Jump to content

'மயக்க நிலையில் இருந்தார் ஜெயலலிதா' - எய்ம்ஸ் அறிக்கை பற்றி தமிழக அரசு


Recommended Posts

'மயக்க நிலையில் இருந்தார் ஜெயலலிதா' - எய்ம்ஸ் அறிக்கை பற்றி தமிழக அரசு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எய்ம்ஸ் அறிக்கை பற்றி தமிழக அரசு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 'செப்டம்பர் 22-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது மயக்க நிலையில் இருந்தார். இரவு 10 மணிக்கு அவர் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டார். நீர்சத்து , நீரிழிவு உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் ஜெயலலிதா. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

அப்போலோவில் காவிரி பிரச்னை பற்றி விவாதித்தார். அவரைக் காப்பாற்ற அனைத்து மருத்துவ முயற்சிகளும் எடுக்கப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அவரது இதயம் செயலிழந்தது குறித்து ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரிகள் உட்பட்டோருக்கு தெரிவிக்கப்பட்டது' என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

1statement_18294.jpg

2statment_18415.jpg

3statment_18517.jpg

4statment_18023.jpg

5statment_18148.jpg

 

 

 

 

 

http://www.vikatan.com/news/tamilnadu/82858-jayalalithaa-was-unconscious-when-she-was-admitted---tn-government-about-aiims-report.html

Link to comment
Share on other sites

gallerye_002234107_1725026.jpg

'ஜெ., மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிய, சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்து வருவதால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதற்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாக, டில்லி எய்ம்ஸ் டாக்டர்களிடம் இருந்து, அவசரமாக அறிக்கை வாங்கி, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

Tamil_News_large_1725026_318_219.jpg


அதில், போயஸ் கார்டன் வீட்டில், ஜெ., தாக்கப்பட்டார் என்ற புகாருக்கு, தெளிவான பதில் எதுவும் இல்லை. ஆனால், சென்னை, அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, காவிரி நீர் பிரச்னை குறித்து விவாதித்தார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டிச., 5ல் இறந்தார். அவர் மருத்துவமனையில் இருந்த, 75 நாட்களும், யாரும் அவரை பார்க்கவில்லை. அவரை பார்க்காமலே, 'அவர் நலமாக உள்ளார்; நன்றாக சாப்பிடுகிறார்' என, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறி வந்தனர்.
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும், 'அவர் விரைவில் வீடு திரும்புவார்' என, கூறியது. ஆனால், திடீரென இதயத் துடிப்பு நின்று, அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
 

சந்தேகம்



மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட நாள் முதல், அவரது இறப்பு வரை, அவரால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த, சசிகலா குடும்பத்தினர் மட்டுமே உடனிருந்தனர். பொது மக்கள் அஞ்சலிக்காக, ஜெ., உடல் வைக்கப்பட்டிருந்த போதும், அவர்களே சுற்றியிருந்தனர்.இது,

அ.தி.மு.க., வினரிடமும், பொது மக்களிடமும், பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. மருத்துவமனையில், காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டதாக, முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக, தகவல் பரவியது.
இதன் தொடர்ச்சியாக, போயஸ் கார்டன் வீட்டில், அவர் தாக்கப்பட்டதால், மயங்கி விழுந்ததாகவும், அதன்பிறகே, அவர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.இது, ஜெ., மரணத்தில், மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியது.எனவே, 'இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என, தி.மு.க.,வும் குரல் கொடுக்கத் துவங்கியது. 'ஜெ., மரண சந்தேகங்களை தீர்க்க, சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என, சசிகலாவுக்கு எதிராக, பன்னீர்செல்வம் அணியினரும் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
 

கடும் நெருக்கடி



இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், நாளை உண்ணாவிரதம் நடத்தவும், பன்னீர் அணியினர் முடிவு செய்துள்ளனர். இது, தமிழக அரசுக்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இப்பிரச்னையை சமாளிக்க, எய்ம்ஸ் மருத்துவர்களிடம் அறிக்கை பெற்று, அதை டில்லியில் வெளியிட்டுள்ளனர்.
ஆனால், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், சீரியசான புகாருக்கு, சப்பைக்கட்டு கட்டும் விதமாகவே விளக்கங்கள் உள்ளதாக தெரிகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, அறிக்கையில், அப்பல்லோவில் தீவிர சிகிச்சை பிரிவில், தொண்டையில் துளையிட்ட நிலையில் இருந்த ஜெயலலிதா, காவிரி பிரச்னை குறித்து, அதிகாரிகளுடன் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பன்னீர் தரப்பினரின் முக்கிய குற்றச்சாட்டான, போயஸ் கார்டனில் அவர் தாக்கப்பட்டார் என்ற புகாருக்கு,சரியான பதில் இல்லை.

 

 

மருத்துவ அறிக்கை வெளியீடு ஏன்? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்



தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:ஜெயலலிதா மறைவு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவரது மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளோம். டில்லி, எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை, அரசு அறிக்கை அனைத்தையும் பார்வையிடும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது தெளிவாகிறது.
தனிப்பட்ட நபரின் சிகிச்சை விபரத்தை வெளியிடக் கூடாது என்ற விதி உள்ள போதிலும், வதந்திகளை தவிர்க்க, பத்திரிகை செய்தி அளித்துள்ளோம். எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிக்கையை, முழுமையாக வெளியிட்டுள்ளோம்.
அரசு டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த, சிகிச்சை முறையும் வெளியிடப்பட்டு உள்ளது. மாநில அரசின் கோரிக்கை அடிப்படையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தனர்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் அளித்துள்ளோம்; நீதிமன்றத்திலும் அறிக்கை அளித்துள்ளோம். மறைந்த முதல்வருக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. தேவை அடிப்படையில், மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், சிகிச்சையை பாராட்டி உள்ளனர்; யாரும் குறை கூறவில்லை.
நேரடியாக ஜெ.,வை பார்த்து சிகிச்சை அளித்தனர். அறிக்கையை, திருத்தம் செய்யவில்லை. 2016 டிச., 4 மாலை, 4:30 மணிக்கு, ஜெ.,வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. டிச., 5ல், 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று எய்ம்ஸ் மருத்துவர்களும் வந்தனர். மருத்துவ முறைப்படி, முடிவுகள் எடுக்கப்பட்டன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1725026

Link to comment
Share on other sites

ஜெ.,வுக்கு இதய துடிப்பு நின்றது எப்போது?
 
 
 

சென்னை,: அப்பல்லோ மருத்துவமனையில், டிச., 5ல் நடந்தது என்ன என்று, எய்ம்ஸ் டாக்டர்கள், கில்னானி, நரங்க், அஞ்சன் டிரிக்கா, தேவகாரு ஆகியோர் அளித்த அறிக்கை:
 

 

Tamil_News_large_1725190_318_219.jpg

டிச., 5 மாலை, 5:00 மணிக்கு, அப்பல்லோ மருத்துவமனை வந்து, தீவிர சிகிச்சை பிரிவான ஐ.சி.யூ.,வில் இருந்த, ஜெயலலிதாவின் சிகிச்சை முறையை பார்வைஇட்டோம். முதலில் மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் டாக்டர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினோம்.
ஜெயலலிதாவுக்கு, டிச., 4 மாலை, 4:30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். அவருக்கு, வெளிப்புறத்தில் இருந்து மசாஜ் செய்தும், இதய நுரையீரல் சிகிச்சை, எக்மோ என்ற செயற்கை குழாய் சுவாசம் மற்றும் பேஸ்மேக்கர் கருவியின் உதவியால், சுவாசம் போன்ற அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக
தெரிவித்தனர்.அவருக்கு சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சையும் வழங்கப்பட்டிருந்தது. உடல் வெப்பநிலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு, பின், இரவு, 10:00 மணிக்கு, வெப்பநிலை இயல்புக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால், எக்மோ கருவி சுவாச சிகிச்சை வைக்கப்பட்டிருந்தாலும், ரத்த அழுத்தத்தின் அளவு வேகமாக குறைந்து கொண்டே இருந்தது; இது, அவரது இதயம் செயல்படவில்லை என்பதை காட்டியது.
பேஸ்மேக்கரை ஆய்வு செய்தபோது, இதய துடிப்பே இல்லை என்பதற்கான, மட்ட

நிலையை காட்டியது. எல்லா வகை அளவீடுகளும், ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள், அவரது உயிர் பிழைக்க, பலனில்லாமல் போனதை காட்டின.
இதையடுத்து, மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம், அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி, குடும்பத்தினர்,உறவினர்களுடன் பேசி, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 

'நினைவு திரும்பினார் நாற்காலியில் அமர்ந்தார்!'


டிச., 3ம் தேதி ஆய்வு குறித்து, டாக்டர்கள் கில்னானி, நிகில் டான்டன், அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் அறிக்கை:
டிச., 3 காலை, 9:00 மணிக்கு, அப்பல்லோவில், ஜெயலலிதாவின் சிகிச்சை முறைகளை பார்வையிட்டோம். சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவிடம் பேசினோம். 'ஜெயலலிதா உடல்நிலை முன்னேறி வருகிறது' என, தெரிவித்தனர். அவருக்கு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், குறைந்த அளவு செயற்கை சுவாசமே தேவைப்பட்டது;
சுயநினைவில் இருந்தார். அவரால் நாற்காலியில், 20 நிமிடங்கள் வரை அமர முடிந்தது. ஆனால், நரம்பு, சதைகளின் பாதிப்பால், நிற்க முடியவில்லை. இரு நாட்களுக்கு முன், மேற்கொள்ளப்பட்ட மின்னணு முறையில், உடல் திறன் சோதிக்கப்பட்டதில், நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததுகண்டறியப்பட்டிருந்தது.
அவருக்கு, 'பிசியோதெரபி' முறை நீண்ட நாட்களுக்கு தேவை என்பது பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அவருக்கான ரத்த அழுத்தம், அடிக்கடி ஏறி இறங்கி கொண்டிருந்தது. அவருக்கு நோய்க்கான

 

காரணத்தை இன்னும் அறியவும், இதய பிரச்னைகளை உள்ளார்ந்து ஆய்வு செய்ய முடியாததால், இந்த நிலை தொடர்வதாக, குறிப்பிட்டோம். அதேநேரம், டாக்டர்கள் குழுவின் சிகிச்சையை பாராட்டினோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
 

பாக்டீரியாவால் பாதிப்பு!


அக்., 9, 10ல் மேற்கொண்ட ஆய்வு குறித்து, எய்ம்ஸ் டாக்டர் கில்னானியின் அறிக்கை:அக்., 9 மாலையில், ஜெயலலிதாவுக்கான சிகிச்சையை ஆய்வு செய்தேன். ஜெயலலிதாவின் நுரையீரலில் திரவம் இருக்கும் அடையாளம், எக்ஸ்ரேவில் தெரிந்தது. சிகிச்சை அளித்த டாக்டர் பாபு ஆப்ரகாம், சிகிச்சை முறையை என்னிடம் தெரிவித்தார். சிகிச்சை முறையை மாற்றி, சளியை குறைக்க அறிவுறுத்தினேன்.
சிறுநீர் ஆய்வில், பாக்டீரியா அதிகரித்திருப்பது தெரிந்தது. அதே பாக்டீரியா, நுரையீரலில் இருந்து பிரியும் மூச்சு ஒலி குழாயிலும் உருவாகியது, ஆய்வில் கண்டறியப்பட்டது. அதனால், 'ஆன்டிபயாட்டிக்' மருந்து வழங்கப்பட்டது. 'இன்சுலின் தெரபி' சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் உடல்நிலை முன்னேறியது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலரிடம் தகவல் தெரிவித்தோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1725190

Link to comment
Share on other sites

ஜெ., மயங்கி இருந்தார்!
மூச்சற்ற நிலையில் ஜெ., மயங்கி இருந்தார்!
தமிழக சுகாதாரத் துறை அறிக்கை
 
 
 

சென்னை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அறிக்கைகள் அடிப்படையில், தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

 

Tamil_News_large_1725230_318_219.jpg

ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சூழல், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி ஊடகங்களிலும், சில அரசியல் தலைவர்களின் அறிக்கைகளிலும், பல்வேறு ஊகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
 

ஆபத்தான நிலைமை


அவரது சிகிச்சை பற்றி, நாங்கள் அறிக்கை தயாரித்திருந்தாலும், அப்பல்லோ மருத்துவமனை மற்றும் டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையையும் கேட்டுப் பெற்றிருக்கிறோம்.
அந்த அறிக்கைகளும், ஜெயலலிதா சிகிச்சை பற்றி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு அளித்திருந்த தகவலும் ஒத்துப்போகின்றன. அப்பல்லோ மருத்துவமனைக்கு, 2016 செப்., 22 இரவு, 10:00 மணிக்கு, ஜெயலலிதாவின் இல்லத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து, அங்கு ஆம்புலன்ஸ் சென்றது. அப்போது, ஆக்சிஜன் குறைவு காரணமாக, ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயக்கம் அடைந்தது தெரிய வந்தது.
உடனடியாக, அப்பல்லோவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த போது, நோய்த் தொற்று மற்றும் நீர்ச்சத்து இழப்புடன், மூச்சு விடுவதில் பிரச்னையும் இருந்துள்ளது. ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தைராய்டு சுரப்பி குறைபாடுகளும் இருந்தன.
ஆனால், அப்பல்லோ சிகிச்சை அறிக்கை மற்றும் எய்ம்ஸ் அறிக்கைகளின்படி, அவர் ஆபத்தான நிலையில் இருந்ததற்கான தடயங்களோ, சில அரசியல் தலைவர்கள் சொல்வது போன்ற
சம்பவமோ நடக்கவில்லை. சேர்க்கப்பட்ட நாள் முதல், அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை குழுவினர், மூத்த இதய நோய் நிபுணர்கள், சுவாச சிகிச்சை நிபுணர்கள், தொற்று நோய் நிபுணர்கள், நாளமில்லா சுரப்பியல் நிபுணர் மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணரின் கண்காணிப்பில், ஜெயலலிதா இருந்து வந்தார்.
அவருக்கு, உணவு நிபுணர் குழு கண்காணிப்பில், ஊட்டச்சத்து கொடுக்கப்பட்டது. உடலியக்க சிகிச்சையை, அப்பல்லோ மற்றும் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை நிபுணர்கள்
வழங்கினர்.இது தவிர, லண்டனை சேர்ந்த சர்வதேச மருத்துவ நிபுணர், ரிச்சர்ட் பீலேவின் ஆலோசனைகளும் பெறப்பட்டன. மேலும், 2016 செப்டம்பர் தேதியிட்ட, அரசு ஆணைப்படி அமைக்கப்பட்ட, ஐந்து அரசு மருத்துவர் கொண்ட குழுவும், அப்பல்லோ சிகிச்சையை தொடர்ந்து கண்காணித்து வந்தது.

 

எய்ம்ஸ் வருகை




தமிழக அரசு வேண்டுகோளின்படி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின், டாக்டர் ஜி.சி.கில்னானி தலைமையிலான நுரையீரல் மற்றும் உறக்கநிலை குறைபாடு நிபுணர்கள் குழு, ஜெயலலிதாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக ஆலோசனைகள் வழங்கியது. அக்குழு, 2016 அக்டோபர், 5ல் இருந்து, டிச., 5 வரை, ஐந்து முறை சென்னை வந்து ஆலோசனை வழங்கியது.
ஜெயலலிதா, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன், அளிக்கப்பட்ட தவறான மருந்துகள் காரணமாகவே, உடல்நிலை பாதிக்கப்பட்டதாக, அவதுாறு பரப்பப்பட்டு உள்ளது.
அப்பல்லோ வருவதற்கு முன், தோல் பிரச்னை காரணமாக, 'கார்டிகோ' ஊக்க மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது. மேலும், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளையும், அவர் உட்கொண்டு வந்துள்ளார்.
 

முன்னேற்றம்



அப்பல்லோவில் அளிக்கப்பட்ட சிகிச்சையால், அவரது உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவர், குடும்ப உறுப்பினர்களிடமும், காவிரி பிரச்னை தொடர்பாக, சில அதிகாரிகளிடமும் பேசினார். பின்,
அவருக்கு சிகிச்சை தீவிரம் சற்று குறைக்கப்பட்டது. வழக்கம் போல், வாய் வழியாக உணவு எடுத்துக் கொள்ளும் வகையில் தேறினார்.
அதனால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு, நிபுணர்கள் கண்காணிப்பில், நன்கு தேறி வந்தார். இது, எய்ம்ஸ் டாக்டர் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோல், ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சையின் தரம் பற்றியும், சிலர் சந்தேகங்களை எழுப்பினர். அப்பல்லோ சிகிச்சை முறையை, ஆமோதிக்கும் வகையில் தான், எய்ம்ஸ் அறிக்கை அமைந்திருந்தது. அக்., 5ல், சென்னை வந்த எய்ம்ஸ் குழு, தரமான சிகிச்சை வழங்குவதாக தெரிவித்தது; டிச., 3 அறிக்கையில், சிகிச்சை தரத்தை வெகுவாக
பாராட்டியிருந்தது. எதிர்பாராவிதமாக,


டிச., 4ல், ஜெயலலிதாவுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது, அவரது அறையில், தீவிர சிகிச்சை நிபுணர் இருந்தார். அவருக்கு சுவாசம் அளிப்பதற்கான சிகிச்சையும், நுரையீரல் பிரச்னையை சீரடைய செய்யும், 'எக்மோ' உபகரண சிகிச்சையும் வழங்கப்பட்டது.
 

நடவடிக்கை


மருத்துவ நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வகைகளிலும், அவரை காப்பாற்ற சிகிச்சை வழங்கப்பட்டது. அப்போது, எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் குழு, அவரது உடல்நிலையை ஆராய்ந்தது.

இறுதியில், மேலும் சிகிச்சை அளிப்பது பயன் தராது என்பதை, அவரது இதய செயல்பாடு நின்று போனதைப் பார்த்தும், நரம்பியல் ரீதியான முன்னேற்றம் இல்லாததை பார்த்தும், மருத்துவர்கள் உணர்ந்தனர். பின், தேவையான நடைமுறைகள் மேற்கொண்ட பின், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், தம்பிதுரை, சசிகலா, தலைமைச் செயலர் மற்றும் சுகாதார
செயலர் ஆகியோருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை உணர்ந்த அவர்கள், நெறிமுறைப்படி நடவடிக்கை எடுக்கும்படி கூறினர். ஜெயலலிதா, டிச., 5ம் தேதி இரவு, 11.30 மணி அளவில், மரணம் அடைந்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


 

ஜெ., மரணம்: தொடரும் கேள்விகள்


ஜெ., மரணம் தொடர்பாக, பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் கேள்விகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
அவற்றின் விபரம்:
* செப்., 20 முதல், 22 வரை ஜெ.,க்கு என்ன நடந்தது?
* மக்கள் அவரை கடைசியாக பார்த்தது, செப்., 20ல். அதன்பின், 77 நாட்கள் கழித்து, இறந்த நிலையில் பார்த்தனர். இடைப்பட்ட நாட்களில், அவர் முகத்தை கூட ஏன் யாருக்கும் காட்டவில்லை?
* சசிகலா மற்றும் டாக்டர்களை தவிர்த்து, அவரை பார்த்தவர்கள் யாராவது உள்ளனரா?
* கவர்னர் கூட ஏன் பார்க்கவில்லை?
* கவர்னரை தடுத்தது யார்; அவரை தடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
* ஒரு முதல்வருக்கு என்ன நடந்தது என, தெரியாமல் தவிக்கும் போது, அவர் குறித்த உண்மை செய்திகளை, மக்களுக்கு மத்திய அரசு அறிவிக்காதது ஏன்?
* வெளியில் இருந்து வேறு யாராவது பார்த்தால், நோய் தொற்று ஏற்படும் என்றால், சசிகலா எப்படி அனுமதிக்கப்பட்டார்?
* ஜெ.,க்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நோய் தொற்று ஏற்படாதவாறு, தங்கள் வீடுகளுக்கு செல்லாமல், அங்கே தங்கியிருந்து, சிகிச்சை அளித்தனரா?
* லண்டன், சிங்கப்பூரில் இருந்து வந்த டாக்டர்களால், நோய் தொற்று ஏற்படாதா?
* ஜெ.,வின் ரத்த உறவுகளை கூட, ஏன் அனுமதிக்கவில்லை?
* ஜெ.,வை யாரெல்லாம் பார்க்கலாம், பார்க்கக் கூடாது என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதா?
* ஜெ., விஷயத்தில், சசிகலா மட்டுமே முடிவு எடுக்கலாம் என, சிறப்பு அரசு ஆணை உள்ளதா?
* தேவைப்பட்டால், வெளிநாடு கொண்டு செல்வோம் எனக் கூறியவர்கள், ஏன் வெளிநாடு கொண்டு செல்லவில்லை?
* ஜெ., உத்தரவிட்டு, பல திட்டங்களை நிறைவேற்றியதாக, தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியானது. யாரிடம், அவர் சொன்னார்; அதற்கு சாட்சி யார்?
* ஆரம்பத்திலேயே, ஜெ., இறந்து விட்டார் என தகவல் பரவியது; ஆனால், அது பொய் என நிரூபிக்காமல், அரசு வேடிக்கை பார்த்தது ஏன்?
* அவரால் விரோதிகளாகவும், துரோகிகளாகவும், பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட கும்பல், அப்பல்லோ முதல் சமாதி வரை, அவரை சுற்றி நிற்க, மத்திய, மாநில அரசுகள் எப்படி
அனுமதித்தன?
* ரத்த உறவுகள் இருக்கும் போது, இறுதி சடங்கு, ராணுவ மரியாதை பெறுதல் ஆகியவை, சசிகலாவுக்கு எப்படி வழங்கப்பட்டன?
* ஜெ., கன்னத்தில் காணப்பட்ட, நான்கு புள்ளிகள் என்ன?
* சாதாரண மனிதன் இறந்தாலே, சொந்தங்கள் வந்து சேரும் வரை, இரண்டு நாட்கள் வைத்து, மூன்றாம் நாளில் அடக்கம் செய்யும் போது, லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த, மூன்று நாட்கள் ஒதுக்காமல், அவசரமாக அடக்கம் செய்ய என்ன காரணம்; இந்த முடிவை எடுத்தது யார்?இவ்வாறு பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

 

தலைமை செயலருக்கு தெரியும்!



அக்., 13 முதல், 15 வரை, எய்ம்ஸ் நடத்திய ஆய்வின் அறிக்கை:அக்., 13 மதியம், 1:30 மணிக்கு பார்வையிட்டோம். ஜெயலலிதாவுக்கு, தொடர்ந்து உயிர் காக்கும் சிகிச்சை தரப்பட்டது. சளி குறைந்திருந்தது; அவருக்கு லேசாக குரல் வந்தது; உதடுகள் அசைத்து பேச முயற்சித்தார்; கால்கள் அசைந்தன; காலை ஊன்ற முயற்சித்தார்.
பின், அக்., 14ல், சிகிச்சைகளை ஆய்வு செய்தோம். பிரதாப் ரெட்டி மற்றும் குழுவினருடன் ஆலோசனை நடத்தி, தொடர்ந்து உயிர் காக்கும் சிகிச்சையை தொடர முடிவு செய்யப்பட்டது.
அன்று மாலையில், ஜான் ஹாப்கின்ஸ் நிறுவனஇதயவியல் நிபுணர் டாக்டர் ரஸ்சலை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் தொடர்பு கொண்டு, ஒரு மணி நேரமாக பேசினோம். அவர் இந்த சிகிச்சை முறைகளை ஏற்றுக் கொண்டார்.
அக்., 15ல் ஆய்வு செய்தபோது, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. பின், சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட, தமிழக அரசின் மூத்த அமைச்சர்கள், தலைமை

 

செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை அழைத்து, பிரதாப் ரெட்டியின் அலுவலகத்தில், சிகிச்சை முறைகளை
தெரிவித்தோம்.சில வாரங்களில், அவரது உடல்நலம் தேறும் என தெரிவித்தோம் என, எய்ம்ஸ் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
 

சுயநினைவு குறைந்து, மயங்கிய நிலையில் ஜெ., எய்ம்ஸ் அறிக்கையில் தகவல்


'மயக்க நிலையில், கடும் காய்ச்சல், நோய் தொற்றுடன், அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்' என, எய்ம்ஸ் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள், நுரையீரல் மருத்துவம் மற்றும் உறக்கநிலை செயலிழப்புக்கான சிகிச்சை நிபுணர் ஜி.சி.கில்னானி; தீவிர சிகிச்சை பிரிவு, மயக்கவியல் மற்றும் வலி நீக்கும் மருத்துவ நிபுணர் அஞ்சன் ட்ரிக்கா; இதயவியல் நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் வெளியிட்ட
கூட்டறிக்கை:

கடந்த, 2016 அக்., 5ல், காலை, 8:15க்கு சென்னை வந்து, ஜெயலலிதாவின் சிகிச்சை முறைகளை பார்த்தோம். நுரையீரல் பாதிப்பு, நோய் தொற்றியல், இதயவியல், மகப்பேறியல் உள்ளிட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, சிகிச்சை முறைகளை கேட்டறிந்தோம். ஜெயலலிதாவுக்கு, 68 வயதான நிலையில், அவர், 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகியிருந்தார். கடும் ஆஸ்துமா, இருமலால் பாதிக்கப்பட்டிருந்தார். தைராய்டு சுரப்பி பாதித்து, 5 அடி உயரத்திற்கு, 106 கிலோ எடையுடன் இருந்தார்.
 

400 மி.கிராம்



அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் அளித்த தகவலின்படி, செப்., 22ல் ஸ்திரமற்ற நிலை, சுயநினைவு குறைந்து, மயங்கிய நிலை மற்றும் குறைந்த ரத்த அழுத்த பிரச்னையுடன், வீட்டிலிருந்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். மேலும், சிறுநீர் தொற்று பிரச்னையால், ஏழு நாட்களாக, கடும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வந்துள்ளன. அவருக்கான நீரிழிவு நோய் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, 400 மி.கிராம் என்ற அளவில் இருந்தது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, வெள்ளை அணுக்கள் குறைவால், கடும் காய்ச்சலில் இருந்துள்ளார். அவருக்கு முதலில், மூச்சுத்திணறல் சிரமத்தை போக்க, 'வென்டிலேட்டர்' மற்றும் இருமலை குறைப்பதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
பின், செப்., 28ல், மேலும் மூச்சு பிரச்னை மற்றும் சுயநினைவு இழப்பு தன்மை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, அவருக்கு சிறு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, வாய் வழியே சிறிய குழாய் புகுத்தி, நுரையீரல் சரியாக துடிக்க, அழுத்தம் வழங்க, 'பம்ப்பிங்' செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், அவருக்கு வெள்ளை அணுக்கள் பிரச்னை சரியானது. நாங்கள் வந்து பார்த்தபோது, அவர் முழுவதுமாக வென்டிலேட்டர் உதவியில் வைக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து, அவருக்கு, 'எக்ஸ் - ரே' ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அவரது நுரையீரல் இயல்பு நிலையில் துடிக்க முடியாத அளவுக்கு, அதிகப்படியான சளி இருந்தது.
 

தொடர் சிகிச்சை



இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு, தொண்டைக்கு கீழே அறுவை சிகிச்சை செய்து, 'டிரக்கியோஸ்டமி' என்ற செயற்கை குழாய் சுவாசம் கொடுக்க, பரிந்துரை செய்தோம். ஆனால், அவரது உடல் இருக்கும் நிலையில், உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது நல்லதல்ல என, எய்ம்ஸ் டாக்டர் நிதிஷ் நாயக் கருத்து தெரிவித்தார். பின், மருந்துகள் கொடுத்து, தொடர்ந்து கவனித்து வரப்பட்டது.
அக்., 6ல், மீண்டும் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்தோம். அதே நிலையிலேயே உடல்நிலை இருந்தது. இதுகுறித்து, சிகிச்சை அளித்த குழுவினருடன் ஆலோசித்து, அந்த தகவல்களை, தமிழக அரசின் தலைமை செயலர், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் தெரிவித்தோம்.
அக்., 7 மாலை, 4:30 மணிக்கு, டிரக்கியோஸ்டமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின், அவர் காலை, 11:00 மணிக்கு உடல்நிலை தேறினார்; லேசாக முனகினார். குறைந்த ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவருக்கு, 1 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது.
அதேநேரம், 'அவர் தொடர்ந்து மோசமான நிலையில் தான் இருக்கிறார்; இயல்பு நிலைக்கு வர, தீவிர தொடர் சிகிச்சை தேவை' என, பரிந்துரைத்தோம். நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், பிசியோதெரபி அவசியம் என்பதையும் தெரிவித்தோம்.
எங்களது மொபைல் போன் எண் மற்றும் இ - மெயில் முகவரியை, சிகிச்சை குழுவினரிடம் அளித்து, தொடர்ந்து எங்களிடம் ஆலோசிக்குமாறு கூறிச் சென்றோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1725230

Link to comment
Share on other sites

ஜெயலலிதா மரணம்.. அரசு அறிக்கையும், தொடரும் கேள்விகளும்!

ஜெயலலிதா

நெடுவாசல், பெட்ரோல் விலை உயர்வு, மீனவர் துப்பாக்கிச் சூடு, அ.தி.மு.க உட்கட்சிப் பூசல் எனப் பல்வேறு பிரச்னைகள் தமிழகத்தில் எழுந்துள்ளன. இதற்கிடையே ஜெயலலிதா இறந்த சமயத்தில், எழுப்பப்பட்ட அத்தனை கேள்விகளையும் மக்கள் முற்றிலுமாகவே மறந்திருந்தார்கள். இந்தச் சூழலில் பல மாதங்களாகவே மக்கள் எதிர்பார்த்த அரசுத் தரப்பு அறிக்கையை, சூழலுக்குச் சற்றும் தொடர்பில்லாமல் வெளியிட்டுள்ளது அரசு.

தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் முழு உடல்சிகிச்சை விபர அறிக்கையைத் தற்போது வெளியிட்டுள்ளார். அவர், நோய்வாய்ப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் மருத்துவமனை தரப்பு வெளியிட்ட தகவல்களைவிட, இதில் அதிகமாகவே விபரங்கள் தரப்பட்டிருந்தாலும்... அதுவே, மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது.

மயக்கமா? காய்ச்சலா?

அப்போலோ தரப்பு வெளியிட்ட முதல் அறிக்கையிலேயே ஜெயலலிதாவுக்குக் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள அரசுத் தரப்பு அறிக்கையோ, அவருக்கு ஆக்ஸிஜன் குறைபாடும் மூச்சுவிடுவதில் பெரும் சிக்கலும் இருந்ததாகவும், மயங்கிவிழும் நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறது. வெறும் காய்ச்சலுக்காக மட்டும்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது இதனால் கேள்விக்குள்ளாகிறது.

புதிதாக இடம்பெற்றிருக்கும் சில நோய்கள்

அப்போலோ தனது அறிக்கை ஒன்றில், 'அவருக்கு நாள்பட்ட அளவில் சர்க்கரை வியாதியும் மூச்சுக்குழாய் அழற்சி பிரச்னையும் இருந்தது அனைவரும் அறிந்ததே' என்று குறிப்பிட்டு இருந்தது. விஷயம் என்னவென்றால், அப்போலோ அப்படி ஒரு தகவலை வெளியிடும்வரை யாருமே அதிகாரப்பூர்வமாக அதை அறிந்திருக்கவில்லை. ஆனால், தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், அவருக்குத் தீவிர தோல் அழற்சி நோயும், தைராய்டு சுரப்பியின் செயல்பாடும் குறைந்திருந்தது என்று குறிப்பிட்டிருந்ததுதான். இதுவரை எதிலுமே குறிப்பிடப்படாத இந்தத் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அப்போலோ ஏன் தனது முந்தைய எந்த அறிக்கையிலும் இதுபற்றிக் குறிப்பிடவில்லை?

அறிக்கையின் முரண்பாடு

எப்படியிருந்தாலும் அவர் இதயச் செயல்பாடு குறைந்ததால்தானே இறந்தார், இந்த நோய்கள் பற்றிக் குறிப்பிடாமல் போனதால் என்ன சிக்கல்வந்துவிடப் போகிறது என்கிற கேள்வி எழலாம். ஆனால் தைராய்டு சுரப்பி செயல்பாட்டில் குறைவு ஏற்பட்டால், இதயநோய் பிரச்னை எளிதில் ஏற்படும். மற்றொரு பக்கம், தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை கார்ட்டிகோ ஸ்டீராய்டு என்னும் மருந்து வகைகள்தான் கட்டுப்படுத்தும். ஜெயலலிதாவுக்கு இருந்த தீவிர தோல் அழற்சி நோய்க்காக அவருக்கு கார்ட்டிகோ ஸ்டீராய்டு வகை மருந்துகள்தான் கொடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு அறிக்கையே குறிப்பிடுகிறது.

அதே அரசுத் தரப்பு அறிக்கைதான், “அவர், தவறான மருந்துகள் எடுத்துக்கொண்டதால்தான் அவருக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டதாகச் சிலர் தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள்” என்று கூறுகிறது. தனது அறிக்கையுடனே முரண்பட்ட நிலையில் இருக்கிறது அரசு.

மற்றொரு புறம், உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சந்தித்துள்ளது எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு. வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என்கிற அளவில் உடல்நிலை தேறியிருந்த ஜெயலலிதாவை, அவருக்கு இதயச் செயல்பாட்டில் கோளாறு ஏற்படுவதற்கு முதல்நாள் எதற்காக மருத்துவர்கள் குழு வந்து சந்தித்தது?

'இயல்பாகவே வந்து சந்தித்தார்கள்', 'அவர் சாம்பார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்’, ’இனிப்புகள் சாப்பிடக் கொடுத்தார்கள்' என்று இன்னும் தொடர்கதை எழுதிக்கொண்டிருக்கப்போகிறதா, அரசும் கட்சி தரப்பும்?

http://www.vikatan.com/news/tamilnadu/82915-tamilnadu-government-releases-discharge-summary-and-medical-report-of-former-cm-j-jayalalithaa.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.