Jump to content

காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க - இந்த வாரம் கட்சிகளின் கோஷ்டி சண்டை வாரம்!


Recommended Posts

காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க - இந்த வாரம் கட்சிகளின் கோஷ்டி சண்டை வாரம்!

பிரேக்கிங் நியூஸ்கள் இல்லை, அதிரடி அரசியல் திருப்பங்கள் இல்லை. ஆனாலும் இந்த வாரம் தமிழர்களுக்கு செம டைம்பாஸாகத்தான் இருந்தது. காரணம், இத்தனை நாட்களாக எதிர் தரப்போடு முட்டி மோதிய கட்சிகள் இப்போது தங்கள் கட்சிகளுக்குள்ளேயே மல்லுக் கட்டுகின்றன. 'மிஸ் என்னைக் கிள்ளிட்டான்' ரகத்தில் இருந்து செம சீரியஸான புகார்கள் வர அரசியல் கட்சிகளுக்குள் அனல் பறக்கின்றன. அவற்றை பற்றிய சின்ன ரீகேப் இது.

காங்கிரஸ்:

கட்சி, இளங்கோவன்

கட்சிக்குள் சண்டை என்றால் முதலிடம் இவர்களுக்குத்தானே. தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பதவியேற்ற நாளில் இருந்தே அவர் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக (அ.தி.மு.கவே யாருக்கு ஆதரவுன்னு தெரியலை. இதுல இது வேற) செயல்படுகிறார் என முஷ்டி முறுக்க ஆரம்பித்துவிட்டார்கள் எதிர் கோஷ்டியினர். திருநாவுக்கரசர் எல்லா பிரஸ்மீட்டிலும் 'அம்மா சத்தியமா நான் அம்மா விசுவாசி இல்லைய்யா' என சூடம் ஏற்றிச் சொன்னாலும் யாரும் நம்புவதாக இல்லை. இதற்கு நடுவே, அடிக்கடி கபீம்குபாம் கருத்துகளை தெறிக்கவிடும் இளங்கோவன், 'திருநாவுக்கரசர் யாரென்றே தெரியாது' எனக் கொளுத்திப் போட அடுத்த ரவுண்ட் கதர் வேஷ்டி கிழிப்பிற்கு ரெடியாக இருக்கிறது தமிழக காங்கிரஸ் வட்டாரம்.

தி.மு.க:

கட்சி, ராதாரவி

ஹியூமர் என்ற பெயரில் ராதாரவி பேசுவது சில சமயம் வரம்பு மீறி இருக்கும். பேசிப் பேசியே நடிகர் சங்கத் தேர்தலில் கோட்டை விட்டவர் இன்னும் பழக்கத்தை விட்டபாடில்லை. இப்போதுதான் கண்கள் பனிக்கிறது என டயலாக் எல்லாம் பேசி ஸ்டாலினோடு கைகுலுக்கினார். அதற்குள் வைகோவை கிண்டலடிக்கிறேன் என களமிறங்கி மாற்றுத்திறனாளிகளை எல்லாம் நக்கல் செய்ய, கொதித்துப் போயிருக்கிறது சோஷியல் மீடியா. மானாவாரியாய் வச்சு செய்கிறார்கள். போதாக்குறைக்கு கனிமொழி உள்ளிட்ட தி.மு.க வி.ஐ.பிகளும் ராதாரவியை காய்ச்சி எடுக்கிறார்கள்.

அ.தி.மு.க:

கட்சி, அ.தி.மு.க

'என்ன ரகம்னே தெரியலையே' டைப் மல்லுகட்டு இது. தமிழகமே 'அட போங்கப்பா' என ஓய்ந்தாலும் இவர்கள் ஓய்வதாக இல்லை. துணைக்கு அடிக்கடி தர்மத்தை வேறு அழைத்துக் கொள்கிறார்கள். (உங்களால தர்மம் தூத்துக்குடி பக்கமோ துபாய் பக்கமோ ஓடிப் போறது உறுதி). லேசாக பரபரப்பு குறைந்தால் ஜெயலலிதாவின் கடைசிகால நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பி லைம்லைட்டிலேயே இருக்கின்றன இருதரப்பும். லேட்டஸ்ட்டாக தேர்தல் கமிஷன் சின்னம்மா தரப்பை தலையில் கொட்ட, அடுத்த ரவுண்ட் ஆரம்பம்.

ஹலோ... அ.தி.மு.க ஆபிஸா? சண்டையை எப்ப சார் முடிப்பீங்க?...

எம்.ஜி.ஆர்.அ.தீ பேரவை:

கட்சி, தீபா

அட நம்ம தீபா மேடம் கட்சிப் பேருதான் பாஸ் இது. மற்றக் கட்சிகளாவது பரவாயில்லை. இத்தனை ஆண்டுகளாக கம்பு சுற்றுவதால் இவ்வளவு சண்டைகள். தீபாவின் கட்சி பிறந்து இன்னும் பல் கூட முளைக்கவில்லை. அதற்குள் ஆயிரத்தெட்டு சண்டை. தன் நண்பர்களை பேரவை பதவிகளில் உட்கார வைத்தார் என சிலர் கொடி தூக்க, 'சரி மாத்துறேன்' என்றார். அதற்குள் தீபாவின் கணவரே, 'தீபா தனியாக செயல்பட நினைக்கிறார்' என ஸ்டேட்மென்ட் தட்ட, நூடுல்ஸ் சிக்கலாக இருக்கிறது தீபா பேரவை. ஆனாலும் ஒரு மாச கட்சிக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்தான் ப்ரோ!

பா.ஜ.க:

கட்சி, ஹெச்.ராஜா, தமிழிசை

இவர்கள் எப்போதுமே செவ்வாய்க் கிரக லெவல். மற்ற கட்சிகளில் கோஷ்டி கோஷ்டியாக அடித்துக்கொண்டால் இவர்கள் மட்டும் சிங்கிள் சிங்கிளாக மோதுவார்கள். ஒரு பக்கம் ஹெச்.ராஜா எதையாவது பற்ற வைப்பார். மறுபக்கம் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இருந்து பொன்னார் கருத்து உதிர்ப்பார். ட்விட்டரில் எதையாவது சொல்லி சண்டை போடுவார் சுப்பிரமணியன் சுவாமி. இது எல்லாவற்றுக்கும் தி.நகரில் உட்கார்ந்து, 'சொந்தக் கருத்து' என இரண்டு வரியில் பதில் சொல்வார் தமிழிசை. அது சரி இப்படி ஆளாளுக்கு கருத்து சொன்னா, எது யாரு சொன்னதுன்னு உங்களுக்கு குழப்பவே குழப்பாதா பி.ஜே.பி பிரதர்ஸ்?

http://www.vikatan.com/news/miscellaneous/82712-an-article-about-the-rifts-in-political-parties.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??  
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.