Jump to content

இளையராஜாவின் இந்த 9 பாடல்களில் ஒன்றையாவது மிஸ் செய்திருப்பீர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா

 “இசை ஒரு பெருங்கடல்.. நான் செய்தது, ஒரு சிப்பியில் கொஞ்சம் அள்ளியது மட்டுமே” - இது இளையராஜா சொன்னது. இவர் சிப்பியில் அள்ளியவற்றிலேயே நாம் ரசிக்காமல் விட்டது எத்தனை எத்தனை.  

அப்படியான சில ‘Rare Raja Songs’ பற்றி அவ்வப்போது பார்க்கலாம். இதோ ஒரு, ஒன்பது பாடல்கள். இவற்றில் ஒரு பாடலையாவது ‘அட.. இப்படி ஒரு பாட்டா.. எப்படி மிஸ் பண்ணினோம்!’ என்று நினைப்பீர்கள். சில பாட்டுகள், ‘ப்ச்.. இதெல்லாம் எனக்குத் தெரியும்பா’ என்றும் நினைப்பீர்கள். 

1. வானம்பாடி கூடுதேடும்.. இந்த நேரம் என்ன பாடும்? 

‘முஸ்தபா முஸ்தபா’ ரக கல்லூரிப்பாடல். 1984ல் வெளியான தலையணை மந்திரம் என்ற படத்தில், இளையராஜா இசையில், இளையராஜாவே பாடிய பாடல். பாண்டியன் நடித்திருக்கிறார். கண்ணைமூடிக் கொண்டு கேட்க வேண்டிய பாடல். ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் ‘கண்ணை மூடிட்டுக் கேட்கலாம்ப்பா’ ரகம்தான். ஆனால், இங்கே எந்த அர்த்தம் என்பது வீடியோ பார்த்தால் தெரியும். அருமையான மெலடி.  ‘முகவரி வாங்கிக் கொண்டோம்.. முகங்களைத் தாண்டிச் சென்றோம்’ என்ற அருமையான வரிகள் எல்லாம் உண்டு. சரணத்தில் ராஜாவின் ரமணமாலையின் ‘சதா சதா உனை நினைந்து நினைந்து ’ பாடலை நினைவு படுத்தும் மெட்டு.  இரண்டாவது இடையிசையின் புல்லாங்குழல்.. டிபிகல் ராஜா ட்ரீட்!

 

2.   நீர்வீழ்ச்சி  தீ முட்டுதே.. தீகூட குளிர்காயுதே.. 

’என்னது.. இந்த மெட்டுல எத்தனை பாட்டுதான் இருக்கு!’ என்று உங்களில் பெரும்பாலோர் ஆச்சர்யப்படப்போவது உறுதி. ஆம்.. ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடலின் அதே  மெட்டு. அறிவுமதி வரிகள். அதெப்படி ஒரே மெட்டு ரெண்டு படத்துக்கு என்றால், மலையாள தும்பி வா’ பாடல் எல்லார் மனசையும் கொள்ளையடிக்க ‘அதே மெட்டுல போடுங்க’ என்று கேட்டிருப்பார்கள் போல. அப்படி டிராவலான மெட்டு, தெலுங்கில் போடப்படுகிறது. அந்தப்படம், 1988ல் கண்ணே கலைமானே என்ற பெயரில்  டப்பிங் ஆக, நமக்கு லக்கி ப்ரைஸாக...  அதே மெட்டில்   இன்னொரு பாட்டு.  இதுவும் எஸ்.ஜானகியின் மெஸ்மரிசக் குரல்தான். அறிவுமதியின் வரிகள் அத்தனை அழகு. இடையிசைகளில் அதே சங்கத்தில் பாடாத பாடலின் வாசனைதான். இந்தப் பாடலின் மெட்டுக்கு, எத்தனை விதமாகப் போட்டாலும் கேட்கலாம்தானே.. அந்த தைரியம்! ம்ம்ம்.. நடத்துங்க ராஜா.. நடத்துங்க!  

3. தூரத்தில் நான் கண்ட உன்முகம்

நிழல்கள் (1980) படத்தில், இது ஒரு பொன்மாலைப் பொழுது, மடைதிறந்து, பூங்கதவே பாடல்கள்தான் ஹிட். ஆனால் இது, ராஜா ரசிகர்கள் பலரின் ஃபேவரைட்.   என்ன ஒரு பாடல் இது! எஸ்.ஜானகிக்கு குரல் அப்படியே இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்க வைக்கும் ஆரம்பம்.  பல்லவி முடிந்து, முதல் இடையிசையில் வயலின்கள் விளையாட்டு. தொடர்ந்து கோரஸ். வீணை. இசைக்கோர்ப்பு என்பது என்னவென்று பாடமே எடுக்கலாம். சரணத்தில் ஜானகியின் ஆலாப், கண்மூடிக் கேட்டால் கண்ணீரே வரும். ‘மீரா பாடும் இந்தப் பாடலைக் கேட்டு வரவில்லை என்றால்.. என்னடா கண்ணன் நீ’ என்று கேட்கத் தோன்றும். இரண்டாம் இடையிசை கொஞ்சம் பதற்றமான ஸ்பீட் எடுத்து, மீண்டும் வயலினில் அமைதியுறும். இரண்டாம் சரணம்.. வேறு மெட்டு. எங்கெங்கோ திரிந்து, அமைதியாகி... வேற லெவல் பாட்டு பாஸ் இது!

4. வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள்

ராஜாவும், எஸ்.பி.பி-யும் சேர்ந்து பாடிய பாடல். பாட்டு பாடவா (1995) படம். இளையராஜாவின் குரல்...   ரகுமானுக்கு! ஆம், நடிகர் ரகுமான் பாஸ்.  அப்ப, எஸ்.பி.பி.குரல் யாருக்கு என்று தெரியாதவர்கள் கேட்கலாம். எஸ்.பி.பிக்குதான். அவரும், ரகுமானும் இணைந்து நடித்த படம். பாடலின் சூழலில் ராஜாவுக்கும், எஸ்.பி.பிக்கும் போட்டி இருக்கும். ஆனால், பாடலில் இருவருக்குமான நட்பு தெரியும். அப்படி ஒரு அசால்டாக, தோழமையாக, நேர்த்தியாக பாடியிருப்பார்கள் இருவரும்.  இசையைப்   பிரிக்கும், டெக்னிகல் விற்பன்னர்கள் இருந்தால்.. முதல் சரணத்தின் தபேலாவை பிரித்துக் கேளுங்கள். பித்துப் பிடிக்க வைக்கும்.  கடைசி பல்லவியின்போது, ‘வில..கிடு’ என்றொரு சங்கதி போடுவார் எஸ்.பி.பி. ப்ச்.. தெய்வமே!     

5.  நீலவேணி அம்மா நீலவேணி

 சாமி போட்ட முடிச்சு 1991. வந்த புதிதில், டீக்கடையெங்கும் கேட்டுக் கொண்டிருந்த பாடல். மலேசியா வாசுதேவன், சித்ரா பாடிய பாடல்.  ஒரே நேர்கோட்டில் செல்லும் இசைதான். பல்லவி ஒரு ஜானரும், சரணம் ஒரு ஜானருமாக இருக்கும். பல்லவி  பெப்பியாக இருக்கும். சரணத்தில் நல்ல மெலடியாக மாறும். இரண்டாம் சரணத்தில் மலேசியாவின் ஆளுமையை நிச்சயம் ரசிக்க முடியும். நல்லதொரு மெட்டு.   

 

6. மங்கை நீ மாங்கனி

இன்னிசை மழை என்றொரு படம். 1992ல் வெளிவந்தது. ஷோபா சந்திரசேகர் இயக்கம். அந்தப் படத்தின் பாடல்தான் இது. கேசட் வாங்கி, முதல்முறை கேட்டபோது, சரணத்தின்போது கத்தியது இன்னும்  ஞாபகம் இருக்கிறது. காரணம்; எஸ்.என். சுரேந்தர் பல்லவியில் ஆரம்பிக்கும். இடையிசை முடிந்து  சரணத்திலிருந்து ராஜா குரல்! தபேலா விளையாடும் இன்னொரு பாடல்.  சரணத்தின் இரண்டிரண்டு வரிகளுக்கும் தபேலா இசை மாறும். கடைசி இரண்டு வரிகளில் மெட்டு அருவி போல விழும்.  இரண்டாவது சரணத்தில் ‘பா... மாலை சூட்டி’ சங்கதியும், ‘எங்கேயும் உன் தோற்றம்’ பாடும்போது ஒரு மயக்கமும் ஸ்பெஷலாக இருக்கும். கேட்டுப் பாருங்கள். அதே போல, ‘ தாத்ததா.. ராத்ததா... தராரா.. தராரா....’ என்று வரும்  பாடலின் எண்டிங்.. என்னமோ சொல்லுவாங்களே.. ஆங்... சான்ஸே இல்ல!   

7. தாலாட்டும் பூங்காற்று

கோபுர வாசலிலே (1991) படத்தில் ப்ரியசகி, தேவதை போலொரு பாட்டெல்லாம் கேட்டுத் தீர்த்திருப்பீர்கள். இந்தப் பாடல், ஒருபடி அதிகமாக  கொண்டாடப்படவேண்டிய பாடல்.  ராஜா ரசிகர்களின் ஃபேவரைட். முன்னரே சொன்னது போல புல்லாங்குழல் துவக்கத்திலேயே இழுக்கும். எஸ்.ஜானகியின் குரல். இடையிசையில் வயலின் விளையாடும். சரணம் ஆரம்பித்ததும் தபேலா. ஒவ்வொரு வரி முடிவிலும் புல்லாங்குழல். அங்கங்கே மாறும் தபேலா இசை. கூடவே வரும் வயலின். சரணம் முடியும்போது, தாளக்கட்டு மாறி.. நின்று தொடரும் தபேலா.   பாடலின்போது எந்த இசைக்கருவியை எங்கே நிறுத்த வேண்டுமென்பது கனகச்சிதமாய் தெரிந்தவர்தானே ராஜா. இதில் அதை ரசிக்கலாம். இரண்டாம் இடையிசை முடிந்து, சரணம் தொடங்கும் முன் தபேலா இசை.. டக்கென்று ஆரம்பிக்கும். அட்டகாசம் பண்ணியிருப்பார்.

8. மாதுளங்கனியே.. நல்ல மலர்வனக்கிளியே.... 
 
இதுவும் சாமி போட்ட முடிச்சு -தான். இளையராஜா - எஸ்.ஜானகி குரல்கள். இன்னொரு ‘கண்ணை மூடிக்கொண்டு கேட்கலாம்பா’ பாடல். துள்ளலாக ஆரம்பிக்கும் இசை முடிந்ததும், ஆரம்பிக்கும் ராஜா குரல். தபேலா இசை கலக்க, முதல் இடையிசையில் புல்லாங்குழல் வசீகரிக்கும். சரணத்தின் மெட்டும், தபேலா விளையாட்டும் இன்னும் வசீகரம். எஸ்.ஜானகி, சிரிப்பு, ஆலாப் என்று புகுந்து விளையாடும் பாடல்.   

 

9. ஏஞ்சல் ஆடும் ஏஞ்சல்   

இந்த லிஸ்டின், முதல் பாடலை, பெரும்பாலானோர்  கேட்டிருக்க மாட்டீர்கள். அதே போல, பெரும்பாலானோர் கேட்காத இன்னொரு செம சர்ப்ரைஸ் சாங் கடைசியாக இருக்க வேண்டும் என்று இதை வைத்திருந்தேன்.  1986ல் வெளியான நானும் ஒரு தொழிலாளி படப்பாடல். முதன்முறை நான் கேட்டபோதே, ‘எப்டி இதை மிஸ் பண்ணினேன்’ என்று நினைத்த பாடல். அந்தப் புல்லாங்குழல்  ஆரம்பம், நிச்சயம் உங்களை இழுக்கும். வளையோசை, பனிவிழும், இந்தப்பாடல் என்று புல்லாங்குழல் ஆரம்பத்தில் இழுக்கும் பாடல்கள் என்று ஒரு லிஸ்டே போடலாம். பி.சுசீலா குரல். அப்படி ஒரு ஸ்லோ மெலடி.  1.12ல் துவங்கும் சாக்ஸஃபோன்  இடையிசை   உங்களை மயக்கவில்லை என்றால்.... இல்லை என்றால் என்ன.. மயக்கும். கேட்டுப்பாருங்கள். அதைத் தொடர்ந்து வரும் ஜலதரங்க பாணி  கீபோர்ட் இசையும்.. சரணத்தின் மெட்டும்.. ‘ ராஜா சார்..  ஏன் இப்படி மயக்கறீங்க’ என்று கேட்க வைக்கும்.  உடனே டவுன்லோட் பண்ணி, ஃபேவரைட் லிஸ்டில் வைக்கச் சொல்லும் பாடல். 

வெளிநாடுகளிலேயே இவர் பாடலை யாரென்று தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை பாடல்கள் போட்டால் என்னதான் செய்வது!  முன்னரே சொன்னது போல, பெரும்பாலானவர்கள் நிச்சயம் ஒரு பாடலையாவது மிஸ் செய்திருப்பீர்கள். ஹானஸ்டாக கமெண்டில், இந்த லிஸ்டில் எந்தப் பாடலை முதன்முறை கேட்டீர்கள் என்று சொல்லுங்களேன்.. ப்ளீஸ்!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இவைகளையும் கேட்டுப் பாருங்கள்...

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஜீவன் சிவா said:

 

நீ பாதி நான் பாதி படத்துக்கு இசை மரகதமணி 

முனி அண்ணை கடைசியாக இணைத்த இருபாடல்களுமே மரகதமணியின் பாடல்கள்.

இதுக்கு இளையராஜாவிடம் ரைட்ஸ் இல்லை.:grin:

ஆ... மாத்தீட்டாங்களோ...

அண்ணை அலேற்... நீங்க பாஸ்..

:grin: 

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

ஆ... மாத்தீட்டாங்களோ...

அண்ணை அலேற்... நீங்க பாஸ்..

:grin: 

யோவ் எழுதினது தப்பு என்றுதானே எடிட் பன்னினேன் - இப்ப எடிட் பண்ணியதை வைச்சு நக்கல் அடிப்பது கொஞ்சம் ஓவர் முனி அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

யோவ் எழுதினது தப்பு என்றுதானே எடிட் பன்னினேன் - இப்ப எடிட் பண்ணியதை வைச்சு நக்கல் அடிப்பது கொஞ்சம் ஓவர் முனி அண்ணை.

 
 
Nee Pathi Naan Pathi
Directed by Vasanth
Produced by Rajam Balachander
Pushpa Kandaswamy
Written by Vasanth
Starring Rahman
Gouthami
Heera
Music by Maragadha Mani
Cinematography R. Ganesh
Edited by Ganesh Kumar
Production
company
Distributed by Kavithalayaa Productions
Release date
12 September 1991
Country India
Language Tamil

தெலுங்கு இசையமைப்பாளர் M M கீரவாணி, தமிழில் மரகதமணி என்னும் பெயரில் இசையமைத்தார்.

ஆனால் இந்த லிங்கை youtube ல் பார்த்தால், upload பண்ணியவர் Nee pathi naan pathi kanne hit of ilayaraja என்றே போட்டிருக்கிறார்.

அதை கண்டு பிடிப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு அறிவித்திருந்தோமே. 

குருநாதா, உங்களுக்கு தான் அது.... :cool:

அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் பெயர் முகவரி அறிவித்தால், பரிசு அனுப்பி வைக்கப் படும். :grin: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.