Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது முயற்சி செய்யுங்கள்,

கூடப்படித்தவர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் என்று வங்கிகளில் இருக்கிறார்கள். தேவையென்றால் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

ஆக்க பூர்வமான கருத்தாடல். 

இலங்கைப் பட்டதாரிகளைப் பொறுத்தவரை பலரது பட்டம் வெறும் பேப்பர் மட்டுமே. இவர்கள் அரசாங்கமே படிப்பிச்சும் விட்டு, வேலையும் குடுக்கவேணும் எண்டு கேட்பது எவ்வளவு முட்டாள் தனம். 

மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் அவதானித்தவரை இலங்கையில் சில குறிப்பிட்ட துறைகளில் அனுபவம் இன்றி நன்கு காசு பார்க்க முடியும். உல்லாசப் பிரயாணத் துறை அப்படியானது. பருத்தித் துறையில் எமக்குத் தெரிந்த ஒருவர் சிறு மூலதனத்துடன் கடற் கரைக்கு கிட்ட இருக்கும் தனது வீட்டை டைல்ஸ் போட்டு, பெயிண்ட் அடிச்சு திருத்தம் செய்து ஒரு அறைக்கு attached bathroom உம் கட்டி தட்டித் தடவி trip advisor/air bnb மூலம் விளம்பரப்படுத்தியிருந்தார். இவளத்திற்கும் அவருக்கு ஆங்கிலம் கூட அதிகம் தெரியாது. மனுசனுக்கு அடிச்சுதே யோகம். வெள்ளைக்காரர், லோக்கல் டூரிஸ்ட் என்று கும்பல் கும்பலாக றூமுக்கு புக்கிங் வரத் தொடங்கிவிட்டது. ஒரு நாளைக்கு 2,000/- படி இருந்த இடத்தில் இருந்தே உழைப்பு. அது மட்டுமல்ல வருபவர்களுக்கு புட்டு, நண்டுக்கறி எண்டு சாப்பாடு சமைச்சு வித்து அதையும் காசாக்கிவிட்டார். அதைவிட அவரது வீட்டுக்கு அருகிலிருக்கும் ஓட்டோ ஒன்றுக்கும் நல்ல வருமானம் வர வழி செய்துவிட்டார். இப்ப மூன்று அறைகளை வாடகைக்கு விடுகிறார்.

எனக்கும் இலங்கைக்கு வந்து கொழும்பில் ஒரு consulting நிறுவனம் போடத்தான் விருப்பம். இலங்கையில் இருக்கும் big 4 தவிர்ந்த consulting நிறுவனங்களின் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டது, அத்துடன் சிறிய வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை விற்பது பற்றி அவர்கள் யோசிப்பத்தில்லை. இப்படியான சிறிய வாடிக்கையாளர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாருக்கும் சேவை பெற வேண்டிய தேவையை உருவாக்கி விட்டால் நல்ல பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன. வேறு இடங்களில் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன், பார்க்கலாம். you will never get rich working for some one!

Link to comment
Share on other sites

10 minutes ago, Thumpalayan said:

மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் அவதானித்தவரை இலங்கையில் சில குறிப்பிட்ட துறைகளில் அனுபவம் இன்றி நன்கு காசு பார்க்க முடியும். உல்லாசப் பிரயாணத் துறை அப்படியானது. பருத்தித் துறையில் எமக்குத் தெரிந்த ஒருவர் சிறு மூலதனத்துடன் கடற் கரைக்கு கிட்ட இருக்கும் தனது வீட்டை டைல்ஸ் போட்டு, பெயிண்ட் அடிச்சு திருத்தம் செய்து ஒரு அறைக்கு attached bathroom உம் கட்டி தட்டித் தடவி trip advisor/air bnb மூலம் விளம்பரப்படுத்தியிருந்தார். இவளத்திற்கும் அவருக்கு ஆங்கிலம் கூட அதிகம் தெரியாது. மனுசனுக்கு அடிச்சுதே யோகம். வெள்ளைக்காரர், லோக்கல் டூரிஸ்ட் என்று கும்பல் கும்பலாக றூமுக்கு புக்கிங் வரத் தொடங்கிவிட்டது. ஒரு நாளைக்கு 2,000/- படி இருந்த இடத்தில் இருந்தே உழைப்பு. அது மட்டுமல்ல வருபவர்களுக்கு புட்டு, நண்டுக்கறி எண்டு சாப்பாடு சமைச்சு வித்து அதையும் காசாக்கிவிட்டார். அதைவிட அவரது வீட்டுக்கு அருகிலிருக்கும் ஓட்டோ ஒன்றுக்கும் நல்ல வருமானம் வர வழி செய்துவிட்டார். இப்ப மூன்று அறைகளை வாடகைக்கு விடுகிறார்.

இதைத்தான் நானும் சொல்கின்றேன்
வீதியில் குந்துவதால் வேலையும் வராது + வாழ்க்கையும் வராது

தேடுங்கள் இளைஞர்களே - நல்ல வாழ்வு நிச்சயம் கிடைக்கும்.

 எங்கே போனது உங்கள் அறிவு
தேடுங்கள் - வாழ்க்கை உங்கள் கைகளிலேயே 

வீதியில் குந்துவதால் உங்கள் நேரம்தான் வீண் 
தேடுங்கள் - உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளிலையே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thumpalayan said:

ஆக்க பூர்வமான கருத்தாடல். 

இலங்கைப் பட்டதாரிகளைப் பொறுத்தவரை பலரது பட்டம் வெறும் பேப்பர் மட்டுமே. இவர்கள் அரசாங்கமே படிப்பிச்சும் விட்டு, வேலையும் குடுக்கவேணும் எண்டு கேட்பது எவ்வளவு முட்டாள் தனம். 

அவர்களுக்கு புரியாது. 

இந்தப் படத்தில் வெள்ளை டீ சேர்ட்டுடன் ஒருவரும், பக்கத்தில் தாடியுடன் ஒருவரும்....

ஆட்களையும் அவர்களது தொப்பைகளைப் பார்த்தால், ஒன்று பிள்ளைகளுக்காக வந்திருக்க வேண்டும்... அல்லது தண்டச் சோறுக் கோஸ்ட்டியா இருக்க வேண்டும். :grin:

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

Link to comment
Share on other sites

[எனக்கும் இலங்கைக்கு வந்து கொழும்பில் ஒரு consulting நிறுவனம் போடத்தான் விருப்பம். இலங்கையில் இருக்கும் big 4 தவிர்ந்த consulting நிறுவனங்களின் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டது, அத்துடன் சிறிய வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை விற்பது பற்றி அவர்கள் யோசிப்பத்தில்லை. இப்படியான சிறிய வாடிக்கையாளர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாருக்கும் சேவை பெற வேண்டிய தேவையை உருவாக்கி விட்டால் நல்ல பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன. வேறு இடங்களில் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன், பார்க்கலாம். you will never get rich working for some one! ]

என்ன consulting நிறுவனம்? சொன்னா எங்களுக்கும் பயனுள்ளதா இருக்குமெல்லோ

--------------------------------------------------------------------------

மிக அருமையான திரி, தொடருங்கள்

தொழில் வாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கிறது

Link to comment
Share on other sites

7 hours ago, Nathamuni said:

சொல்லாதீங்க பிரதர்..

நான் மேலே சொன்னது போல... எமது சிந்தனை, நாம் வாழ்ந்த மேலைத்தேய சூழலால் மாறியது. இவர்கள் இன்னும் அங்கே.

இங்கே பிரித்தானியாவில்... ஆசிரிய (வாத்தியார்) வேலைக்கு வாங்கோ என்று அரசு விளம்பரம் செய்யுது. 

அரசு வேலை, வேலைக்காகாது என்ற உணர்வு. 

அங்கே நேர் எதிர் உணர்வு.

ஆனாலும் சில எம்மவர் மத்தியிலும் இங்கும் இதே கதை தான்.

ஒரு பாட்டியில் ஒருவர் படித்து இருக்கிற தனது தம்பியை அறிமுகப் படுத்தி, அவருக்கு IT துறையில் வேலை பெற என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை சொல்லுமாறு கேடடார்.

அது செய்யுங்கள், இது செய்யலாமே என்று சொல்லி, மணித்தியாலம் £50 பவுண்ட் வரை உழைக்க முடியும் என்றேன்.

அதுவரை ஆர்வமாக கேட்டவர்... பணத்தினைப் பற்றி சொன்னதும்... கண்கள் விரிந்தது.. ஆகா ஆர்வமாகி விட்டார் என்று நினைத்தேன்.

பிறகு இன்னோருவரிடம் பேசியதை கண்டேன். கராஜ் வேலை (பெட்ரோல் நிலையம் ) £10 வேலைக்கு கேட்டுக் கொண்டிருந்தார்.

என்னப்பா... என்று கேட்க.... நமக்கு எல்லாம் £50 பவுனுக்கு வேலை கிடைக்குமா என்றார்.

இந்தியாவில் இருந்து வேலை தேடித் கொண்டு இங்கு வருகிறார்கள் - தன்னைம்பிக்கையுடன்....

இவர் இங்கே பிறந்து வளந்தவர்.

ஒரே விடயம்: தன்னம்பிக்கை.... 

காத்து நிறைந்த டயர்... அனாசயமாக பாரத்தினை இழுக்கும். காத்து போனால் அவ்வளவு தான். தன்னம்பிக்கை தான் காத்து.

இப்படித்தான் பிரதர் 

என்னிடமும் ஒருவர் நண்பன் தொழில் தொடங்குகிறார்
அதற்கு ஒருவரைப் பற்றி விசாரிக்கமுடியுமா என்று கேட்டார்
நானும் எழுத்தில் தரமுடியாது தொலைபேசுங்கள் என்றேன் 

ஓடியே போட்டார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, முனிவர் ஜீ said:

மீண்டும் நன்றி  

ஒரு பட்டதாரிக்கு சொன்னது  மச்சான் நீ ஒரு வேலையை செய் இலங்கையில் வேலையெடுப்பது எனப்து கொஞ்சம் கஸ்ரம் உனது திறமைக்கு ஒரு வேலையை செய்  அரச தொழிலில் இணைக்கும் போது அதை விட்டு விட்டு அரச தொழில் இணைந்து விடு என்று அதற்கு அவன் சொன்னது நான் பட்டதாரி என்றான் 
நான் ஒன்றும் சொல்ல வில்லை  நல்ல காலம் நான் பட்டதாரி ஆகவில்லையென நினைத்து கொண்டேன் வேலையில் கொளரவம் பார்க்தால் இருக்க வேண்டியதுதான் பட்டதாரியாக

இலங்கைப் பட்டதாரிகளுக்கு ஈகோ உண்டு.

ஒருவர், மொறட்டுவ பொறியாளர். இலண்டனில் பெற்றோல் நிலைய காசாளர். வேலை எடுக்க முடியாமல் இருந்த அவரது CV யை பார்த்து உதவுமாறு இன்னுமொரு நண்பர் கேட்டிருந்தார்.

பார்த்தவுடன் புரிந்தது, பிரச்சனை. முதல்பக்கம் முமுவதும் சுயவிபரம். ஆரம்பபாடசாலை, உயர்பாடசாலை, பல்கலைக்கழகம்... எல்லாமே இலங்கை முகவரிகளுடன். போதாக்குறைக்கு இலங்கையர்.... வேலை செய்ய அனுமதி உள்ளது... கலியாணம் கட்டவில்லை.

எவ்லாவற்றையும் எடு.... பட்டத்தை மட்டும் போடு... எங்கு என்று போடாதே என்றேன்.

ஏன் என்றார்.

வேலை தரக்கூடிய வெள்ளைக்கு இலங்கை யுனியும், சோமாலியன் யுனியும் ஒன்றுதான். இரண்டுமே அகதிகள் அனுப்பும் நாடுகள் என்றேன்.

நேர்முகத்தில் கேட்டால் சொல்லலாம், மற்றப்படி போடாதே என்றேன்.

ஓகே என்று போனவர்...... அடுத்தநாள் போனில் கேட்டார், இலங்கையின் தரமான யுனியை, எப்படி சோமாலி யுனியுடன் ஒப்பிடுவீர்கள் என்றாரே பார்கலாம்.

எனக்குத் தெரிந்து இன்றும்....அதே நிலை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழகம் போய் படிச்சால் கவுண்மேந்து வேலைதான் எண்டு யாரடா சொன்னது?

படிக்கிறது எதுக்கெண்டு தெரியாத முண்டங்களே திருந்துங்கடா?

கல்வியென்பது வாழ்வதற்கே. வேலைக்கல்ல.

இன்று தமிழ்நாட்டில் நடக்கும் மாணவர்சமுதாயத்தை பார்த்தாவது திருந்துங்கடா...tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

உன்மைதான்  நாதா இங்க கனபேர் அப்படித்தான் இருக்கிறார்கள் முக்கியமாக இளைஞ்சர்கள் வேலை இல்லை அரசாங்கம் வேலை தருவதில்லை என்று கூப்பாடு  வேலை செய்யக்கூடிய அளவுக்கு நீ படித்து இருக்கிறாய் சுயமாக சிந்திக்கும் தன்மையை நீ உணர்ந்து இருக்கிறாய்  

அந்த படிப்பு வேலை செய்ய வில்லை அவர்களது மூளைக்கு என்பதே வருத்தம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2017 at 10:27 PM, Nathamuni said:

நெடுக்கர் கூடக் குடுத்துப் போட்டார்.

ஆ... போனது கலியாண விசயமல்லோ.. சும்மா வீசியிருப்பார் காசை... :grin:

போனது கலியாண விசயமில்லை. போற வழியில.. சும்மா விஜயம். அதுபோக.. நாங்க கடினமாத் தான் உழைக்கிறம். அரசாங்கக் காசில இல்லை. அதனால்.. உழைக்கும் ஒவ்வொரு பெனிக்கும் பெறுமதி தெரியும். அதனால் காசை க்கண்டபடி.. வீசுவதில்லை. நீங்கள் கேட்டது நாட்டுக்கோழி முட்டை. அது அங்க விலை. முட்டை உற்பத்தி கூடி நுகர்வு குறைந்த இடங்களில் விலை குறைவாக இருக்கலாம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

ஆடு வளர்ப்பு கோழி வளர்ப்பு மாடு வளர்ப்பு  இலங்கையில் குறைந்து கொண்டு வருவருவதற்கு அதை பலர் விரும்பவில்லை  காரணம் நோய்தாக்கம் அதிகம் , அதற்க்கான போதிய மருந்துவ வசதிகள் குறைவு 

அதை விட முக்கிய  பிரச்சினை  அயலவர்களுக்கு மணம் வீசக்கூடாதாம் வீசினால் அவர்கள் பொது வைத்திய பரிசோகதரிடம்போட்டுக்கொடுக்க வெளிக்கிட   அவர் வந்து இனிமேல் வளர்க்கூடாது சனசந்தடிகள் அற்ற இடத்தில் வளர்க்க சொல்லி கன பேரின் சிறிய பண்ணைகளை  இழுத்து மூட காரணமாக இருந்தது 

நாலு நாட்டுக்கொழி வளர்த்தாலும் பிரச்சினையாக்கிடக்கு நாம் வளர்ச்சியடைகிறோம் என்று சகலுதும் மருந்தால் ஆன உணவு பொருட் களை (நஞ்சு) காசு கொடுத்து விழுங்கி கொண்டு இருக்கிறோம்ம்

கிழக்கில் 18, 20 ரூபா நாட்டுக்கோழி முட்டை அதுவும் தெரிந்தவர்களுக்கு மட்டும் தெரியாதவர்களுக்கு இல்லை tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

பல்கலைக்கழகம் போய் படிச்சால் கவுண்மேந்து வேலைதான் எண்டு யாரடா சொன்னது?

படிக்கிறது எதுக்கெண்டு தெரியாத முண்டங்களே திருந்துங்கடா?

கல்வியென்பது வாழ்வதற்கே. வேலைக்கல்ல.

இன்று தமிழ்நாட்டில் நடக்கும் மாணவர்சமுதாயத்தை பார்த்தாவது திருந்துங்கடா...tw_angry:

பாபா படம் என்று நினைக்கிறேன்.

ஒரு பாடல்: 

"வேலை உன்னைத் தேடி வருமா?

வேலை தேடி விரைந்து போ".

யாராவது, ஸ்பீக்கர்ல போடுங்கப்பா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

ஆடு வளர்ப்பு கோழி வளர்ப்பு மாடு வளர்ப்பு  இலங்கையில் குறைந்து கொண்டு வருவருவதற்கு அதை பலர் விரும்பவில்லை  காரணம் நோய்தாக்கம் அதிகம் , அதற்க்கான போதிய மருந்துவ வசதிகள் குறைவு 

அதை விட முக்கிய  பிரச்சினை  அயலவர்களுக்கு மணம் வீசக்கூடாதாம் வீசினால் அவர்கள் பொது வைத்திய பரிசோகதரிடம்போட்டுக்கொடுக்க வெளிக்கிட   அவர் வந்து இனிமேல் வளர்க்கூடாது சனசந்தடிகள் அற்ற இடத்தில் வளர்க்க சொல்லி கன பேரின் சிறிய பண்ணைகளை  இழுத்து மூட காரணமாக இருந்தது 

நாலு நாட்டுக்கொழி வளர்த்தாலும் பிரச்சினையாக்கிடக்கு நாம் வளர்ச்சியடைகிறோம் என்று சகலுதும் மருந்தால் ஆன உணவு பொருட் களை (நஞ்சு) காசு கொடுத்து விழுங்கி கொண்டு இருக்கிறோம்ம்

கிழக்கில் 18, 20 ரூபா நாட்டுக்கோழி முட்டை அதுவும் தெரிந்தவர்களுக்கு மட்டும் தெரியாதவர்களுக்கு இல்லை tw_blush:

முன்னரெல்லாம்.. ஊரில.. வீட்டுக்கு இரண்டு மாடு.. இரண்டு ஆடு.. நாலு கோழி நிற்கும். இப்ப எல்லாம்.. இரண்டு மோட்டார் சைக்கிள்.. இரண்டு ஆட்டோ.. நாலு கைத்தொலைபேசி தான் இருக்குது.  ஆளாளுக்கு போனைப் போட காசு வரும். பெற்றோலை இழுத்து ஊத்திட்டு.. பொதியில அடைச்சதை வாங்கிச் சாப்பிட வேண்டியான். 

நாங்க இருந்த போது யாழில நல்ல வடிகட்டிகள் (பில்ரர்) விற்றார்கள்.. நீரை சுத்தப்படித்தி தரும். இப்ப எல்லாம்.. மினரல் வாட்டர் தான்.

ஆக வெளிநாட்டுக் காசு.. மற்றும்.. அதை பறிக்க வரும்.. பல்தேசியக் கம்பனிகளின் ஆக்கிரமிப்பு.. சிங்கள அரச ஆக்கிரமிப்பு என்பன.. சொந்த வளத்தின் பயன்பாட்டை அறிய முடியாத அளவுக்கு ஊரில் சந்ததிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. 

இதனை அடையாளம் காணவும் காட்டவும்.. இதன் ஆபத்தை விளங்கவும் விளக்கவும் முடியாத ஒரு அறிவிலிக் கூட்டமாக.. படித்த முட்டாள்களையே அங்குள்ள பல்கலைக்கழகங்களும் உயர் கல்வி நிறுவனங்களும் உருவாக்கி வருகின்றன.

இதில வேலை கேட்டு அலையும் ஒரு 50 பேர் சேர்ந்து ஒரு சமூக பொருண்மிய ஆய்வுக்கான மையத்தை ஆரம்பத்தாலே போதும்... நிறைய அனுபவங்களும்.. வாய்ப்புக்களும் வரும். அதற்கு பெரிய முதலீடும் அவசியமில்லை. பெரிய சமூக நன்மைகளை விளைவிக்கலாம். 

நாம்.. போரின் போது கண்ட அனுபவங்களில் இருந்து விடுபட்டு.. இப்போ.. சிங்கள அரசின் ஆக்கிரமிப்பு மட்டுமன்றி.. பல்தேசிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்பின் கீழும் போய்க் கொண்டிருக்கிறோம். எம் வளங்கள் கைவிடப்படுவதோடு.. சூழலை நாசமாக்கி கொண்டிருக்கிறோம். இதை அறியாத ஒரு சந்ததியாக.. இன்றைய பட்டதாரிகளும் மாணவர்களும்.. ஏன் பெற்றோரும். இப்படியான இடத்தில்.. எப்படி.. முனிவர் ஜீ கோழிப் பண்ணை.. மாட்டுப்பண்ணை வரும்..??! :rolleyes:tw_blush:

அதுதான் சொன்னேன் நெடுக்கு படித்த படிப்பை ப்யன் படுத்த தெரியாதவர்கள் இவர்கள் என்று  

ஒருத்தனை கேட்டேன் ஏன் மச்சி நீங்கள் மாடு வளர்க்கிறதை விட்டு விட்டிடியள்  அவன் சொன்னான் எங்க தாத்தா முன்னர் வண்டில் மாடு வச்சி இருந்தவராம் அதனால் இப்ப அவனை வண்டில் கார முருகேசுட பேரன் என்று சொல்லுறாங்களாம் அதனால் அவனுக்கு அது பிடிக்கலையாம் என்றான் பாருங்கோவன் இப்படியும் இருக்கிறது 

யாழ்ப்பாண தண்ணீருக்கு மாற்றீடு இதுவரை இன்னும் கண்டு பிடிக்கலை மத்திய கிழக்கில் கடல் தண்ணீரை சுத்தமான குடிநீராக பயன் படுத்தி கொண்டு இருக்கிறான் நாம் வாள் வெட்டுடடனும்   பைக்ரேசிதான் நிற்கிறம்   இந்த பட்டத்தாரிகள் இருக்கும் இடத்தை போய் பார்த்தேன் அண்டாவில்  சோறு சமைத்து அதை போட்டோ எடுத்து அப்டேற் பண்ணி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள்  90 சத வீதமானவர்களிடம் பெரிய பெரிய பைக்குகள் 

எட்டிப்பார்த்தா பிறந்த கைக்குழந்தையுடனும் பெண்கள்  என்னத்தை சொல்வது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு பொதுவாக வேலை தேடும் வழிகள் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

எனது நண்பர் ஒரு கணக்காளர் நிறுவனம் வைத்திருக்கிறார். கொழும்பு சென்றிருந்தார்.

அங்கே அவரது உறவினர் வீடு சென்ற போது, அவரை போலவே CIMA முடித்திருந்த உறவுக்கார பெண், கம்பெனி மூடியதால் வேலை போய்விட்டது. வேறு வேலை தேடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

அவருடன் பேசிய போது பொறி தட்டியது. நாம லண்டனில் ஒருவரை வேலைக்கு தேடுகிறோமே. இவரை ஏன் பயன் படுத்த முடியாது? முயன்று பார்க்கலாமே என்று யோசித்த அவர், உடனடியாக லண்டனில் உள்ள தனது அலுவகத்தினை அவரது கம்ப்யூட்டரில் இருந்து ஒன்லைன் மூலமாக இணைத்து, தினமும் அவர் செய்யவேண்டிய வேலைகளை ஓருங்கிணைத்து, தான் அங்கு இருக்கும் போதே பயிட்சி கொடுத்து, சம்பளம் மாதம் £100 பௌண்ட்ஸ் பேசி முடித்து விட்டார்.

லண்டனில் அவர் குறைந்தது £1000 - £2000 மாதம் செலவழித்து இருப்பார்.

இன்று அந்த பெண்ணுடன் மேலும் மூவராக, கொழும்பில் அலுவலகம் வைத்து இருக்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு இப்பொது £300 பௌண்ட்ஸ் கொடுக்கிறார்.

அவரிடம் கேட்டேன், இந்தப் பட்டதாரிகளில் ஒருவரை எடுக்க முடியாதா என? சிரித்து விட்டு சொன்னார். வேலை ஒருவரைத் தேடித் போகாது. வேலையினைத் தேடி நாம் தான் போக வேண்டும். அதேவேளை அந்தப் பெண்ணுக்கு சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான ஆளை சந்தித்திருக்கிறார்.

இங்கே, கிழே, இந்த படத்தில் ஒரு இலங்கை இளைஞர். அவர் அங்கு இருந்த படியே fiverr.com உழைக்கிறார். இவர் டாப் ரேட்டேட். நான் இவரிடம் சில வேலைகள் செய்வித்தேன். 

மேலும் பல தென் இலங்கை இளைஞர்கள், Photoshop Editing, Typing, Translation போன்ற வேலைகளை செய்து டாலர்களில் உழைக்கிறார்கள். 

நிச்சயமாக இவர்கள் இந்த போராளிகள் மத்தியில் இருக்கப் போவதில்லை. தேவையும் இல்லை. 

Displaying Malaka.jpg

Facebook, Twitter எல்லாமே இவர்களுக்கு (போராடுபவர்களுக்கு) பொழுது போக்கு அம்சங்கள். ஆனால், அவைகளை பயனர்கள் பயன்படுத்தும் லாவகத்தினை கண்காணித்து, தமது வியாபார ஸ்தாபனங்களுக்கு 'Social Media Manager' ஆக இருக்க முடியுமா என அழைக்கப்பட்டு $/£ 100,000 வரை வீட்டில் இருந்தே சம்பளம் பெறும் நபர்கள் போராடும் இவர்களுக்கு தெரிந்திருக்க முடியாது. இந்த Social Media Manager நிறுவனங்கள் உள்ள நாடுகளில் இல்லாமல் வேறு நாடுகளிலும் வாழ்கின்றனர். 

அதுக்குள்ள போய், மச்சான், மாமா, அத்தை படங்களை போட்டு வைக்கணுமா... கோஸிப் கதைக்கணுமா... போடுங்கள்... வேறு பெயரில்.. வேலை தேடுபவரானால்... சொந்தப் பெயரானால் உறவுகளை விலத்தி....வேறு பலர் பார்த்து மதிக்கும் விதமாக நடந்து கொள்ள வேண்டும்.

சொல்ல வரும் விசயம் என்னவென்றால், அமெரிக்கா முதல் அண்டாடிகா வரை உலகெங்கும் வேலை செய்யும் வழிகள் இருக்க, மைத்திரியின் வேட்டியை பிடித்து தொங்கத்தான் வேண்டுமா? 

Link to comment
Share on other sites

22 hours ago, Knowthyself said:

[எனக்கும் இலங்கைக்கு வந்து கொழும்பில் ஒரு consulting நிறுவனம் போடத்தான் விருப்பம். இலங்கையில் இருக்கும் big 4 தவிர்ந்த consulting நிறுவனங்களின் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டது, அத்துடன் சிறிய வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை விற்பது பற்றி அவர்கள் யோசிப்பத்தில்லை. இப்படியான சிறிய வாடிக்கையாளர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாருக்கும் சேவை பெற வேண்டிய தேவையை உருவாக்கி விட்டால் நல்ல பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன. வேறு இடங்களில் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன், பார்க்கலாம். you will never get rich working for some one! ]

என்ன consulting நிறுவனம்? சொன்னா எங்களுக்கும் பயனுள்ளதா இருக்குமெல்லோ

--------------------------------------------------------------------------

மிக அருமையான திரி, தொடருங்கள்

தொழில் வாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கிறது

எனது துறை கணக்கியல், அவுஸ்திரேலிய CPA (certified practicing Accountant) முடித்துவிட்டேன். இலங்கை KPMG மற்றும் EnY யில் வேலை செய்தவர்கள் சிலரை தெரியும். இந்த நிறுவன partners பெரிய அளவில் risk எடுக்க விரும்புவதில்லை. ஒரு சில குறிப்பிட்ட வகையான ஓடிட்களையே காலம் காலமாக செய்கிறார்கள்.அதிலிருந்து அங்காள இங்கால அரக்க விரும்புவதில்லை. அநேகமாக செய்வது எல்லாமே financial statement audits தான். Internal audits, IT audits, செய்யும் நிறுவனங்கள் வங்கிகள் தவிர வலுகுறைவு. ஆனால் இப்போது இவை பிரபல்யமடைய ஆரம்பித்திருக்கின்றன. IIA (Institute of Internal Auditors), ISACA (Information Systems Audits and Control Association) இலங்கை கிளைகள் பிரபல்யமாகி வருகின்றன, இவர்களின் CIA, மற்றும் CISAவை இலங்கை நிறுவனங்கள் வேலை விண்ணப்பங்களில் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த சூழலில் internal audit சம்பந்தமான சில வேலைகள் நிறுவனங்களுக்கு தேவைப்படும். உதாரணமாக வங்கிகள். அவர்களுக்கு IT audit உம் தேவையானது. இதைவிட financial modelling, financial advisory சார்ந்தும் சந்தர்ப்பங்கள் உள்ளன. மற்றும் எனக்கு PRINCE2 உடன் கொஞ்ச project management அனுபவம் இருப்பதால் அது சார்ந்தும் பல வேலைகள் உள்ளன. குறிப்பாக implementation மற்றும் system migration சார்ந்த வேலைகள். தற்போது இலங்கையில் இருக்கும் அநேகமான consulting நிறுவனங்கள்  பெரிய மீனுக்குத் தான் வலை போடுகிறார்கள் (MNC மற்றும் overseas clients). நாட்டிலிருக்கும் SMEs ஐ வளைச்சு சேவைகளை விற்க பலருக்கும் பஞ்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் தொழில் வாய்ப்பு என்பது ஒன்று உருவாக்கி கொள்வது. அல்லது உருவாக்கியதில் உள்நுழைந்து பெற்றுக்கொள்வதும் அதனுடன் பயணிப்பதும் இன்றைய‌ பட்டதாரிகள் செய்ததைப்பார்த்தால் மற்ற தொழி தொழில் செய்பவர்களை எப்படி நினைக்கிறார்கள் என்று தெரிகிறதா கிடைக்கிற வேலையை செய்யாமல் படித்த படிப்புக்கு வேலை தாங்கோ என்று அரசின் மடியில் கிடக்கிறார்கள் இவர்கள் அரசும் கண்டு கொள்ளவில்லை 
ஆனால் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் செய்யும் வேலையை த‌ர‌க்குறைவாக‌ நினைத்து இவ‌ர்க‌ள் செய்த‌ வேலையை என்ன‌ செய்ய‌வேண்டும் இல‌ங்கையில் ஆர‌ம்ப‌த்தில் ஏன் இப்ப‌வும் கூட‌ வ‌ட‌ கிழ‌க்கில் செய்து வ‌ரும் தொழில்க‌ளை கேவ‌ல‌ப்ப‌டுத்திய‌து இந்த‌ ப‌ட்ட‌தாரிக‌ள் என்கிற‌ ப‌டித்த‌வ‌ர்க‌ளை சாரும் நீங்க‌ தேவையே இல்லை இந்த‌ ச‌மூக‌த்துக்கு 

17264684_1777509682566425_69956971618754

17264326_1777509612566432_27280455866628

17201286_1777509655899761_24038013973070

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் நண்பர்களாக தொன்று தொட்டு வரும் .. நாட்டு மாடு , ஆடு . கோழி , மற்றும் நன்றியுள்ள நண்பனாம் நாட்டு நாய் ... போக நெல்.. வாழை .. என அனைத்தையும்  காப்பாற்ற வேண்டும் .. அது தமிழரின் அடையாளம் .. இது குறித்து தனியாக தொழில் கொள்கை வகுத்து செயல்படவேண்டும் .!

டிஸ்கி :

பீட்டாக்காரன் அங்கிட்டு உள்ள வந்தானா? இல்லையா? என்று தெரியவில்லை ..!  உள்ளே விட்டால் .!.எல்லாத்தையும் நீட்டா முடித்துவிட்டு போய்விடுவான்!! :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.