Jump to content

வடக்கு , கிழக்கு அபிவிருத்திக்கு" புலம்பெயர் அமைப்பு "உதவக்காத்திருக்கிறது


Recommended Posts

வடக்கு , கிழக்கு அபிவிருத்திக்கு" புலம்பெயர் அமைப்பு "உதவக்காத்திருக்கிறது

 

வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்தி தொடர்­பாக கன­டாவின் புலம் பெயர் அமைப்பு கடந்த ஜன­வரி மாதத்தில் கருத்துப் பரி­மா­றல்­க­ளுக்­கான சில ஒன்று கூடல்­களை கன­டாவில் ஒழுங்கு செய்­தி­ருந்­தது. இவ்­ ஒன்று கூடலில் பங்கு பற்­று­வ­தற்­காக கூட்­ட­மைப்­பினால் தெரிவு செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் ஆகியோர் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்­களில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜி.ஸ்ரீநே­சனும் ஒருவர். அவர், கன­டாவின் ஒன்றுகூடலில் பங்­கு­பற்­றி­யதன் பின்னர் அதன் விளை­வு­களும் அதன் தாற்­ப­ரி­யங்­களும் பற்றி மட்­டக்­க­ளப்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கு விளக்­க­ம­ளித்தார். அதன் தொகுப்பு இங்கே தரப்­ப­டு­கி­றது.

மனித சமூகம் தனக்­கென விதம் வித­மான தேவை­களைக் கொண்­டி­ருக்­கி­றது. அவை அத்­தி­யா­வ­சியத் தேவைகள், அவ­சரத் தேவைகள், அடிப்­படைத் தேவைகள் என்று பிரிக்­கப்­பட்டு பின்னர் அவை­களில் இருந்து கல்வி, சௌக்­கியம், பொரு­ளா­தாரம் என்­ற­வாறு கூறு­ப­டுத்­தப்­ப­டலாம். இதைத் தவிர இத்­தே­வைகள் இன்­னொரு நாட்­டோடும் அல்­லது சமூ­கத்­தோடும், மற்றும் காலப்­ப­ரி­மா­ணத்­தோடும் அள­வீடு செய்­யப்­ப­டலாம். மேற்­கூ­றி­ய­வைகள் மனித சமூ­கத்­தின் தேவைகள் பற்­றிய ஒரு பொதுக்­க­ருத்­தாகும்.

இங்கு எடுத்­தா­ளப்­படும் விட­யங்­க­ளுக்கு முன்­ன­தாக கனடா பற்­றிய ஒரு அறி­முகம் தேவைப்­ப­டு­கி­றது. கனடா ஒரு பல்­லின, பல்­ச­மய, பல் கலா­சாரம் குடி­கொண்ட நாடு. அங்கு சுமார் 63-–64 மொழிகள் பேசப்­ப­டு­கின்­றன. அங்கு வாழு­கின்ற வெவ்­வேறு அடை­யாளம் கொண்ட மக்கள் தங்­க­ளது அடை­யா­ளங்­க­ளையோ, வேறு­பாட்­டையோ நினைத்துப் பார்ப்­ப­து­மில்லை, தூக்­கிப்­பி­டிப்­ப­து­மில்லை. அவர்­களுள் புலம்பெயர்ந்­த­வர்கள், நிலை­யான குடி­யு­ரிமை பெற்­ற­வர்கள் என்ற வேறு­பா­டுகள் இல்லை. அங்கு வாழும் எம்­நாட்­ட­வர்­க­ளுக்கு அர­சியல், சமூக, கலா­சார அந்­தஸ்­துகள் இருந்து வரு­கின்­றன. அவர்கள் விட்­டுக்­கொ­டுப்பு, சகிப்­புத்­தன்மை, ஒரு­வரை ஒருவர் மதித்து நடத்தல் என்­ப­வை­க­ளோடு சந்­தோஷ­மாக வாழ்ந்து வரு­வதை காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. ஹரி­சங்­கரி என்ற தமிழர், அவர் நம்­மவர், மாந­க­ர­சபை உறுப்­பி­ன­ராக இருக்­கிறார். முஸ்லிம் ஒரு­வரே அந்த நாட்­டிற்கு பாது­காப்பு அமைச்­ச­ராக இருக்­கிறார். உழைப்பே அவர்­க­ளது தாரக மந்­திரம். உழைக்­கா­த­வர்­களை காண்­பது அரி­திலும் அரிது. அங்­கெல்லாம் அமைச்­சர்­க­ளுக்கும், பிர­தா­னி­க­ளுக்கும் நமது நாட்டைப் போல் விசேட கௌர­விப்­புக்­களோ சலு­கை­களோ கிடை­யாது. அமைச்­சர்கள் மனி­தர்­க­ளோடு மனி­தர்­க­ளாக பய­ணிப்­பார்கள், செயற்­ப­டு­வார்கள். பந்தா என்று கூறு­வார்­களே அது அமைச்­சர்­க­ளுக்கு அங்கு இல்­ல­வே­யில்லை.

புலம்­பெ­யர்ந்­த­வர்கள் அங்கு நிலை­பே­றான பொரு­ளா­தார பலம் பெற்று வாழ்­கி­றார்கள். அவர்கள் அங்கு சந்­தோஷம்,, கௌரவம், அந்­தஸ்து என்று வாழ்ந்த போதிலும் நமது வடக்கு, கிழக்கின் நிலை அறிந்து வேத­னைப்­ப­டு­கி­றார்கள். எவ்­வாறு வடக்கு, கிழக்­கிற்கு உத­வு­வது? எப்­படி வடக்­கையும் கிழக்­கையும் மேலோங்கச் செய்­வது என்று சிந்­திக்­கி­றார்கள். இது நமக்­கெல்லாம் சந்­தோ­ஷத்தை தரக்­கூ­டி­யது.

நமது அரசு பற்றி நான் சிலா­கிக்க வேண்­டி­ய­வ­னாக இருக்­கிறேன். இலங்­கையின் பிர­தான அர­சியல் கட்­சிகள் இரண்டும் இணைந்து இந்த நல்­லாட்­சியைத் தோற்­று­வித்­தி­ருக்­கின்­றன. நல்­லாட்சி அர­சிற்கு சவால்­களும், முட்­டுக்­கட்­டை­களும், எதிர்ப்­பு­களும் இல்­லாமல் இல்லை. இவை­களை சமா­ளிக்க வேண்­டிய நிலைக்கு அரசு தள்­ளப்­பட்டு இருக்­கி­றது. சமா­ளிக்க தவ­றினால் அரசு சறுக்கி விழுந்து விடும். அதைத்­தாண்­டியே தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றவும் அவர்­க­ளுக்­கான அபி­வி­ருத்­தியில் இறங்­கவும் அது தயா­ராக வேண்­டி­யி­ருக்­கி­றது. இது சாதா­ரண பிர­யத்­த­ன­மா­காது என்­பது எல்­லோ­ருக்கும் தெரிந்த விடயம். தாங்­க­மு­டியாத ஒரு சுமையை அரசு தாங்­கித்தான் ஆக­வேண்டும். அது தவிர்க்க முடி­யா­த­துதான்.

வடக்கு, கிழக்கு 30 வரு­ட­கா­ல­மான போரின் பிடி­யி­லி­ருந்து விடு­பட்டு இருக்­கி­றது. இருந்தும் போரின் எச்­சங்­களும், சொச்­சங்­களும் அங்­கி­ருந்து விடை­பெற்­ற­தாக இல்லை. தமிழர் தாய­கத்தில் இன்­னமும் இரா­ணுவம் நிலை­கொண்டு இருக்­கி­றது. அங்கு இரா­ணுவம் தோட்டம் செய்­கி­றது, கடை வைத்து வியா­பாரம் செய்­கி­றது. இவை இரண்டும் அங்கு நடை­பெறும் மொத்த செயற்­பா­டு­க­ளுக்­கான சில உதா­ர­ணங்­களே.

தமிழ் மக்­க­ளுக்கு உடல் பசி, உளப்­பசி என்று வெவ்­வேறு பட்ட பசிகள் இருக்­கின்­றன, போர்க்­கா­லத்­திலும் இவைகள் இருந்­தன. போரின் இருளால் அவை தங்­களை மறைத்துக் கொண்­டன. போர் முடி­வுற்­றதால், அவை இப்­போது தலையை நீட்­டிப்­பார்க்­கின்­றன. அவை­க­ளுக்கு தீனி போட்­டே­யா­க ­வேண்டும். அவை பிற்­போட முடி­யா­த­வை தட்­டிக்­க­ழிக்க முடி­யா­த­வை. பிள்­ளை­க­ளுக்கு கல்வி வேண்டும், சுகா­தார வசதி வேண்டும், வதி­விடம் வேண்டும். இவை­க­ளுக்­கான வச­திகள் தாம­த­மின்றி ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். இதற்கு மேலாக உழைப்பு வேண்டும். உழைப்­பில்­லை­யென்றால் அனைத்­துமே இல்­லாமல் போய்­வி­டும் அல்­லவா? உழைப்­பிற்­கான தொழில் வாய்ப்பு இல்­லாமல் எவ்­வாறு உழைப்­பது? எவ்­வாறு பணம் சம்­பா­திப்­பது? இவை­களே எம்­முன்னே உள்ள விரை­வாக தீர்க்­கப்­பட வேண்­டிய பிரச்­சி­னைகள் ஆகும்,

வயது வந்­த­வர்கள் அனை­வரும் ஒன்றோ அல்­லது ஒரு சில தொழி­ல்களைச் செய்தோ ஊதியம் பெற­வேண்டும் அப்­போ­துதான் அவர்­களின் சீவியம் சிறப்­பா­கவும் சுமு­க­மா­கவும் நேர்­வ­ழியில் செல்லும். இதுவே வள­மான வாழ்­வுக்கு வழி. அவை இல்­லாத வாழ்வு வாழ்­வா­காது.

நமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் நீர்­வளம் , நில­வளம், வன­வளம், கடல்­வளம் என்று வளங்­களை இப்­ப­டியே அடுக்கிக் கூறலாம். இருந்தும் நமக்கு பொருத்­த­மான நவீ­ன தொழில்நுட்ப அறிவு இல்­லா­மையால் உழைப்­பிலும் வரு­மா­னத்­திலும், இலாபத்­திலும் பின்­தங்கி நிற்­கிறோம். நமது பிர­தே­சத்தைப் பொறுத்­த­வ­ரையில் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தொழிலும்,அவர்­க­ளுக்­கெல்லாம் ஆங்­காங்கே தொழிற்­சா­லைகளும் இருக்­கின்­றன என்ற நிலை உரு­வா­க­வேண்டும். அது ஏற்­று­ம­தியை உரு­வாக்க வேண்டும். வடக்கும், கிழக்கும் வள­மான வாழ்வு பெற­வேண்டும் என்ற எண்ணம் அல்­லது அபி­லாஷை புலம்­பெயர் அமைப்­பு­க்­களின் மனதில் துளிர்­வி­டு­வதை உண­ரக்­கூ­டி­யதாக இருக்­கி­றது.

திட்­டங்­களை தீட்­டி­வி­டலாம், அது இல­கு­வா­னது. அத்­திட்­டங்­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு நிதி வேண்­டுமே என்று எம்­மக்கள் அங்­க­லாய்க்­கலாம், அதனை வழங்­கு­வ­தற்­கா­கவே கன­டாவில் ஸ்தாபிக்­கப்­பட்டு இயங்­கி­வ­ரு­கின்ற கனடா தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கைகொ­டுத்­தி­ருக்­கி­றது. திட்­டங்­களை தீட்டி அத்­திட்­டங்­க­ளுக்கு முத­லீடு செய்­வ­தற்­கென அது கொள்­கை­ய­ளவில் இணக்கம் தெரிவித்­துள்­ளது. இதற்­கா­கவே எமது வட­க்கு, கி­ழக்குப் பிர­தி­நி­திகள் அவர்­களால் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். சுமார் இரு­வா­ர­காலம் அங்கு எமது பிர­தி­நி­திகள் தங்­கி­யி­ருந்­தனர். அங்­கே­யுள்ள முத­லீட்­டா­ளர்­க­ளுடன் இது தொடர்­பாக பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டனர். இக்­கு­ழுவில் கிழக்கு மாகா­ண­ச­பையின் கல்­வி­ய­மைச்சர் சி.தண்­டா­யு­த­பாணி, மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜி.ஸ்ரீ­நேசன், அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கே.கோடீஸ்­வரன், வட­மா­காண சபை கல்வி அமைச்சர் த.குரு­கு­ல­ராஜா, வட­மா­காண சபை உறுப்­பினர் அஸ்மின், வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திரு­மதி சாந்தி ஸ்ரீ­ஸ்­கந்­த­ராஜா ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர். மறு­பக்­கத்தில் புலம் பெயர் அமைப்­புக்­க­ளோடு நிபு­ணத்­துவ ரீதி­யான ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக அனு­பவம், ஆற்றல், அறிவு கைவ­ரப்­பெற்ற தொழில்சார் ஆலோ­ச­கர்கள் இருந்­தனர். அவர்கள் முழுக்க முழுக்க துறை­சார்ந்த வினாக்­களை முன்­னி­றுத்தி தேவைப்­படும் விப­ரங்­களை எமது பிர­தி­நி­தி­க­ளி­ட­மி­ருந்து பெற்றுக் கொண்­டனர். இதி­லி­ருந்து அவர்கள் முத­லீடு செய்­வ­தற்கு முன்­ன­தாக அது தொடர்­பான முழுத்­த­க­வல்­க­ளையும் திரட்டி அணு அ­ணுவாக ஆராய்ந்த பின்­னரே முத­லீடு செய்­வார்கள் என்­பது தெளிவு­று­கி­றது. இது இரு தரப்­புக்கும் பொருத்­த­மான விவே­க­மான செயல். இதில் யாரும் குற்­றம்­பி­டிக்­கவோ, குறை­கா­ணவோ முடி­யாது. தொடக்கம் கோணல்­மா­ண­லின்றி தொடங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் இரு­ த­ரப்பினரும் கரி­சனை காட்­டு­வது நல்­லதே.

இரண்டு விதங்­களில் எமது குழு­வி­னரை அவர்கள் வழிப்­ப­டுத்­தி­னார்கள். ஒரு விதத்தில் கலந்­து­ரை­யா­டல்கள், மறு­வி­தத்தில் வெளிக்­க­ளப்­ப­யணம் என்­றி­ருந்­தது. கலந்­து­ரை­யா­ட­லி­னூ­டாக இரு­த­ரப்­பி­ன­ரதும் கருத்­துக்கள் வெளிப்­பட்­டன, உள்­வாங்­கப்­பட்­டன எனலாம், வெளிக்­க­ளப்­ப­ய­ணத்­தி­னூ­டாக கனே­டிய நாடு எவ்­வாறு முன்­னே­றி­யி­ருக்­கி­றது, அம்­முன்­னேற்­றத்­திற்கு என்­னென்ன அணுகு முறைகள் கடைப்­பி­டிக்­கப்­பட்­டன என்­ப­வைகள் எம் மனத்­திற்குள் சிந்­திப்­ப­தற்­காக புகுத்­தப்­பட்­டன எனலாம். எமது நாட்டில் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்ற வழி­மு­றை­க­ளுக்கும் அங்­குள்ள செயற்­பா­டு­க­ளுக்­கு­மி­டை­யி­லான வேறு­பா­டு­க­ளையும், அவ்­வே­று­பா­டுகள் செலுத்­து­கின்ற தாக்­கங்­க­ளையும் அத­னூ­டான நேர், எதிர்­வி­ளை­வு­க­ளையும் வெளிக்­க­ளப்­ப­யணம் எமக்கு தெளிவாக உணர்த்­தி­யது எனலாம்.

இனி, கலந்­து­ரை­ய­டல்­க­ளைப்­பற்றி கொஞ்சம் ஆழ­மாக பார்ப்போம். கலந்­து­ரை­யா­ட­ல்கள் தனித்­த­னி­யான தொனிப்­பொ­ருளில் தனித்­த­னி­யாக நடத்­தப்­பட்­டன. ஒவ்­வொரு கலந்­து­ரை­யா­ட­ல­்க­ளுக்கும் வெவ்­வேறு ஆலோ­ச­கர்கள் கலந்து கொண்­டனர். அதே­போன்று எங்­க­ளையும் தனித்­தனி குழு­வாக பிரித்­தி­ருந்­தனர். பேசிய விட­யங்­களும் இறு­தி­யாக எட்­டப்­பெற்ற தீர்­மா­னங்­களும் பதி­வேடு­களில் பதி­யப்­பட்­டன. வட­மா­காண கல்வி அமைச்­சரும் கிழக்கு மாகாண கல்வி அமைச்­சரும் குறிப்­பாக கல்­வித்­து­றைசார் குழுக்­க­லந்­து­ரை­யா­டல்­களில் மட்­டுமே கலந்து கொண்­டனர். அதே­போன்று சுகா­தாரம், பொருண்­மியம் ஆகிய துறைசார் குழுக்­களின் கலந்­து­ரை­யா­டல்­களும் இதே பாணியில் இடம் பெற்­றன.

இனி, வெளிக்­க­ளங்­களில் எங்­க­ளுக்கு பண்­ணை­களும், பாட­சா­லை­களும் தொழிற்­சா­லை­களும் காண்­பிக்­கப்­பட்­டன. விவ­சா­யப்­பண்­ணைகள், கால்­ந­டைப்­பண்­ணைகள் என்­பன அவை­களுள் பிர­தா­ன­மா­ன­வை. அதே போன்று பாட­சா­லை­களும் காண்­பிக்­கப்­பட்­டன. பாட­சா­லை­களில் கோட்­பாட்­டுக்­கல்வி முறைமை பிர­யோ­கிக்­கப்­பட்­ட­போ­திலும், செயல்­மு­றைக்­கல்­வி­யி­னூ­டா­கவே மாண­வர்கள் அதிகம் ஈடு­பாடு காட்­டு­வ­தற்கு ஊக்கு­விக்­கப்­ப­டு­வதை நேர­டி­யாக கண்டோம். இலங்­கை­யில் கோட்­­பாட்­டுக்­கல்­வியும், பரீட்­சை­க­ளுமே இருக்­கின்­றன. இதற்கு மறு­த­லை­யா­கவே கன­டாவில் கோட்­பாட்­க்­கல்­வி­யோடு செயற்­பாட்­டுக்­கல்­வியும் இணைந்து போதிக்­கப்­ப­டு­கின்­றது.

அடுத்­த­தாக வைத்­திய வச­திகள் பற்­றிய கலந்­து­ரை­யா­டலை எடுத்­துக்­கொண்டால் புலம்­பெயர் சமூ­கத்தின் ஆழ­மான கரி­ச­னையும், ஈர்ப்பும் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டு அங­்க­வீ­ன­ம­டைந்­த­வர்­க­ளின்மேல் இருக்­கி­றது. இவர்­க­ளுக்கு எப்­படி வைத்­திய வசதி வழங்­கலாம்? எப்­படி இவர்­களை சமூ­கத்­திற்கு பிர­யோச­ன­மான உழைப்­பா­ளி­க­ளாக மாற்­றலாம் என்று நினைக்­கி­றார்கள். இதை­விட தொற்றா நோயின் தாக்­கத்தை அடுத்த பரம்­ப­ரைக்கு எடுத்­துச்­செல்லா வண்ணம் எப்­படி தவிர்ப்­பது என்றும் சிந்­திக்­க­ிறார்கள். சில கிரா­மத்து மக்­க­ளுக்கு நோய்கள் பற்­றியும், நோய்­வ­ராமல் தடுப்­பது பற்­றியும் நோய்­வந்­தால் எப்­படி எப்­ப­டி­யான சிகிச்­சை­களை வழங்­க­வேண்டும் என்ற பரந்த ஆழ­மான அறி­வில்­லாத நிலையை நீக்­கி­விட வழி­வகை செய்ய வேண்டும் என்ற மனோ­நிலை அவர்­க­ளிடம் காணப்­ப­டு­கி­றது.

இவை­க­ளுக்கு மேலாக இவை அனைத்­தையும் எமது நாட்டில் செயற்­ப­டுத்­து­வ­தற்கு எமது அரசு அனு­ம­திக்க வேண்டும். அடுத்­த­தாக இவை­க­ளுக்­கான திட்­டங்கள் தீட்­டப்­ப­ட­வெண்டும். திட்­டங்­களை தீட்­டு­வ­தற்கு சரி­யான புள்­ளி­வி­வரங்கள் சேக­ரிக்­கப்­ப­ட­வேண்டும், புள்­ளி­வி­வ­ரங்­க­ளி­னூ­டாக செயற்­பா­ட்டுத்திட்­டங்­களை வரை­வுக்­குட்­ப­டுத்தும் போதுதான் எவ்­வ­ளவு நிதி தேவைப்­படும் என்­பது தெரிய­வரும். இந்­த ­நி­தியை வெளிநாட்­டி­லி­ருந்து பெற­வேண்டும்.

இதற்­கு­மே­லாக, இவ்­வா­றான நிதியை கையாள்­வ­தற்கும் செயற்­பாட்­டுக்­கு­மான செய­லணி ஒன்­றி­ருத்தல் வேண்டும். இவை­யெல்லாம் ஒரு சின்­னக்­கா­ரி­ய­மா­காது. வடக்கு, கிழக்கில் ஊன­முற்­ற­வர்­களை கணக்­கெ­டுப்­பது என்பது ஒரு சின்னக்காரியமா? இல்லவேஇல்லை! அதேபோன்று எம்மத்தியிலுள்ள இயற்கைவளங்கள் என்ன? அவ்வளங்களை வைத்து என்ன தொழில் செய்யலாம்? அவ்வாறான தொழில்களைச் செய்வதற்கு நம்மவர்களுக்கு அறிவு, ஆற்றல், அனுபவம் இருக்கிறதா? உற்பத்திப்பொருளுக்கு சந்தை வாய்ப்பு உள்ளதா என்பவைகளை ஆராய வேண்டும். அந்தந்த விபரங்களை வெவ்வேறாக திரட்டினால்தான் ஒரு செயற்பாட்டு மதிப்பீடு, நிதி மதிப்பீடு ஆகிய அறிக்கைகளை தயாரிக்கமுடியும். இது ஒருதனிமனிதனால் செய்யக்கூடிய காரியமன்று. ஆகையினால் இதனை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சாதுரியமாகவும், இலாவகமாகவும் கையாளும் என்று நம்புகிறேன்.புலம் பெயர் கனடா தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்தளவுக்கு துரிதமாக இயங்கி நமக்கு உதவ வந்திருப்பதையிட்டு நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இதே நேரத்தில் அரசோடு பேசி அரசை நமது வழிக்கு கொண்டுவருவதையோ எம்மோடு அரசை இணங்கவைப்பதையோ எமது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கையாளும்என்று கூறிக்கொள்கிறேன்.

இதைவிட கனடாவின் சில மாநிலங்களுக்கு நாங்கள் அழைக்கப்பட்டிருந்தோம். அங்கு எங்களுக்கு ஆங்காங்கே வாழுகின்ற மக்களால் வரவேற்பு அளிக்கப்பட்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இது முதலீட்டுக்கு அங்கு வாழ்கின்ற புலம்பெயர் மக்களை ஒரு வகையில் உசுப்பேற்றுவதாகவும் இருந்தது. உண்மையில் அவர்கள் எங்களை அழைத்து விழாக்களை நடத்தியது அவர்களுக்கு ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தியது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அந்த உறவை இன்னும் இன்னும் மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்திவருகிறோம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-25#page-6

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.