Jump to content

நானும் என் ஈழமும் - பகுதி 4


Recommended Posts

நானும் என் ஈழமும் - 4

Selvanna.jpg

தினமும் ஏதோ ஒரு செயல், ஒரு பொருள், ஒரு மனிதர்...என் நினைவுகளை ஊருக்கு கொண்டு செல்ல தவறுவதில்லை. எதிலும் சொந்த ஊரை காண்பது எம்மவருக்கு புதிதல்லவே.

"சொர்க்கமே வந்தாலும் அது நம்மூரை போல வருமா" என்ற பாடலை கானாபிரபா அண்ணாவே எத்தனை தடவை வானொலியில் போட்டிருப்பார்.

அடுத்த மாதம், என் பல்கலைக்கழக நண்பன் ஒருவருக்கு திருமணம். அதே நண்பன் 3 வருடங்களுக்கு முன்னர் வந்த காதலர் தினத்திற்கு எனக்கு தந்த வாழ்த்து மடலை பார்த்தே ஆக வேண்டும் என அவரின் வருங்கால துணைவியார்ஆசைப்பட்டார்.

என் விலை மதிக்க முடியாத கடிதப்பெட்டியை எடுத்த பொழுது கண்ணில்பட்ட ஒரு மடல்..... இந்த பாகத்தை எழுத தூண்டியது!

------------------------------------------------------------------------------

"செல்வண்ணா.....செல்வண்ணா..." நானே தான், ஏழு வயதிருக்கும் என நினைக்கிறேன். . ஒரு கறுப்பு நிற "பஜிரோ" வின் பின் இருக்கைகளில் இருந்து எனக்கு பிடித்த பஞ்சுமிட்டாயை உண்டபடி;

"�“ம் பாபா" முன் இருக்கையில் இருந்து என்னை திரும்பி பார்த்து பதில் சொன்னவர் தான் "செல்வம்" ஒரு போராளி, எனக்கு அண்ணன் முறை.

"எங்க போறம்?"

"சந்தைக்கு போறம், பிள்ளைக்கு சொக்கா வாங்கி தாறேன்" மறுபடி வீதியை பார்த்து கொண்டு, வாகனத்தை செலுத்தியவருடன் ஏதோ கதைத்தார். அவை நினைவில் இல்லை, காரணம் அந்த வயதில் வெளியே வீதியில் பார்த்தவை என் கவனத்தை ஈர்த்திருந்திருந்தது.

நாங்கள் சென்றிருந்தது தென்மராட்சியில் இருந்த ஒரு சந்தைக்கு. நல்ல வெயில் காலம். காரணம் எப்பொழுதும் வெயில் என்றால் எனக்கு எரிச்சலாக இருக்கும். இங்கு கூட ஒவ்வொரு மார்கழி விடுமுறைக்கும் வேறு ஒரு நாட்டிற்கு சென்று விடுவேன்.

"செல்வண்ணா, உங்கள பொலிஸ் பிடிக்க மாட்டானோ?"

என் கேள்வியில் அர்த்தம் புரியாமல் "என்னடா?"

"நாங்க எல்லாம் சீட் பெல்ட் போடமா போறம், பொலிஸ் பிடிச்சா காசு குடுக்கணுமே"

அதை கேட்டு காரை �“ட்டிக் கொண்டிருந்த அண்ணா சிரித்தார்.

"இதில் சிரிக்க என்ன இருக்கு, �“ம் செல்லம் பெல்ட் போடதான் வேணும். போடுற காலம் வரும்"

இப்படி பல கேள்விகளை கேட்டு கூட இருப்பவர்களை தொல்லை பண்ணுவது தான் என் தொழிலாக இருந்தது. காரணம் பல விடயங்கள் எனக்கு புதிதாக இருந்தமை.

சந்தை என்றால் எனக்கு பிடிக்காது. காரணம் அங்கிருக்கும் சத்தமும், வெயிலின் கொடுமையும். அதையும் தாண்டி நான் செல்வண்ணாவுடன் சென்ற காரணம் என் சித்தப்பா.

மாவீரராகிவிட்டிருந்தவருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு வாசல்களிலும், இனவெறியால் வேட்டையாடப் பட்ட குடும்ப சந்தோசங்களில் ஒரு சிலவற்றை,

தூயாவின் அநுபவப் பயணத்தில் கலந்து, உலகம் தரிசனம் செய்கிறது.

நன்றிகள் தூயாவின் பயணத்துக்கு.

வாழ்த்துக்கள் வளமான எழுத்தாற்றல்களுக்கு.

Link to comment
Share on other sites

எவ்வளவு உயர்ந்தவர்கள் இவர்கள். தூயாவிடம் இருந்து வேறு படைப்புக்களையும் வாசிக்க ஆவலாக இருக்கிறேன்

Link to comment
Share on other sites

மிக்க நன்றி தேவன், ஈழவன் & கந்தப்பு.. :lol: வாசித்து என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதற்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது...மீண்டும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் உங்கள் ஈழமும் நானும் படைப்பு.......

Link to comment
Share on other sites

மிக்க நன்றி புத்தன் அவர்களே:rolleyes:

Link to comment
Share on other sites

தூயாஇ உங்களுடைய அனுபவப் பகிர்வு கண்ணில் நீரை வரவைத்துவிட்டது.

இதுபோல் எத்தனை இளைஞர் யுவதிகள் வாழவேண்டிய வயதில் தம்மை முழுமையாய் அர்ப்பணித்து எங்களுக்காய்ப் போராடிக்கொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாவை வரவேற்கத் துணிந்து களித்தில் நிற்கும் அந்தப் போரளிகளின் மனங்களில் உள்ள மென்மையான அன்பையும் அந்த ஈரங்களையும் அழகாக பதிவு செய்கிறிர்கள் தூயா. மிக நல்ல பதிவு.

Link to comment
Share on other sites

நல்ல பதிவு தூயா நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்.

தமிழ் மக்கள் பட்ட அவலம், போராளிகளின் தியாகங்கள், பண்பியல்புகள், உங்கள் அண்ணாமாரில் நீங்கள் வைத்துள்ள பாசம் அனைத்தையும் கண்முன்னே காட்சிகளாக உணர்ச்சிகளுடன் கொண்டுவந்துவிட்டீர்கள். இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இணிப்புக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

தூயாஇ உங்களுடைய அனுபவப் பகிர்வு கண்ணில் நீரை வரவைத்துவிட்டது.

இதுபோல் எத்தனை இளைஞர் யுவதிகள் வாழவேண்டிய வயதில் தம்மை முழுமையாய் அர்ப்பணித்து எங்களுக்காய்ப் போராடிக்கொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.