Jump to content

ஆண்மகனின் பேறுகாலம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மகனின் பேறுகாலம்

காலை அலுவலகம் செல்கையில்:
எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க. 

இரவு 2 மணி:
அவர்: ஒரு வேளை உண்டாயிருந்தா என்ன பண்றது?
அவள்: பெத்துகிற நானே கவலை படல.உங்களுக்கு என்ன? தூங்குங்க. 

விடியற்காலை 5 மணி:
அவர்: போய் பாத்துட்டு வாயேன். பயமா இருக்கு. 

5:10 மணி:
அவள்: இந்தாங்க நீங்களே பாத்துக்கோங்க.
அவர்: (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன். 
அவள்: பாத்துக்காம இருந்து தான் பாரேன். 1f603.png:D

2 ஆம் மாதம்:
அவள்: Doctor checkup க்கு appointment போட்டியா?
எனக்கு பயங்கரமா தலை சுத்துது.
எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது.
இடுப்பெல்லாம் வலிக்குது.
அவர்: நீ rest எடு. நான் பாத்துக்கிறேன். 

3 ஆம் மாதம்:
அவள்: மருத்துவமனைக்கு கூட வருவ தானே?
அந்த கோழியை தின்னுட்டு என் பக்கத்துல வராத. நாத்தம் தாங்கல.
அந்த folic acid மாத்திரை எல்லாம் என் பக்கம் நீட்டாதே. வாந்தி வருது.
நீ முன்ன பின்ன வாந்தி எடுத்திருக்கியா?
அவர்: இல்ல. நான் வாந்தி எடுக்காமலேயே 28 வயசு வரைக்கும் வளந்துட்டேன். எப்படி இருக்கும் சொல்லு?
அவள்: கர்ப்பம் ஆகி வாந்தி எடுத்திருக்கியா ? அப்டியே அடிவயிறுல இருந்து வலிக்குது. 1f641.png:(
அவர்: சரி. படுத்துக்கோ. ஒன்னும் சாப்பிட வேண்டாம். 
அவள்: அப்போ நா பட்டினியா இருந்தா பரவால்ல. நீ மட்டும் கோழி சாப்பிடுவ. 

4 ஆம் மாதம்:
இரவு 3 மணி:
அவள்: எனக்கு பசிக்குது. பிரட் எடுத்துட்டு வரியா?
அவர்: (தூக்க கலக்கத்தில்) போறேன். 
வருகையில்: Bread, Jam, Nutella, பழங்கள் , தண்ணீர் , பழச்சாறு .
அவள்: 1f62e.png:O

5 ஆம் மாதம்:
அவள்: கால் எல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா? கைல, கால்ல எல்லாம் நீர் போடுது. மோதிரம் கூட போட முடில.
அவர்: பாப்பா வளருது. அந்த எடைய தூக்க முடியாம தான் கால் வலிக்குது. நான் அமுத்தி விடறேன்.
அவள்: என்ன இப்படி அமுக்கற? நீ அமுக்கவே வேண்டாம். வலிக்குது. எங்க நல்லா அமுக்குனா, இவ சும்மா சும்மா நம்மள அமுக்க சொல்லிடுவாளோனு தானே, வேணும்னு இப்படி வலிக்கிற மாதிரி அமுக்குற? 

6 ஆம் மாதம்:
அவள்: முக்கி முனகி எந்திரிக்க முனைகையில் 
அவர்: என்னாச்சு? வலிக்குதா? விடிஞ்சிருச்சா? ambulance கூப்பிடவா? தண்ணி வேணுமா? கொஞ்சம் பொறுத்துக்கோ.
அவள்: யோவ், எதுக்கு இவ்ளோ சத்தம்? chu chu போகணும், எந்திரிக்க முடில. 
அவர்: இப்போ தானே போன? அதுக்குள்ளயா? நான் வேணும்னா Adult Diaper வாங்கி தரவா? இப்படி 10 தடவை எந்திரிக்க வேண்டாம்.
அவள்: (முறைத்தபடி) மூடிட்டு தூங்கிடு. இல்ல சாவடிச்சுடுவேன். 

7 ஆம் மாதம்:
அவர்: பக்கத்தில் அமர்ந்து பார்க்கிறார்.
அவள்: எதுக்கு என்ன பாக்குற? எதுக்கு சும்மா பாக்குற? வேற எங்கயாவது பாரு. நான் தான் கிடைச்சேனா பாக்க? 
அவர்: பாத்தது ஒரு குத்தமா? அதுக்கு ஏன் அழற?
அவள்: நான் அப்படி தான் அழுவேன். நீ ஏன் என்ன பாக்குற? நா அழுதா உனக்கு என்ன? இந்த வீட்ல அழ கூட உரிமை இல்லையா? நான் எங்க வீட்டுக்கு போறேன். எனக்கு எங்க அம்மா வேணும். 
அவர்: சரி. நான் போறேன். உன்ன பாக்கல.
அவள்: ஆமா. நான் தான் இப்போ குண்டாயிட்டேன். அசிங்கமா இருக்கேன். எப்படி என்ன எல்லாம் பாக்க தோணும். நீ மட்டும் நல்லா ஒல்லியா இருக்க . போ போ. என்ன பாக்காத. 

8 ஆம் மாதம்:
நடுஇரவில்:
அவள்: ஏன் தூங்குற?
அவர்: இப்போ நான் தூங்கிறது பிடிக்கலையா? இல்ல உனக்கு தூக்கம் வரலையா?
அவள்: ரெண்டுமே இல்ல. நீ ஏன் குப்புற படுத்து தூங்குற? நான் மட்டும் அப்படி தூங்க முடில. நீயும் தூங்காத. என் புள்ள மட்டும் இல்ல.உன் புள்ள கூட தான். 
அவர்: சரி. நான் திரும்பியே படுத்துகிறேன். 

9 ஆம் மாதம்:
அவள்: ரொம்ப வலிக்கும் தானே? எப்படி தாங்கிப்பேனோ? ரொம்ப பயமா இருக்கு.
அவர்: பயப்படாத. நான் பக்கத்துலயே இருப்பேன். நான் பாத்துக்கிறேன்.
அவள்: நீ பக்கத்துலயே இருப்ப. ஆனா உனக்கு வலிக்குமா? எனக்கு தான வலிக்கும். என் வலிய நீ வாங்கிப்பியா? இல்லேல. அப்போ பேசாத. வலில இருக்கும் போது, "push, push" னு கூவுனா, கொரவளைய கடிச்சு வெச்சுடுவேன். 
அவர்: சரி மா, நான் எதும் சொல்ல மாட்டேன்.
அவள்: ஒரு பாப்பா நான் பெத்துக்கிறேன். அடுத்தது, நீ தான் பெத்துக்கணும். என்னால முடியாது.
அவர்: கண்டிப்பா நானே பெத்துக்கிறேன். இந்த பாப்பா மட்டும் நீ பெத்துக்கோ. 

10 ஆம் மாதம்:
அவள்: என்னங்க, வலிக்குது. தாங்க முடில. ஏதாவது ஊசி போட்டு என்ன கொன்னுடு. இதுக்கு மேல முடியாது. 
அவர்: கவலைப்படாத மா. நான் பக்கத்துலயே இருக்கேன். எங்கயும் போகல. கொஞ்சம் நேரம் தான். 

கூடவே இருந்து, முதல் மாதத்திலுருந்து , பத்தாம் மாதம் வரை, நாம் செய்யும் அலப்பறைகளை பொறுத்து, நமக்கு வேண்டியவற்றினை செய்து , நம்மிடம் திட்டும் வாங்கி, ஏன் திட்டுகிறாள், அழுகிறாள் என தெரியாமல் பேந்த பேந்த முழித்து , அதற்கும் நம்மிடம் வாங்கி கட்டிக்கொண்டு , எந்த நேரத்தில் வலி வருமோ என நாம் எண்ணுவதைக் காட்டிலும், எப்போதும் பாதி தூக்கத்தில் இருந்து, இயற்க்கை அழைப்புக்கு அழைத்துச் செல்வதிலிருந்து சகலமும் செய்து, " கொசு கடித்தாலே கூவுவாள், பேறுகாலத்தை எப்படி தாங்கி கொள்வாளோ " என பயந்து, வலி வந்தவுடன் , தாயும் சேயும் பத்திரமாக இருக்க வேண்டுமே எனப் பிரார்த்தித்து, எங்கே பயத்தை முகத்தில் காண்பித்தால் அவளும் பயந்து விடுவாளோ என மனதிற்குள்ளே வைத்து, வெளியே சிறு புன்னகையுடன், அவளுக்கு தைரியம் சொல்லி, தாயுடன் சேர்ந்து , மனதளவில் இரண்டு மடங்காய் சோர்ந்து, கடைசியில் குழந்தை பிறந்தவுடன் , தன் இரு உயிர்களையும் முத்தமிட்டு, கண்களினோரம் கண்ணீருடன், வெளியே வந்து, உறவினர்களுக்கு நா தழுதழுக்க செய்தியை சொல்லுமிடத்தில் இருக்கிறது "ஆண்களின் பேறுகாலம்" . 

பெண்கள் தரும் இன்னல்களை முகஞ்சுளிக்காமல் பொறுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் ஒரு தாய் தான். 

பெண்கள் பேறுகாலம் என்னமோ பத்து மாதம் தான். ஆனால் ஆண்களுக்கு வாழ்நாளெல்லாம்.. 1f49d.png?1f49d.png?1f49d.png?

உபயம் - முகநூல்

மு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே நெஞ்சைத் தொட்டுட்டீங்கள்  மீரா....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரா....  இணைத்த  கட்டுரை, கற்பனை  இல்லை. உண்மை என்பதற்கு.... 
உலகின் முதல் குழந்தை பெற்று எடுத்த... ஆண் இவர்தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பட்ட பாடு இருக்கெல்லே....

சொல்லி வேலையில்லை....பேசாமல் நானே பத்து பிள்ளையை பெத்துப்போட்டு சிம்பிளாய் இருக்கலாம் போலைகிடக்கு....:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இயற்கயின் நியதி என்று எண்ணுகிறேன் .....

எபோதுமேபார்த்திருக்காத இருவர் ....
ஒரு 25-30 வயதில் சந்தித்து ..... மீதி வாழ்க்கை முழுவதையும் 
இவர் அவருக்காகவும் ...... அவர் இவருக்கு ஆகவும் 
வாழுதல் என்பது ... அவ்வளவு எளிதில்லை.
அதற்கு ஒரு ஆழமான அன்பு வேண்டும் .......

அன்பு ஆழமாக போக வேண்டும் என்றால் புரிந்துணர்வு என்பது 
அதைவிட ஆழமாக முன்னதாக போக வேண்டும் 
இப்படி ஒரு அந்நிய உன்னியத்தை .... இப்படியான தருணங்கள்தான் தோற்றுவிக்கின்றன.

(எங்கோ படித்தது .... ஓரூ மனிதனால் ஒரு குறிப்பிட்ட அளவு வலியையே தங்க முடியும் 
அந்த எல்லை தாண்டும்போது மூளை போதிய அளவு ஓட்ஸிசனை பெற்றுக்கொள்ளாது   என்றும் மரணம் 
நிகழும் என்று. ஆனால் பிரவச வலி அதை விட பெரியதென்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆக உங்களுடைய மனைவி மார் என்னமோ செத்து பிழைக்கிறார்கள் என்பது உண்மையே. அந்த வலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யாலாம் என்றுதான் எண்ணுகிறேன்) 

இருவருக்கிடையில் அழமான அன்பு வந்துவிட்டால் ....
உலகில் ஒவொன்றும் அழகுதான் அதன் பின்பு. அவர்கள் இன்னொருவருக்கு 
எப்போதும் தீங்கு இழைப்பதை நான் பார்ப்பது அரிது. 
அவர்கள் அழகா வாழ்கிறார்கள் என்பதை விட பெரிய விடயம் ...
இந்த உலகையும் அழகாக பார்த்து கொள்கிறார்கள் என்பதுதான். 

கார்ல் மார்கஸின் கதைகள் படிக்கும்போது எல்லாம் ....
அவருடைய மனைவி எவ்வளவு தியாகம் செய்து இருக்கிறாள் என்பது 
மூளைக்கு வந்து வந்து போகும் ......... அந்த காதலை மட்டும் அவள் தியாகம் செய்திருப்பின் 
அவளது வாழ்க்கை ராணி போன்றது ..... அவள் ராணியாகத்தானே இருந்தாள். 
ஆனால் தோற்று போனாலும் ..... ஒரு மார்க்கத்தை உலகிற்கு கொடுத்த வரலாறில் வாழ்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் பட்ட பாடு இருக்கெல்லே....

சொல்லி வேலையில்லை....பேசாமல் நானே பத்து பிள்ளையை பெத்துப்போட்டு சிம்பிளாய் இருக்கலாம் போலைகிடக்கு....:(

குசா உட்பட யாழ்கள உறுப்பினர்கள் எல்லோரும் தமது அனுபவங்களை எழுதலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணென்ற திமிரில், செருக்கில் முதலிரவிலிருந்து, ஆணின் கட்டை சுடுகாட்டில் வேகும் வரை குடும்பத்தில் இத்தடியன்கள் செய்யும் வீட்டு வன்முறைகளை,இன்னல்களை கணக்கெடுத்தால் பெண் ஜென்மாய் ஏன் பூமில் பிறந்தோமென ஒவ்வொரு பெண்ணும் அவள் வாழ்க்கையில், இல்லற வாழ்வில் பல நேரங்களில் நிச்சயம் நினைத்திருப்பாள்..! (சில விதிவிலக்குகள் இருக்கலாம்)

ஆனால் உலகில் 99% ஆணாதிக்கம் தான்..!

எந்த ஆண், பத்துமாதம் வரை தன் மனைவியை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்கிறான்? மனைவி கருவை சுமக்க ஆரம்பித்தவுடன் அடுத்த பெண்ணை நோக்கி வலை வீசுவதும், ஆறு மாதத்தில் மனைவியை அவளின் பெற்றோரிடம் அனுப்பிவிட்டு கூத்தடிக்கும் பெரும்பான்மையான ஆணுலகம் பிரசவத்தின்போது மனைவியின் அருகிலா இருந்து கவனித்துக்கொள்கிறது?

8 hours ago, Maruthankerny said:

(எங்கோ படித்தது .... ஓரு மனிதனால் ஒரு குறிப்பிட்ட அளவு வலியையே தங்க முடியும் அந்த எல்லை தாண்டும்போது மூளை போதிய அளவு ஓட்ஸிசனை பெற்றுக்கொள்ளாது என்றும் மரணம் நிகழும் என்று. ஆனால் பிரவச வலி அதை விட பெரியதென்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆக உங்களுடைய மனைவிமார் என்னமோ செத்து பிழைக்கிறார்கள் என்பது உண்மையே. அந்த வலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யாலாம் என்றுதான் எண்ணுகிறேன்)

இதுதான் உண்மை! 

நன்றி மருது..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒவ்வொரு கணவனும் வாழ்வானா?

ரொம்பவும் வெகுளித்தனம் நிறைந்த குடும்பமாகவும் பல இடங்களில் சம்பாசணைகள் சிரிப்புமாக இருந்தது.

பிரசவம் என்றது ஏறத்தாள கண்ணி வெடியில் அகப்பட்ட ஜீப் மாதிரி தான்.ஒவ்வொரு பெண்ணும் புதிய பிறவி எடுக்கிறார்கள்.

பாராட்டுக்கள் மீரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் என்னை ஒரு பெண்ணிய வாதியாகவோ அல்லது ஒரு ஆணிய வாதியாகவோ கருதுவதில்லை!
எனினும், பிரசவம என்பது கடுமையானது என்றும்....அந்த வலி மிகவும் தாங்கவியலாதது என்றும் எனது சமூகத்தால் எனக்குக் கூறப்பட்டது!
நாற்பது நாட்கள் வரை....பாய்த் தடுக்குகளால் மூடப்பட்ட கூட்டுக்குள் ஒரு பெண் முடங்குவதும், ஊரிலுள்ள வேப்ப மரங்கள் அவ்வளவும் துகிலுரியப் பட்டு நிர்வாணமாக நிற்பதுவும், சீரகம் தான் ஒரு சர்வரோக நிவாரணியாகக் கருதப்பட்டு உபயோகிக்கப் படுவதும் சரியென்று என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!
ஒட்டகச் சிவிங்கி அல்லது காட்டு விலங்குகள் குட்டி போடும் போது.. சில மணி நேரங்களுக்குள் அவை நடக்க வேண்டும். இல்லாவிடின் அவை வேறு விலங்குகளின் உணவாகும் சந்தர்ப்பங்களே அதிகம்!
ஆபிரிக்க தேசமொன்றில்...சில மாணவிகள் படிக்கும் காலங்களில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிகவும் சாதாரணமானது! அத்துடன் அந்தக் குழந்தைகள்..அந்த மாணவியின் தந்தையாரின் குடும்பப் பெயரில்,, பதியப் படவும் அவர்களது சட்டத்தில் இடமுண்டு! ஒரு குழந்தை  பிறந்து மூன்றாவது நாளன்றே ..அந்த மாணவியால் வழக்கம் போல பாடசாலைக்கு வந்து தொடர்ந்து கல்வியைத் தடற முடிகின்றது!
பிரான்சில் ஒரு அரசியல் வாதியான பெண்மணியோருவர் ..குழந்தை பிறந்து மூன்றாவது நாளே பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்க முடிந்தது!
ஒரு காரணத்துக்காகத் தான் பொருளாதார நிலையில் இரு துருவங்களான இரண்டு தேசங்களிலிருந்து உதாரணங்களை எடுத்தேன்!
சில சிக்கலான பிரசவங்களைத் தவிர்த்து.....நாம் எதற்காக...பெண்களின் பிரசவங்களை...அதி உன்னத தியாகங்களாகவும் ....மிகப் பெரிய சாதனைகளாகவும் கருதுகின்றோம்?
ஒரு ஆணும் பெண்ணும்...சரி பாதியாக இணைந்து சேர்வதே குடும்பம் என்பது! அது இயற்கையானது!
நாங்கள் எமது பெண்களுக்கு மற்றைய சமூகங்களை விடவும் அதிக சலுகைகள் கொடுப்பதால் தான்...அவர்கள் மேலும்...மேலும் தங்கள் கணவர்களிடம் எதிர்பார்க்கின்றார்கள் போல உள்ளது!
இந்தக் கருத்து ஒரு விவாதத்துக்காக மட்டுமே!
எல்லோரும் தடி தண்டுகளைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரக் கூடாது!
பி.கு: நானும் இந்த விசயத்தில நல்லா நொந்து நூலாகிப் போனவன்!

Link to comment
Share on other sites

3 hours ago, புங்கையூரன் said:

எல்லோரும் தடி தண்டுகளைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரக் கூடாது!
பி.கு: நானும் இந்த விசயத்தில நல்லா நொந்து நூலாகிப் போனவன்!

எனது முதற்பிள்ளைக்கும் ரொம்ப கஷ்ட்டப்பட்டு அடிவாங்கி + பேச்சு வாங்கி இரவு முழுவதும் முழித்திருந்து, பிறந்ததும் கதிரையில் அணைத்தபடியே பல மணி நேரம் தூக்கம். திடீரென முழிச்சு பாத்தால் கையில் மகன் - வந்த நேர்ஸிடம் கேட்டேன், பிள்ளை விழுந்திருந்தா என்னவாகியிருக்கும் என்று.  அவளும் சிரித்தபடியே  "FATHER'S INSTINCT " என்றாள்.

மகனை மனைவிக்கு அருகே படுக்க வைத்துவிட்டு ஒரு தம் அடிக்க வெளியே போக - அங்கு சில மணி நேரத்துக்கு முன்னர் பிள்ளை பிரசவித்த ஒரு பெண் வந்திருந்தார். கற்பத்தின்போது தம் அடிக்கவில்லை - 7 மாதத்தின் பின்னர் முதலாவது என்று அளவளாவினார்.

எது  சரி எது பிழை எனக்கு தெரியாது.

ஆனால் எனது மகளும் தான் பூப்பெய்தியதற்காக ஒரு நாளும் பாடசாலைக்கு போகாமல் விட்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொஞ்சம் புதுனம் பார்க்கிறன் சரியோ  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

என்னைப் பொறுத்தவரையில் என்னை ஒரு பெண்ணிய வாதியாகவோ அல்லது ஒரு ஆணிய வாதியாகவோ கருதுவதில்லை!
எனினும், பிரசவம என்பது கடுமையானது என்றும்....அந்த வலி மிகவும் தாங்கவியலாதது என்றும் எனது சமூகத்தால் எனக்குக் கூறப்பட்டது!
நாற்பது நாட்கள் வரை....பாய்த் தடுக்குகளால் மூடப்பட்ட கூட்டுக்குள் ஒரு பெண் முடங்குவதும், ஊரிலுள்ள வேப்ப மரங்கள் அவ்வளவும் துகிலுரியப் பட்டு நிர்வாணமாக நிற்பதுவும், சீரகம் தான் ஒரு சர்வரோக நிவாரணியாகக் கருதப்பட்டு உபயோகிக்கப் படுவதும் சரியென்று என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!
ஒட்டகச் சிவிங்கி அல்லது காட்டு விலங்குகள் குட்டி போடும் போது.. சில மணி நேரங்களுக்குள் அவை நடக்க வேண்டும். இல்லாவிடின் அவை வேறு விலங்குகளின் உணவாகும் சந்தர்ப்பங்களே அதிகம்!
ஆபிரிக்க தேசமொன்றில்...சில மாணவிகள் படிக்கும் காலங்களில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிகவும் சாதாரணமானது! அத்துடன் அந்தக் குழந்தைகள்..அந்த மாணவியின் தந்தையாரின் குடும்பப் பெயரில்,, பதியப் படவும் அவர்களது சட்டத்தில் இடமுண்டு! ஒரு குழந்தை  பிறந்து மூன்றாவது நாளன்றே ..அந்த மாணவியால் வழக்கம் போல பாடசாலைக்கு வந்து தொடர்ந்து கல்வியைத் தடற முடிகின்றது!
பிரான்சில் ஒரு அரசியல் வாதியான பெண்மணியோருவர் ..குழந்தை பிறந்து மூன்றாவது நாளே பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்க முடிந்தது!
ஒரு காரணத்துக்காகத் தான் பொருளாதார நிலையில் இரு துருவங்களான இரண்டு தேசங்களிலிருந்து உதாரணங்களை எடுத்தேன்!
சில சிக்கலான பிரசவங்களைத் தவிர்த்து.....நாம் எதற்காக...பெண்களின் பிரசவங்களை...அதி உன்னத தியாகங்களாகவும் ....மிகப் பெரிய சாதனைகளாகவும் கருதுகின்றோம்?
ஒரு ஆணும் பெண்ணும்...சரி பாதியாக இணைந்து சேர்வதே குடும்பம் என்பது! அது இயற்கையானது!
நாங்கள் எமது பெண்களுக்கு மற்றைய சமூகங்களை விடவும் அதிக சலுகைகள் கொடுப்பதால் தான்...அவர்கள் மேலும்...மேலும் தங்கள் கணவர்களிடம் எதிர்பார்க்கின்றார்கள் போல உள்ளது!
இந்தக் கருத்து ஒரு விவாதத்துக்காக மட்டுமே!
எல்லோரும் தடி தண்டுகளைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரக் கூடாது!
பி.கு: நானும் இந்த விசயத்தில நல்லா நொந்து நூலாகிப் போனவன்!

ஒவ்வொருவருத்தருடைய உடம்பு வாசியும் வித்தியாசமானது...காப்பிலி பெண்கள் செக்ஸ் செய்வது மாதிரி தமிழ்ப் பெண்களால் செக்ஸ் செய்ய முடியுமா?...தவிர,நம் பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

ரோமியோ நாமே நமக்கானவற்றை வரையறுக்கிறோம் இயற்கை எவருக்கும் விதிவிலக்கல்ல. உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ஒவ்வொருவருத்தருடைய உடம்பு வாசியும் வித்தியாசமானது...காப்பிலி பெண்கள் செக்ஸ் செய்வது மாதிரி தமிழ்ப் பெண்களால் செக்ஸ் செய்ய முடியுமா?...தவிர,நம் பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்:mellow:

ரதி....காப்பிலிப் பெண்கள் படை நடத்தியதாக..இதுவரை வரலாறு இல்லை!

ஆனால்....தமிழ்ப்பெண்கள்..படை நடத்தியவர்கள்...!

மறம் கொண்டு....எதிரிகளைப் புறங்காட்டி ஓட...ஓடத் துரத்தியவர்கள்!

முதுகில் புண்பட்டு இறந்த மகனைப் போர்க்களத்தில் கண்டு...அவனுக்காகப் பாலூட்டிய முலையை அறுத்தெறிந்தவர்கள்!

அந்த வம்சத்தில் உதித்த செருக்கு...எனக்கு நிறையவே உண்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த டாக்குத்தர் மருத்துவச்சிமார் என்ன கோதாரிக்கு புருசன்மாரையும் பிள்ளைப்பெறு வாட்டுக்கு வந்து நிக்கச்சொல்லி அடம் பிடிக்கிறாங்கள் எண்டு எனக்கு விளங்கேல்லை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

உந்த டாக்குத்தர் மருத்துவச்சிமார் என்ன கோதாரிக்கு புருசன்மாரையும் பிள்ளைப்பெறு வாட்டுக்கு வந்து நிக்கச்சொல்லி அடம் பிடிக்கிறாங்கள் எண்டு எனக்கு விளங்கேல்லை.....

அடுத்ததைப் பற்றி...முடிவெடுக்கும் முன்பு....கொஞ்சம் யோசியுங்கள்...என்று சொல்லாமல் சொலவதற்காகத் தான்!:cool:

அந்த நாளையில ஐரிஷ் காரனுக்கும், வெள்ளைக்காரனுக்கும்... இந்திய பாகிஸ்தானியர்களுக்கும்... இப்படிச் செய்திருந்தால்...உலகம் இண்டைக்கு,...இருக்கிறதை விடவும்...நியாயமான இனப் பரம்பலுடன் இருந்திருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

அடுத்ததைப் பற்றி...முடிவெடுக்கும் முன்பு....கொஞ்சம் யோசியுங்கள்...என்று சொல்லாமல் சொலவதற்காகத் தான்!:cool:

அந்த நாளையில ஐரிஷ் காரனுக்கும், வெள்ளைக்காரனுக்கும்... இந்திய பாகிஸ்தானியர்களுக்கும்... இப்படிச் செய்திருந்தால்...உலகம் இண்டைக்கு,...இருக்கிறதை விடவும்...நியாயமான இனப் பரம்பலுடன் இருந்திருக்கும்!

கூடுதலாய் ஐரோப்பிய நாடுகளிலை மனுசி பிள்ளை பெறேக்கை புருசனும் பக்கத்திலை நிக்க வேணும்....அவுசிலை இல்லையோ? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

கூடுதலாய் ஐரோப்பிய நாடுகளிலை மனுசி பிள்ளை பெறேக்கை புருசனும் பக்கத்திலை நிக்க வேணும்....அவுசிலை இல்லையோ? :unsure:

ஐரோப்பாவில உள்ள நல்லது கெட்டது  ..... எல்லாம் இஞ்சையும் இருக்குது!

ஆனாலும் எனது மகள் பிறந்த போது..நான் ஐரோப்பாவில்...!

எதுக்கும் வடிவாய் ஒருக்கால் ....ஆரிட்டையும் விசாரிச்சுப் போட்டுச் சொல்லுறன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, புங்கையூரன் said:

என்னைப் பொறுத்தவரையில் என்னை ஒரு பெண்ணிய வாதியாகவோ அல்லது ஒரு ஆணிய வாதியாகவோ கருதுவதில்லை!
எனினும், பிரசவம என்பது கடுமையானது என்றும்....அந்த வலி மிகவும் தாங்கவியலாதது என்றும் எனது சமூகத்தால் எனக்குக் கூறப்பட்டது!
நாற்பது நாட்கள் வரை....பாய்த் தடுக்குகளால் மூடப்பட்ட கூட்டுக்குள் ஒரு பெண் முடங்குவதும், ஊரிலுள்ள வேப்ப மரங்கள் அவ்வளவும் துகிலுரியப் பட்டு நிர்வாணமாக நிற்பதுவும், சீரகம் தான் ஒரு சர்வரோக நிவாரணியாகக் கருதப்பட்டு உபயோகிக்கப் படுவதும் சரியென்று என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!
ஒட்டகச் சிவிங்கி அல்லது காட்டு விலங்குகள் குட்டி போடும் போது.. சில மணி நேரங்களுக்குள் அவை நடக்க வேண்டும். இல்லாவிடின் அவை வேறு விலங்குகளின் உணவாகும் சந்தர்ப்பங்களே அதிகம்!
ஆபிரிக்க தேசமொன்றில்...சில மாணவிகள் படிக்கும் காலங்களில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிகவும் சாதாரணமானது! அத்துடன் அந்தக் குழந்தைகள்..அந்த மாணவியின் தந்தையாரின் குடும்பப் பெயரில்,, பதியப் படவும் அவர்களது சட்டத்தில் இடமுண்டு! ஒரு குழந்தை  பிறந்து மூன்றாவது நாளன்றே ..அந்த மாணவியால் வழக்கம் போல பாடசாலைக்கு வந்து தொடர்ந்து கல்வியைத் தடற முடிகின்றது!
பிரான்சில் ஒரு அரசியல் வாதியான பெண்மணியோருவர் ..குழந்தை பிறந்து மூன்றாவது நாளே பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்க முடிந்தது!
ஒரு காரணத்துக்காகத் தான் பொருளாதார நிலையில் இரு துருவங்களான இரண்டு தேசங்களிலிருந்து உதாரணங்களை எடுத்தேன்!
சில சிக்கலான பிரசவங்களைத் தவிர்த்து.....நாம் எதற்காக...பெண்களின் பிரசவங்களை...அதி உன்னத தியாகங்களாகவும் ....மிகப் பெரிய சாதனைகளாகவும் கருதுகின்றோம்?
ஒரு ஆணும் பெண்ணும்...சரி பாதியாக இணைந்து சேர்வதே குடும்பம் என்பது! அது இயற்கையானது!
நாங்கள் எமது பெண்களுக்கு மற்றைய சமூகங்களை விடவும் அதிக சலுகைகள் கொடுப்பதால் தான்...அவர்கள் மேலும்...மேலும் தங்கள் கணவர்களிடம் எதிர்பார்க்கின்றார்கள் போல உள்ளது!
இந்தக் கருத்து ஒரு விவாதத்துக்காக மட்டுமே!
எல்லோரும் தடி தண்டுகளைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரக் கூடாது!
பி.கு: நானும் இந்த விசயத்தில நல்லா நொந்து நூலாகிப் போனவன்!

இதில் இரண்டு விதமான வாதம் உண்டு .....

நாம் எல்லோரும் தலையணை வைத்தே படுக்கிறோம் 
நமது பூட்டியின் பூட்டிக்கு தலையணை இருந்து இருக்குமா ?

பூட்டியின் பூட்டி தலையணை வைக்கவில்லை எனபதை காரணம் காட்டி 
இப்போ தலையனையை பறிப்பதில் என்ன அர்த்தம் இருக்க போகிறது ?

பிரவசம் என்பது ஒரு மகிமை 
அது இயற்கையாக இருக்குமிடத்து இலகு 
ஆடு குட்டி போடுகிறது ... குட்டி ஆடாகிறது 
பின்பு குட்டி .... ஒரு குட்டி போடும் ஆடாக வளர்கிறது 

நம் குழந்தைகள் அப்படி அல்ல .......
படிப்பு வேலை என்று எங்கோ எங்கோ நகர்கிறார்கள் 
மாதமாக இருக்கும்போது .... பல துயர்களுடனும் வேலைக்கு போகிறார்கள் 
இப்போ இங்கே ஒரு உதவி ஆறுதல் வார்த்தை இருக்கும்போது 
அந்த சுமை கொஞ்சம் சுகமாகிறது.

ஆப்ரிக்காவில் குழந்தை பிரவசத்தில் இறக்கும் பெண்கள் 
குழந்தைகள் எண்ணிக்கை உலகிலேயே அதிகமாக இருக்கிறது 
தப்பியதை பற்றி நாம் பேசுகிறோம் மாண்டதும் இருக்கிறது.

இறக்கும் எண்ணிக்கை குறைவான இடத்தில் ....
பராமரிப்பு கூடுதலாக இருக்கிறது .... இரண்டுக்கும் தொடர்பு இருக்கும்போது 
அங்கு சும்மா பெறுகிறார்கள் ...... இவர்களுக்குத்தான் பராமரிப்பா ?
என்பது கொஞ்சம் சிக்கலான கேள்வி. 

தன்னம்பிக்கை என்பது எல்லா இடத்திலும்தான் இருக்கிறது ..
ஒருவன் தலை மயிரில் கட்டி லொறியை இழுக்கிறான் .... அவனும்தானே 
இழுக்கிறான் என்றுவிட்டு உங்கள் வீட்டு காரி உங்கள் தலை மயிரில் ஒரு லொறியை கட்டலாமா ? 

கூடுதலான அன்பு ....
கூடுதலான பராமரிப்பு ..
அந்த சுமையை கொஞசம் குறைக்கிறது 
அவள் என்ன ரோட்டில் போகும் ஒருத்தியா ? உங்களின் எங்களின் மனைவிதானே.
அப்பன் வைத்த வேம்பை துகில் உரிந்த கையோடு ... இன்னொரு வேம்பை வைத்துவிட்டால் 
என் மகன் ... தனது மனைவியின் பிரவசத்திற்கு துகிலிரிய உதவும். 

நீருக்குள் சுவாசித்துக்கொண்டு இருந்த குழந்தை 
இப்போ சட்டெனே காற்றை சுவாசிக்க தொடங்குகிறது 
இந்த நொடி ஒரு அதிசயம் !
அதை கொஞ்சம் கவனமாக பார்ப்பதுதான் நன்று ! 
 
Maternal_mortality_ratio%2C_2000.jpg

Prevention[edit]

The death rate for women giving birth plummeted in the twentieth century. The historical level of maternal deaths is probably around 1 in 100 births.[24] Mortality rates reached very high levels in maternity institutions in the 1800s, sometimes climbing to 40 percent of birthgiving women (see Historical mortality rates of puerperal fever). At the beginning of the 1900s, maternal death rates were around 1 in 100 for live births. Currently, there are an estimated 275,000 maternal deaths each year.[25] Public health, technological and policy approaches are steps that can be taken to drastically reduce the global maternal death burden.

Four elements are essential to maternal death prevention, according to UNFPA.[3] First, prenatal care. It is recommended that expectant mothers receive at least four antenatal visits to check and monitor the health of mother and fetus. Second, skilled birth attendance with emergency backup such as doctors, nurses and midwives who have the skills to manage normal deliveries and recognize the onset of complications. Third, emergency obstetric care to address the major causes of maternal death which are hemorrhage, sepsis, unsafe abortion, hypertensive disorders and obstructed labour. Lastly, postnatal care which is the six weeks following delivery. During this time bleeding, sepsis and hypertensive disorders can occur and newborns are extremely vulnerable in the immediate aftermath of birth. Therefore, follow-up visits by a health worker to assess the health of both mother and child in the postnatal period is strongly recommended.

https://en.wikipedia.org/wiki/Maternal_death

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.