Jump to content

தாயக மண்ணின் கோலங்கள்


Recommended Posts

  • Replies 53
  • Created
  • Last Reply

எமது அழிவுக்கு இயற்கையும் துணை போன கோலம்.

மட்டு, கல்லடி கடற் கரையில் பாதுகாக்கப்பட்ட (அழிவின்) நினைவுச் சின்னம்.

IMG_7183.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தாயக மண்ணின் கோலங்களை"  நாமும் அறிய....
படத்தின் கீழ், சிறு குறிப்புடன் பதிவது வரவேற்கக்  கூடியது. தொடருங்கள்... ஜீவன் சிவா.

Link to comment
Share on other sites

வாழ்விழந்தது எமது மீனவர்கள் மட்டுமில்லை
துருப்பிடித்து சிதைந்து போகும் அவர்கள் படகுகளும்தான். 

IMG_8073.jpg

IMG_8074.jpg

IMG_8075.jpg

இது காரைநகர் இறங்குதுறையின் இருபுறமும் அநாதரவாக மீன்பிடி படகுகள்.
இந்த படகுகள் எமதா அல்லது இந்திய மீனவர்களதா என்பது தெரியாது.

4 hours ago, தமிழ் சிறி said:

"தாயக மண்ணின் கோலங்களை"  நாமும் அறிய....
படத்தின் கீழ், சிறு குறிப்புடன் பதிவது வரவேற்கக்  கூடியது. தொடருங்கள்... ஜீவன் சிவா.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகாய் இருக்கின்றன ஜீவன்... அத்துடன் இதயத்தின் ஓரத்தில் ஒரு சிறு வலியும் வந்து போகுது....!

Link to comment
Share on other sites

காங்கேசன்துறை மறுபடியும் எழும்.

விடுதலையின் போது 

mlktuf.jpg

 

இன்று

 

Image may contain: tree, plant, sky, outdoor, nature and water

 

Image may contain: tree, plant, outdoor and nature

 

Image may contain: tree, house, plant, sky, outdoor and nature

 

செய்வது யாரென்று தெரியாது - ஆனாலும் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஜீவன் சிவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஜீவன் சிவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் பாரக்கத் தூண்டும் படங்களை இணைக்கும் ஜீவனுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்..யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடந்த போராட்டம் ஒன்றில் அந்த சுவரொட்டிகளின் முன்னாடி ஒரு மாடும் போய் நின்றிருக்கிறது..பாவம் வாய் பேசாப் பிராணி.ஜனாதிபதியிடம் முறையிட என்று சுவரொட்களில் எழுதப்பட்டு இருந்தது..முடிந்தால் அந்தப் படத்தையும் இணையுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது மண்ணின் கோலங்களை நானும் இரு முறை நேரில் சென்று பார்த்தேன். மனதுக்குள் இன்னும் தீராத வலி. படங்கள் இணைப்புக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜீவன், படங்களை பார்த்தவுடன் ஊருக்கு போகணும் போல இருக்கிறது, 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஜீவன் சிவா

Link to comment
Share on other sites

சில வருடங்களில் பார்க்க முடியாம போகப்போகும் புகையிலை தோட்டம்.
இந்த வருடம் பரம்பரையாக புகையிலை பயிரிட்டவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் இருந்து இவர்களுக்கும் அனுமதி கிடைக்காது என்று அறிந்தேன் (உண்மை தெரியாது).

 

IMG_0103.jpg

IMG_0105.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாகனத்தை நிறுத்திருக்காவிட்டால் இந்த புகையிலை புகைப்படம் வந்திராது  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப் பார்க்க பெருமூச்சுத்தான் வருது. தொடருங்கள் ஜீவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20.3.2017 at 3:33 PM, ஜீவன் சிவா said:

சில வருடங்களில் பார்க்க முடியாம போகப்போகும் புகையிலை தோட்டம்.
இந்த வருடம் பரம்பரையாக புகையிலை பயிரிட்டவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் இருந்து இவர்களுக்கும் அனுமதி கிடைக்காது என்று அறிந்தேன் (உண்மை தெரியாது).

 

IMG_0103.jpg

IMG_0105.jpg

என்ன காரணத்திற்காக அனுமதி இல்லை என்று தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகையிலை உடலுக்குக் கேடு அதனால் தடை என்று ஊரில கதைக்கினம். உண்மைக் காரணம் தமிழர் பொருளாதாரத்தை வீழ்த்துவதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புகையிலை உடலுக்குக் கேடு அதனால் தடை என்று ஊரில கதைக்கினம். உண்மைக் காரணம் தமிழர் பொருளாதாரத்தை வீழ்த்துவதுதான்.

இவ்வளவு காலமும் இல்லாத கேடு இப்பவா வருகுது? 

Link to comment
Share on other sites

 

On 2017-03-22 at 9:00 PM, குமாரசாமி said:

என்ன காரணத்திற்காக அனுமதி இல்லை என்று தெரியுமா?

இரண்டு முக்கிய காரணங்களை சொல்கின்றனர். ஒன்று புகையிலை நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சக் கூடியது. யாழ்ப்பாணம் போன்ற நிலத்தடி நீர்  அருகி ஆபத்தான நிலைக்கு செல்லும் இடங்களில் புகையிலைச் செடி பயிர்செய்கையை தவிர்க்கச் சொல்கின்றனர். இரண்டாவது காரணம், புகையிலை பயிர்செய்கை செய்யப்பட்ட நிலத்தில் வேறு பயிர்களை பல காலத்துக்கு நட முடியாது என்றும் இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்டுகின்றது என்றும் சொல்கின்றனர். யாழ் பல்கலைக்கழகமும் இது தொடர்பாக அறிவுறுத்தி உள்ளது என கேள்விப்பட்டேன்.

புங்கைக்கு இது பற்றி இன்னும் அதிகம் தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

 

புகையிலை பயிர்செய்கை செய்யப்பட்ட நிலத்தில் வேறு பயிர்களை பல காலத்துக்கு நட முடியாது என்றும் இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்டுகின்றது என்றும் சொல்கின்றனர். யாழ் பல்கலைக்கழகமும் இது தொடர்பாக அறிவுறுத்தி உள்ளது என கேள்விப்பட்டேன்.

புங்கைக்கு இது பற்றி இன்னும் அதிகம் தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன்.

,

அறிவியல் ரீதியாக இருக்கும் கரணியங்களைவிடப் பொருளாதார ரீதியான கரணியமாகவே இருக்கக்கூடும். புகையிலை பயிரிட்டு இலைகளை வெட்டியபின்னர் அடித்தண்டிலிருந்து முளைக்கும் கெட்டுகளைச் சிறிது வளரவிட்டு அதனையும் முறித்தெடுத்துப் பதப்படுத்திப் பயன்படுத்துவது உண்டு. அடிக்கட்டை காய்ந்ததும் அவற்றை நீக்கிவிட்டு உழுது மீண்டும் வேறுபயிர்களை நடுவதுண்டு. வெளிநாட்டுப் பணங்களுக்குமுன் பெரும் பொருண்மிய ஆதாரமாக விளங்கியதொரு பணப்பயிராகும்.

புகையிலையைத் தடைசெய்வதனூடாக வெண்சுடருட்டு விற்பனையை அதிகரிக்கச் செய்து அன்னியப் பல்தேசியத் தொழிற்றுறைக்கு வாய்ப்பளிக்க வகைசெய்ய  அரசுகள் இதுபோன்ற கதைகளையும் கூறக்கூடும். நில நீர் வள அறிவியலாளர்கள் ஆய்வுரீதியாகத் தெளிவுபடுத்த வேண்டும். 

இது கரோலினாவில் செய்யப்படும் உற்பத்தி( நன்றி: யூரூப்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

 

இரண்டு முக்கிய காரணங்களை சொல்கின்றனர். ஒன்று புகையிலை நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சக் கூடியது. யாழ்ப்பாணம் போன்ற நிலத்தடி நீர்  அருகி ஆபத்தான நிலைக்கு செல்லும் இடங்களில் புகையிலைச் செடி பயிர்செய்கையை தவிர்க்கச் சொல்கின்றனர். இரண்டாவது காரணம், புகையிலை பயிர்செய்கை செய்யப்பட்ட நிலத்தில் வேறு பயிர்களை பல காலத்துக்கு நட முடியாது என்றும் இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்டுகின்றது என்றும் சொல்கின்றனர். யாழ் பல்கலைக்கழகமும் இது தொடர்பாக அறிவுறுத்தி உள்ளது என கேள்விப்பட்டேன்.

புங்கைக்கு இது பற்றி இன்னும் அதிகம் தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன்.

முதற்கண் தேடிவந்து பதில் தந்ததிற்கு நன்றி.

நான் வேளாண்மை குடும்பத்தை சேர்ந்தவன். இளந்தாரியாக நெஞ்சைக்குடுத்து யாழ்மாவட்டத்தில் விளையும் அத்தனை பயிர்களையும் விளைச்சல் செய்தவன். 
நீங்கள் கேள்விப்பட்ட முதலாவது காரணம் உண்மையானால் இன்றைக்கு யாழ்மாவட்டத்தில் ஏராளமான புகையிலை பயிரிட்ட நிலங்கள் பாலைவனமாகியிருக்க வேண்டும்.
நீங்கள் கேள்விப்பட்ட இரண்டாவது காரணம் முற்றிலும் பொய். போக பயிர் என்பதால் உடனடியாக அந்த இடத்தில் வேறு பயிர்கள் பயிரமுடியாதே தவிர அடுத்த போகத்தில் மிளகாய்க்கன்றோ அல்லது வேறு பயிர்களையோ தாராளமாக பயிரிடலாம்.

இதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்ச்சி கொடுக்கவேண்டும்....அது சரி தோட்டம் செய்யிறதையே கேவலமாய் கேணைத்தனமாய் பார்க்கிற  சனத்துக்கு என்ன கோதாரிக்கு விண்ணான உணர்ச்சி tw_angry:

Link to comment
Share on other sites

நாங்கள் கோண்டாவிலில் இருந்த காலத்தில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுடன் பாடசாலை விடுமுறைகளில் சுத்துவதுண்டு. அவ்வாறு சுத்துவதில் புகையிலை கொட்டிலும் ஒன்று. அங்கு ஒரு பத்து பதினைந்து பேர் இருந்து சுருட்டு சுத்துவார்கள். அனால் ஒருவர் மட்டும் நடுநாயகமாக வீற்றிருப்பார். அவர் பக்கத்தில் சகல பத்திரிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவர் சுருட்டு சுத்தமாட்டார் - ஆனால் பத்திரிக்கைகளை உரக்கமா படிப்பார். மற்றவர்களும் அதனை கேட்டபடி இருந்தாலும் மிசின்மாதிரி கைகள் வேலை செய்யும்.

பத்திரிகைகள் வாசிப்பவரும் வீரகேசரி என்று தொடங்கி இது நியூஸ் பேப்பர் லிமிடடினால் பிரசுரிக்கப்பட்டது வரை வாசிப்பார். அவருக்கு சம்பளமாக சுருட்டு சுத்துபவர்கள் தாம் சுத்திய சுருட்டுகளில் ஒரு பங்கை கொடுப்பார்கள்.

நாங்களும் விளையாட்டு + சினிமா பகுதி வரும்போது பக்கத்தில் குந்தி இருப்போம் + கேட்போம்.

இழந்த சந்தோசங்கள் ஆயிரம் / எல்லாவற்றிற்கும் தொழில் நுட்பத்தை சாட்ட முடியாது.

 

ஒரு படமாவது எடுக்க முடியாதா என்று இன்றும் நான் தேடும் ஒரு இடம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.