Jump to content

குருபீடம் - சிறுகதை


Recommended Posts

குருபீடம் - சிறுகதை

ஜா.தீபா - ஓவியங்கள்: ரமணன்

 

பேருந்து கிளம்பிவிட்டது. சென்னை எல்லையைத் தாண்டியதும் நடத்துநர் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பாக வந்து நின்றார். பேருந்தின் உட்புறம் அமைதியானது. சிவகாமியின் இருக்கை, தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கீழே முதல் வரிசையில் அமைந்திருந்தது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கை அது. திரையில் நீலம், பச்சை என வண்ணங்கள் மாறி மாறித் தெரியத் தொடங்கின. பிறகு, தெளிவான சித்திரங்களோடு திரைப்படம் ஆரம்பமானது. அது திரையரங்கில் அப்போது ஓடிக்கொண்டிருந்த பரபரப்பான ஒரு திரைப்படம். சிவகாமிக்கு நீளமான கொட்டாவி வந்தது.

p66a.jpg

தலைக்கு மேல் அலறப்போகும் வசனங்களை மீறித் தூங்குவதற்கு, அவசியம் பயிற்சி இருக்க வேண்டும். அது சிவகாமிக்குக் கொஞ்சமும் வசப்பட்டிருக்கவில்லை. காற்று இன்னும் கொஞ்சம் உள்ளே வரவேண்டி ஜன்னலை முழுதாகத் திறந்துவைத்தாள் சிவகாமி.

`ஆயிரம்தான் இருந்தாலும் நான் ஆம்பள. போலீஸாவே இருந்தாலும் நீங்க பொம்பள. முதல்ல பொம்பளயா நடந்துக்கங்க...’ என்று கதாநாயகன், நாயகி முன்பாகக் கையை வீசி வீராவேசமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது பக்கத்து ஸீட்டில் அமர்ந்திருந்த பெண் சிவகாமி மீது சரிந்தாள். அவளுக்கு நாற்பது வயது இருக்கும். இந்த அலறலிலும் அவளால் தூங்க முடிவது சிவகாமிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. `ஆழத் தூங்குவது, நடுக்கடலின் அடிமட்டத்தில் கிடப்பதுபோன்றதான நிலை’ என்று ஏதோ ஒரு புத்தகத்தில் சிவகாமி படித்திருந்தாள். அது அநேகமாக ஒரு மனோவியல் புத்தகமாக இருக்கக்கூடும் என்றே, அவளால் தீர்மானத்துக்கு வர முடிந்தது. சமீபகாலமாக மனோவியல் சார்ந்த புத்தகங்களே அவளை வசீகரிக்கின்றன. `ஒரு மனம், ஆயிரம் புத்தகங்களுக்குச் சமானம். ஒரு புத்தகம் எப்படி ஆயிரம் பேர் மனங்கள் பற்றி ஆராய முடியும்?’ என சிவகாமி நினைத்துப்பார்த்திருக்கிறாள். ஆனாலும், அந்தப் புத்தகங்கள் அவளுக்குப் போதை அளித்தன. தூக்கம் அறவே வராத இரவுகளில் அவற்றைப் படிக்கிறபோது, அவள் தன்னுடைய மனதோடு மட்டுமே உரையாடினாள் எனச் சொல்லிவிட முடியாது. அவை பல மனங்களைத் தன்னோடு சேர்த்துக்கொண்ட இரவுகளாக அமைந்திருந்தன. இப்போது, இந்தப் பேருந்தில் எத்தனை பேர் கடலுக்கு அடியில் கிடக்கிறார்கள் என எண்ணிப்பார்க்க வேண்டும் என்று சிவகாமிக்குத் தோன்றியது பக்கத்து இருக்கைப் பெண்ணின் கைப்பையில் இருந்த அலைபேசி ஒலித்தது. சிவகாமி சன்னல் பக்கமாகத் திரும்பிக்கொண்டாள். நிலா கூடவே ஓடி வந்துகொண்டிருந்தது. தலைக்கு மேலே ஆர்ப்பாட்டமான வசனக் கூச்சல்கள், அதற்கும் மேலே அமைதியான நிலா என சிவகாமிக்குத் தோன்றியது. இதுபோன்று தொடர்பில்லாத எண்ண ஓட்டம் அமைவதுதான், பயணத்தின் தனித்துவம் என நினைத்துக்கொண்டாள்.

பக்கத்தில் உள்ள பெண்ணின் அலைபேசி மறுபடியும் அழைத்தது. அகாலவேளையில் ஒருவர் மீண்டும் மீண்டும் அழைப்பதற்கு ஏதேனும் முக்கியக் காரணம் இருக்க வேண்டும் என்ற புத்தியின் அறிவுறுத்தலால், சிவகாமி அந்தப் பெண்ணைத் தொட்டு எழுப்பினாள். தூக்கத்திலிருந்து முயற்சித்து பிறகு சட்டென அவளின் கண்கள் விழித்துக்கொண்டன. பதற்றத்துடன் சிவகாமியைப் பார்த்தாள்.

“போன் அடிக்குதுங்க.”

“என்னது?” என்றபடி வாயின் ஒருபக்க ஓரத்தைத் தன்னிச்சையாகப் புறங்கை விரல்களால் துடைத்துக்கொண்டாள்.

“உங்க போன்தான். ரொம்ப நேரமா அடிச்சிட்டேயிருக்கு.”

“ஓ... தேங்க்ஸ்” என்றாள் அவள். தூக்கம் முற்றிலுமாகக் கலைந்துபோயிருந்தது.

அலைபேசியை எடுக்க பைக்குள் துழாவினாள். அதற்குள் அது திரும்பவும் அழைப்புப் பாடலைப் பாடத் தொடங்கியிருந்தது.

அலைபேசியின் திரையைப் பார்த்துவிட்டு, “என் வீட்டுக்காரர்” என்று சிவகாமியிடம் சொல்லிவிட்டு வாயை அலைபேசியோடு அணைத்து, மறு கையினால் காதைப் பொத்திக்கொண்டு பேசத் தொடங்கினாள். இதற்குள் படத்தில் கதாநாயகிக்குக் காதல் வந்திருந்தது. அவள் ஆடிப் பாட ஆரம்பித்திருந்தாள்.

எப்படியாவது தூக்கத்தை வரவழைத்தாக வேண்டிய முயற்சியை சிவகாமி தொடங்கியிருந்தாள். கால்களை இருக்கைக்கு மேலாக மடித்துவைத்து, இருக்கையோடு சாய்ந்துகொண்டாள்; சரிந்துபார்த்தாள்.

“சரி... சரி...” என்பதை மட்டும் திரும்பத் திரும்ப அந்தப் பெண் அலைபேசியில் சொல்லிக்கொண்டே இருப்பது கேட்டது.

அவள் பேசி முடித்துவிட்டு இவள் பக்கம் திரும்பினாள்.

“என் வீட்டுக்காரர். ரொம்ப நேரமா கூப்பிட்டிருக்கார். நான் போன் எடுக்கலைன்னதும் பயந்துட்டார். நல்லவேளை நீங்க எழுப்பினீங்க.”

“எப்படி இந்தச் சத்தத்துல தூங்குறீங்க?’’ என்று வார்த்தையாகவும், மீதியைச் சைகையாலும் கேட்டாள்.

“பழகிருச்சுங்க. என் வீட்டுக்காரர் நடுராத்திரி வரைக்கும் டிவி பார்ப்பார். `சத்தமா வெச்சுக் கேட்டாத்தான் கேட்ட மாதிரி இருக்கும்’பார். நாங்களும் சத்தத்துக்குத் தூங்கப் பழகிட்டோம்” என்று சிரித்தாள்.

சிவகாமியும் சிரித்தாள்.

“கல்யாணமாகிடுச்சா?” என்று சிவகாமியிடம் கேட்டாள்.

“அடுத்த மாசம் கல்யாணம். பத்திரிகை குடுக்கிறதுக்குத்தான் ஊருக்குப் போயிட்டிருக்கேன்.”

“இப்பல்லாம் யாரும் நேர்ல போய் பத்திரிகை குடுக்கிறதில்லையே. வாட்ஸ்அப்ல அனுப்பிடுறாங்க. நீங்க நேர்ல போறீங்களே!”

“என்னோட ஸ்கூல் வாத்தியார் ஒருத்தருக்குப் பத்திரிகை குடுக்கிறதுக்காகப் போறேன்.”

அவள் வியந்துபோவாள் என்பதை சிவகாமி யூகித்திருந்தாள். அதைப் பொய்யாக்காத அந்தப் பெண், தன்னுடைய அடுத்த கேள்விக்குள் வரும் முன்பு மீண்டும் அவளுடைய அலைபேசி அழைத்தது.
 
“திரும்பவும் அவர்தான். பேசிட்டு வர்றேன்” என்றாள்.

ந்தாம் வகுப்பு எடுத்த ஆசிரியருக்குத் திருமணப் பத்திரிகை கொடுக்க இவ்வளவு தூரம் பயணம் செய்யப்போகிறேன் என்று சொன்னபோது, எல்லோருமே விசித்திரமாகத்தான் சிவகாமியைப் பார்த்தார்கள். வேலைபார்க்கும் நிறுவனத்திலும் விடுப்பு அனுமதி கேட்கும்போது, இந்தக் காரணத்தைத்தான் எழுதியிருந்தாள்.

வேறு ஏதாவது காரணம் சொல்லி விடுப்பு கேட்டிருக்கலாம்தான். ஆனால், எதற்காக மறைக்க வேண்டும்? திருமணத்துக்கு ஆசிரியரை அழைப்பது என்பது ஒன்றும் அசாதாரண செயலில்லையே! ‘அதுக்காக, கல்யாணத்தை வெச்சுட்டு இவ்வளவு தூரம் பயணம் போகணுமா?’ என மாப்பிள்ளை வீட்டில் அழுத்தம்கொடுத்தே கேட்டார்கள். சிவகாமி வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான சமாதானங்களைச் சொல்லிவிட்டே கிளம்பியிருந்தாள்.

சிவகாமி ஐந்தாம் வகுப்பு படித்தபோது, அவளுடைய அப்பாவுக்கு சென்னைக்குப் பணிமாறுதல் வந்தது. அந்த ஆண்டோடு ஊரைவிட்டு வந்ததுதான். மீண்டும் இருபது வருடங்கள் கழித்து, இப்போதுதான் சிவகாமி அங்கு போகிறாள். இடங்கள் மாறிப்போயிருக்கும். ஒருவேளை மாறன் வாத்தியார்கூட மாற்றலாகி வேறு ஊருக்குப் போயிருக்கலாம்; விசாரிக்கலாம் என்றால், அந்த ஊரில் யாருடைய தொடர்பும் கிடைக்கவில்லை.

இப்போதும் மாறன் வாத்தியாரின் முகம் நன்றாக நினைவிருக்கிறது. ஐந்து அடிதான் இருந்திருப்பார் என யூகிக்க முடிகிறது. யாரையும் சீக்கிரத்தில் கோபித்துக்கொள்ள மாட்டார். அப்படியே கோபம் வந்தால்கூட காது நுனியில் ஒரு கிள்ளு கிள்ளுவார். மாணவிகள் என்றால், மண்டையில் வலிக்காமல் ஒரு குட்டு. அவரிடம் அடிவாங்கியிருக்கிறோமா என்று சிவகாமி பலமுறை நினைத்துப்பார்த்தாள். இல்லை என்றுதான் உறுதியானது.

மாறன் வாத்தியார் ஆங்கில வகுப்பு எடுப்பது மிக அருமையாக இருக்கும். தினமும் ஒரு வார்த்தையைக் கரும்பலையில் எழுதி, அதை எந்தவிதத்தில் பேச்சில் பயன்படுத்த வேண்டும் என்பதைப் புரியும்படி சொல்லிக்கொடுப்பார். கூண்டில் அடைபட்ட பறவைகள் பேசிக்கொள்வதுபோல, அன்றைய தினம் வகுப்பு முழுவதும் அந்த வார்த்தையைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்.

பிரிந்தே கிடப்பது கிராமத்துப் பள்ளியும் ஆங்கிலமும் என்பது தெளிவான ஒரு கல்வெட்டாகப் பதிந்திருந்த காலம் அது. இதை மாற்றவே அவர் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார். ஆங்கிலப் பாடப்புத்தகத்தை ஒவ்வொருவராக எழுந்து சத்தமாக வாசிக்க வேண்டும். வாசிப்பது தவறாக இருந்தால் பொறுமையாகத் திருத்துவார். எல்லோருக்குள்ளும் அப்போது இதுவே தன்னம்பிக்கையாக வளர்ந்திருந்ததை, சிவகாமி பின்னாட்களில் பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறாள்.

நகரத்தில் ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆங்கிலவழிக் கல்வியில் சேர்ந்தபோது, ஆங்கிலத்தைக் கண்டு மிரளாமல் இருந்ததற்கு மாறன் வாத்தியாரின் ஆங்கிலப் பயிற்சியும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. இன்று வேலைபார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தில், சிவகாமி முங்குநீச்சல் போட்டு எழுந்துவர இந்த ஆங்கிலம்தான் உதவுகிறது.

மாறன் வாத்தியாருக்கு எப்படியும் அறுபது வயது கடந்திருக்கும். ஓய்வுபெற்றிருப்பார். மகன் அல்லது மகள்களோடு வெளிநாடு எங்கேயாவது சென்றிருந்தால், ஒருவேளை இறந்தேபோயிருந்தால்? அவரைப் பார்ப்பதற்கான கடைசிக்கட்ட முயற்சி எடுத்தோம் என்ற எண்ணமே போதுமானதாக இருக்குமா என சிவகாமி நினைத்துக்கொண்டாள். கீறல் வலிபோல கண்களில் வழிந்த நீர், காற்றின் வேகம் பட்டுத் தெறித்தது.

பக்கத்து ஸீட் பெண்மணி சிவகாமியிடம் ‘குட்நைட்’ சொல்லிவிட்டுத் தூங்கத் தொடங்கினாள். சிவகாமி மீண்டும் நிலாவைப் பின்தொடர்ந்தாள்.

திகாலை நகரத்துக்குள் நுழைந்தது பேருந்து. சிவகாமி, ஏற்கெனவே ஆன்லைன் மூலம் அங்குள்ள ஒரு விடுதியில் அறையைப் பதிவுசெய்திருந்தாள். விடுதியில், அந்தக் காலையிலேயே சாம்பிராணி வாசனை வந்தது. விடுதி மேலாளர், சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். அடையாள அட்டையைக் கேட்டார். ``இது பாதுகாப்பான விடுதி. எந்தக் கவலையும் இல்லாமல் தங்கலாம்'’ என்று, எந்தக் கேள்வியும் கேட்காமலேயே சிவகாமியிடம் கூறினார். சிவகாமி, தான் போகவேண்டிய கிராமத்தின் பெயரைச் சொல்லி, அங்கு போக கார் ஏற்பாடு செய்துதரும்படி கேட்டாள்.
 
“தனியாத்தான் போறீங்களா?” என்றார் மேலாளர்.

சிவகாமி `ஆமாம்’ எனத் தலையசைத்தாள்.

“கவலைப்படாதீங்க. டீசன்ட்டான டிரைவரை அனுப்புறேன். ஒரு பிரச்னையும் இருக்காது” என்றார்.

சிவகாமி சிரிக்க நினைத்துத் தவிர்த்துவிட்டாள்.

“எட்டு மணிக்கு டிபன் சாப்பிட்டுரலாம். எட்டரைக்கு வண்டி சொல்லிடுறேன். அது வேணுமா, இது வேணுமான்னு கேட்டு யாரும் உங்க ரூம் பக்கம் வர மாட்டாங்க. எதுவும் வேணும்னா இந்த நம்பருக்கு போன் செஞ்சா போதும். கவலைப்படாம ரெஸ்ட் எடுங்க” என்றார்.

லிஃப்ட்டில் நுழையும் முன்பு, `லிஃப்ட் நல்லா வேலைசெய்யும் கவலைப்படாதீங்க’ என்று சொல்லிவிடுவாரோ என நினைத்து, அவர் பக்கம் சிவகாமி திரும்பிப் பார்த்தாள். அவர் குனிந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.

தன் முகம் அந்த அளவுக்குக் கவலைக்கிடமாக இருக்கிறதா என்று, லிஃப்ட்டில் இருந்த கண்ணாடியில் சிவகாமி ஒருமுறை நன்றாகப் பார்த்தாள். இல்லை என்று நினைக்க இயலவில்லை.

சொன்னபடி எட்டரை மணிக்கு கார் வந்துவிட்டது.

ஏறி உட்கார்ந்ததும் ஓட்டுநர் பாடலை ஓடவிட்டார். ஓட்டுநருக்கு நாற்பது வயது இருக்கும். எண்பதுகளில் வந்த காதல் பாடல்களின் தொகுப்பாக இருந்தது அவரது பாடல் ரசனை.

முதல் பாடலே சிவகாமி மிகவும் விரும்பும் ஒரு பாட்டு. தன்னையும் அறியாமல் சிவகாமி மெள்ள முணுமுணுக்கத் தொடங்கி நிறுத்திக்கொண்டாள்.

சட்டென, “பாட்டெல்லாம் வேண்டாங்க” என்றாள்.

“வேறதானும் புதுப் பாட்டு போடட்டுமா?”

“வேண்டாம்” என்றாள் உறுதியாக.

ஓட்டுநர் முன்பக்கக் கண்ணாடி வழியே சிவகாமியின் முகத்தைப் படிக்க முயன்றார்.

சிவகாமி கண்களை மூடிக்கொண்டாள்.

ர் வந்துவிட்டது.

சென்னையின் புறநகர்ப் பகுதி ஒன்றினுள் நுழைந்ததுபோல இருந்தது. சிவகாமி, தான் படித்த பள்ளியின் பெயரைச் சொல்லி விசாரிக்குமாறு ஓட்டுநரிடம் சொன்னாள். அவர் இறங்கிப்போய் விசாரித்துவிட்டு வந்தார்.

p66b.jpg

கார் செல்லும்போதே ஒவ்வோர் இடமாக சிவகாமிக்கு நினைவு வந்தது. இதற்குப் பிறகு வலதுபக்கம் திரும்ப வேண்டும் என நினைத்தாள். காரும் அதேபோல் திரும்பியது.

பள்ளிக்கூட வாசல் வந்தது. வண்ணங்களை இழந்து நின்றது இன்னும் பழசாய்ப்போன அவளின் பள்ளிக்கூடம்.

சிவகாமி படிக்கும்போதே தலைமை ஆசியருக்கு எனத் தனி அறை கிடையாது. கால மாற்றத்தால் இப்போது ஓர் ஓலைக்குடிசையின் வாசலில் `தலைமை ஆசிரியர்’ என்று ஒரு கரும்பலகையில் எழுதிவைத்திருந்தார்கள்.

இப்போது அந்தப் பள்ளிக்குப் பெண் ஒருவர், தலைமை ஆசிரியையாக இருந்தார். தான் அந்தப் பள்ளியின் பழைய மாணவி என்று சிவகாமி சொல்ல, அவர் மகிழ்ந்து பேசினார். அவள் படித்த வகுப்பறைகளைக் காட்டுவதற்காக தலைமை ஆசிரியை எழுந்தார். `வேண்டாம்' என அவசரமாக மறுத்துவிட்டு, மாறன் வாத்தியார் பற்றி விசாரித்தாள் சிவகாமி.

தலைமை ஆசிரியை சொன்ன தகவல்கள் சிவகாமிக்குத் திருப்தியாக இருந்தன.

மாறன் வாத்தியாரின் வீட்டைக் காண்பிக்கச் சொல்லி, ஒரு மாணவனை சிவகாமியுடன் அனுப்பினார். அந்த மாணவன் காரில் ஏறும் முன் மற்ற மாணவர்கள் தான் செல்வதைக் கவனிக்கிறார்களா என்பதைப் பார்த்துவிட்டே ஏறினான்.

இரண்டு தெரு தள்ளி கிழக்குத் தெருவில் மாறன் வாத்தியார் வீடு இருந்தது. உடன் வந்த மாணவன் இறங்கி வீட்டைக் காட்டிவிட்டு, “தேங்க்ஸ்க்கா” என்றான்.

“நான்தான்டா உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்” என்றாள் சிவகாமி.

பையன் வெட்கப்பட்டுச் சிரித்தபடி பள்ளியை நோக்கி ஓடினான்.

வாத்தியாரின் வீட்டு வாசலில், அவர் பெயரையும் செய்த தொழிலையும் சொல்லும் பலகை ஒன்று காணப்பட்டது. முகப்புக் கூரையில் ‘அன்னை பவனம் 1980’ எனக் கிளிப்பச்சை நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. செருப்பை எங்கே கழற்றுவது என சிவகாமி யோசிக்கும் நேரத்துக்குள்ளாகவே ஒரு பெண்மணி உள்ளே இருந்து எட்டிப்பார்த்தாள். அவரின் மனைவியாக இருக்கும்.

“மாறன் சார்..?”

“இருக்காங்க. உள்ள வாங்க. நீங்க யாருன்னு பிடிபடலையே?” என்று கேட்கும்போதே சிவகாமியை எடை போட்டாள்.

சிவகாமி உள்நுழையும்போதே சொன்னாள், “நான் சார்கிட்ட படிச்சேன்.”

“ஓ! அப்படிச் சொல்லு. இங்கே இரு” என்று தங்க நிறத்தில் பூப்போட்ட சிவப்பு நிற குஷன் நாற்காலி ஒன்றைத் தன் பக்கமாக இழுத்துப் போட்டாள். மற்றொரு பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றை சிவகாமியின் பக்கம் தள்ளிவைத்தாள்.

உள்ளே இருந்து மாறன் வாத்தியார் வந்தார். நினைத்தது சரிதான் ஐந்து அடிதான் இருந்தார். தோளில் குற்றாலத்துண்டு தொங்கியது. அதை எடுத்துச் சிவப்பு நிற குஷன் நாற்காலியின் முதுகில் போட்டார். உட்கார்ந்ததும் சிவகாமியை அவர் பார்த்த பார்வையில் யோசனையும் கூர்மையும் தெரிந்தன.
 
“வணக்கம் சார். நான் உங்கக்கிட்ட படிச்சேன். என் பேர் சிவகாமி.”

வாத்தியார் சிவகாமியின் தேர்ந்த தோற்றத்தை அளந்தபடி இருந்தார்.

கத்தரிக்கப்பட்டு தோளில் தொங்கிய முடி, திருத்தப்பட்ட புருவம், மெல்லிய ஒப்பனை, சென்ட் வாசம், வெள்ளை நிறச் சுடிதார் உடையில் நகரச் சாயலோடு இருந்தாள் சிவகாமி. நடுநடுவே கொஞ்சம் பெருமையோடு தன் மனைவியையும் பார்த்துக்கொண்டார்.

“நீங்களும் உட்காருங்களேன்” என்றாள் சிவகாமி, வாத்தியாரின் மனைவியைப் பார்த்து.

“இருக்கட்டும்” - இழுத்தபடி அவள் தயக்கமாக அவரைப் பார்த்தாள்.

“எனக்கு அடுத்த மாசம் கல்யாணம். பத்திரிகை கொடுக்கணும்” என்றதும் வாத்தியாரும் அவரது மனைவியும் ஆச்சர்யப்பட்டனர்.

“சந்தோஷம்... சந்தோஷம். என்னம்மா இதுக்கு இவ்வளவு தூரம் வரணுமா?” என்றார் பத்திரிகையைப் பிரித்து படித்தபடி. அவர் முகத்தில் அளவில்லா பெருமை பரந்து விரிந்தது.

“உங்களுக்குக் கொடுத்தே ஆகவேண்டிய கடமை இருக்கு சார்” என்றாள் அவள்.

உள்ளே இருந்து ‘ஆச்சி’ என்று குரல் கேட்டது.

“இங்கே வாம்மா” என்று அங்கு பார்த்துக் குரல்கொடுத்துவிட்டு, “என் பேத்தி... மூணு வயசாகுது. பக்கத்துத் தெருவுலதான் என் மகன் வீடு. ஆனா, இங்கேதான் எப்பவும் இருப்பா” என்றார் வாத்தியாரின் மனைவி. சொல்லும்போது அவரின் முகத்தில் அப்படி ஓர் ஆனந்தப் பெருமை.

சிவகாமி அப்பாவின் பெயர், வீடு இருந்த இடம், படித்த வருடம் எல்லாவற்றையும் வாத்தியார் விசாரித்தார். சிவகாமி நிதானமாக இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொன்னாள்.

அவர் யோசனையோடு தரையையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பார்த்த இடத்தில் சங்கு ஒன்று பதிக்கப்பட்டிருந்தது கீறலாகத் தெரிந்தது.

“உனக்கு, இருபத்தஞ்சு வயசு இருக்குமா?” என்று கேட்டாள் வாத்தியாரின் மனைவி.

`‘முப்பது.’’

“இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணிக்காம இருந்திருக்கியே? பார்க்க லட்சணமா இருக்க. எங்க மகளுக்கு இருபது வயசுலேயே கல்யாணத்தை முடிச்சுட்டோம்” என்றாள்.

“கல்யாணம்னாலே பயமா இருந்தது அதான்.” என்றாள் சிவகாமி.

“அது என்ன அப்படி?’’

“நீ போய், குடிக்க கலர் எடுத்துட்டு வா” என்றார் வாத்தியார் வேகமாக.

சுவாரஸ்யப் பேச்சை அறுபடவிட மனமில்லாமல், உள்ளே போகாமலும் நிற்க முடியாமலும் சில நொடிகள் தவித்துப்போனாள் அவரின் மனைவி.

“எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க இங்கேயே இருங்க” என்றாள் சிவகாமி. ‘அதான் சரி’ என்பதுபோல் நின்றுவிட்டாள் வாத்தியாரின் மனைவி.

“என்னத்துக்குக் கல்யாணம் மேல பயம்?” என்று தொடர்ந்தாள்

“பயம்னு சொல்ல முடியாது. வெறுப்பு.”

“இப்ப சரியாகிருச்சா?” என்றாள் குசும்பான சிரிப்போடு.

“சரியாகிடும்னு நினைக்கிறேன். டாக்டரும் அப்படித்தான் சொன்னாங்க.

அவர்கள் புரியாமல் பார்க்க, “கல்யாணத்துல ஈடுபாடே இல்லாம இருக்கிறேன்னு எங்க வீட்டுல உள்ளவங்க மனநல டாக்டர் ஒருத்தரைப் பார்க்கக் கூட்டிட்டுப் போனாங்க. அவர்தான் சாரை நேர்ல போய்ப் பார்க்கக் சொன்னார்.”

வாத்தியாரின் மனைவி புருவம் உயர்த்தினாள்.

“சார், நல்லா இங்கிலீஷ் எடுப்பார். அதை நான் மறக்கவே இல்லை. அதோடு வேற ஒரு விஷயமும் செய்துட்டார். அதையும் மறக்க முடியலை” - சிவகாமிக்குக் குரல் அடைத்தது.
 
தரையில் நீட்டியிருந்த தன் காலை இழுத்துக்கொண்டார் வாத்தியார். முதுகு முன் வளைந்தது. லேசாக வாயைத் திறந்தே வைத்திருந்தார் மூச்சுக்காகவேண்டி.

“உங்களுக்கு மறந்திருக்காது. மறந்திருச்சுன்னும் சொல்லிராதீங்க சார். ஒருநாள் சாயங்காலம் எல்லா பிள்ளைங்களும் போன பின்னாடி என்னை மட்டும் இருக்கச் சொன்னீங்க. அன்னிக்கு நீங்க எங்கிட்ட நடந்துக்கிட்டது தப்புன்னு அப்பவே தெரியும். ஆனா, `யார்கிட்டயும் சொல்லக்கூடாது'ன்னு சொன்னீங்க. இதுவரைக்கும் நான் யார்கிட்டயும்  சொல்லலை. டாக்டர் கிட்டதான் முதல்ல சொன்னேன். அவர்தான் உங்களைப் பார்த்துட்டு வரச் சொன்னார்.”

அவள் வந்தபோது இருந்ததுபோல் இல்லை. இப்போது வேறு மாதிரி தெரிந்தாள்.

`‘சார், அன்னிக்கு என்ன நடக்கப்போகுதுன்னு எனக்குத் தெரியாது. ஆனா, ஏற்கெனவே திட்டமிட்டிருந்த உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இல்லையா?

...இப்ப உங்களுக்கு என் முகம் நினைவுக்கு வருதா சார்?

நல்லா படிச்சிருக்கேன். நல்ல வேலையில இருக்கேன். ஆனாலும் அழிக்க முடியாத காயமா அது பதிஞ்சுபோச்சு. கல்யாணப் பேச்சு வந்தாலே, பயம், வெறுப்பு, எரிச்சல்னு அது அலைக்கழிச்சது எனக்குத்தான் தெரியும். கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லி எங்க வீட்டுல எல்லாரும் சொல்லிட்டே இருந்தாங்க. `முடியாது’ன்னு எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அவங்க கேட்கவே இல்லை. ஒருநாள் எனக்கும் எங்க அப்பாவுக்கும் பெரிய சண்டையே வந்தது. சாதாரணச் சண்டை இல்லை. ஆம்பளைங்கிறதால அவரை அடிக்கவே போயிட்டேன். அன்னிக்கு பஸ்ல போகும்போது திரும்பத் திரும்ப உங்க முகம் கண் முன்னாடி வந்துட்டே இருந்தது. சட்டுன்னு பஸ்ஸிலிருந்து குதிச்சுட்டேன். நல்ல அடி. நான் யாருன்னு கண்டுபிடிச்சு எங்க வீட்டுக்குத் தகவல் தெரியவரும் போது ரெண்டு நாள் போயிருந்தது. அந்த ரெண்டு நாளும் சுயநினைவே இல்லாம யாரோட துணையும் இல்லாம ஆஸ்பத்திரியில் இருந்திருக்கேன். அதுக்கு அப்புறமும் ஒரு மாசம் ஆஸ்பத்திரியிலதான் இருந்தேன். இதோ இப்ப வரைக்கும் என்னால வேகமா நடக்க முடியாது.

தூக்கமே வராம கஷ்டப்பட்டு உடம்பு உருக்குலைஞ்சுப்போய், அதுக்கு நீங்க மருந்து மாத்திரை எடுத்த அனுபவம் இருக்கா சார்?

இருட்டைப் பார்த்தாலே பயம் வந்து, அப்புறம் வெளிச்சம் இருந்தாத்தான் சுவாசிக்கவே முடியும்கிற நிலைமை வந்தா, மருந்து கொடுத்து சரிபண்ணுவாங்க. ஆனா, அந்த மருந்தைச் சாப்பிட்டா உடம்புக்குள்ள என்ன நடக்கும்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

உங்களைப் பற்றி எப்ப நினைச்சாலும் தானாவே கண்ணீர் வரும். அதை அடக்க முடியாம போற அவமானம் எப்படிப்பட்டது தெரியுமா? தப்பே செய்யாத நான் இப்ப வரைக்கும் தொடர்ந்து தண்டனையில் இருக்கேனே சார். நீங்க நல்லாயிருக்கீங்களா?” என்று கேட்டுவிட்டு சிவகாமி, வாத்தியாரையே பார்த்தாள்.

அவர் நாற்காலியின் ஒரு மூலைக்குள் பொதிந்துபோனதுபோல இருந்தார்.

வீட்டின் உள்ளே இருந்து கொலுசுச்சத்தம் மெலிதாகக் கேட்டது.

வாத்தியாரின் மனைவி எப்போது தரையில் உட்கார்ந்தாள் என்பதை சிவகாமி யோசித்துப்பார்த்தாள்.

உள்ளே இருந்து குழந்தை கையில் சிறிய தட்டுடன் வந்து பாட்டியின் மடியில் உட்கார்ந்தது. சிவகாமியையே பார்த்தது. ஒரு கையால் கண்களை மூடிக்கொண்டு விரல்களின் இடைவெளி வழியே சிவகாமியைப் பார்த்து வெட்கத்தோடு புன்னகைத்தது.

“இவங்கதான் உங்க பேத்தியா? பள்ளிக்கூடத்துல சேர்த்தாச்சா?” என்று கேட்டாள் சிவகாமி.

இருவருமே பதில் சொல்லவில்லை!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.