Jump to content

கிறிஸ்மஸ் விடுமுறை நாள் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

 
வீச மனமின்றி வைத்திருந்த உருப்படாத பழைய கவிதை ஒன்றை எடுத்து மீழப் புனைந்துள்ளேன். எப்படி இருக்கு?
 
 
*
கிறிஸ்மஸ் விடுமுறை நாள்
வ.ஐ.ச.ஜெயபாலன்
*
 
விடுமுறைத் தூக்கத்தை
மதியப் பசி கலைக்க
சோம்பேறி நான் எழுந்தேன்.
வீடு சா அமைதியில்.  
*
மூலையில் மினுக் மினுக்கென
தனித்த கிறிஸ்மஸ் மரம் ஒளிரும்.
இன்று இரட்டிப்புக் கூலியென
வேலைக்கு ஓடிவிட்டாள் மனைவி.
குளிர்ப்பெட்டி நிறையப் பழசிருக்கு
சூடாக்கித் தின்னலாம்.
வெளியே வெண்பனிப் பெயலின்
இரைச்சல் அமுக்கி ஓங்குதே
என் பசிமறந்த பிள்ளைகளின் கும்மாளம்.
*
சன்னலுக்கு வந்தால்
கீழே முன்றிலில்
வெப்ப ஆடைப் பொதிகளாய்ச் சிறுவர்கள்
தம்போல் ஒருவனை
வெண்பனியில் வனைகின்றார்.
சிறுமி ஒருத்தி
கறட் கிழங்கால் மூக்கு வைத்துக்
கைகொட்டிச் சிரிக்கிறாள்.
தேர்ந்த சிற்பியாய்
கண் என்றும் வாய் என்றும்
கற்கள் பதிக்கிறார் பையன்கள்.
*
நாளை உருகிவிடும் என்றாலும்
இன்று தனித்த நம் சிறுசுகள் உருகாது
குதூகலிக்க வைக்குதே
முற்றத்துப் பனிமனிதன்.
நாளை குப்பையில்தான் எனினும்
இன்நாளை ஒளிர வைக்குதே
என் பிள்ளைகளின் கிறிஸ்மஸ் மரம்.
*
நீண்ட தூக்கமும், பெருஞ் சமையலும்
மது விருந்தாடலும்
தந்திர காதல் வேட்டையும்
புணர்வதுமாய் கழிகிற விடுமுறைகளில்
பிணிவாய்ப் படுகிற அன்னிய வாழ்வு
மூலைக் கிறிஸ்மஸ் மரத்தில்
முற்றத்துப் பனி மனிதனில்
கொண்டாடும் குளந்தைகளின் கூச்சலில்
உயிர் பூக்குதே.
*
நாளை முற்றத்தில் கரட் கிழங்கையும்
குப்பையில்
கிறிஸ்மஸ் மரத்தையும் பார்த்து
இரண்டுமே ”வீண்” என்பாள்
ஆதிசேடனுன், அட்லஸுக்குத் துணையாய்
இந்த உலகத்தை சுமக்கும் என் மனைவி.
*
வீண் என்கிற வார்த்தைதான்
வீணாக்குது நம் வாழ்வை.
 
Link to comment
Share on other sites

EDITTED

 

விடுமுறைத் தூக்கத்தை
மதியப் பசி கலைக்க
சோம்பேறி நான் எழுந்தேன்.
வீடு சா அமைதியில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ்பொழுது பனிபொழிந்திருக்கும் வட துருவத்து வாழ்வை கவிஞர் அப்படியே முன்னால் ஓடவிட்டுள்ளார்.

பனியில்லாத குளிரும் இருட்டுமான இங்கிலாந்தில் கிறிஸ்மஸ் விளக்குகளின் வெளிச்சத்திலும் விஸ்கியின் போதையிலும் ஆட்டிறைச்சிக் கறியின் மொச்சை வாசனையிலும் விடுமுறை சந்தோஷமாகத்தான் எங்களுக்கும் வந்துபோகின்றன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.