Jump to content

அறிவித்தல்: யாழ் இணையம் 19ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்

Recommended Posts

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை தொடர்ந்தும் வெளிக்கொணர்ந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்த கள உறுப்பினர்களுக்கு நன்றிகள். மேலும் பல சுய ஆக்கங்கள் விரைவில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மேலும் பல சுயமான ஆக்கங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

25 மார்ச் வரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 28 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
On 2017-03-24 at 7:56 PM, தமிழ் சிறி said:

ஹலோ...  நியானி, :)
நிழலி...  தனது பதிவை.... இன்னும் இணைக்கவில்லை. :rolleyes:
இனியும்.... இணைக்காவிடில், 
வாற... பஞ்சாயத்து கூட்டத்தில்....  :119_busts_in_silhouette:
இதனைப் பற்றி...... காரசாரமாக, விவாதித்து... :47_tired_face:
கரும் புள்ளி, செம்புள்ளி  குத்தி....:70_poop:
ஊரின்... நடுவே...... அம்மணமாக  ஓட வைப்போம். :8_laughing:

அந்தப் பதிவின் இணைப்பு இது: :110_writing_hand:

இதை யாழின் 19 ஆவது அகவைக்காக நான் எழுத தொடங்கவில்லை. என் இரண்டாவது பயணத்தின் போது  நான் தாயகத்தில் பார்த்து உணர்ந்து கொண்ட சில விடயங்களை பகிர்வதற்காகவே எழுத தொடங்கினேன். இதன் இணைப்பை இங்கு இணைக்காமல் தவிர்த்தது, யாழின் 19 ஆம் அகவைக்காக மினக்கெட்டு எழுதும் அன்பான உறவுகளின் முயற்சிகளை பாதிக்கும் எம கருதியதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நிழலி உங்கள் பதிவு எப்படி மற்றவர்களில் முயற்சிகளைப் பாதிக்கும்.???? ஆனாலும் உங்கள் நேர்மை பிடித்திருக்கிறது.  மற்றவர் ஆசைப்பட்டுவிட்டார்கள் என்பதற்காக உங்கள் பதிவை கொண்டுவந்து இணைக்கவில்லை.

Link to comment
Share on other sites

11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் நிழலி உங்கள் பதிவு எப்படி மற்றவர்களில் முயற்சிகளைப் பாதிக்கும்.????

ஓம், பாதிக்கும் என்ற வார்த்தை தவறான வார்த்தை. மற்றவர்களின் முயற்சிகளை மலினப்படுத்தும் என்று எழுதி இருக்க வேண்டும். தவறான சொல்லை பயன்படுத்தியமைக்காக வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலினப்படுத்தும் என்பதும் தவறுதான். அந்த அளவுக்கு உங்கள் பதிவை நீங்கள் இறக்கவும் தேவையில்லை. நீங்கள் என்ன எழுதத் தெரியாதவரா?? அது தன்பாட்டில் தொடர புதிய ஒரு பதிவை யாழ் அகவைக்காக எழுதிவிடுங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

இதை யாழின் 19 ஆவது அகவைக்காக நான் எழுத தொடங்கவில்லை. என் இரண்டாவது பயணத்தின் போது  நான் தாயகத்தில் பார்த்து உணர்ந்து கொண்ட சில விடயங்களை பகிர்வதற்காகவே எழுத தொடங்கினேன். இதன் இணைப்பை இங்கு இணைக்காமல் தவிர்த்தது, யாழின் 19 ஆம் அகவைக்காக மினக்கெட்டு எழுதும் அன்பான உறவுகளின் முயற்சிகளை பாதிக்கும் எம கருதியதால்.

உங்களது நன் நோக்கத்தை.... தவறாக புரிந்து கொண்டமைக்கு, மன்னிக்கவும் நிழலி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/03/2017 at 10:44 AM, நியானி said:

மேலும் பல சுயமான ஆக்கங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

கால அவகாசத்தை நீடித்தமைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை தொடர்ந்தும் வெளிக்கொணர்ந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்த கள உறுப்பினர்களுக்கு நன்றிகள். மேலும் பல சுய ஆக்கங்கள் விரைவில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

28 மார்ச் வரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 34 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கால போவானும்... சுய ஆக்கம் எழுதக்  கூடியவர். 
இன்னும்... எழுதாமல் இருப்பதை பார்த்தால், 
அவருக்கு,  "தேன் நிலவு"  இன்னும் முடியவில்லைப் போலுள்ளது. :grin:  :D:

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை தொடர்ந்தும் வெளிக்கொணர்ந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்த கள உறுப்பினர்களுக்கு நன்றிகள். மேலும் பல சுய ஆக்கங்கள் விரைவில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

01 ஏப்ரல் வரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 38 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு.... கீழே உள்ள பதிவு, சுய ஆக்கம் பகுதியில்... 
இணைக்க தகுதி உள்ளதாக இருந்தால்... அங்கு நகர்த்தி விடுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

.

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

இந்த கோரிக்கையை  ஏற்று இங்கு தமது சுய ஆக்கங்களை  வைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இதில் பலரது திறமைகள்  வெளிக்கொணரப்பட்டன

இதுவரை எழுதாத பலரும் எழுதி அசத்தியிருந்தனர்

அதற்காக யாழுக்கும் அதன்  நிர்வாகத்துக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...

இதில் முடிந்தால் ஒவ்வொருவரும் உங்களது ஆக்கத்தின் போதான ஏக்கங்கள்

கள  உறவுகளின் ஆதரவு

மற்றும்  பெறுபேறுகள் சார்ந்து எழுதினால்  நாம் எம்மை 

எமது எழுத்துக்கள் சார்ந்த சுயவிமர்சனப்படுத்திக்கொள்ள உதவும்.

இதில் 

1

2

3

என மூவரை தெரிவு செய்து பாராட்டலாம் என்பது எனது விருப்பம்.

உங்கள் கருத்தையும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சுய ஆக்கங்கள் எழுதி எங்களையெல்லாம் குஷிப்படுத்திய் அனைவருக்கும் நன்றி.  திருவிழா மாதிரி  வருடத்திற்கு ஒரு தடவை என்றில்லாமல் தொடர்ந்தும் சுய ஆக்கங்களை எல்லோரும் படைப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

விசுகு ஐயா,

ஆக்கங்களைப் படைத்தவர்களை ஊக்கப்படுத்தி விருப்பப் புள்ளியும் கருத்துக்கள் மூலம் பாராட்டியும் விமர்சிப்பதுமே போதும் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் 19 நிறைவை ஒட்டி,  சுய ஆக்கங்களை இணைக்கும் படி கள உறவுகளிடம் கோரிய, 
கடந்த 45 நாட்களில்.... உறவுகளிடம் இருந்து 53 சுய ஆக்கங்கள்... புற்றீசல் போல் கிளம்பியதை, உண்மையில்  நான் எதிர் பார்க்கவில்லை. அதாவது சராசரி தினமும் ஒரு புதிய  பதிவுக்கு மேல் பதிந்து...  அசத்தியதை  பார்க்க  மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. :)

சுய ஆக்கங்களை.... இணைக்காதவர்கள்  கூட, அங்குள்ள பதிவுகளை வாசித்து... கருத்தையும் பகிர்ந்து, ஊக்கத்தையும் கொடுத்த உற்சாகம் உண்மையில் மனதை நெகிழ வைத்து  விட்டது. :love:  நன்றி உறவுகளே..... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

 கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சுய ஆக்கங்கள் எழுதி எங்களையெல்லாம் குஷிப்படுத்திய் அனைவருக்கும் நன்றி.  திருவிழா மாதிரி  வருடத்திற்கு ஒரு தடவை என்றில்லாமல் தொடர்ந்தும் சுய ஆக்கங்களை எல்லோரும் படைப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

விசுகு ஐயா,

ஆக்கங்களைப் படைத்தவர்களை ஊக்கப்படுத்தி விருப்பப் புள்ளியும் கருத்துக்கள் மூலம் பாராட்டியும் விமர்சிப்பதுமே போதும் என்று நினைக்கின்றேன்.

உண்மைதான்

ஆனால் இதில் ஒரு சிலரது திறமைகள் 

நாம் அறியாததாக 

ஏன்  அவர்களே அறியாததாக இருந்திருக்கின்றன

எனவே அவர்களை வெளிக்கொணர்தலை  அல்லது இனம் காட்டுதலை 

அடுத்தபடிக்கு நகர்த்த இந்த தெரிவு உதவலாம் என நினைக்கின்றேன்

யாழின் நோக்கமும் அது தானே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரப்படுத்தல் என்று தொடங்கினால் போரரட்டம் தொடங்கும்.

ஒவ்வொரு திரியின் போதும் பாரபட்சமின்றி நேரங்கள் கிடைக்கும் போது கருத்துக்களையும் ஐந்தே ஐந்து பச்சைகளை வைத்து தடுமாறி தடுமாறி பச்சைப் புள்ளிகளை வழங்கி உற்சாகப்படுத்தி ஆதரவுகளை வழங்கியதை பார்த்த போது நீண்ட நாட்களின் பின் எல்லோரும் யாழ் இணையத்துக்காக ஒன்றாக கை கோர்த்திருப்பதைக் காண முடிந்தது.

இந்த எண்ணக் கருவை விதைத்த போது மோகனோ மற்றும் பொறுப்பாளர்களோ இந்த அளவுக்கு வெற்றி பெறும் என எண்ணியிருக்க மாட்டார்கள்.

இங்கே ரொம்ப முக்கியமாக எல்லோரும் பார்க்க வேண்டியதென்னவென்றால் 

கடந்த கால திரிகளில் வெட்டு கொத்து கடையைப் பூட்டு என்று இருந்த நிலைமை முற்று முழுதாக ஆயுதங்கள் இல்லாமல் வெறும் பேனாவுடனே ஒற்றுமையாக பயணித்திருக்கிறோம்.
தொடர்ந்தும் பயணிப்போம்.

Link to comment
Share on other sites

பலர் பங்களித்து இருக்கின்றார்கள்.

நானும் முடியுமான அளவு அனைத்து ஆக்கங்களுக்கும் தேடித்தேடி பச்சைகளை குத்தினேன். மொபைலூடு பார்ப்பதால் ஒன்றும் எழுதமுடியவில்லை. குருஜியின் துருச்சாமியும், கிருபனின் இருட்டடியும் வாசிப்பதற்கு பரபரப்பாய் இருந்தது.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது படைப்புக்கும் சக படைப்பாளிகளின் படைப்புக்கும்  பச்சை புள்ளிகள் வழங்கியும்,கருத்துகள் எழுதியும் ,வாசித்தமைக்கும் சகல உறவுகளுக்கும் நன்றிகள்

5 hours ago, ஈழப்பிரியன் said:

வெறும் பேனாவுடனே ஒற்றுமையாக பயணித்திருக்கிறோம்.
தொடர்ந்தும் பயணிப்போம்.

சகிக்க முடியவில்லையே   இவ்வளவு நல்லவனாகவா இருந்திருக்கிறோம்:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

.

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

இந்த கோரிக்கையை  ஏற்று இங்கு தமது சுய ஆக்கங்களை  வைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இதில் பலரது திறமைகள்  வெளிக்கொணரப்பட்டன

இதுவரை எழுதாத பலரும் எழுதி அசத்தியிருந்தனர்

அதற்காக யாழுக்கும் அதன்  நிர்வாகத்துக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...

இதில் முடிந்தால் ஒவ்வொருவரும் உங்களது ஆக்கத்தின் போதான ஏக்கங்கள்

கள  உறவுகளின் ஆதரவு

மற்றும்  பெறுபேறுகள் சார்ந்து எழுதினால்  நாம் எம்மை 

எமது எழுத்துக்கள் சார்ந்த சுயவிமர்சனப்படுத்திக்கொள்ள உதவும்.

இதில் 

1

2

3

என மூவரை தெரிவு செய்து பாராட்டலாம் என்பது எனது விருப்பம்.

உங்கள் கருத்தையும் எழுதுங்கள்.

இன்றைய காலகட்டத்தில் என்னைப்பொறுத்தவரைக்கும் இவ்வளவு சுயசரிதைகளும்,கவிதைகளும்,கதைகளும்  வந்ததே பெரிய புண்ணியம் என நான் நினைக்கின்றேன்.

அதிலும் முகநூல்/ரிவிட்டர் மற்றும் ஏனைய போட்டிகளுக்கு மத்தியில் யாழ்களமும் சரிசமனாக நிற்கும் என நினைக்கின்றேன்.

அது இனிவரும் காலங்களை பொறுத்தது.

யாழ்களத்தில் ஒருசில தரப்படுத்தலின் மூலம் பல உறவுகள் வெளியில் நிற்கின்றார்கள்.

அந்த வடிகட்டிய நிலமை இனியும் வேண்டாம் என நினைக்கின்றேன்.:(

முதலில் நான் தமிழன்.:)
திரிகளை பொறுத்து என் கருத்தாடல் இருக்கும்.
இதுதான் எனது யாழ்கள கொள்கை.
:cool:

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 53 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து பச்சைப்புள்ளிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

"யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 53 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

நன்றி.

நியானி (யாழ் இணைய நிர்வாகம் சார்பாக)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 16.4.2017 at 5:08 PM, நியானி said:

"யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 53 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

நன்றி.

நியானி (யாழ் இணைய நிர்வாகம் சார்பாக)

யாழிணையத்தின் 19வது அகவைநிறைவுக்கான ஆக்கங்களைக் கோரியபோது எழுதவேண்டும் என்று எண்ணினாலும், காலம் கடந்துவிடக் காலத்தை நீடித்துக் களத்திற்கு  படைப்புகளை உள்வாங்கிய களநிர்வாகத்தினருக்கும்,  களத்திலே ஒரு ஆக்கம் பதிவாகியதும் படித்து அதற்குப் பச்சைப்புள்ளிகளை வழங்கி ஊக்கப்படுத்தியதோடு, உற்சாகத்தோடும் களஉறவுகள் செயற்பட்டவிதம் யாழிணையத்தின் வெற்றிகரமான நகர்வுக்குக் கிடைத்த பரிசென்றால் மிகையன்று. யாருடை ய படைப்பாயினும் அதற்குப்பொருத்தமான படங்களை இணைத்தல், கருத்துகளால் மெருகூட்டுதல், புள்ளிகளை வழங்குதல் என்று படைப்பாளியாகவும், வாசகனாகவும், களஉறுப்பினராகவும் செயற்பட்டவிதம் யாழிணையக்குடும்பத்தின் கூடுதல் பெருமைக்குரியதாகிறது. குறித்துரைத்த காலப்பகுதியில் பல்வேறுவிதமான கருக்களோடுகூடிய 53 படைப்புகளை யாழிணையம் வெளிக்கொணர்ந்திருப்பதானது வாசகனைப் படைப்பாளியாக்கும் பரிமாணத்துக்குள் கொண்டுசென்றமை இன்னொரு பாய்ச்சலாகும். நின்றுநிலைத்துத் தொடர்கநின்பணி. 

இவ்வேளையில் எனது ஆக்கத்தையும் வாசித்துக் கருத்தெழுதிப் பச்சைப்புள்ளிகளை வழங்கியோர், படித்துச்சுவைத்தோரென்று அனைவருக்கும் எனது நன்றியைப் பகிர்வதில் நிறைவடைகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 01/05/2017 at 9:52 PM, nochchi said:

இதனை மீண்டும் வாசிக்க... பெருமையாக உள்ளது, நொச்சி.
சுவி, குறிப்பிட்டது போல்... இருக்கும், ஐந்தை வைத்து..... ஆருக்குப் போடுவது என்ற திண்டாட்டம்.
கிருபன், குறிப்பிட்டது போல்... இது ஒரு திருவிழாவாக இல்லாமல், அனைவரும் அவ்வப் போது.. சொந்த ஆக்கங்களை இணைக்க வேண்டும். என்ற கருத்துகள்.. என் மனதில், பசுமரத்தாணி போல் பதிந்து விட்ட வசனங்கள். 

அதற்கிடையில்..... தும்பளையானின்,  "கலைஞன் மற்றும் அவுஸ் கள உறவுகளுடனான எனது சந்திப்பு" என்ற திரி ஒரு பக்கம் ஓட.... "திக்கு முக்காடி" போய்விட்டோம். அதிலும்... திடீரென்று  அவுஸ் நண்பர்களின் புகைப்படங்களை பிரசுரித்த  போது.... வந்த,  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  அந்த நேரம்... அதற்கு கருத்து உடனடியாகவே எழுதவில்லை என்ற, கவலை.... என்னை, இன்றும் யோசிக்க வைக்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.