• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

நீதி கோரி கொட்டும் மழையில் ஜெனிவாவில் போராட்டம்

Recommended Posts

நீதி­ கோரி கொட்டும் மழையில் ஜெனி­வாவில் போராட்டம்

Sp12-e7e3397743cbeb46b3967890c8682b2dde8804a5.jpg

 

2009ஆம் ஆண்டு இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளுக்கு நீதி வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி நேற்று திங்­கட்­கி­ழமை ஜெனி­வா வில் கொட்டும் மழை­யிலும் மாபெரும் போராட்டப் பேரணி இடம்­பெற்­றது.

சுவிஸ் தமிழர் ஒருங்­கி­ணைப்புக் குழு­வினால் ஏற்­பாடு  செய்­யப்­பட்­டுள்ள இந்த போராட்­ட­மா­னது ஜெனிவா புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் உள்ள புங்­காவில் பிற்­பகல் 2 மணி­ய­ளவில் ஆரம்­ப­மா­கி­யது. 

இதன்­போது 2009இல் இடம்­பெற்­றது ஒரு இனப்­ப­டு­கொ­லையே! எமக்கு நீதி வழங்கு! தொடர்ந்தும் ஏமாற்­றாதே! போன்ற கோஷங்­களை தொடர்ச்­சி­யாக எழுப்­பி­ய­வாறு ஜெனி­வாவில் அமைக்­கப்­பட்­டுள்ள முரு­க­தா­சனின் திடல் நோக்கி பேர­ணி­யாகச் சென்­றனர்.

ஆங்கு விசேட அஞ்­சலி செலுத்தும் நிகழ்வும் இடம்­பெற்­றது. விசே­ட­மாக தமி­ழர்­களின் மீது நடத்­தப்­பட்ட இனப்­ப­டு­கொ­லைக்கு நீதி வேண்­டு­மெனக் கோரி தன்னை ஈகம் செய்த முரு­க­தாசன் உள்­ளிட்­டோ­ருக்கு நெஞ்சை உருக்கும் வகையில் அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

முரு­க­தா­சனின் தயார் அஞ்­ச­லியைத் செலுத்­தி­ய­தோடு ஐரோப்­பிய வாழ் தமி­ழர்கள் அனை­வரும் அலையெ அணி திரண்டு நீதி வேண்டும், காலஅவகாசம் வழங்ககூடாடு என்பதை அழுத்தமாக வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-07#page-1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this