Jump to content

என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

குருநகர் கழிய வந்த ஒரு பெரிய காணிகள் உள்ளடக்கிய பகுதியை இராணுவம் கையகப்படுத்தி இருந்தது. பொதுமக்களின் காணிகள் அவை. “இந்த --- மக்கள் என்னத்துக்கு இன்னும் இதை பிடிச்சு வைச்சிருக்கிறாங்கள்.. பாடையில போவார்” என மாமா தன் ஸ்ரைலில் திட்டிக் கொண்டு வந்தார்.

######ரவுனை சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து மீண்டும் வீட்டை வருகின்றோம். இடையில் எனக்கு செவ்விளனி குடிக்க ஆசை ஆசையாக வருகின்றது. கனடாவுக்கு வந்த பின் செவ்விளனி குடிக்கவே இல்லை. அங்கு ரின்னில் அடைச்சு வரும் இளநீரை குடிப்பதை விட கோமியத்தை குடிக்கலாம்.

மாமா பழைய பூங்கா வீதிக்கருகில் இருக்கும் ஒரு இளநீர் சிறு கடையின் அருகில் காரை நிறுத்த இறங்கிக் குடிக்கின்றோம். மாமாவுக்கு டயபடீஸ் உச்சத்தில் இருந்து பல்லிளிச்சுக் கொண்டு இருந்தாலும் நான் இளநீர் வாங்கி குடிக்கும் போது ஆளால் தன் ஆசையை மட்டுப்படுத்த முடியவில்லை. ஆசை diabetes அறியாது என முன்னோர் சும்மாவா சொன்னார்கள்.

#####அப்ப தெரியவில்லை அந்த கைகுலுக்கல் தான் மாமாவினுடனான என் இறுதி கைகுலுக்கல் என்று. அந்த பிரியாவிடை மாமா எனக்கு சொல்லிய தன் இறுதி பிரியாவிடை என்றும்

வாசிப்பதற்கு, சுவராசியமாக....  உங்கள் பயணத்தை  எழுதியுள்ளீர்கள் நிழலி.  :)

உங்கள் மாமா பேசியதை, நீங்கள்  கோடிட்ட இடம்  மூலம் மறைத்துள்ளதை.... நான் நிரப்பி வாசித்த போது,
எனக்கு தலை விறைத்துப் போய் விட்டது.
:shocked: மாமன்.... மருமகனுக்கு முன் இந்தச்  சொல்லை பாவிக்கக் கூடாது. :grin:

இடையே நடந்துள்ள நிகழ்வுகளை, வாசிக்கும் போது... சிரிப்பாக இருந்தது.

கடைசியில்... மாமாவிடம் இருந்து விடை பெறும் நேரம் கைகுலுக்கிய வசனங்களை வாசித்த போது,
எமக்கும் சோகம் தொற்றிக் கொண்டது. 
tw_cry:

Link to comment
Share on other sites

  • Replies 139
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

 

2r2n2bk.jpg

(இந்தப் பூவின் சரியான பெயர் என்ன? கோவிலின் வீதியில் இருந்தது. மிகவும் பரிச்சயமான பூ... ஆனால் பெயர் மறந்து விட்டது)

Bildergebnis für சிவலிங்கப் பூÄhnliches Foto

இதற்கு சிவலிங்கப் பூ  என்று பெயர். இந்தப் பூ, வித்தியாசமான நல்ல வாசம். 
ஆனைப் பந்தியடியில் உள்ள,  தனியார் மருத்துவ மனை ஒன்றில் இந்த மரம் இருந்தது. 
இப்போ உள்ளதோ... தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

 
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால்
உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான்.
பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய்
என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது
அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான்
சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா
வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா
என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான
உறவு என்றால் அது தாய்மாமா தான்.
எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே
வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை.

- முக நூலில்  வாசித்தது.  
நிழலியின் பதிவுக்கு, பொருத்தமாக இருந்ததால் இணைத்துள்ளேன். -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-4-28 at 1:01 PM, நிழலி said:

பெண் மயிலின் குரலில் ஆண் மயில் தோகை விரிச்சாட நினைக்கும் போது விமானம் மேலே எழும்பி பறக்கின்றது

இன்னும் வருமோ? தொடருக்கு நன்றிகள் ....உங்களுடையை தொடரை வாசிக்க மீண்டும் ஒரு முறை எனக்கு ஊருக்கு போய்விட்டு வந்த உணர்வு...ஏற்பட்டது...

Link to comment
Share on other sites

On ‎4‎/‎13‎/‎2017 at 2:20 PM, தமிழ் சிறி said:

நீங்கள் சந்தன மாதா கோவில் என்று, குறிப்பிடுவது,
கொழும்புத்துறை...  அந்தோனியார், கோவிலையா?
அல்பிரட்  துரையப்பா..... வீடு  எல்லாம், அந்தப்  பகுதிக்குள் தானே... வருகின்றது.
அங்கு... ஒருவர், இசைக்கு....  பிரபலமாக இருந்தவர்.... 
"றீகல் ----  என நினைக்கின்றேன் 

 

இல்லை தமிழ் சிறி. இது கொழும்புத்துறை வீதியில் இருக்கும் ஒரே ஒரு மாதா கோவில். பெயருக்கு ஏற்றவாறு சந்தன நிறத்தில் வர்ணம் பூசி இருப்பார்கள். இந்திய ஏவல் படைகள் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு படுகொலைகளை நிகழ்த்தும் போது இங்கு தான் தஞ்சம் அடைந்து இருந்தோம். 

இசைக்கு பிரபலமானவரை பற்றி அறிந்து இருக்கவில்லை .

உங்களுக்கு பாண்டியந்தாழ்வு எனும் இடம் பற்றித் தெரியுமா?

On ‎4‎/‎13‎/‎2017 at 2:28 PM, Maruthankerny said:

கொஞ்சம் நெருங்கி வாறீங்கள் ..........
பாண்டியன்தாழ்வு பேக்கரி 
அருகாக ... எனது செருப்பும் கொஞ்சம் தேய்ந்து இருக்கிறது.

 

மிகவும் நெருங்கி விட்டீர்கள்  மருது

 

On ‎4‎/‎13‎/‎2017 at 3:22 PM, ஈழப்பிரியன் said:

காதல் எனும் நோயினால் ரொம்பவும் நொந்திருக்கிறீர்கள் போல.

 

On ‎4‎/‎13‎/‎2017 at 5:17 PM, புங்கையூரன் said:

புல்லை மேய்ந்த ஒரு மாடு.....ஆறுதலாக இரை மீட்டுவது போல நகர்கின்றது உங்கள் வர்ணனை!

மீண்டும், மீண்டும் இரை மீட்டுவதைத் தவிர....பசுமைப் புல்வெளியை இழந்து....வெறும் கோதுமை வெளிகளில் மேய்ந்து கொண்டு திரிகிறோம் என்பதை நினைக்க வலி தான் மிஞ்சுகின்றது!

எனினும் பசுமைப் புல்வெளிகள் எமது கனவுகளாகவே எப்போதும் இருக்கப் போகின்றன!

மீண்டும் அங்கு சென்று வாழ்ந்தாலும்...அந்தப் புல்வெளிகளை நிரந்தரமாகத் தொலைத்த நினைவு தான் மிஞ்சப்போகின்றது!

அந்த நினைவுகள்...ஒரு காலப் பெட்டகத்தினுள் புதைக்கப் பட்டு விட்டன!

தொடருங்கள் நிழலி!

கனவுகளை பசுமை புல் வெளிகளாக ஆக்க ஊரில் உள்ள மக்களுடன் இணைந்து இன்னும் அதிகமாக உழைக்க வேண்டிய காலம் இது. இல்லாவிடின் வெறூம் பாலை நிலமாகவே எம் கனவுகளும் அதை சுமந்த மண்ணும் மேனியரும் ஆகிவிடுவர்.

பின்னூட்டத்துக்கு நன்றி புங்கை

On ‎4‎/‎15‎/‎2017 at 1:02 PM, nochchi said:

மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்.

நன்றி நொச்சி. அடிக்கடி எழுதுங்கள்

On ‎4‎/‎15‎/‎2017 at 5:50 PM, Sasi_varnam said:

 

அதே யாழ்ப்பாணத்தில் இருக்கும் சொந்தங்கள், அயலவர்கள் இப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதை போல இருப்பதை பார்க்க... எண்ணத்தை சொல்ல.

அங்கும் வெறுப்பும் சலிப்பும் இருக்கத்தான் செய்யுது.
எந்த இனமும் கொடுக்காத அளவுக்கு அவர்கள் விலை கொடுத்து இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் ஒரு விடயத்தில் உறுதியாக இருக்கின்றார்கள் மீண்டும் தம்மை பலிக்கடாக்கள் ஆக்கும், தம் வாழ்வை நாசமாக்க கூடிய எந்த போராட்டத்துக்கும் ஆதரவு கொடுப்பதில்லை என்று. இது பற்றி இறுதியிலும் எழுத நினைத்து இருக்கின்றேன்

Link to comment
Share on other sites

On ‎4‎/‎20‎/‎2017 at 4:01 PM, shanthy said:

இன்றுதான் நிழலி உங்கள் பதிவை முழுவதும் படித்து முடித்தேன். என்ன சொல்ல ? உங்கள் எழுத்தோடு சோ;ந்து பயணிக்கிறேன். பல இடங்களின் விபரிப்பு 90களில் உலவிய நினைவுகளை மீட்கிறது. காலம் எத்தனை கொடியது? நீண்ட நாளின் பின் வாசித்த அருமையான பதிவு.

நன்றி சாந்தி. அடிக்கடி யாழ் பக்கமும் வாருங்கோ

On ‎4‎/‎27‎/‎2017 at 11:42 PM, தமிழ் சிறி said:

வாசிப்பதற்கு, சுவராசியமாக....  உங்கள் பயணத்தை  எழுதியுள்ளீர்கள் நிழலி.  :)

உங்கள் மாமா பேசியதை, நீங்கள்  கோடிட்ட இடம்  மூலம் மறைத்துள்ளதை.... நான் நிரப்பி வாசித்த போது,
எனக்கு தலை விறைத்துப் போய் விட்டது.
:shocked: மாமன்.... மருமகனுக்கு முன் இந்தச்  சொல்லை பாவிக்கக் கூடாது. :grin:

 

ஹா ஹா ஹா ... ஆள் அப்படித்தான் ... ஒரு கட்டத்தின் பின் ஒரு நல்ல நண்பராக ஆகிவிட்டதால் சம்பிரதாயமான முறைகள் எல்லாம் மறைந்து விட்டது. மாமாவுடன் கதைத்ததில் இங்கு பகிர்வது 10 வீதம் கூட இல்லை :grin:

On ‎4‎/‎27‎/‎2017 at 11:50 PM, தமிழ் சிறி said:

Bildergebnis für சிவலிங்கப் பூÄhnliches Foto

இதற்கு சிவலிங்கப் பூ  என்று பெயர். இந்தப் பூ, வித்தியாசமான நல்ல வாசம். 
ஆனைப் பந்தியடியில் உள்ள,  தனியார் மருத்துவ மனை ஒன்றில் இந்த மரம் இருந்தது. 
இப்போ உள்ளதோ... தெரியவில்லை.

மிக்க நன்றி தமிழ் சிறி. எப்படி இந்தப் பெயரை மறந்து போனேன் என்று தெரியவில்லை

On ‎4‎/‎29‎/‎2017 at 0:58 AM, putthan said:

இன்னும் வருமோ? தொடருக்கு நன்றிகள் ....உங்களுடையை தொடரை வாசிக்க மீண்டும் ஒரு முறை எனக்கு ஊருக்கு போய்விட்டு வந்த உணர்வு...ஏற்பட்டது...

ஓம் வரும்... .அடுத்த வராத்தின் பின் அதிகம் நேரம் கிடைக்கும் என்பதால் வேகமாக எழுதி முடிக்கலாம் என நினைக்கின்றேன். கடனாவில் 10 வருஷம் என்ற ஒரு தொடரையும் எழுத நினைத்து இருப்பதால் இதை கெதியன எழுதி முடிக்க வேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பழகிய பரிச்சயமான இடங்கள், பக்கத்தில் கொழும்புத்துறை,  துண்டி எல்லாம் சொல்லி வேலையில்லை ....! பாசையூர் அந்தோனியார் அயலில் இருக்கும் சிலர் இங்கேயும் எனது அயலவர்களாக இருக்கின்றனர்..... நிறைய ஞ<பகங்கள் வந்து போகின்றன.அருமையாக எழுதிக் கொண்டு வருகின்றீர்கள் நிழலி ...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த கதையை வாசிச்சுக் கொண்டு போகேக்குள்ள தான் எதற்கு மோகன்,நிழலியை மட்டுவாக நியமித்தார் என்டு விளங்கிச்சு:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.5.2017 at 8:58 PM, நிழலி said:

இல்லை தமிழ் சிறி. இது கொழும்புத்துறை வீதியில் இருக்கும் ஒரே ஒரு மாதா கோவில். பெயருக்கு ஏற்றவாறு சந்தன நிறத்தில் வர்ணம் பூசி இருப்பார்கள். இந்திய ஏவல் படைகள் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு படுகொலைகளை நிகழ்த்தும் போது இங்கு தான் தஞ்சம் அடைந்து இருந்தோம். 

இசைக்கு பிரபலமானவரை பற்றி அறிந்து இருக்கவில்லை .

உங்களுக்கு பாண்டியந்தாழ்வு எனும் இடம் பற்றித் தெரியுமா?

நிழலி,  ஊரில்... "பாண்டியன் தாழ்வு" என்ற பெயரை கேள்விப்  பட்டுள்ளேன். 
அந்த இடம் எந்த ஊருக்கு அருகில் உள்ளது என்று சரியாக நினைவு வரவில்லை.
எனது கணிப்பின்படி.... ஈச்ச மோட் டைக்கு அருகில் இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்மையில்  மாமா உறவு  உறவையும் தாண்டிச்செல்லும் உறவுதான் அது அடுத்த நண்பன் போல  ஒரு உறவு தொடரட்டும் தொடர் நிழலி 

Link to comment
Share on other sites

மீண்டும் சென்னை

இருப்பது இன்னும் 5 தினங்கள் தான். ஐந்தாம் நாள் இரவு 10 மணிக்கு மீண்டும் ரொரன்டோ நோக்கி பயணம் செய்யவேண்டும் என்பதால் ஏலுமான அளவுக்கு அக்கா குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க நினைக்கின்றேன்

செவ்வாய் காலை 10 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வீட்டை வந்த பின் அன்று முழுதும் ஓரளவுக்கு ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டு இரவு சிறிது வெளியே சென்று வர நாள் முடிகின்றது.

அடுத்த நாள் செப். 23 அன்று முதலில் சென்னையில் உள்ள முதலைப் பண்ணைக்கு செல்கின்றோம். திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் முதலைகள் முதலைகள் முதலைகள்.

வாயை பிளந்த படி சில முதலைகள், வாயை மூடிக் கொண்டு சிலது, சிவனே என்று தண்ணிக்குள் மூழ்கிக் கொண்டு இன்னும் சில, எதைப் பற்றியும் யோசிக்காமல் ஒரு மூலைக்குள் சுருண்டுக் கொண்டு சில…. சில இடங்களில் கப் என்று அடிக்கும் சேற்று நாற்றத்தினை விட குறை சொல்ல எதுவுமில்லை. இவ்வளவு முதலைகளுக்கும் எங்கிருந்து எப்படி சாப்பாடு போடுகினமோ தெரியாது.

 

fjfbj7.jpg

அங்கு இரண்டு மணித்தியாலங்கள் செலவழித்தபின் மாமல்லபுரம் செல்கின்றோம்.

இந்திய சஞ்சிகைகள் மற்றும் கட்டுரைகளில் மாமல்லபுரம் பற்றி வாசித்து வாசித்து அதை பார்ப்பது ஒரு பெருங்கனவாக இருந்தது எனக்கு. பல்லவ அரசர்களின் வழி வந்த நரசிம்மவர்மனால் 1300 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கடற்கரை கோவிலை ஒட்டி எழுப்பப்பட்ட சிலைகள் பற்றிய பிரம்மிப்பான கதைகளை கேட்டு இருக்கின்றேன். புலிக் குகை, அர்ச்சுனன் தபசு போன்றவற்றை வாசித்து வாசித்து அது பற்றி மனதில் எழுந்த பிம்பங்கள் ஏராளம்.

ஆனால் மாமல்லபுரம் போனபின் அங்கு அதை தமிழ்நாட்டு அரசு அதை பேணும் முறையை கண்டபின் என் கனவு உடையத் தொடங்குகின்றது.

குன்று ஒன்றில் ஏறி சற்று நடக்கும் போதே மனிதக் கழிவுகள் எம்மை வரவேற்கின்றன. பன்றிகள் ஒரு ஓரத்தில் இருந்து ஓடி ஓடி வருகின்றன. குப்பைகளும் அசுத்தங்களும் நிறைந்து கிடக்கின்றன.  இலங்கை அரசு சிகிரியா குகை ஓவியங்களை பாதுக்காக்க எடுக்கும் முயற்சிகளில் 10 வீதம் கூட இங்கில்லை. பென்னம் பெரும் வரலாற்று பொக்கிசம் பொறுப்பற்ற மனிதர்களின் நிர்வாகத்தால் பொலிவிழந்து செல்கின்றது. தமிழர்களின் நாகரீகம் தமிழர்களாலேயே அழிக்கப்படுகின்றன.

ஆனால் இவற்றையும் மீறி அங்குள்ள சில சிற்பங்கள் தாம் இருக்கும் சூழ்நிலையை மீறி தம் வரலாற்றை உரக்க மூச்சிறைத்து சொல்ல விளைகின்றன. சிற்பங்கள் செதுக்கிய சிற்பிகளின் பாதங்களில் ஒட்டிய மண் துகள்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அழுது புரள்வதாக எனக்கு தோன்றுகின்றது.

vdz90y.jpg

aymy5j.jpg

 

அங்கு சில மணித்தியாலம் செலவழித்த பின் மீண்டும் வீடு திரும்பும் போது மாலையாகி விட்டது.

அடுத்த நாள் செப் 24 மனைவியின் தங்கையின் வீட்டில்….மச்சினிச்சியின் வீட்டில் விருந்து. அவர் வீட்டை எதிர்த்து ஒரு தமிழ் நாட்டு பொடியனை கட்டியதால் உறவுகளால் ஓரளவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தார். தொப்புள் கொடி உறவு தன் வம்சத்திற்கு தொப்புள் கொடிக்குரிய குழந்தைகளை கொடுப்பதை எம் சமூகம் இன்னமும் மறுத்துக் கொண்டு தான் இருக்கின்றது.

தமிழ்நாட்டு மதிய விருந்தென்பது வித்தியாசமானது போலும். மச்சம் (அசைவம்) என்றால் முழுக்க முழுக்க மச்சம் தான். எனக்காக வஞ்சிர மீன் பொரியல், காடை பறவை முழுப் பொரியல், கோழிப் பொரியல், கோழி இறைச்சி, முட்டை, மட்டன் பிரியாணி, சிக்கன் புரியாணி என்று விருந்து களை கட்டியது. சாப்பாட்டு ராமனான என்னாலேயே முழுமையாக சாப்பிட முடியாதளாவுக்கு எக்கச்சக்க உணவு. திரும்பி பார்க்கும் போது என் மகன் எல்லாவற்றையும் ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு இருந்தான்.

அவர்களுடன் விடை பெற்று வீடு வந்த பின் வாய் நம நமக்குது.

தமிழ்நாட்டுக்கு வந்த பின் இன்னும் உள்ளூர் சரக்கை அடிக்கவில்லை என்று மனசு அழுதது. முக்கியமாக டாஸ்மாஸ் கடை ஒன்றுக்காகவது செல்ல வேண்டும் என்று நான் ஆசைப்பட நரேஸ் அண்ணார் இரவு கூட்டிக் கொண்டு சென்றார். அங்கு ஒரு உள்ளூர் பிரண்டி வாங்கிக் கொண்டு வந்து இரவு அடிச்சுப் பார்த்தோம். குறை சொல்ல ஒன்றும் இல்லை, நன்றாக இருந்தது.

2l8c08l.jpg

(டாஸ்மாஸ் இற்கு முன்பாக)

 

செப் 25.

சென்னைக்கு பயணம் திட்டமிடும் போதே நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தேன். ஆனால் சரியான புத்தகக் கடை எதுவென தெரியவில்லை.

காலச்சுவடு வெளியீடுகளை வாங்குவம் என்று அவர்கள் அலுவலகம் எங்கிருக்கு என்று அவர்களின் இணையத்தளம் சென்று முகவரி பார்த்து அங்கு போனால் அந்த அலுவலகத்தினை காலி பண்ணிப் போய் கன நாளாகுது என்று சொன்னார்கள்.  பிறகு ஓவ்வொருவரிடமும் கேட்டு கேட்டு அவர்களின் தற்போதைய விலாசம் கண்டு பிடிச்சு போக வெறுத்தே போய்விட்டது. புத்தகங்கள் பற்றிய எந்த அறிவும் இல்லாத ஒரு பெண் அங்கிருந்தார்.

பின் அங்கிருந்து குமரன் பதிப்பகம் செல்கின்றேன். சென்னை மக்கள் அன்பானவர்கள் என்று காட்டிய இன்னொரு நிகழ்வு அங்கு நடக்கின்றது. நான் கேட்ட புத்தகங்கள் இல்லை என்று அங்கிருந்தவர் சொல்கின்றார். சொன்னது மட்டுமன்று New book land இற்கு call பண்ணி கேட்கின்றார். ஆனால் எமக்கு அந்த புத்தகக் கடை எங்கிருக்கின்றது என்பது தெரியாது எங்கின்றோம். அவர் குமரன் பதிப்பகத்தை பூட்டி விட்டு எம்முடன்  வெளியே வந்து ஆட்டோ ஒன்றை தானே பிடித்து தந்து சாரதிக்கு விலாட்சத்தையும் சொல்லி அனுப்புகின்றார்

சென்னை மக்கள் அன்பானவர்கள்!

 

New book land இல் புத்தகங்கள் வாங்கிய பின் வீடு செல்கின்றோம். இரவு அக்கா குடும்பத்துடன் நேரம் போகின்றது,

 

289xvg0.jpg

(வாங்கிய புத்தகங்களின் ஒரு தொகுதி)

செப் 26:

காலையில் என் சித்தப்பா கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்திருக்கின்றார் என அறிய முடிகின்றது.

பகலில் மீண்டும் சுலோச்சனாவிடம் போய் பெருங்கால் நண்டு வாங்கி சமைத்து உண்டபின் சித்தப்பாவை கண்டு கன காலம் என்பதால் மாலை 5 மணிக்கு அவரை காண செல்கின்றோம். இரவு 10 மணிக்கு விமான நிலையத்தில் நிற்க வேண்டும்,

இடையில் அவர் இருக்கும் இடத்துக்கு செல்ல தாமதமாகின்றது. மிக மோசமான வாகன நெரிசல். நரேஸ் அண்ணா வழியில் ஒரு ஸ்கூட்டரில் போனவரிடம் விலாசம் சொல்லி எப்படி சீக்கிரமாக போவது என்று கேட்க அந்த மனுசர் “நான் காட்டுறன்” என்று சொல்லி எம் காருக்கு முன்னால் சென்று வழி காட்டுகின்றார். யார் என்றே தெரியாத எமக்காக நேரம் மினக்கெட்டு வழி காட்டும் இந்த அன்பான மனுசர் யார் என்றே தெரியாது

சித்தப்பாவை சந்தித்து வீட்டை வந்து மீண்டும் விமான நிலையம் செல்கின்றோம். நேரம் மிகக் குறைவாக இருக்கின்றது.

அக்காவின் கண்களை பார்க்கும் துணிச்சல் இல்லாமல் போய்ட்டு வருகின்றோம் என சொல்லி வரும் கண்ணீரை காட்டாமல் விடை பெறுகின்றோம்.

இந்த நாட்களில் என் மகன் அக்காவின் குடும்பத்துடன் இனி இல்லை அளவுக்கு கலந்து விட்டான். கனடா தாண்டி இங்கேயும் ஒரு கங்கை இருக்கும் என்பதை புரிந்து கொண்டான்

 

காலம் 6 மாதங்களுக்குள் மீண்டும் சந்திக்க வைக்கின்றது என்பதை அறியாமல் இன்னும் 2 வருடங்களில் சந்திப்பம் என்று சொல்லி விடை பெறுகின்றேன்.

 

பயணம் 1 நிறைவடைகின்றது

பயணம் 2 இனி தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

2l8c08l.jpg

அடப்  பாவி.... இந்த பயணத்தில் "டாஸ்மாக்கையும்" விட்டு வைக்கவில்லையா? :grin:
தள்ளு முள்ளு படாமல்.... சரக்கு, வாங்க  கூடியதாக இருந்ததா? :D:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎/‎05‎/‎2017 at 2:52 AM, நிழலி said:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2l8c08l.jpg

 

 

குடிக்கேக்கு முதலே குடிகாரன் மாதிரி தான் இருக்கு:rolleyes:...உங்கட கதையை தொடருங்ககோ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பயணம் 2 இனி தொடரும்

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நிழலி,தொடர் கட்டுரை மிகவும் நன்றாக போகின்றது.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 month later...

மாசம் இரண்டு முடியப்போகுது,  மனிசன் எழுதி முடிச்சிருக்கும் எண்டு வந்து பார்த்தா போட்டது போட்டபடியே கிடக்குது. இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.