Sign in to follow this  
நிலாமதி

பொன்னாடை

Recommended Posts

கங்கூன் கருவேப்பிலை
எங்கெங்கோ அலைந்து
ஆறுகுளம் வயல்கரை 
 அரவம் முள்ளு சேறு கடந்து
சேலை இழுத்து இடுப்பில் செருகி
புளுபூச்சி குத்தல் பார்த்து
கிள்ளி சேர்த்து பிடியாக்கி
அடுக்கியோர் புறம் வல்லாரை
அகத்திப்பிடிகள் 
அனுங்காமல் இருக்;க
அடிக்கடி நீர் பனுக்கி
கடைய வல்ல முளைக்கீரை
மூன்றிருபது தேசிக்காய்
மூன்றடியில் இறம்பை
இன்னும் பலகுறை தீர்க்க
பூவும் இலையுமாய்
பொன்னாங்காணி
வண்டுகொல்லி வாழைப்பொத்தி
முருங்கை முசுட்டை மொசுமொசுக்கை
குறிஞ்சா
இன்னும் பல இலைகளுடன்
அந்திவரை சந்தை வாசலில்
காத்திருக்கும் கிழவிகளை நான்
கண்டு கொள்ளாமல் போவதில்லை
இன்றும் உழைத்து
இத்துப்போன சேலையுடன்
மக்கள் பேரரை காக்கும்
மானமிக்க பெண்டுகளை
மகளிர் நாளில் நான் பணிவேன்
பெண்ணியமோ பெருமேடையோ
பெருவிருதோ இல்லாமல்
சொல்லாமல் பெருஞ்சேதிகளை
ஆங்காங்கு இப்படி
கச்சான் கீரை தேங்காய் முன்
ஒன்றுவாங்கிப்போமென்று 
உச்சரிக்கும் உன்னதங்கள்
தன்னை மட்டுமல்ல
இம்மண்ணையும் அறியாமல்
உயர்த்த பாடுபடும் உழைப்புக்கள்
தம்மை பிறர் அறிவதற்கு
இந்த தலைவிகளும் பாடமே!!
இன்றும் கூட என் அம்மை
பாதிக்கிழவனான எனக்கு
பேசி பேசி
மாசிக்குளிர் மகனே
நாசி துவாரம் அரிக்கும் என
தன் சேலைத்தலைப்புக்குள்
சேர்த்த பணத்தில்
வாங்கிந் தந்த போர்வையைவிட
வேறெது எனக்கு உயர்;ந்த பொன்னாடை!!

 

முக நூல் பதிவில் இருந்து  காந்த் காந்தன் 

  • Like 6

Share this post


Link to post
Share on other sites

இன்றும் கூட என் அம்மை
பாதிக்கிழவனான எனக்கு
பேசி பேசி
மாசிக்குளிர் மகனே
நாசி துவாரம் அரிக்கும் என
தன் சேலைத்தலைப்புக்குள்
சேர்த்த பணத்தில்
வாங்கிந் தந்த போர்வையைவிட
வேறெது எனக்கு உயர்;ந்த பொன்னாடை!!

 

அருமையான இணைப்பு சகோதரி ....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this