Jump to content

அமெரிக்காவின் பெருமையை ஆஸ்கரில் பறக்கவிட்ட அதிபர் ட்ரம்ப்! #Oscars2017


Recommended Posts

அமெரிக்காவின் பெருமையை ஆஸ்கரில் பறக்கவிட்ட அதிபர் ட்ரம்ப்! #Oscars2017

ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படங்கள்

திரைப்படத் துறையில் மிக உயரிய விருதுகளில் குறிப்பிடத்தக்கது ஆஸ்கர் விருது. இந்த விருது ஒருவருக்குக் கிடைத்து, அதனை அவர் வாங்க வராமல் இருந்தால் எப்படி இருக்கும்? 'அடப்பாவமே, இப்படி ஒரு சான்ஸ் கிடைத்தும் அதனை வாங்க வராம ஏன் இருக்கணும்னு' நாம யோசிப்போம்ல. ஆனால், சிரியா நாட்டைச்சேர்ந்த ஒளிப்பதிவாளர் காலித் கதீப்தான் அந்த துர்பாக்கியசாலி. விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்க அவர் காரணம் அல்ல. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் காரணம். 'என்னது, டிரம்ப்பா?' என நீங்கள் கேட்டால் உங்கள் கேள்விக்கு 'ஆம்' என்பதே பதிலாக இருக்கும். 

சிரியா உள்பட ஏழு முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் குடியேறத் தடை விதிக்கும்விதமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் ஆணை பிறப்பித்தார். சிரியா தவிர ஈரான், ஈராக், லிபியா. சோமாலியா, ஏமன், சூடான் ஆகிய நாடுகளும் அடங்கும். இந்த நாடுகளில் வசிக்கும் மக்கள், அமெரிக்காவுக்கு அகதிகளாகவும், பயணிகளாகவும் வரத் தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இந்தத் தடை உத்தரவை எதிர்த்து, அமெரிக்கர்களும், மற்ற நாட்டு மக்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் இந்தக் காரணங்களாலேயே சிரியா ஒளிப்பதிவாளரின் அமெரிக்க வருகையைத் தடுத்துள்ளது. 

ஆஸ்கர் அகாடமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த 21 வயதான சிரியாவின் காலித் என்ற ஒளிப்பதிவாளரின் பாஸ்போட்டை அமெரிக்க குடியேற்ற மையம் தடை செய்துள்ளது. சிரியா நாட்டில் நடக்கும் போரினால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் தன்னார்வலர்களைப் பற்றிய 40 நிமிட ஆவணப்படத்துக்கு காலித் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். கடந்த சனிக்கிழமை (25.02.2017) அன்று துருக்கி ஏர்வேஸ் விமானம் மூலம் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பயணம் செய்ய அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால், அமெரிக்க அதிபரின் தடை அறிவிப்பு நாடுகளில் சிரியாவும் உள்ளதால், அவரால் அமெரிக்கா செல்ல முடியாமல் போயிற்று.

கதீப்

அமெரிக்க அதிகாரிகள் காலித் கதீப்-க்கு தடை விதித்தனர். அவரின் பாஸ்போர்ட், டிரம்ப் ஆணைக்கிணங்க தடை செய்யப்பட்டது. இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரி கிலியன் கிரிஸ்டென்சன் கூறுகையில், "அமெரிக்காவுக்கு பயணம் செய்யத் தகுந்த ஆதாரங்களையும், ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இஸ்லாமிய நாடுகளில் இருந்து ஒருவர் அமெரிக்கா செல்ல முடியும்” என்றார். 

கதீப் பணியாற்றிய படம் ஒயிட் ஹெல்மெட் (White helmet), சிறந்த ஆவணப்படம் என்ற விருந்துக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. சொல்லி அடித்தது போன்று அந்த படம்தான் விருதையும் தட்டிச் சென்றது.  ஆனால், கதீப்பால் விழாவுக்குச் செல்ல முடியவில்லை. இந்த ஆவணப்படம் சிரியா போரில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் தன்னார்வலர்களைப் பற்றி தெளிவாகச் சித்தரித்துள்ளது.

ஆஸ்கர் விருது விழாவுக்கு கதீப் செல்வதற்காக ஹாலிவுட்டில் இருக்கும் பிரபலங்கள் பலர் அவருக்கு விசா எடுக்க உதவியுள்ளனர். என்றாலும் துருக்கி ஏர்வேஸ் அதிகாரிகள் அவரின் பாஸ்போட்டை முடக்கி விட்டனர். இந்தப் பிரச்னை உலக திரைப்பட கலைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கதீப் ட்விட்டர் பக்கம்

இதேபோல், அயல்மொழி படத்திற்கான விருது ’சேல்ஸ்மேன்’ திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ஃபர்ஹாடி, இந்த விழாவிற்கு வராமல் புறக்கணித்தார். இதற்கும் டிரம்ப்-ன்  தடை உத்தரவுதான் காரணம். "டிரம்ப்-ன் இந்தத் தடை உத்தரவு மனித குலத்துக்கு எதிரானது. " என்று கூறி இருக்கிறார் ஃபர்ஹாடி

 

டிரம்ப்பின் இந்தச் செயல், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்ப்பின் இந்த தடை உத்தரவால் திறமைசாலிகள் தங்களுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. டிரம்ப்-க்கு எதிராக இனவெறி குற்றச்சாட்டு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் பல நேரங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பது மட்டும் உறுதி. காலித் கதீப் என்ற திறமையான ஒரு ஒளிப்பதிவாளரின் அங்கீகாரம், டிரம்ப் உத்தரவால் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது. கதீப் எங்கிருந்தாலும் அவரது திறமையை யாராலும் மறைத்து விட முடியாது. எல்லாப் புகழும், திறமைக்கே... 

http://www.vikatan.com/news/world/82194-oscar-winners-are-affected-due-to-trump-travel-ban-oscar2017.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.