Recommended Posts

பாடசாலை முடிவதற்க்கான மணிச்சத்தம் எப்படா கேட்க்கும் என்று இருந்த மாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடியே வெளி வாசலை நோக்கி ஓடினார்கள்.துர இடம் போகிறவர்கள் அருகில் வீடு உள்ளவர்கள் என்று பேதம் இல்லாமல் பாடசாலைக்கு முன் உள்ள சைக்கில் கடையில் கூடி விடுவார்கள்.சைக்கிளுக்கு காத்தடிக்வோ அல்லது லைக்கில் திருத்தவோ இல்லை அந்தக்டையில் விற்க்கும் குச்சி ஐஸ பழம் வாங்கத்தான் இவளவு வேகமும்.50 சதம் விற்க்கும் அந்தப்பழத்தை வாங்கிக் முழுவதுமாக குடித்து முடிப்பதற்குள் அரைவாசி கரைந்து ஓடி விடும்.கரைந்தது உருகியது எல்லாம் நக்கி முடிந்து வீதியோர தண்ணிக்குளாயில் கையை களுவிய பின் தான் தங்கள் வீிடு நோக்கி செல்வார்கள்.இவளவு கூத்துக்களையும் ஓர ஓரமாக நின்று எக்கத்துடன் பாத்துக்கொன்டிருப்பான் பாபு.காரனம் அவனிடம் 50 சதம் இல்லாதது அல்ல.மாறாக அவன் அதி பணக்காற வீட்டு பிள்ளையாக இருந்ததே.அவனைக் பாடசாலையிலிருந்த கூட்டிச் செல்வதற்க்கு கார் வரும்.அதால மற்ற பிள்ளைகளுடன் சோ்ந்து ஐஸ் பழம் குடிக்கும் பாக்கியம் அவனக்கு கிடைப்பதில்லை.ஒரு முறை இவனும் மறடறவர்களுடன் சோ்ந்து ஐஸ் பழம் குடிப்பதை பார்த்த சாரதி தகப்பனிடம் போட்டுக் கொடுத்ததால் அதுவே முதலும் கடைசி முறையுமாகப் போய் விட்டது.கால ஓட்டத்தில் அவன் தனது தகப்பனின் வியாபரத்தை நிர்வகிக்கும் பொறுப்பையேற்றுக் கொன்டான். இப்போது அவனது பொறுப்பில் பல வேலையாட்க்கள் உதவிக்குப் பலர்.அந்த 50 சத ஐஸ் பழ கனவு மடடும் இன்னும் தீரவில்லை. 

குற்றம் குறை மன்னித்தருள வேண்டும்tw_blush:

  • Like 23

Share this post

Link to post
Share on other sites

சின்ன சின்ன ஆசைகள் ஆனாலும் சில சமயங்களில் நிறைவேறாமலே போய் விடும் ....!

சுவையாய்ச் சொல்லியுள்ளீர்கள் சுவைப்பிரியன்......!  tw_blush:

Share this post

Link to post
Share on other sites

 எங்கன்ட பாடசாலைக்கு முன்பும்ஒரு சைக்கில்கடையில் குச்சி ஐஸ் ஞாபகம் வருகின்றதே.......தொடருங்கள் உங்கள் சின்ன சின்ன ஆசைகள்

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

சின்ன சின்ன ஆசைகள் ஆனாலும் சில சமயங்களில் நிறைவேறாமலே போய் விடும் ....!

சுவையாய்ச் சொல்லியுள்ளீர்கள் சுவைப்பிரியன்......!  tw_blush:

நன்றி சுவி வருகைக்கும் கருத்துக்கும்.

37 minutes ago, putthan said:

 எங்கன்ட பாடசாலைக்கு முன்பும்ஒரு சைக்கில்கடையில் குச்சி ஐஸ் ஞாபகம் வருகின்றதே.......தொடருங்கள் உங்கள் சின்ன சின்ன ஆசைகள்

சொன்னால் நம்பிறீங்களோ தெரியாது. இதை எழுதும் போது உங்களையும் சாத்திரியையும் நினைத்தேன்.வருகைக்கு நன்றி புத்தன்.

Edited by சுவைப்பிரியன்
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

சஜீவன்,நீங்களா:rolleyes: பாபு?...தொடந்து எழுதுங்கோ

Share this post

Link to post
Share on other sites

யாழ் இந்துவில் சந்திரா ஐஸ்கிறீம் என்று சைக்கிளில் ஒருவர் பழம் 5 சதம் சொக் 10 சதம்.

பழைய நினைவுகளை மீண்டும் நினைவூட்டிய சுவைப்பிரியனுக்கு பாராட்டுக்கள்.

வெளிநாட்டு ஐஸ்கிறீமை விட இலங்கையில் சாப்பிட்ட ஐஸ்கிறீம் சுவை நல்லது.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

அந்தக்குச்சியால் நான் ஐஸ்பழமே குடிக்க விரும்புவதில்லை..காரணம் அந்தக் குச்சி தரும் சுவைக்கு எதுவும் ஈடாகாது..எத்தனை தரம் கையை வாயைக் கழுவினாலும் ஒரு வித நல்ல வாசம் வரும்..இங்கு எல்லாம் ஒரு வித பால் மணம் வருவது.

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, ரதி said:

சஜீவன்,நீங்களா:rolleyes: பாபு?...தொடந்து எழுதுங்கோ

நல்ல காலம் அந்த பாவப்பட்ட யென்மம் நான் இல்லை.tw_blush:

10 hours ago, ஈழப்பிரியன் said:

யாழ் இந்துவில் சந்திரா ஐஸ்கிறீம் என்று சைக்கிளில் ஒருவர் பழம் 5 சதம் சொக் 10 சதம்.

பழைய நினைவுகளை மீண்டும் நினைவூட்டிய சுவைப்பிரியனுக்கு பாராட்டுக்கள்.

வெளிநாட்டு ஐஸ்கிறீமை விட இலங்கையில் சாப்பிட்ட ஐஸ்கிறீம் சுவை நல்லது.

நீங்கள் இன்னும் பின்னுக்கு போட்டீங்கள்.tw_blush:வருகைக்கு நன்றி.

10 hours ago, யாயினி said:

அந்தக்குச்சியால் நான் ஐஸ்பழமே குடிக்க விரும்புவதில்லை..காரணம் அந்தக் குச்சி தரும் சுவைக்கு எதுவும் ஈடாகாது..எத்தனை தரம் கையை வாயைக் கழுவினாலும் ஒரு வித நல்ல வாசம் வரும்..இங்கு எல்லாம் ஒரு வித பால் மணம் வருவது.

நன்றி யாயினி. உங்கள் வருகைக்கும் ஞாபகப் பகிர்வுக்கும்.

Share this post

Link to post
Share on other sites

சிறிய வயது ஆசை... நிறைவேறா விடில், 
வளர்ந்த பின்பும்.... மனதை விட்டு நீங்காமல், ஒரு குறையாகவே இருக்கும் என்பதற்கு...
சுவைப்பிரியனது பதிவு... நல்ல  உதாரணம். 

Share this post

Link to post
Share on other sites

வணக்கம், சுவைப்பிரியன்!

நீங்கள் எழுதினால்...அதில் ஏதோ ஒரு சாப்பாடு நிச்சயம் சம்பத்தப்படிருக்கும் என நினைத்தேன்!

உண்மையாகி விட்டது!

மாணவ கால நினைவுகளைத் தூண்டி விட்டீர்கள்!

கரம் சுண்டல்....நினைவிருக்கா? அது தான் பத்துக் கடலையும்....மிளகாயும்..வெங்காயமும் என்னமோ ஒரு சோஸும் ( யாழ்ப்பாணத்தின் முதலாவது சோஸ்.) ஒரு பேப்பர் சுருளுக்குள்...அதை நிரப்பித் தருவார்கள்! எப்படித் தான் பத்துக் கடலையால்....நிரப்புகிறார்களோ?

நாங்கள் படிக்கும் காலங்களில், 'சந்திரா ஐஸ் பழம்' என்று ஒருவர் விற்பார்!

நாங்களும் உங்களைப் போல ஓடிப்போய் வாங்கிறது தான் வழக்கம்!

இப்போது நினைத்தால் சாப்பிட்ட அவ்வளவு ஐஸ் பழமும் வெளியே வாறது போல...ஒரு பீலிங் வரும்!

அவரது கண்கள் எப்பவுமே..வீங்கின படியிருக்கும்! கால்களும் வீங்கின படி தான் இருக்கும்!

ஒரு முறை நானும் சில மாணவர்களும் சேர்ந்து....ஐஸ் பழம் செய்யிற இடத்துக்குப் போய்ப் பார்த்ததன் விளைவு தான் அது!

இப்ப எல்லாம் ..சுகாதார விடயங்களில் கவனமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்!

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் சுகீவன்! ஒரு நாலுவரியில் நெஞ்சை தொட்டுவிட்டீர்கள். ஒரு அந்தா பந்தா இல்லாமல் இன்றைய அவசர உலகத்திற்கேற்ப......பலருக்கும் பொதுவான கதையை சுருக்கமாக சொல்லியிருக்கின்றீர்கள்.tw_thumbsup:
நீங்கள் முன்னர் ஆரம்பித்த திரியில் நிறைய எழுத நினைத்திருக்கின்றேன். நேரமும் மனமும் ஒத்துழைத்தால் விரைவில் எழுதுவேன்.

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, புங்கையூரன் said:

இந்த சந்திரா ஐஸ்பழமும்  வருவதற்கு சில வருடம் முன்பு ஒரு ஐயா (இந்திய வம்சாவளி என ஞபகம் ) ஒரு நீலநிற வண்டிலில் ஐஸ் பழம் வித்துக் கொண்டுவருவார். அவர் நாங்கள் ஐஸ் பழம் கேட்டதும் ,அருகில் இருக்கும் ஒரு கம்பியை ஒரு கையால் சுத்திக் கொண்டு மறுகையால் ஒரு குழாயில் இருக்கும் பனை ஈர்க்குகளில் ஐஞ்சாறு எடுத்து சுத்தி வரும் முக்கோணக்  குழாய்களில் செருகி இன்னும் வேகமாய் சுத்திவிட்டு ஒவ்வொன்றாய் எடுத்துத் தருவார்.நல்ல பிங்க் மற்றும் சிகப்பு நிறங்களில் முக்கோணமாக ஒரு சான் நீளத்தில் ஐஸ் பழம் மட்டும் இருக்கும். அதில் இனிப்பான பாலும் ஐஸ்சுடன் சேர்ந்து இறுகி அபாரமான சுவையாய் இருக்கும்.....!  tw_blush:

Share this post

Link to post
Share on other sites
On 05/03/2017 at 9:48 AM, தமிழ் சிறி said:

சிறிய வயது ஆசை... நிறைவேறா விடில், 
வளர்ந்த பின்பும்.... மனதை விட்டு நீங்காமல், ஒரு குறையாகவே இருக்கும் என்பதற்கு...
சுவைப்பிரியனது பதிவு... நல்ல  உதாரணம். 

நன்றி சிறி வருகைக்கும் கருத்துக்கும்.tw_blush:

21 hours ago, புங்கையூரன் said:

வணக்கம், சுவைப்பிரியன்!

நீங்கள் எழுதினால்...அதில் ஏதோ ஒரு சாப்பாடு நிச்சயம் சம்பத்தப்படிருக்கும் என நினைத்தேன்!

உண்மையாகி விட்டது!

மாணவ கால நினைவுகளைத் தூண்டி விட்டீர்கள்!

கரம் சுண்டல்....நினைவிருக்கா? அது தான் பத்துக் கடலையும்....மிளகாயும்..வெங்காயமும் என்னமோ ஒரு சோஸும் ( யாழ்ப்பாணத்தின் முதலாவது சோஸ்.) ஒரு பேப்பர் சுருளுக்குள்...அதை நிரப்பித் தருவார்கள்! எப்படித் தான் பத்துக் கடலையால்....நிரப்புகிறார்களோ?

நன்றி புங்கை உங்கள் கருத்துக்கு.மற்றது எனக்கு கரம் சுன்டல் என்றால் உடன் நினைவுக்கு வருவது பெற்றோல் மக்ஸ் விளக்குத்தான்.பழசை ஞாபக்படுதியதற்ற்கு நன்றிகள்.tw_blush:

21 hours ago, குமாரசாமி said:

வணக்கம் சுகீவன்! ஒரு நாலுவரியில் நெஞ்சை தொட்டுவிட்டீர்கள். ஒரு அந்தா பந்தா இல்லாமல் இன்றைய அவசர உலகத்திற்கேற்ப......பலருக்கும் பொதுவான கதையை சுருக்கமாக சொல்லியிருக்கின்றீர்கள்.tw_thumbsup:
நீங்கள் முன்னர் ஆரம்பித்த திரியில் நிறைய எழுத நினைத்திருக்கின்றேன். நேரமும் மனமும் ஒத்துழைத்தால் விரைவில் எழுதுவேன்.

நன்றி குசா உங்கள் வருகைக்கும் கருத்தப் பகிர்வுக்கும்.

மீண்டும் புதிதாக ஊக்கப்புள்ளிகள் வழங்கி ஆதரவு வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்.tw_blush:

Share this post

Link to post
Share on other sites

எப்போ  தியேட்டரில் இடைவேளை  வரும்

ஐஸ் சொக் குடிக்கலாம் என்ற அந்தநாளை  ஞாபகப்படுத்திவிட்டீர்கள்

சின்ன சின்ன நிறைவேறாத ஆசைகள்

என்றும்அசைபோட இனிமையானவை

தொடர்ந்து எழுதுங்கள்

வாழ்த்துக்கள் 

Share this post

Link to post
Share on other sites

 பழைய நினைவுகளை அசைபோட்டமைக்கு நன்றி.

Share this post

Link to post
Share on other sites

சுவை இப்படியான நிறைய விடயங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்கு..... நமக்கும் இன்றுவரைக்கும் ஒரு ஆசை இருக்கு...... நிறைவேற சாத்தியங்கள் இருந்தாலும் அந்தந்தப்பருவத்தில் அவற்றை அநுபவிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.... நல்ல முயற்சி சுவை வாழ்த்துக்கள்.

Share this post

Link to post
Share on other sites
On 05/03/2017 at 7:19 AM, ஈழப்பிரியன் said:

யாழ் இந்துவில் சந்திரா ஐஸ்கிறீம் என்று சைக்கிளில் ஒருவர் பழம் 5 சதம் சொக் 10 சதம்.

பழைய நினைவுகளை மீண்டும் நினைவூட்டிய சுவைப்பிரியனுக்கு பாராட்டுக்கள்.

வெளிநாட்டு ஐஸ்கிறீமை விட இலங்கையில் சாப்பிட்ட ஐஸ்கிறீம் சுவை நல்லது.

அட நம்மட பள்ளிகூட வாசலிலயும் சந்திரா அண்ணை (அவருக்கு என்ன பெயரோ தெரியாது சந்திரா ஐஸ்கிறீம் விற்றாதால் சந்திரா அண்ணன் ஆனார்) ஐஸ்பழம் வித்தவர்.

அது ஒரு காலம்.

நினைவூட்டியமைக்கு நன்றி

Share this post

Link to post
Share on other sites

  பையன் : அம்மா அம்மா 

தாய்  : என்னடா கண்ணு 

பையன் : எனக்கு ஐம்பது சதம் கொடும்மா  வாசலிலே ஒருவன் 
                   குச்சி ஐஸ்  குச்சி ஐஸ்  என்று கத்தறான்  அவனை அனுப்பி விட 
தாய் : ???

:   

Share this post

Link to post
Share on other sites
On 08/03/2017 at 8:17 PM, விசுகு said:

எப்போ  தியேட்டரில் இடைவேளை  வரும்

ஐஸ் சொக் குடிக்கலாம் என்ற அந்தநாளை  ஞாபகப்படுத்திவிட்டீர்கள்

சின்ன சின்ன நிறைவேறாத ஆசைகள்

என்றும்அசைபோட இனிமையானவை

தொடர்ந்து எழுதுங்கள்

வாழ்த்துக்கள் 

நன்றி விசுகு உங்கள் ஊக்கத்துக்கும் கருத்துக்கும்.

On 09/03/2017 at 7:52 AM, nunavilan said:

 பழைய நினைவுகளை அசைபோட்டமைக்கு நன்றி.

நன்றி நுனா உங்கள் கருத்துக்கும் பச்சைக்கும்

On 10/03/2017 at 3:21 AM, வல்வை சகாறா said:

சுவை இப்படியான நிறைய விடயங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்கு..... நமக்கும் இன்றுவரைக்கும் ஒரு ஆசை இருக்கு...... நிறைவேற சாத்தியங்கள் இருந்தாலும் அந்தந்தப்பருவத்தில் அவற்றை அநுபவிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.... நல்ல முயற்சி சுவை வாழ்த்துக்கள்.

நன்றி சகாரா உங்கள் ஊக்கத்திற்கும் கருத்துக்கும்.

On 10/03/2017 at 3:30 AM, Athi30 said:

அட நம்மட பள்ளிகூட வாசலிலயும் சந்திரா அண்ணை (அவருக்கு என்ன பெயரோ தெரியாது சந்திரா ஐஸ்கிறீம் விற்றாதால் சந்திரா அண்ணன் ஆனார்) ஐஸ்பழம் வித்தவர்.

அது ஒரு காலம்.

நினைவூட்டியமைக்கு நன்றி

நன்றி அதி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

On 10/03/2017 at 3:48 AM, நிலாமதி said:

  பையன் : அம்மா அம்மா 

தாய்  : என்னடா கண்ணு 

பையன் : எனக்கு ஐம்பது சதம் கொடும்மா  வாசலிலே ஒருவன் 
                   குச்சி ஐஸ்  குச்சி ஐஸ்  என்று கத்தறான்  அவனை அனுப்பி விட 
தாய் : ???

:   

நன்றி நிலாக்கா உங்கள் வருகைக்கும் பதிவுக்கும்.

Share this post

Link to post
Share on other sites

காதலிச்ச பிள்ளையை கூட மறக்கலாம் பள்ளிக்காலத்தில்  தின்று தீர்த்த குச்சி ஐசியை மறக்கையலாது சேட்டில் ஒழுகிய துளியால் எத்தனை பேச்சுக்கள் வேண்டி  இருக்கிறேன் அந்த நாட் களில் tw_blush:

Share this post

Link to post
Share on other sites

நன்றி முனிவர் மற்றும் ஊக்கப்புள்ளிகள் அளித்த அனைவருக்கம் நன்றிகள்.

Share this post

Link to post
Share on other sites

நல்லதொரு பகிர்வு சுவைப்பிரியன்.

எங்கள் பாடசாலை வாசலிலும் ஐஸ், தும்புமுட்டாஸ், விற்பார் ஒருவர். அதைவிட கடலை வகைகள்  வண்டிலில் வைத்து விற்பார் ஒருவர்.

பழையதை நினைவூட்டியமைக்கு நன்றி.

Edited by நவீனன்

Share this post

Link to post
Share on other sites

அந்தநாள் நினைவு பெருமூச்சுடன் வந்தது சுவைப்பிரியன்.

Share this post

Link to post
Share on other sites
Sign in to follow this