Jump to content

சமூக உணர்வுடன் வீட்டுத்தேவையைப்பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முற்பட வேண்டும்


Recommended Posts

சமூக உணர்வுடன் வீட்டுத்தேவையைப்பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முற்பட வேண்டும்

 

மலை­யக மக்­களின் வீட்­டுத்­தேவை தொடர்பில் தற்­போது அதி­க­மாக பேசப்­பட்டு வரு­கின்­றது. இம்­மக்­களின் வீட்­டுத்­தே­வையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கடந்த காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட திட்­டங்கள் முழுமை பெற்­ற­தாக இல்லை. அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக சிற்­சில வீடுகள் அமைக்­கப்­பட்­டதே தவிர வீட­மைப்பு தேவை முழு­மை­யாக நிவர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் நல்­லாட்சி அர­சாங்கம் மலை­யக மக்­களின் வீட்­டுத்­தேவை தொடர்பில் கரி­ச­னை­யுடன் செயற்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. மேலும் இந்­தியா, பிரித்­தா­னியா போன்ற நாடு­க­ளுக்கும் மலை­யக மக்­க­ளுக்­கான வீட­மைப்பு கருதி தோள் ­கொ­டுக்­க ­வேண்­டிய அவ­சி­யப்­பாடு இருப்­ப­தா­கவும் புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

வீடு என்­பது நல்­லி­ணக்கம், அபி­வி­ருத்தி உள்­ளிட்ட பல விட­யங்­களைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உந்து சக்­தி­யாக அமை­கின்­றது. ஒரு பிள்­ளையின் எழுச்­சியில் வீட்டின் பங்­க­ளிப்பு என்­பது மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக அமை­கின்­றது. எனவே, வீடு என்­பது பொருத்­த­மான சூழலில், பொருத்­த­மான விதத்தில் அமைந்­தி­ருக்­க­வேண்டும். பொருத்­த­மற்ற வீட்டுச் சூழல் பிள்­ளைகள் நெறி பிறழ்­வ­தற்கும் அடிப்­ப­டை­யாக அமைந்­து­வி­டு­கி­றது என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை.

வீடு என்­பது வெயி­லுக்கும் மழைக்­கு­மான ஒரு ஒதுக்­கிடம் அல்ல. அது சமூக நிறு­வ­னமும் கூட. அங்­கேதான் சமூக நாக­ரி­கத்தின் அத்­தி­வாரம் இடப்­ப­டு­கின்­றது என்­பது கல்­வி­மான்­களின் கருத்­தா­க­வுள்­ளது. இப்­படிப் பார்க்­கையில் மலை­யக வீடுகள் தொடர்பில் நீண்ட கால­மா­கவே விமர்­ச­னங்கள் இருந்­து­வ­ரு­வதும் தெரிந்த விட­ய­மாகும். தமி­ழ­கத்­தி­லி­ருந்து இங்கு அழைத்­து­வ­ரப்­பட்ட கூலித்­தொ­ழி­லா­ளர்­களின் வீட்டு நில­வ­ரங்கள் தொடர்பில் அதி­ருப்­தி­யான வெளிப்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. 1820களில் தேயிலை, இறப்பர் தோட்­டங்­களில் பணி­பு­ரி­வ­தற்­காக அழைத்­து­வ­ரப்­பட்ட எமது முன்­னோர்­களின் சோக வர­லாறு இன்னும் தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கி­றது.

எந்­த­வொரு துறை­யிலும் இம்­மக்கள் எழுச்­சி­பெற்று காணப்­ப­டு­வ­தாக இல்லை என்­பது வருந்­தத்­தக்க விட­ய­மா­கவே உள்­ளது. தமி­ழ­கத்­தி­லி­ருந்து இலங்­கைக்கு அழைத்­து­வ­ரப்­பட்ட கூலித்­தொ­ழி­லா­ளர்­களின் குடி­யி­ருப்பு விடயம் குறித்து அ.லோறன்ஸ் தனது நூலில் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கின்றார். “ஒப்­பந்த கூலி­களின் வாழ்­வி­ட­மாக தோட்ட லயன்கள் அமைந்­தன.

இந்த தோட்ட லயன்கள் மிக ஆரம்ப காலத்தில் இரட்டை லயன், ஒற்றை லயன் காம்­பரா என்­கிற அடிப்­ப­டை­யி­லேயே காணப்­பட்­டன. கிட்­டத்­தட்ட முழுச்­ச­மூ­கமும் தோட்ட லயன் முறைக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இவ்­வி­த­மாக நீண்ட வர­லாற்றுக் காலப்­ப­கு­தியை செயற்­கை­யாக ஏற்­ப­டுத்­திய லயன்­மு­றையில் கழிக்கும் ஒரு சமூ­கத்தை உலகில் சமாந்­த­ர­மாக காண­மு­டி­யுமா? எந்த நாட்­டி­லா­வது இது சாத்­தி­ய­மா­கி­யி­ருக்­கின்­றதா? என்­பது சந்­தே­க­மாகும்” என்று லோரன்ஸ் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்றார்.

லயன் என்­பது பல சிக்­கல்­களின் இருப்­பி­ட­மாகக் காணப்­ப­டு­கின்­றது. பல அஸ்­த­ம­னங்­களின் தோற்­று­வாயாக காணப்­ப­டு­கின்­றது. கலா­சார சீர­ழி­வுகள் மற்றும் சுகா­தார சீர்­கே­டுகள் ஏற்­ப­டு­வ­தற்கும் லயன் ஒரு முக்­கி­ய­மான கார­ணி­யாக அமைந்­துள்­ளது என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. இதற்­கி­டையில் லயத்து வாழ்க்­கையின் சாதக விளை­வுகள் தொடர்­பிலும் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இணைந்து வாழும் தன்மை, உதவும் மனப்­பாங்கு என்ற வகையில் ஒரு பிணைப்­பினை லயத்து வாழ்க்கை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் இவர்கள் தெரி­வித்து வரு­கின்­றனர்.

லயம் என்­பது நிர்­வ­கிப்­ப­வர்கள் நிலையில் காலத்­துக்குக் காலம் மாற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­றது. தோட்­டங்­களை நிர்­வ­கித்த நிறு­வ­னங்­களின் கைக­ளி­லேயே லயன்கள் இருந்­து­வந்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. ஸ்டேலில் கம்­ப­னிகள், ரூபி கம்­ப­னிகள் என்­ப­வற்­றிடம் இது காணப்­பட்­டது. பின்னர் அரச பெருந்­தோட்டக் கூட்­டுத்­தா­பனம், மக்கள் தோட்ட அபி­வி­ருத்­தி­சபை அல்­லது ஜன­வ­சம ஆகிய அரச நிறு­வ­னங்­களின் முகா­மையின் கீழ் 1975ஆம் ஆண்டு நிலச்­சீர்தி­ருத்­தத்தின் பின் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கின்­றது. 1999ஆம் ஆண்டின் பின்னர் இந்­நி­லை­மை­களில் மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. தனியார் கம்­ப­னிகள், அரச பெருந்­தோட்ட கூட்­டுத்­தா­பனம், மக்கள் தோட்ட அபி­வி­ருத்தி சபை போன்­றன தோட்­டங்­களை நிர்­வ­கித்து வரு­கின்­றன. மலை­யகப் பகு­தி­களில் வாழும் சுமார் மூன்று இலட்சம் குடும்­பங்­க­ளுக்கு மூன்று இலட்சம் x 250 சதுர அடி கொண்ட காணிப்­ப­ரப்பே அவர்­க­ளது குடி­யி­ருப்­பான காணிப்­ப­குதி என்று 2006ஆம் ஆண்டில் வெளி­யி­டப்­பட்ட நூல் ஒன்றில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

 

வீடில்லா மக்­களும் வீதி­யோர சிறு­வர்­களும் 

இலங்­கையில் வீடுகள் நிரந்­த­ர­மாக இல்­லாத நிலையில் பல மக்கள் அல்­லல்­ப­டு­வ­தனை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. பாலங்­க­ளுக்கு கீழும் தற்­கா­லிக குடி­சை­க­ளிலும் இன்னும் பல நிரந்­த­ர­மற்ற இடங்­க­ளிலும் மக்கள் பலர் பெரும் சிர­மத்­துக்கும் மத்­தியில் தமது இயல்­பான வாழ்க்­கை­யினை, இனி­மை­யான வாழ்க்­கை­யினை தொலைத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். இதனால் இம்­மக்­களின் பல்­வேறு விருத்­தி­களும் தடை­ப்பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. தற்­கா­லிக இடங்­களில், குடி­சை­களில் வசிப்­ப­வர்கள் இயற்­கையின் சீற்­றத்தின் கார­ண­மாக கடந்த காலங்­களில் பல்­வேறு பாதிப்­பு­க­ளையும் எதிர்­நோக்கி இருந்­த­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது.

இவை­க­ளையும் தாண்டி பொருத்­த­மற்ற இடங்­களில் வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்­ததன் விளை­வாக மண்­ச­ரிவு, வெள்ளம் போன்­ற­வற்றின் கார­ண­மாக வீடுகள் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்டு உயிர்­க­ளுக்கும் உட­மை­க­ளுக்கும் பெருஞ்­சே­தங்கள் ஏற்­பட்­டி­ருந்­த­தையும் எம்மால் அறி­யக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. வீடுகள் இல்­லாமை என்­பது மிகப்­பெரும் குறை­யாக இருக்­கின்­றது. இவ்­வாழ்க்­கையை பொறுத்­த­வ­ரையில் வீதி­யோர சிறு­வர்கள் பலரின் அவல நிலை­யினை நாம் காண்­கிறோம். உண்­ப­தற்கு போதிய உண­வின்றி, உடுப்­ப­தற்கு உகந்த உடை­யின்றி, வாழ்­வ­தற்­கு­ரிய வீடுகள் இன்றி இவர்கள் சிர­மப்­ப­டு­கின்­றார்கள். வீதி­களில் இவர்­களில் சிலரின் வாழ்க்கை ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றது. என்­னென்­னவோ திட்­டங்கள் வந்­தாலும் எந்த ஒரு திட்­டமும் பூர­ண­மாக இவர்­களின் நலன்­களை பேணு­வ­தாக இல்லை என்­பது வேத­னைக்­கு­ரிய ஒரு விட­ய­மா­கவே உள்­ளது.

வீதி­யோரச் சிறு­வர்கள் பல்­வேறு துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கும் உள்­ளாகி வரு­கின்­றனர். பாலியல் ரீதி­யான சுரண்­டல்­களும் இதில் உள்­ள­டங்கும். பெரும்­பாலும் கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் இத்­த­கைய நிலை­மைகள் அதி­க­ரித்து காணப்­ப­டு­வ­தா­கவும் ஏற்­க­னவே வெளி­யான செய்­திகள் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றன. வீதி­யோரச் சிறு­வர்­களை பாட­சா­லைகள் இணைத்­துக்­கொண்­ட­போதும், சக மாண­வர்­களின் ஏளனப் பார்வை, அதிபர், ஆசி­ரி­யர்கள் அம்­மா­ண­வர்­களை வழி­ந­டத்­து­கின்ற விதம், சக மாண­வர்­களின் அணு­கு­முறை உள்­ளிட்ட பல விட­யங்கள் வீதி­யோரச் சிறு­வர்­களின் வெற்­றி­க­ர­மான கல்வி முன்­னெ­டுப்­பு­க­ளுக்கு தடை­யாக அமைந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. பொருத்­த­மான வீட்டுச் சூழல் இல்­லாத நிலை­மையில் மலை­யக மக்கள், சிறு­வர்கள் எதிர்­நோக்கும் சவால்­களும் மிக மிக அதி­க­மாகும்.

 

கல்வி கற்­ப­தற்­கான சூழல் இன்மை

மலை­ய­கத்தில் உள்ள லயன்­களின் முறைமை கார­ண­மாக அசௌ­க­ரிய நிலை­மைகள் பலதும் மேலோங்­கு­வ­தனை முன்னர் கண்டோம். மலை­யக கல்வி அபி­வி­ருத்தி குறித்து இப்­போது அதி­க­மாக பேசப்­பட்டு வரு­கின்­றது. இந்­நி­லை­மையில் கற்­ப­தற்­கான சூழ்­நிலை தொடர்­பிலும் நாம் கவனம் செலுத்­த­வேண்­டி­யி­ருக்­கின்­றது. அதி­க­மான சத்தம், இட­வ­ச­தி­யின்மை, காற்­றோட்­ட­மில்­லாத நிலை­மைகள் போன்ற பலவும் லயன் அறை­களில் காணப்­ப­டு­வ­தனை நாம் அறிவோம். இத்­த­கைய நிலை­மைகள் மலை­யக பெருந்­தோட்ட மாண­வர்­களின் கல்வி அபி­வி­ருத்­தியில் கணி­ச­மான ஒரு தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது.

இதனால் கல்வி அபி­வி­ருத்­தியின் உரிய இலக்­கினை அடை­ய­மு­டி­யாத நிலையில் எமது சிறு­வர்­களில் பலரும் அல்லல் படு­வ­த­னையும் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. தனி வீட்­டுக்­க­லா­சாரம் முன்­னெ­டுக்­கப்­பட்டு தனி­வீட்­டுக்­க­னவு மலை­யகக் குடி­ம­க­னுக்கு நன­வா­கின்ற நிலையில் கல்­வித்­து­றையும் வளர்ச்­சிப்­போக்­கினை கொண்­ட­தாக அமையும் என்­பது சொல்­லித்­தெ­ரி­ய­வேண்­டிய ஒரு விட­ய­மில்லை.

 

கடந்­த­கால அர­சு­களும் வாக்­கு­று­தி­களும் 

வாக்­கு­று­திகள் என்­பது அர­சி­யல்­வா­தி­க­ளுடன் பின்­னிப்­பி­ணைந்த ஒரு விட­ய­மாகும். அதையும் இதையும் தரு­வ­தாக அர­சி­யல்­வா­தி­களின் வாக்­கு­று­திகள் நீண்­டு­கொண்டு செல்­வ­தனை நாம் கண்­டி­ருக்­கின்றோம். எனினும் இந்த வாக்­கு­று­திகள் எந்­த­ள­வுக்கு சாத்­தி­ய­மா­கி­யி­ருக்­கின்­றன என்று வின­வு­கையில் திருப்­திக்­கொள்ள முடி­ய­வில்லை. பல சந்­தர்ப்­பங்­களில் வாக்­கு­று­திகள் காற்றில் பறந்­தி­ருக்­கின்­றன.

வாக்­கு­று­தியை வழங்­கி­ய­வர்­களே பல சந்­தர்ப்­பங்­களில் என்ன வாக்­கு­று­தியை வழங்­கினோம் என்­ப­தனை மறந்து செயற்­ப­டு­வ­தனை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. தனி­ந­பர்கள் வாக்­கு­று­தி­களை வழங்­கு­வ­தைப்­போன்று, அரச தரப்­பி­லான வாக்­கு­று­தி­களும் உள்­ளன. இந்த வகையில் கடந்­த­கால அர­சாங்­கங்கள் மலை­யக மக்கள் தொடர்பில் வழங்­கிய வாக்­கு­று­திகள் எந்­த­ள­வுக்கு நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன என்­ப­தனை சிந்­தித்துப் பார்க்­க­வேண்டி இருக்­கின்­றது. மலை­யக பெருந்­தோட்ட மக்­களின் வீட­மைப்பு கருதி வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களும் இதி­ல­டங்கும்.

மலை­யக பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு சுமார் மூன்று இலட்சம் வீடுகள் தேவை­யாக உள்­ள­தாக இரா­ஜாங்க அமைச்சர் வி.இரா­தா­கி­ருஷ்ணன் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் வலி­யு­றுத்தி இருந்தார். இந்தத் தனி­வீட்டுத் தேவை­யா­னது இன்னும் சில காலப்­ப­கு­தியில் மேலும் அதி­க­ரிக்கும் சாத்­தியம் காணப்­ப­டு­கின்­றது.

இந்த நிலையில் வீட­மைப்பு கரு­திய துரித நட­வ­டிக்­கைகள், முறை­யான திட்டம், வீடு­களை பெற்­றுக்­கொள்ளும் வழி­மு­றைகள் என்­பன தொடர்பில் இன்னும் இன்னும் அதி­க­மாக சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது. குறைந்­தது 10 வருட காலப்­ப­கு­தியில் மலை­யக மக்­க­ளுக்­கான தனி­வீ­டுகள் கட்­டி­மு­டிக்­கப்­ப­டுதல் வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்று வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மா­க­வுள்­ளது. வீட­மைப்பு தொடர்பில் மலை­யக மக்­களை தொடர்ச்­சி­யாக புறக்­க­ணிக்­கின்ற ஒரு நிலைமை காணப்­ப­டு­வ­தா­கவும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. வீட­மைப்பில் மட்­டு­மல்­லாது சகல துறை­க­ளிலும் இம்­மக்­க­ளுக்கு உரிய இடம் வழங்­கப்­ப­டு­வ­தில்லை என்றும் தேசிய மட்ட வேலைத்­திட்­டங்­களில் மலை­யக மக்கள் உரி­ய­வாறு உள்­ளீர்ப்பு செய்­யப்­ப­டு­வ­தில்லை என்றும் தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எமது நாடு புறக்­க­ணிப்­பு­களின் விளை­வாக ஏற்­க­னவே பல தழும்­பு­களை தனது தேகத்தில் பதித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் மலை­யக மக்­களை புறக்­க­ணிப்­பது என்­பது பாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும் என்றும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. தோட்ட தொழி­லா­ளர்­களின் வீட­மைப்­பிற்­காக ஏழு பேர்ச்சஸ் காணி­யா­வது பெற்றுக் கொடுக்­காமல் மாடி வீட்­டுத்­திட்டம் தொடர்பில் பேசு­வதால் எவ்­வி­த­மான அர்த்­தமும் கிடை­யாது.

இதை சக­லரும் உரி­ய­வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை 07 பேர்ச்சஸ் காணிக்கு பதி­லாக இரு­பது பேர்ச்சஸ் காணி­யினை தொழி­லாளர் குடும்­பங்­க­ளுக்கு பெற்றுக் கொடுத்தல் வேண்டும் என்ற கருத்­துக்­களும் ஓங்கி ஒலித்து வரு­வ­தனை இப்­போது கேட்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. இந்த நியா­ய­மான கோரிக்கை நிச்­ச­ய­மாக சாத்­தி­யப்­ப­டுதல் வேண்டும் என்­பதும் பலரின் எதிர்­பார்ப்­பாக இருக்­கின்­றது.

 

சட்ட உரிமை கொண்ட காணி பத்­திரம்

மலை­யக மக்­களை பொறுத்­த­வ­ரையில் காணி­யு­ரிமை, வீட்­டு­ரிமை என்­ப­தெல்லாம் ஒரு நீண்­ட­கால எதிர்­பார்ப்­பாக இருந்து வரு­கின்­றது. நீண்ட வர­லாற்றைக் கொண்ட மலை­யக சமூகம் நில­வு­டமை சமூ­க­மாக இல்­லா­தி­ருப்­பது குறித்து பல்­துறை சார்ந்­த­வர்­களும் தமது அதி­ருப்­தி­யினை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும். ஏனைய சமூ­கங்­க­ளுக்கு நிக­ராக காணி­யு­ரிமை மற்றும் வீட்­டு­ரி­மை­களை பெற்று மலை­யக சமூகம் தலை நிமிர்ந்­து­வாழ வேண்டும் என்­பது பல­ரி­னதும் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

இதற்­கி­டையில் மலை­யக மக்­க­ளுக்­கான காணி சீர்­தி­ருத்த ஆணைக்­கு­ழுவின் சட்­ட­பூர்வ காணி வீடு உறுதி வழங்கல் நிகழ்வு அண்­மையில் தல­வாக்­க­லையில் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. ஊட்­டு­வள்­ளி­புரம் கிராம மக்­க­ளுக்­கென்றே இவ்­வாறு காணி­யு­று­திகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இங்கு உரை நிகழ்த்­திய அமைச்சர் திகாம்­பரம் மலை­யக மக்­களின் இரு­நூறு வருட கால வர­லாற்றில் அவர்கள் இப்­போ­துதான் லயன் வாழ்க்­கை­யிலும் இருந்து தனி­வீ­டு­களில் வாழ்­கின்ற அத்­தி­யாயம் ஆரம்­ப­மாகி இருக்­கின்­றது. அத்­தோடு புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள வீடு­க­ளுக்கு காணி உறு­திப்­பத்­தி­ரங்கள் ஜனா­தி­ப­தியின் கரங்­களால் வழங்­கப்­பட்­டுள்­ளன. மலை­யக மக்கள் அனை­வரும் ஒற்­று­மை­யாக இருந்தால் அனை­வரும் காணி உரி­மையை பெற்­றுக்­கொள்ளும் நாள் விரைவில் உத­ய­மாகும் என்று கேட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றார்.

காணி உறுதி வழங்கும் இந்­நி­கழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மை­யாரும் கலந்து கொண்டு பேசி இருந்தார். தோட்டத் தொழி­லா­ளர்கள் சிறிய வீடு­களில் மிகவும் சிக்­கல்­க­ளுக்கு மத்­தியில் வாழ்­கின்­றமை தொடர்பில் அவர் தனது கவ­லையை வெளி­யிட்­டி­ருந்தார்.

மேலும் 1994 இல் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்­சினை உரு­வாக்கி தொண்­ட­மா­னிடம் ஒப்­ப­டைத்­தமை தொடர்­பிலும் அவர் நினை­வு­ப­டுத்தி இருந்தார். இந்த நாட்டில் அனைத்து மக்­களும் அனைத்து உரி­மை­க­ளையும் அனு­ப­விக்க வேண்டும். வடக்கு, கிழக்கு, தெற்கு, மலை­யகம் உட்­பட அனை­வரும் இன பேத­மின்றி சுமு­க­மான வாழ்­வினைக் கொண்டு நடாத்த வேண்டும். அதற்­காக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இணைந்து செயற்­பட்டு வரு­வ­தா­கவும் சந்­தி­ரிகா தெரி­வித்­தி­ருந்தார். சட்ட உறுதி கொண்ட காணி பத்­தி­ரங்­களை வழங்­கி­யி­ருப்­பது மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது. இத்­திட்டம் மேலும் பய­னுள்ள வகையில் விஸ்­த­ரிக்­கப்­ப­டுதல் வேண்டும்.

 

இந்­தியா, பிரித்­தா­னி­யாவின் வகி­பாகம் 

எமது முன்­னோர்கள் தமி­ழ­கத்தில் இருந்து இங்கு அழைத்­து­வ­ரப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அம்­மக்­களை இந்­தியா இங்கு அனுப்­பி­ வைத்­த­ கை­யோடு இந்­தி­யாவின் பணி முடிந்து விட­வில்லை. அம்­மக்­களின் நலன்­களில் தொடர்ந்தும் அக்­கறை செலுத்த வேண்­டிய கட­மையும், பொறுப்பும் இந்­தி­யா­வுக்கு இன்றும் இருந்து கொண்டே இருக்­கின்­றது என்­ப­தனை எவரும் மறந்து விடுதல் கூடாது. இந்­தி­யாவின் பிரச்­சி­னைகள் இலங்­கை­யிலும், இலங்­கையின் பிரச்­சி­னைகள் இந்­தி­யா­விலும் கணி­ச­மான தாக்­கத்­தினை கடந்த காலங்­களில் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. இன்னும் ஏற்­ப­டுத்­தியும் வரு­கின்­றன. தமி­ழ­கத்தில் தமி­ழர்­க­ளுக்கு ஒரு பிரச்­சினை என்றால் இங்­குள்ள தமி­ழர்­களின் கண்­களில் கண்ணீர் வடி­கின்­றது.

அதைப்­போன்றே இங்­கி­ருக்கும் தமி­ழர்­க­ளுக்கு ஒரு பிரச்­சினை என்றால் தமி­ழக மக்கள் கண்ணீர் வடிக்­கின்­றார்கள். இந்­திய, இலங்கை உற­வுகள் புனிதம் மிக்­கவை. தொப்புள் கொடி உறவு தமி­ழர்­களின் உறவு. எனவே தனது பூர்­வீக மக்­களை இந்­தியா உரி­ய­வாறு பாது­காக்க வேண்டும். இந்­திய வம்­சா­வ­ளி­யினர் இன்னும் இந்த நாட்டில் ஒடுக்­கப்­பட்ட, பின் தள்­ளப்­பட்ட சமூ­க­மா­கவே இருந்து வரு­வது வேதனை மிக்­க­தாகும். என்­னதான் கூறப்­பட்ட போதும் மலை­யக சமூ­கத்தின் எழுச்­சிக்கு ஆட்­சியில் இருக்கும் அர­சுகள் காத்­தி­ர­மான பங்­க­ளிப்­பினை வழங்­க­வில்லை என்­பதே உண்மை நிலை­யாகும்.

இந்­நி­லையில் இந்­தியா தனது உத­வி­களை இந்­திய வம்­சா­வளி மக்­களின் நலன்­க­ருதி பெற்றுக் கொடுப்­ப­தோடு இலங்கை அர­சாங்கம் பல்­வேறு உத­வி­களை இம்­மக்கள் தொடர்­பாக வழங்­கு­வ­தற்கு உரிய அழுத்­தத்­தினை வழங்­குதல் வேண்டும். 1820 காலப்­ப­கு­தியில் எமது முன்­னோர்கள் இங்கு அழைத்­து­வ­ரப்­பட்ட நிலையில் அக்­கா­லத்தில் இருந்த பிரித்­தா­னி­யா­வுக்கும் இம்­மக்­களின் நலனில் அக்­கறை செலுத்த வேண்­டிய தேவைப்­பாடு காணப்­ப­டு­கின்­றது.

தொழில்­வாய்ப்பு, வீட­மைப்பு, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள், கல்வி மற்றும் விளை­யாட்­டுத்­துறை அபி­வி­ருத்தி என்று பல்­துறை சார்ந்த வகையில் இவ் உத­விகள் அனைத்தும் அமை­தலும் வேண்டும். பிரித்­தா­னி­யாவின் முக்­கி­யஸ்­தர்கள் இலங்­கைக்கு வருகைத் தரும்­போது தோட்டத் தொழி­லா­ளர்கள் ஒப்­பனை செய்து அவர்கள் முன் நிறுத்­தப்­ப­டு­வ­தனை எம்மால் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

இது தோட்டத் தொழி­லா­ளர்­களின் உண்­மை­யான துன்ப, துயர நிலை­மை­களை மூடி மறைக்­கின்ற ஒரு செய­லாக உள்­ளது. கடந்த காலத்தில் இத்­த­கைய பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­மையை நீங்கள் அறி­வீர்கள். பிரித்­தா­னியா இத்­த­கைய ஒப்­ப­னை­களைக் கண்டு ஏமாந்து விடாது தொழ­ிலா­ளர்­களின் உண்­மை­யான நிலை­யினை அறிந்து உத­வு­வ­தற்கு முன்­வ­ருதல் வேண்டும். இந்­தி­யா­வுக்கும் இத­னையே கூற வேண்டி இருக்­கின்­றது. தொப்புள் கொடி உற­வென்று கூறி­விட்டு வெறு­மெனே பார்த்துக் கொண்டு இருந்­து­வி­டக்­கூ­டாது.

 

மேல­திக இந்­திய வீடமைப்புத் தேவை

இந்­தியா, இந்­திய வம்­சா­வளி மக்­களின் நலன் கருதி நான்­கா­யிரம் வீடு­களை அமைத்துக் கொடுக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இதற்­கான அடிக்கல் நாட்டு நிகழ்­வு­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­நி­லையில் மலை­யக மக்­களின் வீட்­டுத்­தேவை இன்னும் இன்னும் அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில் இந்­தியா இன்னும் மேல­திக வீடு­களை இலங்­கைக்கு அமைத்துக் கொடுக்க முன்­வ­ருதல் வேண்­டு­மென்ற கோரிக்­கை­யொன்றும் இப்­போது விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இத­ன­டிப்­ப­டையில் இப்­போ­தைக்கு குறைந்­த­பட்சம் பத்­தா­யிரம் வீடு­க­ளா­வது இந்­தியா மேல­தி­க­மாகக் கட்டிக் கொடுக்க உடன்­ப­டுதல் வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. உண்­மையில் மலை­யக மக்­களின் வீட்­டுத்­தே­வையை பூர்த்­தி­செய்­வ­தற்கு இத்­த­கைய உத­விகள் மிகவும் அவ­சி­ய­மா­கவே உள்­ளன. இந்­நி­லையில் அண்­மையில் இலங்­கைக்கு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருந்த இந்­திய வெளி­யு­றவு செய­லாளர் ஜெய்­சங்கர் மேல­திக இந்­திய வீட­மைப்­புத்­திட்டம் குறித்து மிக சாத­க­மாக பரி­சீ­லிக்­கப்­படும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

 

அவர் மேலும் கூறு­கையில் தற்­ச­மயம் இந்­திய அர­சாங்­கத்தின் நிதி உத­வி­யோடு மலை­ய­கத்தில் 4000 வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த வீடு­களின் தொகை இன்னும் மேல­திக தொகை­யினால் அதி­க­ரிக்­கப்­ப­டு­வது தொடர்பில் மிக சாத­க­மாக பரி­சீ­லிக்­கப்­படும். காணி உறுதி பய­னா­ளி­க­ளுக்கு பெற்றுத் தரப்­ப­டு­வதால் இது சாத்­தி­ய­மாகி உள்­ளது. மேலும் வீட­மைப்பு, தொழி­ல்நுட்­பக்­கல்வி, அடிப்­படை சுகா­தாரம் போன்ற விட­யங்­களில் மலை­ய­கத்தில் வாழ்­கின்ற பின்­தங்­கிய தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இந்­தி­யாவின் ஒத்­தா­சைகள் பெறப்­ப­டு­வது தொடர்­பான உறுதி மொழி­க­ளையும் வெளி­யு­றவு செய­லாளர் ஜெய்­சங்கர் வழங்­கி­யுள்­ளமை மகிழ்ச்­சிக்­கு­ரிய ஒரு விட­ய­மாக உள்­ளது. மலை­யக மக்­களின் எழுச்­சியில் ஜெய்­சங்­கரின் வருகை நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது.

இந்­நி­லையில், மலை­யக அர­சி­யல்­வா­திகள் ஒன்­று­பட்டு மலை­யக மக்­களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்தல் வேண்டும். தனது அர­சியல் நலன்­க­ளுக்­காக மலை­யக மக்­களின் வீட­மைப்பு நட­வ­டிக்­கை­களை அர­சி­யல்­வா­திகள் கைகளில் எடுக்­காது வீட­மைப்பு நட­வ­டிக்­கை­களை ஒரு சமூ­கத்தின் உரி­மை­யாகக் கருதி செயற்­ப­டுத்த ெயற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-25#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.