Jump to content

போராட்டம் வேறு விதமாக திரும்பும்! பன்னீர்செல்வம் திடீர் எச்சரிக்கை


Recommended Posts

போராட்டம் வேறு விதமாக திரும்பும்!
பன்னீர்செல்வம் திடீர் எச்சரிக்கை
 
 
 

''ஜெ., மரணத்தில் நீதி கிடைக்கும் வரை, தர்ம யுத்தம் தொடரும். 8ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு பெறுவதற்குள், நல்ல பதில் வராவிட்டால், போராட்டம் வேறு
விதமாக திரும்பும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 

Tamil_News_large_172299020170303230840_318_219.jpg

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
 

போராட்டம்


அதில், பன்னீர்செல்வம் பேசியதாவது:

ஜெ., மரணத்தில், மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை நீக்கும் பொறுப்பு, நமக்கு உள்ளது. அதற்காக, நாம் துவக்கிய தர்ம யுத்தம், 8ல், உண்ணாவிரதப் போராட்டமாக மாறியுள்ளது. அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை போராட்டம் நடக்கும்.

போராட்டம் நிறைவுஅடையும் போது, மத்திய அரசு கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட, விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்ற உத்தரவு, நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அந்த உத்தரவு கிடைக்காவிட்டால், போராட்டம் வேறு விதமாக திரும்பும்.ஜெ., 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். நாங்கள், தினமும் மருத்துவமனைக்கு செல்வோம்.

ஆனால், ஒருமுறை கூட, அவரை சந்தித்தது இல்லை. என் மனைவி கூட, தினமும், 'என்னங்க... இன்றாவது, ஜெ.,வை பாத்தீங்களா'

என, கேட்பார்; 'பார்க்கவில்லை' என்பேன். உடனே, 'எதுக்கு தான் மருத்துவனைக்கு போறீங்களோ' என, கேட்பார். அப்போது, நெஞ்சே வெடித்து விடும் போல இருக்கும். ஜெ.,வை, வெளி நாடுகளுக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்கும்படி மன்றாடினேன். அப்போதெல்லாம், அவர் குணமடைந்து விடு வார் எனக்கூறியே, 75 நாட்களை கடத்தினர்.

ஜெ., மறைவுக்கு பின், அவர்கள் கேட்டுக் கொண்ட தால்முதல்வரானேன். பின், சசிகலா அப்பதவிக்கு வர துடித்தார். இரண்டரை மணி நேரம் போராட்டத் துக்கு பின், நிர்ப்பந்தம் காரணமாக, நான் ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன்.
 

ஜெயலலிதா நினைவிடம்


ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த, சில மருத்து வர்களிடம் தனியாக பேசினேன். அப்போது அவர்கள், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட, சிகிச்சை முறை கள் குறித்து கூறிய தகவல்கள், என்னை மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாக்கின. முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி, முன்னாள் சபாநாயகர், பி.எச். பாண்டியன் ஆகியோரின் பேட்டி, என்னை விழிக்க வைத்தது. அதை தொடர்ந்து, நான் ஜெயலலிதா நினைவிடம் சென்றேன்.

அங்கு, 40 நிமிட மவுன போராட்டத்துக்கு பின், தர்ம யுத்தத்தை துவக்கி உள்ளோம். கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத்தின் பிடியில் சென்று விடக் கூடாது.இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.
 

முதல்வரை சந்திக்க முடிவு


முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு கொடுக்க, பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். ஜெ., மரணத்தில் மர்மம் உள்ளது; அதை வெளிக் கொண்டு வர, நீதி விசாரணை நடத்தவேண்டும் என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பி.,க் கள், டில்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, மனு கொடுத்தனர். அடுத்த கட்டமாக, 8ம் தேதி, உண்ணா விரதம் நடத்துகின்றனர். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு .,

 

செய்துள்ளனர். முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், ஜெமரணம் தொடர்பாக, பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளார். அதற்கு, சசிகலா தரப்பில், எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இச் சூழ் நிலையில், நீதி விசாரணைக்கு உத்தர விடக் கோரி, முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு கொடுக்க, பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அதற்காக, முதல்வரை சந்திக்க அனுமதி கோரி, கடிதம் கொடுக்க உள்ளனர்.
 

போட்டி ஆலோசனை கூட்டம்


பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தினமும் ஒவ்வொரு மாவட்டமாக, நிர்வாகிகளை வரவழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், நேற்று நடந்தது.

அவர்களுக்கு போட்டியாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், சசிகலா தரப்பின ரும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை வர வழைத்து, போட்டி கூட்டம் நடத்தினர். பன்னீர் செல்வம் வீட்டிற்கு, அதிகளவில் நிர்வாகிகள் வந்திருந்தனர். அ.தி.மு.க., அலு வலகத்தில், கூட்டம் குறைவாகவே வந்திருந்தது. இரு தரப்பினரும், கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்ட, போட்டி கூட்டம் நடத்தி வருவது, கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1722990

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.