Jump to content

வெள்ளை மாளிகை விருந்துபசாரத்தை புறக்கணிக்கும் டிரம்ப்..!


Recommended Posts

வெள்ளை மாளிகை விருந்துபசாரத்தை புறக்கணிக்கும் டிரம்ப்..!

 

 

வெள்ளை மாளிகையின், நிருபர்கள் ஆணையத்தின் வருடாந்த விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

download__7_.jpg

ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வரும் வெள்ளை மாளிகை நிருபர்கள் ஆணையத்தின் விருந்துபசாரத்தில், தான் கலந்து கொள்ள மாட்டேன் என தனது சமூக வலைத்தளம் மூலம் கருத்தொன்றை டிரம்ப் பதிவு செய்துள்ளார்.அத்தோடு குறித்த விருந்துபசாரத்தின் போது, அனைவருக்கும்  இனிய மாலை வணக்கத்தை தெரிவிக்கும்படியும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

A1941CFD-B184-474E-AF20-9042BF994E66_L_s

வெள்ளை மாளிகையில் 1920ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் குறித்த விருந்துபசாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி மற்றும்  ஹொலிவுட் நடிகர்கள் உள்ளிட்ட ஊடக பிரபலங்களும் பங்குபற்றுவர்.

இவ்வருடத்திற்கான விருந்துபசார தினமாக ஏப்ரல் 29ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகையினுள் செய்தி சேகரிக்க டிரம்ப் தடை விதித்திருந்தார். மேலும் அமெரிக்காவின் எதிரிகளாக ஊடகத்தினர் இருக்கின்றனர் என கருத்தொன்றை  தெரிவித்திருந்த நிலையில் தற்போது விருந்துபசாரத்தை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/17096

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.