Jump to content

நான்கு விவாதங்கள்; மூன்று அறிக்கைகள்; பிரிட்டனின் இலங்கை குறித்த பிரேரணை திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது ஜெனிவா சமர்


Recommended Posts

நான்கு விவா­தங்கள்; மூன்று அறிக்­கைகள்; பிரிட்­டனின் இலங்கை குறித்த பிரே­ரணை

p18-5fd8f142b4800be0d87df693dfeeae0a602a0c16.jpg

 

திங்­கட்­கி­ழ­மை ­ஆ­ரம்­ப­மா­கின்­ற­து ­ஜெ­னி­வா ­சமர்

 

மார்ச் 2, 15, 22,ஆம் திக­தி­களில் இலங்கை குறித்த விவா­தங்கள்     
23 ஆம் திகதி இலங்கை குறித்த பிரே­ரணை மீது வாக்­கெ­டுப்பு                

 

 

(ரொபட் அன்­டனி) 

 

இலங்கை தொடர்­பாக நான்கு நாட்கள் விவா­தங்கள் மூன்று அறிக்­கைகள் விசேட பிரே­ரணை ஆகி­ய­வற்­றுடன் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­கின்­றது.

எதிர்­வரும் மார்ச் 24 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் இலங்கை தொடர்­பாக பிரே­ரணை மார்ச் 23ஆம் திகதி வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­ட­வுள்­ளது.

ஐ.நா. செயலர் உரை

திங்­கட்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள ஆரம்ப அமர்வில் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் உள்­ளிட்டோர் உரை­யாற்­ற­வுள்­ளனர். இதன்­போது இலங்கை தொடர்­பா­கவும் பிரஸ்­தா­பிக்­கப்­படும் சாத்­தியம் உள்­ளது.   

இம்­முறை கூட்டத் தொடர் இலங்­கைக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது. விசே­ட­மாக கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் எழுத்­து­மூல அறிக்­கையை எதிர்­வரும் 22 ஆம் திகதி சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை தொடர்­பான விவாதம் பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களும் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களும் இலங்கை தொடர்­பாக உரை­யாற்­ற­வுள்­ளனர்.

விவா­தங்கள்

அத்­துடன் எதிர்­வரும் இரண்டாம் திக­தியும் 15 ஆம் திக­தியும் ஐ.நா. விசேட நிபு­ணர்­களின் இலங்கை தொடர்­பான அறிக்­கைகள் குறித்த விவா­தமும் 23 ஆம் திகதி இலங்கை தொடர்­பான பிரே­ரணை குறித்த விவா­தங்­களும் நடை­பெ­ற­வுள்­ளன.

சிறு­பான்மை மக்­களின் விட­யங்­களை ஆராயும் ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடி­யாவின் இலங்கை தொடர்­பான அறிக்கை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பான விவாதம் எதிர்­வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இதன்­போது தனது இலங்கை தொடர்­பான அறிக்­கையின் சுருக்­கத்தை ஐ.நா. விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் மனித உரிமை பேர­வையில் முன்­மொ­ழிவார். தொடர்ந்து உறுப்பு நாடுகள் தமது நிலைப்­பா­டு­களை முன்­வைக்கும்.

இதே­வேளை சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் முன்­வைத்த அறிக்கை தொடர்­பான விவாதம் எதிர்­வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த விவா­தத்­திலும் இலங்கை தொடர்­பாக சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் முன்­வைத்த அறிக்­கையின் பரிந்­து­ரை­களை மேற்­கோள்­காட்டி உறுப்பு நாடுகள் உரை­யாற்­ற­வுள்­ளன.

இந்த மாதத்தின் ஆரம்­பத்தில் இலங்கை தொடர்­பான அறிக்­கையை முன்­வைத்­தி­ருந்த சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் இலங்­கையில் இன்னும் சித்­தி­ர­வ­தைகள் தொடர்­வ­தா­கவும் அர­சாங்கம் ரோம் பிர­க­ட­னத்தில் கைச்­சாத்­தி­ட­வேண்டும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

மங்­கள 28 ஆம் திகதி உரை

இம்­முறை கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வினர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட உயர் மட்ட அதி­கா­ரிகள் இந்தக் கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­டு­கி­றது. ஜெனி­வா­வி­லுள்ள ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இலங்கை அலு­வ­ல­கத்தின் பிர­தி­நி­தி­களும் இலங்கை தூதுக்­கு­ழு­வுடன் இணைந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர எதிர்­வரும் 28 ஆம் திகதி ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்­கையின் சார்பில் உரை­யாற்­ற­வுள்ளார்.

கால அவ­காசம் கோரப்­படும்

இதன்­போது கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்கள் மற்றும் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்­துதல் ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­துதல் உள்­ளிட்­டவை தொடர்பில் விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.

அது மட்­டு­மன்றி பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க விட­யத்தில் அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள முன்­னேற்­ற­க­ர­மான வேலைத்­திட்­டங்கள் குறித்தும் வெ ளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஐக்­கிய நாடுகள் சபைக்கு விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார். அத்­துடன் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் அவ­காசம் வேண்டும் என்றும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர கோரிக்கை விடுக்­க­வுள்ளார்.

இலங்கை தொடர்பில் மற்­று­மொரு பிரே­ரணை  

இதே­வேளை 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்கும் வகை­யி­லான பிரே­ரணை ஒன்று முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதா­வது இலங்­கைக்கு நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்க மேலும் கால அவ­கா­சத்தை வழங்கும் நோக்­கி­லேயே இவ்­வாறு பிரே­ர­ணை­யொன்று முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களின் பிரிவே இந்த பிரே­ர­ணையை முன்­வைக்­க­வுள்­ளன. இதன்­போது பிரிட்டன் இதற்கு தலை­மை­தாங்கி இதனை முன்­வைக்கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த பிரே­ரணை குறித்த வாக்­கெ­டுப்பு மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடை­பெறும். இலங்கை அதற்கு இணை அனு­ச­ரணை வழங்­கினால் ஒரு­வேளை வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டாமல் கடந்த முறை போன்று ஏக­ம­ன­தாக பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டலாம்.

அல் ஹுசேனின் அறிக்கை

இது இவ்­வாறு இருக்க மார்ச் மாதம் 22 ஆம் திகதி இலங்கை தொடர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்ள நிலையில் அன்­றைய தினம் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை குறித்த தனது அறிக்­கையை வெளி­யி­ட­வி­ருக்­கின்றார். அதற்கு முன்னர் அறிக்கை வெ ளிவரும் என்­றாலும் அன்­றைய தினமே உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெ ளியி­டப்­படும்.

இந்த அறிக்­கை­யில்­நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்க இலங்­கைக்கு கால அவ­கா­சத்­தையும் அல் ஹுசேன் பிரே­ரிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதனை அடி­யொட்­டி­ய­தா­கவே பிரிட்டன் கொண்­டு­வ­ர­வுள்ள பிரே­ரணை அமையும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. "

பல்­வேறு நாடுகள் பங்­கேற்பு

கூட்டத் தொடரில் பிரிட்டன், அவுஸ்­தி­ரே­லியா, சுவிடன், பிரான்ஸ், டென்மார்க், நெதர்­லாந்து, கனடா, பெல்­ஜியம் உள்­ளிட்ட நாடு­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ள நிலையில் அவர்கள் இலங்கை விக­வாரம் தொடர்­பிலும் பிரஸ்­தா­பிப்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

டென்­மார்க்கின் வெளி­வி­வ­கார அமைச்சர் அன்டஸ் சாமுவேல் சென், நெதர்­லாந்தின் வெளி­வி­வ­கார அமைச்சர் பேர்ட் கொன்டஸ், கன­டாவின் வெளி­வி­வ­கார அமைச்சர் கிரிஸ்­டியா பீரிலன், பிரான்ஸின் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீன் மார்க், பிரிட்­டனின் உள்­ளிட்­டோரும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

சுவீ­டனின் வெளி­வி­வ­கார அமைச்சர் மாகட் வோல்ஸ்ட்ரோம், பொது­ந­ல­வாய அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் பற்­றீ­சியா ஸ்கொட்லன்ட், சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கத்தின் தலைவர் பீட்டர் மோரேர் ஆகி­யோரும் ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஆரம்ப அமர்­வு­களில் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர்.

ரீட்­டாவின் அறிக்கை

இதே­வேளை கடந்த புதன்­கி­ழமை தனது இலங்கை விஜயம் குறித்த அறிக்­கையை முன்­வைத்த சிறுபான்மை மக்களின் நிலைமைகள் குறித்து ஆராயும் ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் வடக்கில் படையினர் வசம் காணப்படுகின்ற பொதுமக்களின் 6124 ஏக்கர் காணிகள் உடனடியாக முதன்மை அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்.

அத்துடன் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படுவதும் முக்கியமானதாகும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக முன்வைக்கப்படும் சட்டம் சர்வதேச தரங்களைப் பின்பற்ற வேண்டும். சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். காணாமற்போனோர் குறித்த அலுவலகம் உடன் இயங்கவேண்டும். சிறுபான்மை மக்களின் விடயங்களை ஆராய விசேட சுயாதீன ஆணைக்குழு தேவை போன்ற பரிந்துரைகளை முன்வைத்திருந்தார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-25#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.