Jump to content

#LiveUpdates ஆஸ்கர் 2017 : ஜொலிக்கும் ’மூன்லைட்’ திரைப்படம்!


Recommended Posts

#LiveUpdates ஆஸ்கர் 2017 : ஜொலிக்கும் ’மூன்லைட்’ திரைப்படம்!

சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதினை  'Moonlight'  திரைப்படம் வென்றது. சிறந்த படங்களின் பட்டியலில் லா லா லேண்ட், லயன், மான்செஸ்டர் பை தி சீ, மூன்லைட், அரெய்வல், ஃபென்சஸ், ஹாக்சா ரிட்ஜ் உள்ளிட்ட படங்கள் இருந்தன. ’லா லா லேண்ட்’  மற்றும்  ’மூன் லைட்’ படங்கள் மீது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமான இருந்தது. இந்நிலையில் விருதை மூன்லைட் தட்டி சென்றுள்ளது. 

Moonlight

 

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை 'Manchester by the Sea' படத்தில் நடித்த கேஸி அஃப்லெக் வென்றார்.

Casey

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை La La Land படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் வென்றார்.

emma 

 

சிறந்த இயக்குநருக்கான விருதினை 'லா லா லேண்ட்' படத்திற்காக டேமியன் செசல் வென்றுள்ளார். இது La La Land திரைப்படத்தின் ஐந்தாவது விருது. இது இசை, காதல், நகைச்சுவை கலந்த திரைப்படம். 

La La Land

14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள 'La La Land' திரைப்படம் இதுவரை நான்கு விருதுகளை வென்றுள்ளது. சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பின்னணி இசை (Original Score ), தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் பாடல் பிரிவுகளில் விருதுகள் பெற்றுள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஜஸ்டின் ஹர்விட்ஸ் பெற்றுக்கொண்டார். 

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை, ’La La Land’ வென்றுள்ளது. இதற்கான விருதை, ஒளிப்பதிவாளர் லினஸ் பெற்றுக்கொண்டார். இதுவரை, ’லா லா லேண்ட்’ (La La Land) திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. மேலும், 14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

La La Land

சிறந்த எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருது, ’Hacksaw Ridge’ படத்துக்குக் கிடைத்துள்ளது. இந்தத் திரைப்படத்துக்கான இரண்டாவது ஆஸ்கர் விருது இது. ஏற்கெனவே, சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை 'ஹாக்ஸா ரிட்ஜ்' (Hacksaw Ridge) திரைப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது. 


Hacksaw Ridge

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதை ’The Jungle Book’ படம் வென்றது.


Jungle Book

சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதை Zootopia வென்றுள்ளது. இந்த விருதை  பைரன் ஹோவார்ட், ரிச் மூரே மற்றும் க்ளார்க் ஸ்பென்சர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்தத் திரைப்படத்தில், விலங்குகளின் மாநகரமான Zootopia-வில் நடக்கும் சேட்டைகள் படம் முழுக்க ரசிக்கவைக்கும்!

Zootopia


சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை ’Piper’ படம் வென்றது. 
 

ஆஸ்கரில் ஜொலி ஜொலித்த பிரியங்கா சோப்ரா

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது, இரானின் ’The Salesman’ படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  இரான் நாட்டவருக்குத் தடை விதித்துள்ளதால், ’தி சேல்ஸ்மேன்’ பட இயக்குநரான அஸ்கார் ஃபர்காதி, விருதைப் பெறவில்லை.

Sales man

 

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை,' ஃபென்செஸ்' (Fences) படத்தில் நடித்த வயோலா டேவிஸ் வென்றுள்ளார்.
 

Viola Davis

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை,  'Fantastic Beasts and Where to Find Them' படத்துக்காக கொலின் அட்வுட் பெற்றுக்கொண்டார். 

Best Costume designer

சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது, ’Suicide Squad’ படத்துக்காக கேட் மெக்கென்னன் மற்றும் ஜேசன் பேட்மேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

make up artist

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது, 'மூன்லைட்' படத்தில் நடித்த மஹேர்ஷலா அலி-க்கு (Mahershala Ali) வழங்கப்பட்டது. 'மூன்லைட்' திரைப்படத்தில் சிறந்த  தந்தையாக  மஹேர் நடித்துள்ளார். மேலும்,  ஆஸ்கர் விருது பெறும் முதல் இஸ்லாமிய நடிகர், மஹேர்ஷலா என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

Supporting actor
 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 89-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது. 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கப்பட உள்ளன. 

The Oscars 2017
 

’லா லா லேண்ட்’ (La La Land) திரைப்படம், 14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், திரைப்படம் என அனைத்து விருதுகளுக்கும் இந்தத் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து, 'மூன்லைட்', 'அரைவல்' ஆகிய படங்கள்  எட்டுப் பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

OSCARSSSS_09226.jpg

லவ்லி ப்ரியங்கா முதல் வாவ் ஜாக்கி சான் வரை ஆஸ்கர் ரெட் கார்ப்பெட் - சிறப்பு புகைப்படத் தொகுப்பு.. க்ளிக் செய்க

http://www.vikatan.com/news/world/82117-oscars-2017-live-updates-la-la-land-is-in-the-lead-with-14-oscar-nominations.html

Link to comment
Share on other sites

ஆஸ்கர் மேடையிலேயே அமெரிக்க அதிபரை சீண்டிய தொகுப்பாளர்

 

 
ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிமெல் | படம்: ஏ.எஃப்.பி
ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிமெல் | படம்: ஏ.எஃப்.பி
 
 

ஆஸ்கர் விழாவின் தொகுப்பாளர் மேடையிலேயே அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கிண்டல் செய்து ட்வீட் செய்தது சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

89-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்து முடிந்தது. விழாவின் தொகுப்பாளர் ஜிம்மி கிமெல் மேடையிலேயெ அதிபர் ட்ரம்பை சீண்டி ஒரு ட்வீட் செய்தார். விழா ஆரம்பித்து சில மணி நேரங்கள் கழித்து, மேடைக்கு வந்த கிமெல், "விழா ஆரம்பித்து 2 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் ட்ரம்ப் இன்னும் எதுவும் ட்வீட் செய்யவில்லை. எனக்கு கவலையாக இருக்கிறது" என சொல்லிவிட்டு தனது மொபைல் திரையை மேடையில் இருக்கும் பெரிய திரையில் காண்பிக்கச் சொன்னார்.

அதில், ட்விட்டரில் டொனால்ட் ட்ரம்பைக் குறிப்பிட்டு நீங்கள் இன்னும் கண் விழிக்கவில்லையா எனக் கேட்டிருந்தார். அடுத்த ட்விட்டீல், மெரில் ஸ்ட்ரீப் உங்களுக்கு ஹாய் சொன்னார் என்று குறிப்பிட்டார். ஏனென்றால் இதற்கு முன் மெரில் ஸ்ட்ரீப்பை சுமாரான நடிகை என ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.

முன்னதாக நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, "இந்த விழா நேரலையாக 225 நாடுகளைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்படுகிறது. இப்போது அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள். நான் அதிபர் ட்ரம்புக்கு நன்றி கூற விரும்புகிறேன். சென்ற வருட ஆஸ்கரில் இன பேதம் அதிகமிருந்ததாக சர்ச்சை எழுந்தது. தற்போது இல்லை. அவருக்கு நன்றி " என்றார்

kimmel_ny_times_3138239a.jpg

மேடையிலேயே அதிபருக்கு ட்வீட் செய்யு ஜிம்மி கிமெல் | படம்:நியூயார்க் டைம்ஸ்

ஆளுநர்களுடன் டின்னர் சாப்பிட இருப்பதால், டொனால்ட் ட்ரம்ப் ஆஸ்கர் விழாவை பார்க்க மாட்டார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஷான் ஸ்பைஸர் வியாழக்கிழமையே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/cinema/hollywood/ஆஸ்கர்-மேடையிலேயே-அமெரிக்க-அதிபரை-சீண்டிய-தொகுப்பாளர்/article9561469.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஆஸ்கர் விருதுகள் 2017 - வெற்றியாளர்கள் பட்டியல்

 

 
 
லா லா லேண்ட் திரைப்படக் காட்சி
லா லா லேண்ட் திரைப்படக் காட்சி
 
 

ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. 89-வது ஆஸ்கர் திருவிழாவில் 2017-ன் வெற்றிப் படைப்புகள், வெற்றியாளர்களின் பட்டியல் இதோ...

14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட 'லா லா லேண்ட்' திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை உள்ளிட்ட 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.

* சிறந்த படம்: மூன் லைட்

கடைசி நேரக் குளறுபடி

சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க நடிகர், இயக்குநர் வாரன் பீடி மேடைக்கு வந்தார். முதலில் அவரிடம் தந்த உறையில் எம்மா ஸ்டோன் - லா லா லேண்ட் என்ற பெயர் இருந்ததால், சிறந்த படம் லா லா லேண்ட் என அவர் அறிவித்தார். படக்குழுவைச் சேர்ந்தவர்களும் மேடைக்கு வந்து விருதுகளைப் பெற்றனர். பிறகு நடுவர் குழுவைச் சேர்ந்த இருவர் மேடைக்கு வந்து நடந்த குளறுபடியை கூறினார்கள். சிறந்த படத்துக்கான உரிய உறையை வாங்கி, மூன்லைட் விருது பெற்றதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. ஆஸ்கர் விழாவில் இப்படியான குளறுபடி நடப்பது இதுவே முதல் முறையாகும்.

* சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் - லா லா லேண்ட்

* சிறந்த நடிகர்: கேஸி ஆஃப்லெக் - மான்செஸ்டர் பை தி சீ

"இந்த சமூகத்தில் ஓர் அங்கம் வகிப்பதைப் பெருமிதமாக கருதுகிறேன்." - நடிகர் கேஸி ஆஃப்லெக்

* சிறந்த இயக்குநர்: டாமின் சாஸெல்லே - லா லா லேண்ட்

"இது காதல் சொல்லும் படம். இதை உருவாக்கும்போதே நான் காதலில் விழுந்தது அதிர்ஷ்டம்." - லா லா லேண்ட் இயக்குநர் டாமின் சாஸெல்லே

* சிறந்த தழுவல் திரைக்கதை - மூன்லைட் | திரைக்கதை: பாரி ஜென்கிங்ஸ், கதை - டாரெல் ஆல்வின் மெக்கிரானி

* சிறந்த திரைக்கதை: மான்செஸ்டர் பை தி ஸீ - கென்னத் லோனர்கன்

* சிறந்த பாடல்: சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் - லா லா லேண்ட்

"மழையில் பாடும் குழந்தைகளுக்கும், அவர்களை மழையில் மகிழவிடும் அனைத்து அம்மாக்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்." - லா லா லாண்ட் பட பாடலுக்காக விருது பெற்ற பெஞ்ச் பாசெக்.

* சிறந்த பின்னணி இசை: லா லா லாண்ட் - ஜஸ்டின் ஹர்விட்ஸ்

* சிறந்த ஒளிப்பதிவு - லா லா லேண்ட்

* சிறந்த எடிட்டிங்- ஜான் கில்பர்ட் (படம்: ஹாக்‌ஷா ரிட்ஜ்)

25_SM_hacksaw-ridg_3138205a.jpg

ஹாக்‌ஷா ரிட்ஸ் திரைப்படம்

 

* சிறந்த குறும்படம் (லைவ் ஆக்‌ஷன் பிரிவு)- சிங்

* சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்- தி ஜங்கிள் புக்

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு- டேவிட் வாஸ்கோ (படம்: லா லா லேண்ட்)

La_La_Land_3138196a.jpg

லா லா லேண்ட் திரைப்படம்

 

* சிறந்த குறும்படம் (அனிமேஷன் பிரிவு)- பைபர்

* சிறந்த ஒலிக்கலவை- கெவின் ஓ கானெல், ஆண்டி ரைட் (படம்: ஹாக்‌ஷா ரிட்ஜ்)

* சிறந்த ஒலித்தொகுப்பு- சில்வியன் பெல்மேர் (படம்: அரைவல்)

* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்- அலெஸாண்ட்ரோ பெட்ரோலாஸி மற்றும் கியோர்கியோ (படம்: சூசைட் ஸ்குவாட்)

* சிறந்த அயல்நாட்டு மொழி திரைப்படம்- தி சேல்ஸ்மேன் (ஈரான்)

28BGFILM_REVIEW_TH_3138193a.jpg

தி சேல்ஸ்மேன் திரைப்படம்

 

* சிறந்த ஆவணப்படம்- ஓ.ஜெ.மேட் இன் அமெரிக்கா

* சிறந்த அனிமேஷன் திரைப்படம்- ஜூடோபியா

zootopia_3138194a.jpg

ஜூடோபியா படத்தின் ஒரு காட்சி

 

* சிறந்த ஆடை வடிவமைப்பு- காலின் அட்வுட் (படம்: பெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டூ பைண்ட் தெம்)

* சிறந்த உறுதுணை நடிகை- வயோலா டேவிஸ் (படம்: பென்சஸ்)

* சிறந்த உறுதுணை நடிகர்- மஹெர்சலா அலி (படம்: மூன்லைட்)

http://tamil.thehindu.com/cinema/hollywood/ஆஸ்கர்-விருதுகள்-2017-வெற்றியாளர்கள்-பட்டியல்/article9560505.ece?homepage=true

Link to comment
Share on other sites

தவறுதலாக அறிவிக்கப்பட்ட ஒஸ்கார் விருது (காணொளி இணைப்பு)

 

89ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் வருடத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதானது மூன்லைட்(Moonlight) பதிலாக தவறுதலாக லாலா லேண்ட் (La La Land) திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

oscar-nom.jpg

திரைப்பட கலைஞர்களின் உயரிய விருதான 89 ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்து வருகின்றது. குறித்த நிகழ்வில் ஹொலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கு பற்றி வருகின்றனர்.

moonlight-la-la-land-dominate-oscars-201

இந்நிலையில் வருடத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதானது முதலில் லாலா லேண்ட் படத்திற்கு அறிவிக்கப்பட்டு, குறித்த பட குழுவானது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தொகுப்பாளரினால் வருடத்தின் சிறந்த திரைப்படம் மூன்லைட்(Moonlight) , எனவும் லாலா லேண்ட் தவறுதலாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் குறித்த விருது தொகுப்பாளராக இருந்த ஜிம்மி கீமேல், தான் வழங்கப்பட்டிருந்த சீட்டில் தடுமாறியவாறு அறிவித்துவிட்டதாகவும், பின் விருது அறிவிப்பு அட்டையை கெமரா முன் காட்டி, மூன் லைட்தான் சிறந்த திரைப்படமாக தெரிவாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

Moonlight-2016--Front-Cover-115558.jpg

அத்தோடு குறித்த ஒஸ்கார் விருது விழாவில், லாலா லேண்ட் படத்திற்கு மொத்தமாக 6 விருதுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், மூன்று விருதுகளை மாத்திரமே வென்ற மூன் லைட் திரைப்படம் வருடத்தின் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

http://www.virakesari.lk/article/17127

Link to comment
Share on other sites

'மரித்தவர்களின் கனவுகளைப் படமாக்குங்கள்' - ஆஸ்கர் வென்ற கறுப்பினப் பெண் வயோலா! #Oscar2017

வயோலா

லகத் திரைப்படங்களுக்கான கொண்டாட்டத் திருவிழா ஆஸ்கர். இந்த ஆண்டுக்கான சிறந்த குணசித்திர நடிகைக்கான விருதை ’ஃபென்சஸ்’ (Fences) என்ற படத்துக்காகப் பெற்றிருக்கிறார் வயோலா டேவிஸ் (Viola Davis). இவர், தனது சிறந்த நடிப்பின் மூலம் ’ஏமி’ மற்றும் ’டோனி’ விருதும் ஏற்கெனவே பெற்றுள்ளார். இதுவரை, சிறந்த நடிப்புக்காக மூன்று முக்கிய விருதுகளைப் பெற்ற 23-வது நடிகை இவர் என்ற பெருமையையும் அடைந்திருக்கிறார்.
 
1950-ம் ஆண்டுகளில் பிட்ஸ்பர்க்கில் நடக்கும் கதை, ’ஃபென்சஸ்’. இதில், ரோஸ் மாஸ்சன் என்ற கறுப்பின துப்புரவுத் தொழிலாளியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஆஸ்கர் விருதைத் தட்டி இருக்கிறார் வயோலா டேவிஸ். ஆஸ்கர் விருதை ஏற்றுக்கொண்டு உணர்வுபூர்வமாக இவர் அளித்த உரை பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

viola davis”உங்களுக்குத் தெரியுமா? உலகின் அதி சிறந்த, திறன் மிகுந்த மக்கள் ஒன்றுகூடும் இடம் ஒன்று உண்டென்றால், அது இடுகாடு மட்டும்தான். என்ன மாதிரியான கதையை நீ சொல்ல விரும்புகிறாய் வயோலா என்று ஒவ்வொரு முறையும் என்னைச் சந்திப்பவர்கள் கேட்டுச் செல்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். மிகப்பெரும் கனவு கண்டு, அந்தக் கனவுகள் நனவாவதற்கு முன்னரே மறித்துப்போன மக்களின் உடல்களில் மிச்சம் இருக்கும் அந்தக் கதைகளையே நான் சொல்ல விரும்புகிறேன். மக்களின் கதைகளைத் தோண்டி எடுங்கள். கனவு கண்டு, காதலித்துத் தொலைந்துபோனவர்களின் கதைகள். அந்தக் கதைகள்தாம் நான் சொல்ல விரும்புபவை. நான் ஒரு திரைக்கலைஞராக இருக்கிறேன். அப்படி ஆனதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். ஒரு வாழ்க்கையை வாழ்வது என்றால் என்ன என்பதைக் கொண்டாடும் ஒரே துறை திரைத்துறையே. இந்தத் துறையில் இருப்பதற்காக நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

சாதாரண மனிதர்களின் கதைகளைத் தோண்டி எடுத்து, அதனை மேம்படுத்திய மறைந்த எழுத்தாளர் ஆகஸ்ட் வில்சன் அவர்களுக்கு என் நன்றிகள். மக்களைப் பற்றின படத்தை ஆதரித்ததற்காக ப்ரான் பிக்சர்ஸ் ( Bron Pictures),  பாராமன்ட் ( Paramount), மக் ரோ (Macro), டொட் ப்ளாக்(Todd Black), மொலி அலின் (Molly Allen) ஆகியோருக்கு என் நன்றிகள். நான் இதுவரை நடித்ததிலேயே மிக அற்புதமான கலைஞர்களான மைக்கல் டி வில்லியம்சன் (Michael T. Williamson), ஸ்டிஃபன் மெக்கின்லே (Stephen McKinley),  ஹெண்டர்சன் (Henderson) போன்றவர்களுடன் நடித்தமைக்கு என் நன்றிகள்.
  
என் இயக்குநர், என் தலைவன், டின்சல் வாஷிங்டன் அவர்களுக்கு... ஆகஸ்ட் வில்டனையும் இறைவனையும் உங்களுக்கு முன்னால் வழிநடத்திச் செல்லவைத்து, அவர்களை மிகச் சிறப்பாக செயல்படவைத்ததற்கு என் நன்றிகள். என் உலகத்தின் மையப்புள்ளியில் இருக்கும் டான் (Dan) மற்றும் மேரி அலிஸ் டேவிஸ் (Mary Alice Davis) இருவருக்கும் என் நன்றிகள். நீங்கள்தாம் எனக்கு நல்லது கெட்டதைக் கற்றுத்தந்தவர்கள். அன்பு செலுத்த கற்பித்தவர்கள். இழப்பைக் கற்றுத்தந்தவர்கள். இதோ, இந்த விருதை எப்படிப் பிடிக்கவேண்டும் என்றும் கற்றுத்தந்தவர்கள். என் பெற்றோர்களுக்கு... நான் இந்த உலகில் வர, இறைவன் உங்களைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள். தேநீர் விருது விளையாட்டில், நாம் பணக்கார வெள்ளையினப் பெண்கள் போல விளையாடிய அந்த அழகான கற்பனைக்கு, என் சகோதரிகளுக்கு நன்றிகள். என் வாழ்வுக்கு அடிப்படையாக இருந்து, என்னை ஒவ்வொரு நாளும் எப்படி வாழ வேண்டும் எனக் கற்பிக்கும் என் அன்புக் கணவருக்கும் என் மகளுக்கும் நன்றிகள். மிக்க நன்றி, ஆஸ்கர் மிக்க நன்றி!” என உருக்கமாகப் பேசினார் வயோலா டேவிஸ்.

http://www.vikatan.com/news/womens/82142-exhume-those-bodies-exhume-those-stories-says-viola-davis-the-black-actress-to-win-oscar.html

Link to comment
Share on other sites

ஆஸ்கர் விழாவில் அசத்திய நடிகை பிரியங்கா சோப்ரா (படங்கள்)

 

 
priyanaka_oscars3

 

2017-ம் ஆண்டுக்கான 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்றது. லா லா லேண்ட் படம் 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது. இதில் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அசத்தலான உடையில் கலந்துகொண்டார். விழாவுக்கு வருகை தந்தபோது அவர் புகைப்படக் கலைஞர்களால் அதிக கவனம் பெற்றார்.

priyanka_oscar1.jpg

 

priyanaka_oscars2.jpg

 

priyanaka_oscars4.jpg

 

priyanaka8181.jpg

 

http://www.dinamani.com/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

priyanaka_oscars3

இதெல்லாம் அங்கை போய் என்னத்தை சாதிக்கப்போகுது?

வெள்ளையள் இந்திய கலாச்சாரம் திறம் சுத்தம் எண்டு அங்கை படையெடுக்கிறாங்கள். ஆனால் அதுகள் அவுத்துப்போட்டு திரியாத குறையாய் திறந்து காட்டிக்கொண்டு திரியுதுகள்.

அதுசரி எல்லாப்புகழும் இறைவனுக்கே எண்டவருக்கு இந்தமுறை ஒரு இதுவும் கிடைக்கலையா? நாசமறுப்பு இறைவன் ஏமாத்திட்டான் போலை....

Link to comment
Share on other sites

ஈரான் திரைப்படத்துக்கு கிடைத்த ஒஸ்கார் விருது நடிகர்களினால் புறக்கணிப்பு

 

image_4697631466

உலக சினிமா விருது வழங்கும்  ஒஸ்கார் நிகழ்வில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை ஈரான் திரைப்படம் ஒன்று வென்றுள்ளது.

“த சேல்ஸ்மன்” எனும் திரைப்படமே இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை அஸ்கார் பர்ஹாதி என்பவர் இயக்கியுள்ளார். இவரின் திரைப்படமொன்று கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னரும் ஒஸ்கார் விருது பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொனல்ட் டிரம்ப் தடை செய்த 7 நாடுகளின் வரிசையில் ஈரானும் காணப்படுவதனால் இந்த ஒஸ்கார் விருதைப் பெற்றுக் கொள்ள எந்த திரைப்பட நடிகைகளும் அமெரிக்காவின் லொஸ் எஞ்ஜலிஸ் நகருக்கு செல்லாது விருதைப் புறக்கணித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

http://www.dailyceylon.com/117238

Link to comment
Share on other sites

ஒஸ்கார் விருதை வென்ற முதல் இஸ்லாமிய நடிகர் மஹேர்ஷாலா அலி!

 

 

ஹொலிவுட் திரைப்படமான ‘மூன்லைட்’ சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதைப் பெற்றதை நீங்கள் அறிவீர்கள். அதில் நடித்திருந்த நடிகர் மஹேர்ஷாலா அலிக்கு சிறந்த துணை நடிகருக்கான ஒஸ்கார் விருது வழங்கப்பட்டதையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

3_Ali_Oscar.jpg

இதன்படி, ஒஸ்கார் விருதை மட்டுமல்லாமல், முதன்முதலில் ஒஸ்கார் விருதைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம் கலைஞர் என்ற சாதனையையும் அலி படைத்துள்ளார்.

மூன்லைட் திரைப்படத்தில் கருணையுள்ளம் கொண்ட ஒரு போதைமருந்து வினியோகஸ்தராக நடித்திருந்தார். மேலும், தான் எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவன் என்ற குழப்பத்துக்கு உள்ளாகும் ஒரு பதின்பருவச் சிறுவனின் தந்தையாகவும் மிகச் சிறந்த முறையில் தனது நடிப்பை வெளிக்காட்டியிருந்தார்.

பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தாலும், சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன் இஸ்லாத்தைத் தழுவியவர் அலி. “எனது தாயார் ஒரு கிறிஸ்தவர். அவரிடம், நான் சமயம் மாறிவிட்டது பற்றிக் கூறியபோது அவர் அதிர்ச்சியுறவில்லை. ஏனெனில், அன்புக்கு சாதி, சமயம், மொழி என எந்த வேறுபாடும் தேவையாக இருக்கவில்லை. இன்றும் நானும் என் தாயாரும் மிகுந்த அன்புடையவர்களாகவே இருக்கிறோம்” என்று கூறுகிறார் அலி.

இவர், ‘அமெரிக்காவில் இஸ்லாமிய மதத்தைத் தழுவியவர்களின் சிறுகதைகள்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

http://www.virakesari.lk/article/17211

Link to comment
Share on other sites

ஒஸ்கார் விருது குழப்பத்தால் அச்சுறுத்தலில் பணியாளர்கள் : பாதுகாப்பு வழங்கியுள்ள கணக்கு நிறுவனம்..! 

 

 

 

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஒஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்தியதாக கூறப்படும் கணக்காளர்கள் இருவருக்கும் சமூகவலைத்தளங்கள் ஊடாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால், அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.   

_94918610_8b3fc351-a252-4a4e-a9c6-73c95b

திரைபடத்துறையினரின் உயரிய விருதான ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், பிரைன் கல்லினன் மற்றும் மார்ட்டர் ரூயிஸ் ஆகிய இருவரும், தொகுப்பாளர்களாக இருந்த வாரேன் பெய்ட்டி மற்றும் பெய் டன்னவே ஆகியோரிடம் தவறான அட்டையை வழங்கியதால், வருடத்தின் சிறந்த திரைப்படமாக லாலா லேண்ட் அறிவிக்கப்பட்டு பின்பு மூண்லைட் அறிவிக்கப்பட்டது. 

lala-land-moonlight-759.jpg

குறித்த நிகழ்வினால் கடந்த புதன்கிழமையன்று, 89 வருடகால விழா சிறப்பில் தவறிழைத்த குற்றத்திற்காக ஒஸ்கார் விழா வேலைகளில் அவர்கள் இருவரும் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் எனவும், ஆனால் பணி நீக்கம் செய்யப்படவில்லை என பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

brian-cullinan2.jpg

இந்நிலையில் ஊடகங்களில் இருவரின் வீட்டு முகவரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் படங்கள் வெளியானதால், பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூப்பர்ஸ் நிறுவனத்தின் பேச்சாளரான கேரி போரென்ஹெய்மர் தெரிவித்துள்ளார்..

விழாவில் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்ட திரைப்படத்தின் பெயரை கொண்ட அட்டையை வழங்குவதற்கு பதிலாக, முன்னணி கதாபாத்திரத்திற்காக, சிறந்த கதாநாயகியாக தெரிவு செய்யப்பட்டவரின் பெயர் இடம்பெற்றுள்ள அட்டையை வழங்கியிருந்தார்கள்.

oscars-mix-up-la-la-land-moonlight.jpg

மேலும் ஒஸ்கார் விருதுகளுக்கான வாக்குகளை எண்ணி, அட்டைகளை சேர்க்கும் பணிகளை பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. குறித்த ஒஸ்கார் விழாவில் ஏற்பட்ட குழப்பத்திற்காக அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/17349

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.