Jump to content

புதிய அரசியல் சாசனம் வருட இறுதிக்குள் வேண்டும் அரசுக்கு அழுத்தமளிக்குமாறு அமெ.குழுவிடம் கூட்டமைப்பு கோரிக்கை


Recommended Posts

புதிய அர­சியல் சாசனம் வருட இறு­திக்குள் வேண்டும்

p21-1a05651d42bdd649943bf5c28183157c7b4659de.jpg

 

அர­சுக்கு அழுத்­த­ம­ளிக்­கு­மாறு அமெ.குழு­விடம் கூட்டமைப்பு கோரிக்கை 

(ஆர்.ராம்)

புதிய அர­சியல் சாசனத்தில் அதிகா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டுவது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என அமெ­ரிக்க சபை நீதித்­துறை காங்­கிரஸ் குழு­வி­னரை கேட்டுக்­கொண்ட எதிர்க் கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் இந்த வருட இறு­திக்குள் புதிய அர­சியல் சாசனம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு அழுத்­த­ம­ளிக்­கு­மாறும் கோரிக்கை விடுத்­துள்ளார். 

இலங்­கைக்கு விஜயம் செய்த அமெரிக்க சபை நீதித்­துறை தலைவர் பொப் குட்லட் தலை­மை­யி­லான எண்மர் கொண்ட அமெ­ரிக்க காங்­கிரஸ் குழு­வி­ன­ருக்கும் பிர­தான எதிர்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் இடை­யி­லான விசேட சந்­திப்­பொன்று நேற்று வௌ்ளிக்­கி­ழமை காலையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்­டலில் நடை­பெற்­றது. அமெ­ரிக்க காங்­கிரஸ் குழு­வி­ன­ருடன் இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேசாப் உள்­ளிட்ட தூத­ரக அதி­கா­ரி­களும் இச் சந்திப்பில் பங்­கேற்­றி­ருந்­தனர். 

எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்­க­ளான மாவை.சோ.சேனா­தி­ராஜா, செல்வம் அடைக்­க­ல­நாதன், தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் ஆகி­யோரும் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரனும் பங்­கு­கொண்­டி­ருந்­தனர். ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ்­பி­ரே­மச்­சந்­திரன் சுக­வீனம் கார­ண­மாக இச்­சந்­திப்பில் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.

இச்­சந்­திப்பு குறித்து கருத்து வௌியிட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­விக்­கையில், அமெ­ரிக்க குழு­வி­ன­ரு­ட­னான சந்­திப்பு நல்ல முறையில் அமைந்­தி­ருந்­தது. அந்தக் குழு­வி­ன­ருடன் பல்­வேறு விட­யங்கள் குறித்து விரி­வான கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்­தி­யி­ருந்தோம். மிக முக்­கி­ய­மாக புதிய அர­சியல் சாசனம் தொடர்­பான விட­யங்கள் பற்றி அதி­க­ளவு கவனம் செலுத்­தப்­பட்­டி­ருந்­தது.  

ஆட்சி மாற்றம் நடை­பெற்ற பின்னர் பாரா­ளு­மன்றம் அர­சியல் சாசன சபை­யாக மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. புதிய அர­சியல் சாச­னத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதற்கு நாம் முழு­மை­யான பங்­க­ளிப்பை வழங்கி வரு­கின்றோம். புதிய அர­சியல் சாச­ன­மா­னது தம­த­மன்றி நிறை­வேற்­றப்­பட வேண்டும். இந்த வருட இறு­திக்குள் கரு­மங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு புதிய அர­சியல் சாசனம் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும். புதிய அர­சியல் சாச­னத்தில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்டும். அது உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

இந்த நாட்டில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டாமல் இருந்த கார­ணத்தால் தான் இவ்­வ­ளவு பர­தூ­ர­மான விட­யங்கள் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன. ஆகவே அர­சியல் சாசன ரீதி­யான அதி­கா­ரங்கள் பகி­ரந்­த­ளிக்­கப்­ப­ட­வேண்டும். சிறு­பான்­மை­யி­னரும் தமது அதி­கா­ரங்­களை முழு­மை­யான பயன்­ப­டுத்­து­கின்­ற சமத்­து­வ­மான நிலைமை நீடித்து நிரந்­த­ர­மா­க­வி­ருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அது­போன்று இந்த நாட்டில் இடம்­பெற்ற துர­திஸ்­ட­வ­ச­மான விட­யங்கள் மீண்டும் நிக­ழா­மையும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதை அர­சாங்­கத்­தி­டம் எடுத்­து­ரைக்­கு­மாறு நாம் அவர்­க­ளி­டத்தில் விசே­ட­மாக கேட்­டுக்­கொண்டோம்.

அத்­துடன் எமது மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னை­க­ளான காணி விட­யங்கள் குறித்து மிகவும் ஆழ­மான கருத்­துக்­களை அவர்­க­ளி­டத்தில் கூறி­யுள்ளோம். பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் மீண்டும் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்படவேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாக அரசாங்கத்திற்கு கூறுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அத்துடன் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பதிலளிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு இந்த விடயத்தில் காலதாமங்கள் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-25#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.