
செய்முறை : தேங்காய்ப்பாலுடன்

எலுமிச்சைசாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். உடனடி வீகன் தயிர் தயார். இத்துடன் வெள்ளரிக்காய் துண்டுகள், சோம்புத்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். புதினா இலை தூவி பரிமாறவும்.
 

(தெரிந்து கொள்வோம்!)

kungumam.co

Link to comment
Share on other sites

 

வீகன் டயட்

திடீர் மினி தொடர்

நலம் வாழ நனிசைவம்!


உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் என்றுபுள்ளியல் விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 30 வருடங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்போது சர்க்கரை நோய் ஏற்படுவது 10 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய மக்கள்தொகையில் 58% பேர் சர்க்கரை நோயாளிகள் என்கிறது INDIAB ஆராய்ச்சி அறிக்கை.
20.jpg
மேலும் 25% இந்திய மக்கள் Pre-Diabetes என்று சொல்லப்படும் ஆரம்ப நிலை சர்க்கரை நோயினால் பாதிப்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. மாறி வரும் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. சில மாற்றங்களைச் செய்வதற்கு நீங்கள் தயாராக இருந்தால், வீகன் மூலமே இழந்த ஆரோக்கியத்தைத் திரும்பப் பெற முடியும்!
20a.jpg
சர்க்கரை நோயில் டைப் 1, டைப் 2 என இரண்டு வகை உண்டு. முதலாம் வகை(டைப் 1) சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கணையத்தில் இன்சுலின் சுரப்பு இல்லாமலோ  அல்லது மிகக் குறைவாகவோ இருக்கலாம்.இவ்வகை நோயாளிக்களுக்கு இன்சுலின் ஊசிகள் தேவைப்படும்.

இரண்டாம் வகை(டைப் 2)சர்க்கரை நோயாளிகளுக்கு கணையத்தில் இன்சுலின் சுரந்தாலும் அதனை உடல் உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்(Insulin Resistance) என்கின்றனர்.

பெரும்பாலும் இரண்டாம் வகை சர்க்கரை நோயினால்தான் பலரும் பாதிப்படைகின்றனர். இவ்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் சாப்பிட்டு சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். அதிக கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இந்த இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஏற்படுகிறது.

வீகன் உணவுமுறையினைக் கடைப்பிடித்தால் ரத்தத்தில் சர்க்கரையின்அளவைக் குறைக்கலாம் என டாக்டர் நீல் பர்னார்ட் செய்த ஆய்வில் தெரியவந்தது. மேலும் HBA1C அளவையும் குறைக்க முடியும். வீகன் டயட் கடைப்பிடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 60% குறைவதாக Adventist Health Study 2 என்னும் ஆய்வு தெரிவிக்கிறது.

ஆரோக்கியம் தரும் காய், கனிகள், கீரைகள், முழு தானியங்கள், பயறு மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட தாவர உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள வெகுவாகக் குறைக்க முடியும் என்று ஹார்வார்டு டி.எச் சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வு ஒன்றும் தெரிவிக்கிறது. சர்க்கரை நோயினால் நரம்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வீகன் டயட் பயனளிப்பதாக அமெரிக்காவின் PCRM அமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது.

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் வீகன் டயட் தொடங்கினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு படிப்படியாகக் குறையும். சிலருக்கு சர்க்கரை நோய்க்கான மருந்துகளையும் குறைக்க முடியும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வீகன் உணவியல் குறித்து நன்கு அறிந்த மருத்துவரின் ஆலோசனையுடன், சில மருத்துவப் பரிசோதனைகள் செய்த பின்னரே இந்த டயட்டைத் தொடங்க வேண்டும்.

சரி, சர்க்கரை நோய்க்கான வீகன் டயட் என்றால் வெறும் பச்சை காய்கறி சாலட் மட்டும்தான் சாப்பிட வேண்டுமா என்று பயப்பட வேண்டாம். உங்களுக்கு விருப்பமான உணவுகளை வீகன் உணவாக மாற்றி சாப்பிட முடியும். உணவின் அளவைக் குறைத்து, அரைகுறையாக சாப்பிட வேண்டியதில்லை. ஆரோக்கியமான, சுவையான  உணவுகளை திருப்தியாக உண்டு மகிழலாம். சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கலாம்!

கேரட் அல்வா

வீகன் டயட் கடைப்பிடிக்கும் சர்க்கரை நோயாளிகளும் இந்த கேரட் அல்வாவை சுவைத்து மகிழலாம்!

தேவையான பொருட்கள்

துருவிய கேரட்     :     1 கப்
தேங்காய்ப்பால்     :     1 /4 கப்
பேரீச்சம்பழ பேஸ்ட்   :  4 டீஸ்பூன்
உலர்ந்த திராட்சை    :  1/4 கப்
முந்திரிப்பருப்பு பேஸ்ட்    :    1/4  கப்
ஏலக்காய் பொடி    :    1 டீஸ்பூன்

செய்முறை : பேரீச்சம்பழம் மற்றும் முந்திரிப் பருப்புடன் தண்ணீர் சேர்த்து, தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். துருவிய கேரட்டை ஆவியில் வேக வைக்கவும். (சிறிதளவு தண்ணீர் சேர்த்தும் வேக வைக்கலாம்.) கடாயில் வேகவைத்த காரட்டுடன் தேங்காய்ப்பால், பேரீச்சம்பழ பேஸ்ட், முந்திரிப்பருப்பு பேஸ்ட், ஏலக்காய்ப் பொடி மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாகக் கிளறி சிறிது நேரம் வேகவிடவும். உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரிப்பருப்பு தூவி அலங்கரித்துப் பரிமாறவும்!
 

(தெரிந்துகொள்வோம்!)

kungumam.co.

Link to comment
Share on other sites

 

வீகன் சரியான உணவுமுறைதானா?!

 

திடீர் மினி தொடர்

நலம் வாழ நனிசைவம்!


வீகன் டயட்டின் நன்மைகள் குறித்து பல ஆய்வு முடிவுகளைப் பற்றித் தெரிந்து கொண்டோம். வீகன் டயட் முழுமையானது தானா? நடைமுறைக்கு சாத்தியமா? இந்த கேள்விகளுக்கான விடைகளையும் தெரிந்து கொள்வோம்.
25.jpg
வீகன் டயட் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டாலும் ஆய்வுகள் மற்றும் நிபுணர்கள் பரிந்துரைப்பது பிராசஸிங் செய்யாத, முழுமையான தாவர உணவுகள் கொண்ட உணவுமுறைதான். இதனை முழுமையான தாவர உணவுமுறை என்று அழைக்கிறார்கள்.

வெள்ளை சீனி, மைதா, பட்டை தீட்டிய தானியங்கள், எண்ணெய் போன்றவை இந்த உணவுமுறையில் கிடையாது. பழங்கள், காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள், பயறு
மற்றும் பருப்பு வகைகள், எள், ஆளி விதை போன்ற எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே நிபுணர்கள் கருத்து.

வீகன் டயட் என்பது சமச்சீர் உணவுமுறைதானா?

The Academy of Nutrition and Dietetics சரியாகத் திட்டமிடப்பட்ட வீகன் டயட் ஆரோக்கியமானது என்றும் சிலவகை நோய்கள் வராமல் தவிர்ப்பதற்கும், சிலவகை நோய்களைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல The Dietitians Association of Australia அமைப்பும், சரியாக திட்டமிடப்பட்ட வீகன் டயட்டில் ஆரோக்கிய வாழ்வுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கிறது.
25a.jpg
உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான மைக்ரோ மற்றும் மேக்ரோ நியூட்ரியன்ட் சத்துக்களை தாவர உணவுகளிலிருந்து பெற முடியும். சமச்சீர் வீகன் டயட் என்பது சாத்தியமே என்கின்றனர் நிபுணர்கள். சிறிது கவனம் செலுத்தினால் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் இந்த உணவுமுறையில் பெறுவது எளிதே!

சில சத்துக்கள் இந்த உணவுமுறையில் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்படலாம். அவற்றைக் குறித்துத் தெரிந்துகொள்வோம். புரதம்: அசைவம் மாற்று பால் பொருட்களைத் தவிர்க்கும் இந்த உணவுமுறையில் புரதச்சத்து போதுமானதாக இருக்குமா என்பது பலருக்கும் ஏற்படும் சந்தேகம். புரதம் என்பது பல முக்கிய அமினோ அமிலங்கள் நிறைந்த சத்து. உடலுக்குத் தேவையான சில அமினோ அமிலங்களை உடலே உற்பத்தி செய்துவிடும். ஆனால், 9 வகையான அமினோ அமிலங்களை உணவிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும். இவற்றை Essential amino acids என்கிறார்கள்.

பலவிதமான தாவர உணவுகளை சாப்பிடும்போது நமது உடலுக்குத் தேவையான அனைத்து  முக்கிய அமினோ அமிலங்களும் கிடைத்துவிடும்.தாவர உணவுகளிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது. ஒரு கப் பயறு அல்லது பட்டாணியில் 16 கிராம் புரதம் உள்ளது. பயறு வகைகள், நட்ஸ், ப்ரௌன் அரிசி, சிறுதானியங்கள்  போன்றவற்றை தினமும் சாப்பிடுவதன் மூலம் எளிதாக புரதத் தேவையினை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

அகத்திக்கீரை, பாலக் கீரை போன்றவற்றில் கூட புரதச்சத்து உள்ளது. விளையாட்டு வீரர்கள் மற்றும்  பாடி பில்டர்ஸ் சிலரும் வீகன் டயட்டை பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தாவர உணவுகளிலிருந்தே  தங்கள் புரோட்டீன் சத்தினைப் பெற்றுக்கொள்கின்றனர்.

கால்சியம்: பலவிதமான கீரைகள், பயறு வகைகள், கேழ்வரகு, எள் , பாதாம் பருப்பு போன்றவற்றிலிருந்து கால்சியம் சத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.
இரும்புச்சத்து: தாவர உணவுகளில் நான் ஹீம் ஐயன் (Non Haeme Iron) என்ற இரும்புச் சத்து உள்ளது. பல தாவர உணவுகளில் வைட்டமின் சி சத்தும் உள்ளதால் இந்த நான் ஹீம் அயனை எளிதாக உடல் ஏற்றுக் கொள்கிறது. அடர் பச்சை நிறமுள்ள கீரைகள், பயறு வகைகள்,  பூசணி விதை,  உலர் பழங்கள் போன்றவை இரும்புச்சத்து நிறைந்த தாவரஉணவுகளாகும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்:  ஆளி விதை, அக்ரூட் பருப்பு, முழு உளுந்து, ராஜ்மா பயறு  போன்றவற்றிலிருந்து இதயம் காக்கும் ஒமேகா 3 சத்தினைப் பெற்றுக்கொள்ளமுடியும். தாவர உணவுகளில் நிறைந்துள்ளது ALA என்னும் ஒருவகை முக்கியமான ஒமேகா 3  சத்து.  இதனை நம் உடல் DHA மற்றும் EPA வாக மாற்றிக் கொள்ளும்.

வைட்டமின் பி 12 : Cyanocobalamin என்றழைக்கப்படும் வைட்டமின் B12  சத்து மிகவும் முக்கியமான ஒரு  வைட்டமின். இது நமக்கு மிகக் குறைந்த அளவிலேயே  தேவைப்பட்டாலும், மிகவும் அவசியமான சத்தாகும். பொதுவாக சைவம் மற்றும் நனி சைவம் அல்லது ரா வீகன் டயட் கடைபிடிப்பவர்களிடையே இந்த சத்துக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதென்றாலும், அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் B12 குறைவு ஏற்படுவதைக் காணமுடிகிறது.

Atrophic gastritis, Celiac disease, Chron’s disease மற்றும் சில இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கும் இந்த சத்தினை கிரகிக்கும் தன்மை குறைவாக இருப்பதால் பி12 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. மதுபழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த வைட்டமின் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த வைட்டமின்(Anaerobic bacteria) அனரோபிக்  பாக்டீரியாவினால் உற்பத்தி செய்யப்படுகிறது.ஒரு சில கடல் தாவரங்கள் மற்றும் புளிக்க வைத்த உணவுகள் (நீராகாரம்) போன்றவற்றில் மிகக் குறைந்த அளவில் B12 அனலாக்ஸ் காணப்படுகின்றன. வீகன் டயட் கடைபிடிப்பவர்கள் சிலர், வைட்டமின் பி12 செறிவூட்டப்பட்ட  நியூட்ரிஷனல் ஈஸ்ட்  போன்றவற்றின் மூலம் பி 12 சத்தினைப் பெற்றுக்கொள்கின்றனர்.

ஆனாலும் நீண்ட காலம் இந்த வீகன் உணவுமுறையைக் கடைபிடிக்க விரும்புபவர்கள், ரத்தத்தில் பி 12 அளவு எப்படி உள்ளது என்பதனை பரிசோதித்தல் மிகவும் அவசியம். வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பி 12 சத்து மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். வீகன் உணவாளர்களுக்கென்றே சிறப்பு  வைட்டமின் பி 12 சத்து மாத்திரைகள் தற்போது கிடைக்கின்றன.

வைட்டமின் டி: சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டியினை எளிதாகப் பெற்றுக்கொள்ளமுடியும். சூரிய ஒளி தோலின் மீது  படும்போது, உடல்  வைட்டமின் டி சத்தினை உருவாக்கிக்கொள்கிறது. சூரிய ஒளியின் துணை கொண்டு, கொலஸ்ட்ராலிலிருந்து வைட்டமின் டி3 யினை உற்பத்தி செய்து கொள்ளும்தன்மை மனித உடலுக்கு உண்டு . உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலை கல்லீரல் உற்பத்தி செய்துவிடும். 

வெயிலுக்கு குறைவில்லாத நம் நாட்டில் பலருக்கும் வைட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருகிறது. சூரிய ஒளி படாதவாறு வாழும் நவீன வாழ்க்கைமுறையும், அதிகமாக சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவதும்கூட இதற்கு காரணமாக அமையும். சன் ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் தினமும், குறைந்தபட்சம் பதினைந்து நிமிடங்கள் சூரிய ஒளி நம் தோலில் படுமாறு பார்த்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி3 எளிதாகக் கிடைத்துவிடும்.

காலை அல்லது மாலை வெயிலில் நடை பயிற்சி செய்வது சிறந்த உடற்பயிற்சியாகவும் அமையும், அத்துடன் வைட்டமின் டியையும் பெற்றுக்கொள்ள உதவும். சூரிய ஒளி படுமாறு வளர்க்கப்பட்ட காளான்களில் சிறிதளவு வைட்டமின் டி 2 காணப்படுகிறது. இவற்றின் மூலமும் வைட்டமின் டி சத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

வைட்டமின் கே: கீரை வகைகளில் வைட்டமின் கே 1(Phylloquinone)  நிறைந்துள்ளது. இதனை குடலில் உள்ள நல்ல பாக்டீரியா வைட்டமின் கே 2(Menaquinone) ஆக மாற்ற உதவுகிறது. வைட்டமின் ஏ: கீரைகள், காரட், பூசணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றில் கரோட்டினாய்ட்ஸ் உள்ளன. இவற்றை உடல் ரெடினாய்ட்ஸ் எனப்படும் வைட்டமின் ஏ வாக மாற்றிக்கொள்ளும்.

அயோடின்: கடல் தாவரங்கள் மற்றும் ஐயோடின் செறிவூட்டப்பட்ட உப்பு போன்றவற்றிலிருந்து இந்த சத்தினைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
ப்ரோபையோட்டிக்ஸ் மற்றும் ப்ரீபையோட்டிக்ஸ் (Probiotics & Prebiotics) ப்ரோபையோட்டிக்ஸ் என்றழைக்கப்படும் நல்ல பாக்டீரியாக்கள் நம் குடலில் காணப்படுகின்றன. செரிமானம் சீராக இருப்பதற்கும் சில சத்துக்களை கிரகிப்பதற்கும் இவை அவசியம். வீகன் உணவுமுறையில் வேர்கடலைத் தயிர், நீராகாரம் போன்றவற்றிலிருந்து இவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தாவர உணவுகளில் காணப்படும் ஒலிகோசாக்கரைட்ஸ் மற்றும் ரெஸிஸ்டண்ட் ஸ்டார்ச் போன்றவை இந்த நல்ல பாக்டீரியா வாழ்வதற்கு ப்ரீ பையோட்டிக்ஸ் ஆக செயல்பட்டு குடல் நலம் காக்க உதவுகிறது.பிற சத்துக்கள்:  வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் சி மற்றும் ஈ மற்றும் தாது உப்புகள், நார்ச்சத்து போன்றவற்றை தாவர உணவுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

தாவர உணவுகளில் ஆயிரக்கணக்கில் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் நிறைந்துள்ளன. ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் சத்துக்களும் தாவர உணவுகளில் மிக எளிதாகக் கிடைக்கும். பல வண்ண காய் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வதால் இவற்றை எளிதாகப் பெற முடியும்!
 

(தெரிந்துகொள்வோம்!)

kungumam.co

Link to comment
Share on other sites

 

வீகன் டயட்

திடீர் மினி தொடர்

நலம் வாழ நனிசைவம்!


உடல் எடையைக் குறைப்பதற்காகப் பலரும் பல முயற்சிகள் செய்வதை நாம் பார்க்கிறோம். எவ்வளவு முயன்றாலும் ஏறிய எடையைக் குறைப்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை என்பது பலரது அனுபவம். ஆனால், இவ்வளவு கஷ்டப்படாமல் எளிமையாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு வீகன் டயட் உதவியாக அமையும் என்பது பலரது அனுபவம்.
21.jpg
சரி... இவ்வாறு பலரும் உடல் எடை குறைப்புக்காக வீகன் டயட்டைப் பின்பற்றுகிறார்கள். இது குறித்து ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.ஜங்க் ஃபுட் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட், உடற்பயிற்சியில்லாத வாழ்க்கைமுறை, மன அழுத்தம் போன்ற பல காரணிகளால் உடல் பருமன் பிரச்னை இன்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கிட்டத்தட்ட உடல் பருமன் என்பது ஒரு உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கிறது.

அதிக உடல் எடை ஆபத்துதான். அதிக உடல் எடை உடையவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரித்தல், சில வகைப் புற்றுநோய், பித்தப்பை கற்கள், ஃபேட்டி லிவர், மூட்டு வலி, ஸ்லீப் ஏப்னியா(Sleep apnea) போன்ற நோய்கள்
ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
21a.jpg
அதனால் பருமன் என்பதை அழகியல் சார்ந்த பிரச்னையாக மட்டுமே எடுத்துக் கொள்ளாமல், உடல் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக்கூடியது என்பதை உணர்ந்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.சவுத் கரோலினா பல்கலைக்கழகத்தின் அர்னால்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வு ஒன்று தாவர உணவுகளை உண்பவர்கள் உடல் எடையை எளிதாகக் குறைக்கிறார்கள் என்பதை கண்டறிந்தது. 6 மாதங்கள் நடந்த இந்த ஆய்வில் வீகன் டயட்டை கடைபிடித்தவர்கள் கிட்டத்தட்ட  16.5 பவுண்ட் எடை குறைக்க முடிந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல உடலில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்பின் அளவும், பி.எம்.ஐ - அளவும் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஆய்வில் பங்குபெற்ற வீகன் உணவுப் பழக்கமுடையவர்கள் அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த தானியங்களை சாப்பிட்ட போதும் எடைக்குறைப்பு சாத்தியமாயிற்று என்பதுதான். இவர்கள் கலோரிகளைக் கணக்கிட்டு உண்ணவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். Physicians committee for responsible medicine நடத்திய ஆய்வும் வீகன் டயட் உட்கொண்டவர்களுடைய எடை
குறைந்ததை நிரூபித்தது.

இதற்கு காரணம் உண்டு. ஜங்க் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் அதிக கொழுப்பும், ரீஃபைண்ட் கார்போஹைட்ரேட்களும் உள்ளன. மாறாக முழுமையான தாவர உணவுகளில் கலோரிகள் குறைவாகவே உள்ளன. தாவர உணவுகளில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் மைக்ரோ நியூட்ரியண்ட்ஸ்
சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த திருப்தியான உணர்வளிக்கிறது. 

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். கார்போஹைட்ரேடைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. தவிர்க்க வேண்டியது ரீஃபைண்ட் கார்போஹைட்ரேட்டுகளைத்தான். முழு மற்றும் சிறுதானியங்களில் நிறைந்துள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் நமது உடலுக்குத் தேவையானதுதான்.

ஆரோக்கியமான வீகன் டயட்டைப் பின்பற்றும்போது உணவின் அளவைக் குறைக்க வேண்டிய தேவையும் இல்லை. மிக எளிமையாக இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைக்கலாம். அது மட்டுமல்ல நமக்கு விருப்பமான உணவுகளை ஆரோக்கியமான முறையில் சமைத்து உண்டு மகிழலாம்.
உலகம் முழுதும் பலரும் இந்த டயட் மூலம் அதிக எடையைக் குறைந்திருப்பதாக தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்வதை இணைய தளங்களிலும், வலைப்பூக்களிலும், புத்தகங்களிலும் வாசிக்கிறோம். எடை குறைக்க இந்த டயட்டினை சிலர் குறுகிய காலத்திற்கு மட்டும் பின்பற்றுகிறார்கள். சிலர் நீண்ட காலம் இந்த உணவுமுறையினைப் பின்பற்றுகிறார்கள்.

சில உடல் உபாதைகளால் சிறிதளவும் உடற்பயிற்சி செய்ய முடியாத நிலையில் சிரமப்படுபவர்கள் கூட இந்த டயட்டினைக் கடைபிடித்து உடல் எடையைக் குறைத்து அதன் பின்னர் உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்குவதும் சிலரது அனுபவமாக உள்ளது. அதிக உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான உணவுடன் உடற்பயிற்சியும் அவசியம் என்பதனை நினைவில் வைக்கவும்.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வீகன் டயட்டைத் தொடங்குவதற்கு முன் சில முக்கியமான
விஷயங்களை கவனிக்கவும்.

*வீகன் டயட் உடல் எடையை குறைக்க உதவும் என்றாலும், இது அனைவர்க்கும் ஒரே விதமாக பலனளிக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தினால் உடல் எடை அதிகரித்திருந்தால் அதனை குறைக்க இந்த டயட் உதவும்.

*தைராய்டு பிரச்னை அல்லது வேறு நோய்களின் விளைவாக உடல் பருமன் உள்ளவர்கள் உங்களது மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணரின் ஆலோசனையை பெற்ற பின்னரே இந்த உணவு முறையினை முயற்சிக்கலாம்.

வீகன் டயட்டில் பல வகைகள் உண்டா?

உலகம் முழுவதும் பலரும் வீகன் டயட்டினைக் கடைபிடிக்கின்றனர். பல நாடுகளில் அவர்களது பாரம்பரிய உணவுகளை அடிப்படையாகக் கொண்டு
விதவிதமான வீகன் ரெசிபிக்களை உருவாக்கியுள்ளனர். வீகன் டயட்டில் பல வகையான உணவுமுறைகள் இருக்கின்றன. அவற்றைக் குறித்துத் தெரிந்துகொள்வோம்.

*வீகன் பேலியோ டயட் - தாவர உணவுகளை அடிப்படையாகக் கொண்ட பேலியோ டயட்.

*Nutritarian Veegan - அதிக நுண் ஊட்டச்சத்துகள் நிறைந்த தாவர உணவுகளை அடிப்படையாகக் கொண்டது இந்த டயட்.

*High carb low fat Veegan - பழங்கள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகளும், கொழுப்பு குறைந்த தாவர உணவுகளும் இந்த டயட்டின் அம்சங்கள்.

*ஆர்கானிக் வீகன் டயட் - ஆர்கானிக்  தாவர உணவுகளை மட்டும் சாப்பிடும் உணவுமுறை.

*ஆயுர்வேதிக் வீகன் டயட் - ஆயுர்வேத உணவுமுறையினை அடிப்படையாகக் கொண்ட தாவர உணவுமுறை.

*Macrobiotic vegan diet - ஜப்பானிய ஜென் உணவு தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட தாவர உணவுமுறை. சில வகைப் பழங்கள், பல வகையான காய்கறிகள், கடல்  தாவரங்கள், பயறு வகைகள், டோபு, மிசோ , பிரவுன் அரிசி போன்றவை இந்த உணவுமுறையில் பயன்படுத்தப்படுகின்றன.

*Gluten free vegan diet - க்ளுட்டன் உள்ள தானியங்களைத் தவிர்த்து அரிசி மற்றும் சிறுதானியங்களையும் மற்ற தாவர உணவுகளையும் அடிப்படையாகக் கொண்டது.

*Raw vegan diet - சமைக்காத இயற்கை தாவர உணவுகளை அடிப்படையாக கொண்டது.

*80 - 10 - 10 டயட் -  கார்போஹைட்ரேட் 80 சதவிகிதமும், புரதம் 10 சதவிகிதமும், கொழுப்பு 10  சதவிகிதமும் கொண்ட டயட் இது. பழங்கள், கீரைகள், கொட்டைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற உணவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வீகன் உணவு முறை.

*Whole Food Plant based Diet - முழுமையான தாவர உணவுகளை அடிப்படையாகக் கொண்டது.

வீகன் வெள்ளரி ராய்தா

தேவையான பொருட்கள்
தேங்காய்ப்பால்    -    200 மிலி
எலுமிச்சைச் சாறு    - 1 மேசைக்கரண்டி
வெள்ளரிக்காய்
( பொடியாக  நறுக்கியது )    - 1/4 கப்
புதினா இலை( நறுக்கியது )    - சிறிதளவு
உப்பு     -     தேவைக்கேற்ப
சோம்புத்தூள்     -     1/2 தேக்கரண்டி .
செய்முறை

தேங்காய்ப்பாலுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்தால் உடனடி வீகன் தயிர் தயார். இத்துடன் வெள்ளரிக்காய் துண்டுகள், சோம்புத்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறுங்கள். பின்பு புதினா இலை தூவி பரிமாறினால் சுவையான வெயிலுக்கேற்ற வெள்ளரி ராய்தா தயார்.
 

(தெரிந்துகொள்வோம்!)

kungumam.co

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
 

வீகன் டயட்

 
 

திடீர் மினி தொடர்

சத்துமிக்க சில  வீகன் உணவுகளை சுவைத்து மகிழுங்கள்!


வீகன் டயட் பற்றி இதுவரை பல்வேறு விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டோம். நிறைவுப் பகுதிக்கான நேரம் இது. விடை பெறும் முன் சில வார்த்தைகளை மீண்டும் உங்கள் நினைவுக்காக சொல்ல விரும்புகிறேன்.
24.jpg
முதன்முறையாக இந்த டயட்டை முயற்சி செய்து பார்க்க நினைப்பவர்களும், ஏதேனும் நோய்க்காக மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களும் முதலில் தங்களது மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, வீகன் உணவியல் நிபுணரின் உதவியுடன் உங்களது டயட்டைத் திட்டமிடலாம். ஒவ்வொருவரின் உடல்நிலை மற்றும் ஊட்டச்சத்துக்களின்  தேவையை அனுசரித்துத்தான் வீகன் டயட் திட்டமிடப்பட வேண்டும். சில நோய்களின் தன்மைக்கேற்ப வீகன் டயட்டில் சில மாற்றங்கள் தேவைப்படலாம்.
24a.jpg
அதேபோல முதன்முறையாக வீகன் டயட்டை முயற்சிப்பவர்கள் படிப்படியாகவே இந்த உணவுமுறையினை நடைமுறைப்படுத்துவது நல்லது. சரியாகத் திட்டமிடப்பட்ட வீகன் டயட்டில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். நார்ச்சத்து நிறைந்த வீகன் உணவுமுறையினைப் பின்பற்றும்போது போதுமான அளவு தூய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.

நட்ஸ், சோயா, க்ளுட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இவற்றைத் தவிர்த்து, அதற்கு ஈடாக சத்துக்கள் உள்ள மற்ற தாவர உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.  ஆர்கானிக் காய், பழங்கள், பயறு வகைகள், தானியங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

வீகன் ஆரோக்கிய சமையல் புத்தகங்கள் மற்றும் வலைத்தளங்கள் ஏராளமாக உள்ளன. பலவித வீகன் ரெசிபிக்களை எப்படி தயாரிப்பது என்பது குறித்து அறிந்துகொள்ள இவை உதவியாக அமையும். உங்களுக்கு விருப்பமான உணவுகளை எவ்வாறு வீகன் முறையில் ஆரோக்கியமாக தயார் செய்வது என்பதனைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ளவும்.

வெள்ளரி புதினா கீரை சாலட்

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் துண்டுகளாக நறுக்கியது - 1  கப்
புதினா கீரை அரைத்த விழுது - 1 /4  கப்
பச்சை மிளகாய் அரைத்த விழுது-
1/2 தேக்கரண்டி
இந்துப்பு - சிறிதளவு
எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி

செய்முறை

துண்டுகளாக நறுக்கியுள்ள வெள்ளரித் துண்டுகளுடன் புதினா கீரை அரைத்த விழுது மற்றும் பச்சை மிளகாய் அரைத்த விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து கிளறவும். சுலபமான சாலட் தயார்!

ரா வீகன் சப்போட்டா ஷேக்

தேவையான பொருட்கள்

பழுத்த சப்போட்டா பழத்துண்டுகள்
- 1/2 கப்
பாதாம் பால் - 200 மிலி
பேரீச்சம்பழம்(விதை நீக்கப்பட்டது) - 2
உலர்ந்த திராட்சை - சிறிதளவு.

செய்முறை

10 பாதாம் பருப்புகளை தண்ணீரில், 4 -8  மணி நேரம்  ஊறவைக்கவும். தண்ணீரைக் கொட்டிவிடவும்.  நன்கு ஊறிய  பாதாம் பருப்புடன் , 200 மிலி தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பாதாம் பால் தயார்.
சப்போட்டா பழுத்த துண்டுகளுடன், பாதாம் பால் மற்றும் பேரீச்சம்பழம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். உலர்ந்த திராட்சை தூவி அலங்கரிக்கவும் . சுவையான சப்போட்டா ஷேக் தயார்!

வீகன் பாலக் பனீர்

தேவையான பொருட்கள்

பாலக் கீரை - 1 கட்டு
சோயா பனீர் - 200 கிராம்
வெங்காயம்(பொடியாக நறுக்கியது) - 2
தக்காளி (சிறு துண்டுகளாக
நறுக்கியது) - 3
முந்திரிப் பருப்பு அரைத்த விழுது -
2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
இந்துப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை

சோயா பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி, அரைத்த முந்திரிப்பருப்பு விழுது சேர்த்து கிளறி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பாலக் கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து, ஒரு பாத்திரத்தில் 2 கப்  தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். கீரை வெந்தவுடன் ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். (கீரை வேகவைத்த தண்ணீருடன் அரைக்கவும்) வாணலியில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத் தூள் சேர்த்து எண்ணெய் இல்லாமல் லேசாக வதக்கவும்.

வதங்கிய வெங்காயம்- தக்காளிக் கலவையை ஆறியவுடன் மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்து வைக்கவும்.இப்போது ஒரு பாத்திரத்தில் மிக்சியில் அரைத்த தக்காளி- இஞ்சி-பூண்டு கலவை, முந்திரிப்பருப்பு விழுதுடன்  ஊறவைத்துள்ள சோயா பனீர் துண்டுகள், இந்துப்பு, சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு கொதி கொதிக்கவிடவும். சுவையான சத்தான வீகன் பாலக் பனீர் தயார்! சப்பாத்தியுடன் பரிமாறலாம்!

வீகன் மேக்ரோபயாடிக் சூப்

தேவையான பொருட்கள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு(சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 கப்
சர்க்கரைப் பூசணி (சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 கப்
தட்டைப்பயறு - 1/2  கப்
இந்துப்பு - சிறிதளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பார்ஸ்லே இலை அல்லது மல்லி இலை(பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை

தட்டைப் பயறை 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அதன் பின்னர் நீராவியில் வேக வைத்து தனியாக வைக்கவும். சிறு துண்டுகளாக நறுக்கிய பூசணி மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நீராவியில் வேகவைக்கவும். சிறிது சூடு ஆறியதும், 1 கப் தண்ணீர் சேர்த்து  மிக்ஸியில் நன்றாகக் கூழ்போல் அரைத்து  வைத்துக்கொள்ளவும்.

அரைத்த இந்த கலவையுடன் 1 கப் தண்ணீர், இந்து உப்பு, மிளகுத்தூள், வேகவைத்த காராமணி பயறு ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பில் வைத்து  சூடாக்கவும். மல்லி இலை அல்லது பார்ஸ்லேயை தூவிப்பரிமாறவும்.

சோயா கீமா

தேவையான பொருட்கள்

வேகவைத்த சோயா உருண்டைகள் - 1 கப்
பச்சைப் பட்டாணி  - 100 கிராம்
வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் நறுக்கியது - 2
ஏலக்காய் - 2
நட்சத்திர சோம்பு - 1
வர மிளகாய் - 1
வெள்ளைப்பூண்டு - 5 பற்கள்
மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி
ஜீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மல்லி இலை - சிறிதளவு
தேவையான அளவு உப்பு.

செய்முறை

கடாயை சூடாக்கி ஏலக்காய் மற்றும் நட்சத்திர சோம்பை மிதமான சூட்டில் வறுக்கவும். வெங்காயம் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். பின்னர் வெள்ளைப்பூண்டு, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். இவற்றுடன் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, ஜீரகப்பொடி, கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும்.

பச்சைப் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பின்னர் சோயா உருண்டைகள் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான சூட்டில் கிளறி,  தண்ணீர்  சிறிது வற்றும் வரை வேக வைக்கவும். கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
சப்பாத்தியுடன் சோயா கீமாவை சுவைத்து மகிழுங்கள்!
 

- முற்றும்

kungumam.co

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.