Jump to content

திருப்பித்தாக்க போகிறதா ஐ. நா?


Recommended Posts

திருப்பித்தாக்க போகிறதா ஐ. நா?

 

ரொபட் அன்­டனி

கடந்த இரண்டு பிர­தான தேர்­தல்­களில் அர­சாங்கம் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணையின் பிர­காரம் செயற்­ப­டு­வதா அல்­லது தென்­னி­லங்­கையின் கடும் போக்­கு­வாத சக்­தி­க­ளுக்கு அடி பணிந்து நல்­லி­ணக்க பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தாமல் விடு­வதா என்­பது தொடர்பில் அர­சாங்கம் தீர்­மானம் எடுக்க வேண்­டிய கட்டம் வந்­துள்­ளது.  

 

மிகவும் காட்­ட­மா­கவே வரப்­போ­கின்­றது செய்ட் அல் ஹுசேனின் இலங்கை தொடர்­பான அறிக்கை... இலங் கைக்கு இம்­முறை சற்றுக் கடி­ன­மா­கவே ஜெனிவா கூட்டத் தொடர் இருக்­கப்­போ­கின்­றது.. கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச சமூ­கமும் ஐக்­  கிய நாடுகள் சபையும் வழங்­கிய சாத­க­மான சந்­தர்ப்­பங்கள் இனியும் கிடைக்­குமா என்­பது சந்­தே­கத்­துக்­கி­ட­மா­ன­தா கும். எனவே இம்­முறை இலங்கை அர­ சாங்­கத்தை இறுக்­கிப்­பி­டிப்­ப­தா­கவே ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் அமை­யப்­போ­கின்­றது..   

அர­சாங்கம் எவ்­வாறு இதனை சமா­ளிக்­கப்­போ­கின்­றது? எதிர்­கா­லங்­களில் எதனை செய்­யப்­போ­வ­தாக அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­போ­கின்­றது? இதுதான் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடர் தொடர்­பாக அனை­வரின் மத்­தி­யிலும் உலா­வரும் கருத்­துக்­க­ளாக உள்­ளன. தமது காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி மக்கள் நடத்தி வரு­கின்ற போராட்­டங்கள், காணாமல் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­ட­றி­யு­மாறு வலி­யு­றுத்தி மக்கள் முன்­னெ­டுக்கும் போராட்டம், தென்­னி­லங்­கையில் அர­சியல் கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான போட்­டிகள், தென்­னி­லங்கை போராட்­டங்கள் என நாட்டின் அர­சியல் நிலை­மைகள் பர­ப­ரப்­பா­கவே காணப்­ப­டு­கின்­றன.

அதே­போன்று ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் உள்­நாட்டில் காணி விடு­விப்பு போராட்­டங்கள், காணா­மல்­போ­னோரை விடு­விக்க கோரும் போராட்­டங்­களும் இடம்­பெற்று வரு­கின்­ற­மை­யா­னது இந்த விட­யத்தை மேலும் சூடு­பி­டிக்க வைத்­தி­ருக்­கின்­றது.

அந்த வகையில் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் தமக்கு கால அவ­கா­சத்தை வழங்­கு­மாறு இலங்கை அர­சாங்கம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்­றது. அதா­வது நல்­லி­ணக்­கத்­திலும் பொறுப்­புக்­கூ­ற­லிலும் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்­கு­மாறு கோரி வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஜெனிவா கூட்டத் தொடரில் கோரிக்கை முன்­வைக்க இருக்­கின்றார். கடந்த புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இந்த விட­யத்தை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

அதா­வது "" நாட்­டுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் ஐக்­கிய நாடுகள் சபையின் தீர்­மா­னங்­க­ளுக்கு நாம் ஒரு­போதும் இணங்க மாட்டோம். சர்­வ­தே­சத்­திற்கு அடி­ப­ணிந்து பொறுப்பு கூறல் செயன்­மு­றையை முன்­னெ­டுக்­க­வில்லை. நேர்­மை­யா­கவே செயற்­ப­டு­கின்றோம். ஐ.நா. சபையின் தீர்­மா­னங்­களை நிறை­வேற்ற எமக்கு இன்னும் காலம் அவ­சி­ய­மாகும் என வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

அத்­துடன் சர்­வ­தேச அழுத்­தத்­திற்கு அடி­ப­ணிந்து பொறுப்பு கூறல் செயல் முறையை முன்­னெ­டுக்­க­வில்லை. கடந்த கால தவ­றுகள் மீளவும் இடம்­பெ­றாமல் இருக்கும் நோக்­கு­டனேயே உறு­தி­யான போக்­குடன் செயற்­பட்டு வரு­கின்றோம். அத்­துடன் நாட்­டுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் எந்­த­வொரு தீர்­மா­னத்­திற்கும் நாம் இணக்கம் தெரி­விக்க போவ­தில்லை.

இது­வ­ரைக்கும் 4100 ஏக்கர் காணிகள் விடுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளன. இது தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். விரைவில் பல காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளன. அர­சியல் கைதிகள் தொடர்­பிலும் காத்­தி­ர­மான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும்"" என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இதன்­மூலம் சர்­வ­தே­சத்தின் அழுத்­தங்­க­ளுக்கு அடி­ப­ணியப் போவ­தில்லை என்றும் கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட ஐ.நா. தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்கு இன்னும் கால­அ­வ­காசம் வேண்டும் என்றும் அர­சாங்கம் தெரி­வித்­தி­ருக்­கி­றது. அந்த கோரிக்­கையை நியா­யப்­ப­டுத்­தவும் விட­யங்­களை முன்­வைத்­துள்­ளது.

இந்­நி­லையில் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்கும் வகை­யி­லான பிரே­ர­ணை­யொன்றும் நிறை­வேற்­றப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பிரிட்டன் அர­சாங்­கத்­தினால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள இந்த பிரே­ர­ணைக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் அங்கம் வகிக்கும் ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள் இணை அனு­ச­ரணை வழங்கும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அந்த வகையில் அர­சாங்கம் எதிர்­பார்க்கும் கால அவ­காசம் இம்­முறை ஜெனி­வாவில் கிடைக்­க­வுள்­ள­தா­கவே பெரும்­பாலும் கரு­தப்­ப­டு­கி­றது. ஆனால் அர­சாங்கம் இந்த கால அவ­கா­சத்தை பயன்­ப­டுத்தி நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­துமா? மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வை காணுமா? நீண்­ட­கால மக்­களின் குறை­களை தீர்த்து வைக்­குமா என்ற கேள்­விகள் பர­வ­லா­கவே எழு­கின்­றன. அவ்­வா­றில்­லாமல் இந்த கால அவ­கா­சத்தை பயன்­ப­டுத்தி அர­சாங்கம் மேலும் விட­யத்தை இழுத்துக் கொண்டு செல்­லுமா என்ற கேள்­வியும் எழு­கின்­றது.

ஆனால் அர­சாங்கம் எதிர்­பார்க்­கின்ற வகை­யி­லான கால அவ­காசம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் கிடைத்­தாலும் இலங்கை அர­சாங்­கத்­திற்கு மிக அதி­க­மான சாத­க­மான தன்மை இம்­முறை ஜெனி­வாவில் இருக்கும் என்று கரு­தப்­பட முடி­யாது.

 கடந்த 2015 ஆம் அண்டு ஜெனிவா பிரே­ர­ணையை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது தொடர்­பான அறிக்­கையை வெளியி­ட­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் மேலும் பல்­வேறு விட­யங்­களை வலி­யு­றுத்­துவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பிர­சன்­னத்­துடன் கூடிய பொறுப்­புக்­கூறல் விசா­ரணைப் பொறி­மு­றையை தனது அறிக்­கையில் செயிட் அல் ­ஹுசேன் மீண்டும் வலி­யு­றுத்­துவார் என கரு­தப்­ப­டு­கி­றது. எனவே அர­சாங்கம் எதிர்­பார்க்­கின்ற வகை­யி­லான சாத­க­மான நிலைமை இம்­முறை ஜெனிவா களத்தில் காணப்­ப­டாது என்றும் அர­சாங்கம் சில விட­யங்­களில் கடு­மை­யாக விமர்­சிக்­கப்படும் எனவும் கூறப்­ப­டு­கி­றது.

புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்து இரண்டு வரு­டங்கள் கடந்து விட்­ட­போ­திலும் நல்­லி­ணக்க பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் இது­வரை திருப்தி தரக்­கூ­டிய முன்­னேற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இது­வரை பொறுப்­புக்­கூறல் பொறி­முறை வடி­வ­மைக்­கப்­ப­ட­வில்லை. ஒரு சில விட­யங்­களில் அர­சாங்கம் மக்­களின் நம்­பிக்கை மேலொங்கும் வகையில் சில முன்­னேற்­ற­க­ர­மான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது என்­பதை நாம் அனை­வரும் ஏற்றுக் கொண்­டாக வேண்டும்.

தென்­னி­லங்­கையில் கடும் போக்­கு­வா­தி­களின் கடும் எதிர்ப்­புக்­க­ளுக்கும் இடை­யூ­று­க­ளுக்கும், முட்­டுக்­கட்­டை­க­ளுக்கும் மத்­தி­யி­லேயே அர­சாங்கம் நல்­லி­ணக்க விட­யத்தில் ஒரு சில முன்­னேற்­றங்­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. எனினும் புதிய அர­சாங்­கத்­துக்கு கிடைத்­துள்ள மக்கள் ஆணையின் பிர­காரம் அர­சாங்கம் பாரிய முன்­னேற்றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும்.

 அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களில் எந்­த­வொரு தரப்பும் தற்­போது திருப்தி இல்­லா­ம­லேயே இருக்­கின்­றது. விசே­ட­மாக மக்­களின் காணி விடு­விப்பு விவ­காரம், காணா­மல்­போனோர் நிலைமை உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­க­ளுக்கு இது­வரை தீர்வு காணப்­ப­டாமல் உள்­ளது.

இந்த நிலையில் இலங்­கைக்கு கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் விஜயம் மேற்­கொண்ட சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களில் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா மிகவும் வலு­வான பரிந்­து­ரைகள் அடங்­கிய அறிக்­கை­யொன்றை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கு சமர்ப்­பித்­தி­ருக்­கிறார். அதில் முக்­கி­ய­மான விட­யங்கள் பரிந்­து­ரை­க­ளாக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதி­லுள்ள முக்­கி­ய­மான சில பரிந்­து­ரை கள் கீழே தரப்­ப­டு­கின்­றன.   

"சிறு­பான்மை மக்கள் உயர்­மட்ட தீர்­மானம் எடுக்கும் நிலை­க­ளுக்கு உள்­ளீர்க்­கப்­பட வேண்டும். நல்­லாட்­சியின் செயற்­பா­டுகள் வெற்­றி­பெ­று­வ­தற்கு சமூ­கத்தின் நம்­பிக்கை மீளு­ரு­வாக்­கப்­பட வேண்டும். கடந்த கால தவ­றுகள் தொடர்­பாக பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுப்­ப­துடன் இலங்­கை­யர்­களின் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மாகும்.

எனவே சிறு­பான்மை மக்­களின் உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான கட்­ட­மைப்பை அர­சாங்கம் கால அட்­ட­வ­ணை­யுடன் முன்­வைக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். காணா­மல்­போ­னோரை கண்­ட­றி­வ­தற்­கான அலு­வ­லகம் விரை­வாக இயங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

மேலும் சிறு­பான்மை மக்­களின் விட­யங்­களை ஆராயும் நோக்கில் அர­சி­ய­ல­மைப்­புக்­குட்­பட்ட விசேட சுயா­தீன ஆணைக்­குழு நிறு­வப்­பட வேண்டும். இந்த ஆணைக்­கு­ழு­வுக்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும். இதில் சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­திகள் இடம்­பெற வேண்டும்.

சிறு­பான்மை மக்­களின் அர­சியல் பங்­க­ளிப்­பா­னது பல வழி­களில் முன்­னெ­டுக்­கப்­ப­டலாம். சமஷ்டி முறை­மை­யி­லான அதி­கா­ரங்­களை பகிரும் முறைமை, பாரா­ளு­மன்­றத்தில் ஒதுக்­கப்­பட்ட ஆசன முறைமை என்­பன ஊடாக செய்­யப்­ப­டலாம். எதிர்­கால தேர்தல் முறை மாற்­றங்­க­ளா­னது அனைத்து சிறு­பான்மை மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டாக அமைய வேண்டும். அர­சியல் உள்­ளீ­டு­களில் சிறு­பான்மை மக்­களின் நேர்­மை­யான அழுத்­தங்கள் உள்­  ளீர்க்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  

வெறுக்­கத்­தக்க பேச்­சுக்கள் மூல­மாக அநீ­தி­க­ளுக்கு உட்­ப­டுத்­து­கின்­ற­வர்­க­ளையும் வன்­மு­றை­களை தூண்­டு­கின்­ற­வர்­க­ளையும் சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும். இன மற்றும் மத ரீதி­யாக வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வர்­களை தண்­டிக்­காமல் இருக்கும் கலா­சாரம் நிறுத்­தப்­பட வேண்டும்.

அர­சாங்கம் பிராந்­திய மட்­டங்கள் உள்­ளிட்ட அனைத்து மட்­டங்­க­ளிலும் சிறு­பான்மை மக்­களின் வழி­பாட்டுத் தலங்­க­ளையும் பாரம்­ப­ரிய பிர­தே­சங்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

யுத்­தத்தின் பின்­ன­ரான இலங்­கையில் அமை­தி­யான சக­வாழ்வை உறு­திப்­ப­டுத்த அர­சாங்கம் விரி­வான திட்­ட­மி­டப்­பட்ட ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட உண்­மையைக் கண்­ட­றிதல், நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­குதல், காயங்­களை ஆற்­றுதல் ஆகி­ய­வற்றை முன்­னெ­டுக்க வேண்டும். இதற்­கான பொறுப்­புக்­கூறல் செயற்­பாடு இடம்­பெ­றுதல் வேண்டும்.

அர­சாங்கம் முன்­னு­ரிமை நட­வ­டிக்­கை­யாக வடக்கில் படை­யினர் வசம் காணப்­ப­டு­கின்ற பொது­மக்­களின் 6124 ஏக்கர் காணிகள் உட­ன­டி­யாக முதன்மை அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லி­ருந்து இரா­ணுவம் அகற்­றப்­ப­டு­கின்­ற­மை­யா­னது மக்­களின் அன்­றாட வாழ்க்­கைக்கு முக்­கி­ய­மா­னது மட்­டு­மன்றி ஒரு அடை­யா­ளத்­துக்­கா­கவும் செய்­யப்­பட வேண்டும்.

கடந்த1990 ஆம் ஆண்டு புலி­க­ளினால் வெ ளியேற்­றப்­பட்ட மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­பட வேண்டும். இதற்­காக அர­சாங்­கமும் சர்­வ­தேச சமூ­கமும் தேவை­யான நட­வ­டிக்­கை­களை அவ­ச­ர­மாக முன்­னெ­டுக்க வேண்டும். தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் நிலை­மைகள் உட­ன­டி­யாக மீளாய்வு செய்­யப்­பட வேண்டும்.

அநீ­தி­க­ளினால் சிறு­பான்மை பெண்­களும் பிள்­ளை­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இது தொடர்பில் அர­சாங்கம் ஆராய வேண்டும். யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட பெண்­களை தலை­மைத்­து­வ­மாகக் கொண்ட குடும்­பங்­க­ளுக்கு அர­சாங்கம் உட­ன­டி­யாக வாழ்­வா­தார உத­வி­களை செய்ய வேண்டும். பெண்­களின் குரல்கள் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் செவி­ம­டுக்­கப்­பட வேண்டும்.

மலை­யக தமிழ் மக்­க­ளுக்­காக விசேட திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் அடுத்த ஐந்து வரு­டங்களில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். குடும்­பங்­க­ளுக்கு 7 பேர்ச்சஸ் காணி­களை வழங்கும் செயற்­பாட்டில் தோட்ட முகா­மைத்­து­வங்கள் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்"" இவ்­வாறு மிக முக்­கி­ய­மான பரிந்­து­ரைகள் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான ஐ.நா.வின் விசேட நிபு­ண­ரினால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.   

இந்த வகையில் கடந்த காலங்­களில் ஜெனி­வாவில் காணப்­பட்­டதைப் போன்று மிகவும் சாத­க­மான நிலை­மைகள் இம்­மு­றையும் இருக்கும் என அர­சாங்கம் எதிர்­பார்க்க முடி­யாது. எனவே அர­சாங்­க­மா­னது மிகவும் வலு­வான மற்றும் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டி­ய­வ­ாறான விட­யங்­களை ஜெனி­வாவில் இம்­முறை முன்­வைக்க வேண்டும்.

கடந்த கூட்டத் தொடரில் அர­சாங்கம் முன்­வைத்த வாக்­கு­று­திகள் இது­வரை முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இந் நிலையில் இம்­முறை அர­சாங்கம் சரி­யான வகை­யி­லான விட­யங்­களை முன்­வைப்­பது அவ­சி­ய­மா­கின்­றது.

தமிழ் மக்­களை பொறுத்­த­வ­ரையில் கடந்த கால யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் நீண்­ட­கா­ல­மாக நீதி கிடைக்­காமல் காத்­தி­ருக்­கின்­றனர். அவர்­க­ளுக்­கான நீதியை வழங்கும் விட­யத்தில் அர­சாங்கம் தொடர்ந்தும் தாம­தித்துக் கொண்­டி­ருக்­கக்­கூ­டாது.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியும் நிவா­ர­ணமும் வழங்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்­ட­தது. ஆனால் அது முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதன்­பின்னர் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்­டு­களில் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­களில் இலங்­கையில் நம்­ப­க­ர­மான உள்­ளக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டது.

எனினும் அப்­போ­தைய அர­சாங்கம் அந்த பிரே­ர­ணை­களை நிரா­க­ரித்­த­துடன் அவ்­வாறு எவ்­வி­த­மான உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­யையும் முன்­னெ­டுக்­க­வில்லை. இந் நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணையில் இலங்கை விவ­காரம் தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் விசா­ரணை நடத்த வேண்டும் என பரிந்­துரை செய்­யப்­பட்­டது. அப்­போ­தைய அர­சாங்கம் அதனை நிரா­க­ரித்த போதிலும் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் ஜெனிவாவில் இருந்தவாறு விசாரணைகளை முன்னெடுத்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா.வின் விசாரணை அறிக்கை ஜெனி வாவில் வெளியிடப்பட்டது. அதில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. முக்கிய மாக கலப்பு நீதிமன்ற பொறிமுறை முன் வைக்கப்பட்டது. தொடர்ந்து அதனை அடியொட்டியதாக அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது.  

அந்த பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணையும் வழங்கியது. அதில் கலப்பு நீதிமன்ற பரிந்துரை இல்லாவிடினும் சர்வதேச நீதிபதிகளுடன் கூடிய விசாரணைப் பொறிமுறை முன்வைக்கப்பட்டிருந்தது. அதனை அமுல்படுத்துவதாக ஏற்றுக் கொண்டு பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய அரசாங்கம் கடந்த 18 மாதங்களாக சில நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் பிரேரணையை முழுமையாக அமுல்படுத்தவில்லை.

அதனாலேயே தற்போது மற்றுமொரு பிரேரணையை தாக்கல் செய்ய வேண்டிய நிலைப்பாட்டில் சர்வதேச நாடுகள் காணப்படுகின்றன. அதன்படி தற்போது அரசாங்கத்தின் முன் பாரிய சவால்கள் காணப்படுகின்றன.

கடந்த இரண்டு பிரதான தேர்தல்களில் அரசாங்கம் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணையின் பிரகாரம் செயற்படுவதா அல் லது தென்னிலங்கையின் கடும் போக்குவாத சக்திகளுக்கு அடி பணிந்து நல்லிணக்க பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் முன்னேற் றத்தை ஏற்படுத்தாமல் விடுவதா என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டம் வந்துள்ளது.

இந்த விடயத்தில் தமிழர் தரப்பு பிரதி நிதிகளும் இராஜதந்திர ரீதியில் தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண் டும். நீதிக்காக நீண்டகாலமாக காத்திருக்கும் மக்களுக்கு அதனை தொடர்ந்து இழுத் தடித்துக் கொண்டிருக்கக்கூடாது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-25#page-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.