Jump to content

லீக் கோப்பை இறுதிப் போட்டி: ஜோஸ் மவுரினோ தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் மகுடம் சூடுமா?


Recommended Posts

லீக் கோப்பை இறுதிப் போட்டி: ஜோஸ் மவுரினோ தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் மகுடம் சூடுமா?

 

 
 

ஜோஸ் மவுரினோ தலைமையிலான மான்செஸ்டர் யுனைடெட் அணி லீக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 
 
 
 
லீக் கோப்பை இறுதிப் போட்டி: ஜோஸ் மவுரினோ தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் மகுடம் சூடுமா?
 
லீக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இன்றிரவு 10 மணிக்கு நடக்கிறது. இதில் மான்செஸ்டர் யுனைடெட்- சவுதாம்ப்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளராக ஜோஸ் மவுரினோ உள்ளார். மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளர் பதவியை மவுரினோ ஏற்றபின் அந்த அணி சந்திக்கும் மிகப்பெரிய தொடரின் இறுதிப் போட்டி இதுவாகும்.

இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றால், தான் பதவி ஏற்ற முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெறுவார். மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜாம்பவான்கள் அலெக்ஸ் பெர்குசன், மேட் பஸ்பி ஆகியோர் கூட தங்களது முதல் தொடரில் சாதித்தது கிடையாது. இந்த சாதனை மவுரினோவை நெருங்கி வந்துள்ளது.

B6AED583-F6AF-4A73-94F3-BDC541281DB4_L_s

இந்த ஆட்டம் குறித்து மவுரினோ கூறுகையில் ‘‘நீங்கள் ஒரு பொருளை ருசித்து விட்டால், அதை திரும்பவும் ருசித்து பார்க்க விரும்புவார்கள். நீங்கள் வெற்றி பெற்று பழகிவிட்டால், அதன்பின் நீங்கள் வெற்றி பெறாவிடில், அதை கட்டாயம் தவற விடுவீர்கள்.

எங்களைவிட சிறப்பாக அவர்கள் செயல்பட விரும்பினால் அவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆகவே, நாங்கள் அவர்களை எங்களை விட சிறப்பாக செயல்பட விடமாட்டோம். மைதானத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ, அந்த அணி வெற்றி பெறும். உத்வேகத்தை சார்ந்து வெற்றி இருக்காது. எங்களை விட அவர்கள் உத்வேகத்தில் உயர்ந்தவர்கள் கிடையாது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/26191227/1070586/Manchester-United-boss-Jose-Mourinho-says-the-best.vpf

Link to comment
Share on other sites

லவ் யூ இப்ரா, தேங்க் யூ மொரினியோ... மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் உற்சாகம்! #VikatanExclusive

இங்கிலீஷ் ஃபுட்பால் லீக் (English Football League) சுருக்கமாக லீக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மான்செஸ்டர் யுனைடெட் கிளப். ஜோஸே மொரினியோ மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு அந்த கிளப் வெல்லும் முதல் கோப்பை இதுவே. அதனால் இந்த வெற்றியைக் கொண்டாடித் தீர்க்கின்றனர் ‘Man u’ ரசிகர்கள். 

மான்செஸ்டர் யுனெடட் அணி சாம்பியன்- இப்ராஹிமோவிச்

லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நேற்று ஈ.பி.எல் கோப்பை இறுதி ஆட்டம் நடைபெற்றது. மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் சவுதாம்ப்டன் களம் கண்டது. போட்டியைக் காண 80 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆட்டம் தொடங்கிய 18-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. இதனை மிக நேர்த்தியாக கோலாக்கினார் ஸ்லாட்டன் இப்ரோஹிம்விச். மான்செஸ்டர் யுனைடெட் அணி முன்னிலை பெற்றது. உத்வேகம் பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் தாக்குதல் ஆட்டத்தைத் தீவிரப்படுத்தியது. 38-வது நிமிடத்தில் ஸ்லாட்டன் இப்ராஹிம்விச் பெனால்டி பாக்சுக்குள் கொடுத்த பாஸை, ஜெஸ்சி லிங்கார்ட் மிக அழகாக கோலாக மாற்றினார். 

மான்செஸ்டர் யுனைடெட் அணி இரு கோல்கள் முன்னிலை பெற்றாலும் சவுதாம்ப்டன் வீரர்களும் சளைக்கவில்லை. முதல் பாதியில் 45-வது நிமிடத்தில் சவுதாம்ப்டன் பதிலடி கொடுத்தது. வார்ட் பிராஸ் கொடுத்த லோ கிராஸை கோல் அடித்தார் கேபியாடினி. மான்செஸ்டர் யுனெடட் அணியின் கோல்கீப்பர் டிஜியா சற்று முனைந்திருந்தால், கிராஸ் செய்யப்பட்ட பந்தை பிடித்திருக்கலாம். ஆனால், அதற்குள், கேபிடியானி பந்தை 'அட்டென்ட்' செய்து விட, பந்து டி ஜியாவின் கால்களுக்கிடையே புகுந்து கோலானது. அடுத்த 3-வது நிமிடத்தில் அதே கேபியாடினி மீண்டும் மான்செஸ்டருக்கு அதிர்ச்சி அளித்தார். பெனால்டி ஏரியாவுக்குள் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்த பந்தை புத்திசாலித்தனமாக நெட்டை நோக்கி அடிக்க, இந்த முறையும் டிஜியா ஏமாந்து போனார். முதல் பாதி ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

பிற்பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களுமே ஆவேசமாக ஆடத் தொடங்கினர். இதனால் முட்டல்களுக்கும் மோதல்களுக்கும் பஞ்சம் இல்லை. மீண்டும் கேபிடியாடினி ஒரு கோல் அடித்தார். ஆனால், அதை ரெஃப்ரி ‘ஆஃப்சைட்’ என அறிவித்ததால், சவுதாம்ப்டன் வீரர்கள் வாக்குவாததில் ஈடுபட்டனர். பிற்பாதியில் 87-வது நிமிடத்தில் ஹெரைரா கிராஸ் செய்த பந்தை ஸ்லாட்டன் தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார். 3-2 என யுனைடெட் முன்னிலை பெற, ஒட்டுமொத்த அரங்கமும் ஆர்ப்பரித்தது. இது, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக நடப்பு சீசனில் ஸ்லாட்டன் அடித்த 26-வது கோல். இறுதியில் மான்செஸ்டர் யுனைடெட் 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பையைக் கைப்பற்றியது. 

மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன் - லீக் கோப்பை

மான்செஸ்டர் யுனைடெட் அணி லீக் கோப்பையைக் கைப்பற்றுவது இது ஐந்தாவது முறை. ஜோஸே மொரினியோ ‘Man u’ பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, அந்த அணி வெல்லும் முதல் கோப்பை இது. ஆனால், அவர் ஏற்கனவே செல்சி அணியுடன் 3 முறை லீக் கோப்பையை வென்றுள்ளார். மொரினியோ பயிற்சியாளராக வென்ற 19-வது டிராபி இது. தவிர, தனிப்பட்ட முறையிலும் இது அவருக்கு பெருமை சேர்க்கும் டிராபி. ஏனெனில், செல்சி அணியில் இருந்து கடந்த சீசனில் பாதியிலேயே நீக்கப்பட்ட விரக்தியில் இருந்தார். அதோடு நீண்ட நாள் ஆசைப்பட்ட கிளப்பில் சேர்ந்து, டிராபி வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் இருந்தார். அந்த கனவு தற்போது நனவாகி உள்ளது. இருந்தாலும்,  மான்செஸ்டர் யுனைடெட் சார்பில் பிரிமியர் லீக் அல்லது சாம்பியன்ஸ் லீக் வெல்வது அவரது அல்டிமேல் இலக்கு.

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஸ்வீடன் வீரர் ஸ்லாட்டன் இப்ராஹிமோவிச். ஆனால், அவர் இந்த கிளப்பில் இணையும் முன், ‘வயதாகி விட்டது. இவரைப் போய் ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டும்’ என்ற கருத்து இருந்தது. ஆனால், லீக் கோப்பை ஃபைனலில் இரு கோல்கள் அடித்ததுடன், ஒரு கோல் அடிக்க உதவியும் செய்து, ‘கிங் இஸ் பேக்’ என நிரூபித்துள்ளார். ஆம், அவர் தன்னைத்தானே ‘கால்பந்து உலகின் ஜாம்பவான்’ என சொல்லிக் கொள்வதுண்டு. வெற்றி குறித்து ஸ்லாட்டன் கூறுகையில், ‘‘குழு மனப்பான்னைமக்குக் கிடைத்த வெற்றி இது. இங்கிலாந்தில் கால்பந்து விளையாடுவது எனக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு இது 32-வது டிராபி’’ என்றார். 

http://www.vikatan.com/news/sports/82153-manchester-united-beat-southampton-to-win-league-cup.html

Link to comment
Share on other sites

இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதிப் போட்டி: சவுத்தாம்ப்டனை வீழ்த்தி மான்செஸ்டர் சாம்பியன்

பதிவு: பிப்ரவரி 27, 2017 15:15

 
 

இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதிப் போட்டியில் சவுத்தாம்ப்டனை 3-2 என வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 
 
 
 
இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதிப் போட்டி: சவுத்தாம்ப்டனை வீழ்த்தி மான்செஸ்டர் சாம்பியன்
 
இங்கிலீஷ் லீக் கோப்பைக்கான இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு 10 மணிக்கு நடைபெற்றது. விம்லே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மான்செஸ்டர், சவுத்தாம்ப்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியை 85 ஆயிரத்து 264 பேர் கண்டுகளித்தனர்.

ஆட்டம் தொடங்கிய 19-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி ஸ்லேடன் இப்ராஹிமோவிச் கோல் அடித்தார். 38-வது நிமிடத்தில் அந்த அணியின் ஜெஸி லிங்கார்டு மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் மான்செஸ்டர் அணி 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

அதற்குமேல் முதல் பாதி நேரமான 45 நிமிடம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் 2-0 என முதல்பாதி நேரத்தில் மான்செஸ்டர் அணி முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயம் மற்றும் போட்டி நிறுத்தம் ஆகியவற்றை கணக்கிட்டு 2 நிமிடம் கூடுதல் நேரமாக வழங்கப்பட்டது. அதன் முதல் நிமிடத்தில் சவுத்தாம்ப்டன் அணியின் மனோலோ கேபியாடினி கோல் அடிக்க, முதல் பாதி நேரத்தில் மான்செஸ்டர் 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

15196AE5-1039-4ADD-AB24-9F99ECAB5AF2_L_s
இரண்டு கோல்கள் அடித்த மனோலோ கேபியாடினி

பின்னர் 2-வது பாதிநேரம் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் மனோலோ கேபியாடினி மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 2-2 என சமநிலைப் பெற்றது.

D7BBA9BE-76D5-45E0-8F8B-26D5B92C7396_L_s
ப்ரீஹிக் மூலம் கோல் அடிக்கும் இப்ராஹிமோவிச்

அதன்பின் இரு அணி வீரர்களும் கோல்கள் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்த நிலையில் 87-வது நிமிடத்தில் இப்ராஹிமோவிச் தலையால் முட்டி கோல் அடிக்க மான்செஸ்டர் அணி 3-2 என வெற்றி பெற்று இங்கிலீஷ் லீக் கோப்பையை வென்றது.

DC607165-C1A9-43AD-84F7-88CDD595AED5_L_s
சாம்பியன் கோப்பையுடன் மான்செஸ்டர் யுனைடெட் அணியினர்

அந்த அணியின் பயிற்சியாளர் மவுரினோ, தான் பதவியேற்ற முதல் தொடரிலேயே அணியை சாம்பியன் பட்டம் பெற வைத்து சாதனைப் படைத்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/27151541/1070755/Zlatan-Ibrahimovic-inspires-Jose-Mourinho-side-to.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.