Jump to content

தவறான நட்பால் வீழ்ந்த ஆலமரம் ஜெயலலிதா!


Recommended Posts

தவறான நட்பால் வீழ்ந்த ஆலமரம் ஜெயலலிதா!

ஜெயலலிதா


ஜெயலலிதா... இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். திரைப்பட நடிகையாகத் தொடங்கிய இவரது வாழ்க்கை, அரசியலுக்குள் நுழைந்ததும் பல அதிர்ச்சியான திருப்பங்களுடன் நகர்ந்தது. அ.தி.மு.கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கியதையே தனது பலமாக மாற்றிக்கொண்டார். கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, தமிழக முதல்வரானார். ஆனால், அவரின் வாழ்க்கை முடிவு இனிமையாக இல்லை. இறப்புக்குப் பிறகு அவரைக் குற்றவாளியாக நீதிமன்றம் கூறிவிட்டது. வரலாற்றில் இருந்து நீங்காத கறையாக இது அமைந்துவிட்டது. பணம், புகழ் ஆகியவற்றைக் கொண்டிருந்த ஜெயலலிதாவை இந்த இடத்துக்கு நகர்த்தியது எது?

தன்னிடம் உண்மையாகவும் அன்பாகவும் இருக்கும் நபர்களிடம் நெருக்கமாகப் பழகும் தன்மைகொண்டவர் ஜெயலலிதா. புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள புத்தகங்களைத் தேடி வாசிக்கும் பழக்கம்கொண்டவர். திரைப்படத் துறையில் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய தோழியாக ஷீலா இருந்தார். புத்தகங்கள் வாங்கச்செல்வது தொடங்கி, வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளில் இடம்பிடிப்பவராக அவர் இருந்தார். அம்மா சந்தியாவே உலகம் என்றிருந்த ஜெயலலிதாவுக்கு, தாயின் மறைவுக்குப் பிறகு ஆலோசனைகள் கூறும் தோழியாகவும் ஷீலா இருந்தார். பின்னர் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டவர்தான் சசிகலா.

வாழ்வின் பல அடுக்குகளிலும் ஒன்றைத் தொடர்ந்து பின்பற்றிக்கொண்டிருந்தவர் ஜெயலலிதா. யாரேனும் ஒருவரை முழுமையாக நம்புவது. முதலில் தனது அம்மா, அடுத்து, தோழி ஷீலா, பிறகு சசிகலா. (இடையில் இன்னும் சிலரும் இருந்தனர்) ஜெயலலிதா நட்பு கிடைத்ததும், மன்னார்குடியில் பிரமாண்டக் கூட்டம் நடத்துகிறார் சசிகலா. அதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், ஜெயலலிதாவின் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க, பிள்ளையார் சுழியாகவே அந்தக் கூட்டம் அமைந்தது. சசிகலாவின் கணவர் நடராஜன் துணையோடு ஜெயலலிதா அரசியலில் பல இடங்கள் முன்நகர்கிறார்.

எம்.ஜி.ஆர் மறைவின்போது ஜெயலலிதாவை அ.தி.மு.கவில் இருந்தும் அரசியலில் இருந்தும் ஓரங்கட்ட நடந்த முயற்சிகளை சசிகலா - நடராஜன் தம்பதியினர் துணையோடு முறியடிக்கிறார். அந்த நேரத்தில் இவர்களின் இருப்பும் உதவிகளுமே இறக்கும் வரை சசிகலாவைத் தன் பக்கத்தில் வைத்திருக்கும் சூழலை ஜெயலலிதாவுக்கு ஏற்படுத்தியது. ஜெயலலிதா முதல்முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்று சட்டமன்றம் செல்கையில், எந்தவித பதவியும் இல்லாத சசிகலாவை சபாநாயகர் இருக்கையில் அமரச்செய்தார். இந்தச் செயல் சசிகலாவுக்கு எந்தளவு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை அந்தக் கட்சியினருக்கு உணர்த்தியது. பொதுமக்கள் மத்தியிலோ அதிப்தியை உண்டாக்கியது. அதன்பின், ஜெயலலிதா ஒருவரை வளர்ப்பு மகன் என்று அறிவிக்கிறார். அவர், சசிகலாவின் அண்ணன் மகன் என்று அறியும்போதுதான் இதன் பின்னணியில் சசிகலா நடராஜன் இருப்பதை உணரமுடியும்.

சுமார் 100 கோடி செலவில் நடைபெற்ற அந்தப் பிரமாண்ட திருமணம், மக்கள் மத்தியில் கடும் வெறுப்பை உருவாக்கியது. அதன் விளைவாகவே அடுத்த தேர்தலில் பெரும் தோல்வியை ஜெயலலிதாவுக்கு அளித்தனர். சுதாகரனைத் தத்தெடுத்தது, பிரமாண்ட திருமணம் எல்லாம் ஜெயலலிதா மனதார விரும்பிச் செய்திருப்பாரா எனும் கேள்வி பலரின் மனதில் இருந்தது. பின்னர் சுதாகரனை வளர்ப்பு மகன் இல்லை என்று அறிவித்ததையும் கைது செய்ததையும் பார்க்கும்போது அந்தக் கேள்வியில் நியாயம் இருப்பதை உணர முடிந்தது.

சாதாரண புடவையும் எளிமையான அலங்காரத்துடனும் மக்கள் மத்தியில் வலம்வந்த ஜெயலலிதா, ஜொலிக்கும் நகைகள், ஆடம்பர அலங்காரத்துடன் சசிகலாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அவரை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியது. அன்று தொடங்கி மக்கள் மட்டுமல்ல, கட்சியினரும் எளிதில் அணுக முடியாத நிலைக்குச் சென்றார் ஜெயலலிதா. இதன் பின்னணியில் சசிகலா குழு இருந்ததை வெளிப்படையாகவே பேசிக்கொண்டனர்.

ஜெயலலிதா -  சசிகலா

1996-ம் ஆண்டு நடந்த தேர்தலின் தோல்விக்கு சசிகலா உள்ளிட்டவர்களின் நட்பே காரணம் என்று அறிந்துகொண்ட ஜெயலலிதா, செய்த செயல் பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. சசிகலாவை போயஸ் தோட்டத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றினார். ஆனால், ஓரிரு மாதங்களில் வீட்டு வாசலில் நின்று சசிகலாவை வரவேற்றபோது, ஜெயலலிதாவின் உறுதி உடைந்ததையும் சசிகலா தன்னுடன் இருப்பது அவ்வளவு அவசியம் என்றும் உணர்த்தினார்.

அ.தி.மு.கவின் கட்சி நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்பட எனப் பல விஷயங்களிலும் சசிகலா குழுவினரின் கை மேலோங்கியே இருந்தது. இதை நன்கு தெரிந்துகொண்ட கட்சியினர், சசிகலாவின் குழுவினரை நெருங்கி காரியங்களைச் சாதித்துக்கொண்டனர். நிலைமை தன் கையை மீறிச் செல்லும்போதெல்லாம் சசிகலா குழுவினர் மீது நடவடிக்கை எடுப்பார் ஜெயலலிதா. ஆனால், அதன் காலம் ஓரிரு நாட்கள் அல்லது ஓரிரு மாதங்களே நீடிக்கும். இந்தத் தன்மையால் சசிகலா மீது நடிவடிக்கைகளை அ.தி.மு.கவினர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

வளர்ப்பு மகன் திருமண காலக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குதான் ஜெயலலிதாவின் மனதை உருக்குலையச் செய்தது. அந்த வழக்கு 18 ஆண்டுகளாக நடைபெற்றதை எதிர்க் கட்சிகள் கேலி செய்தனர். 2014 செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதா தரப்புக்கு அதிர்ச்சி தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி அபராதமும் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டது. உடனே சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கிடைத்து வெளியே வந்தாலும், ஜெயலலிதாவை உலுக்கிப்போட்ட நாட்கள் அவை. அந்த வழக்குக்கு வழங்கப்பட்ட பலவித தீர்ப்புகளே அவரின் மனநிலையையும் உடல்நிலையையும் வெகுவாக பாதித்தன.

ஜெயலலிதா உள்ளிட்டோரை வழக்கில் இருந்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பு விடுதலைச் செய்தது. ஆனால், அதன் மேல் முறையீட்டுத் தீர்ப்பு என்னவாகும் எனும் கவலையே ஜெயலலிதாவின் எண்ணத்தில் நிறைந்திருந்தது. அந்த எண்ணங்களே உடல்நிலையைக் குலைத்தது. இந்நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்தார்.

இந்திய அரசியலில் ஒரு பெண்ணாக எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்த ஜெயலலிதாவின் வாழ்வை, ஒரு பலவீனம் வீழ்த்தியது. தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நட்புகளை விலக்கிவைக்கத் தெரியாததே அந்தப் பலவீனம்.

http://www.vikatan.com/news/tamilnadu/81906-jayalaithaas-life-spoiled-by-her-bad-friendship.html

Link to comment
Share on other sites

வாழ்க்கையில் ஜெயலலிதா செய்த 7 பிழைகள்...

ஜெயலலிதா

மிழக அரசியல் அரங்கில் அசைக்கமுடியாத இரும்புப் பெண்மணியாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரின் வாழ்க்கை ஓட்டத்தில் நடந்த பிழைகள் அவருக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தன.

1) தாய் சந்தியா உயிரிழந்த நிலையில், வாழ்க்கையே இருண்டு விட்டதாக ஜெயலலிதா நினைத்தார். ஆதரவற்ற நிலையில் இருந்தார். தம் எதிர்காலம் குறித்து யாரிடம் ஆலோசனைக் கேட்பது என்றெல்லாம் அவருக்குத் தெரியவில்லை. அவர் உறவினர்களையும் அவர் நம்பவில்லை. மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்றிருந்தால், திருமண வாழ்க்கையில் அவர் அடி எடுத்து வைத்திருக்கக்கூடும். அம்மா நடிகையாக இன்று வரை இருந்திருக்கக்கூடும். இது ஒரு முதன்மையான பிழை என்றபோதிலும், இப்படியெல்லாம் நடந்திருந்தால் ஒரு பெண் அரசியல்வாதியை தமிழகம் இழந்திருக்கும்.

2) ஆங்கிலப் புலமை மிக்கவர், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் அறிந்தவர் என்ற பெயரைப்பெற்றவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் அடுத்தவர்களைக் கேட்டு எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டார். தன் முடிவுகளில் அடுத்தவர்களின் தலையீடை எப்போதும் விரும்ப மாட்டார். தன்னருகே உதவியாளர்களை வைத்துக்கொண்டார். தன்னை ஆக்கிரமிப்பவர்களை, தன் மனதில் குழப்பம் செய்விப்பவர்களை எப்போதும் அவர் பக்கத்தில் வைத்துக்கொண்டதில்லை. ஆனால், ஜெயலலிதா சசிகலாவை தோழியாக போயஸ்கார்டனுக்குள் அனுமதித்ததுதான் இன்றளவுக்கும் பெரும் பிழையாகக் கருதப்படுகிறது.

3) ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனாக சுதாகரனை தேர்ந்தெடுத்தார். சுதாகரன் திருமணம்தான் அவரது அரசியல்வாழ்க்கையில் சரிவுக்கு முதல்படியாக அமைந்தது. முதல்முறை முதல்வராக இருந்தபோது ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் வாங்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் முதல்வர் தன் வளர்ப்பு மகனுக்கு எப்படி, இப்படி ஒரு ஆடம்பரத் திருமணத்தை செய்து வைத்தார் என்று கடைகோடி தமிழர்களும் கேள்வி எழுப்பினர். இந்தியாவில் நடைபெற்ற ஆடம்பரத் திருமணங்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படும் சுதாகரன் திருமணம்தான் சொத்துக்குவிப்பு வழக்குக்கு முதற்காரணியாக இருந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த பிழைகளில் மூன்றாம் இடம் இதற்குத்தான்.

ஜெயலலிதா

4) ஜெயலலிதாவுக்கு கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு மூட்டு வலி, சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகள் இருந்து வந்தன. ஆனால், அவற்றுக்காக அவர், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை. உரிய நிபுணர்களிடமும் அவர் ஆலோசனை பெறவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். துணிச்சலான பல முடிவுகளை எடுத்தவர் உடல்நிலை குறித்து உரிய ஆலோசனைகளைப் பெறத் தவறி விட்டார். உடல் நலக்கோளாறு காரணமாக ஆட்சியிலும், கட்சியிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அவர் விலகியே இருந்தார். இதுவும் அவர் செய்த பிழைகளில் ஒன்று.

5) ஜெயலலிதா அரசியல் ரீதியாக முடிவுகள் எடுப்பதற்கு பத்திரிகையாளர்கள், மூத்த தலைவர்களைக் கொண்ட ஆலோசகர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டதில்லை. எம்.ஜி.ஆரின் அருகில் இருந்த சோலை உள்ளிட்டோர் சில காலம் ஜெயலலிதாவின் ஆலோசகர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், யாரும் நீடித்து இருந்ததில்லை. ஆரம்பக் கட்டத்தில் ஆங்கில மீடியாக்களிடம் தொடர்பில் இருந்த ஜெயலலிதா அதையும் நிரந்தரமான தொடர்பாக வைத்துக் கொண்டதில்லை. ஆலோசனை ஏதும் இல்லாமல் தன்னிச்சையாக எடுத்த முடிவுகள் சர்ச்சைகளுக்கு உள்ளாயின. இதுவும் அவர் செய்த பிழை.

ஜெயலலிதா

6) ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அது போலீஸ் ஆட்சியாகத்தான் இருக்கும். போலீஸார் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வார். ஜனநாயகப் பூர்வமாக நடைபெறும் போராட்டங்களைக் கூட போலீஸாரை வைத்து ஒடுக்குவார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸார் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவார்கள். 1991 ஆட்சி காலத்தில் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களுக்கு போலீஸார் ஆதரவு இருந்தது. 2001-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக தி.மு.க நடத்திய பேரணியில் போலீஸார் துணையுடன் ரவுடிகள் தாக்குதல் நடத்தினர். 2011-ம் ஆண்டு ஆட்சியில் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிய மாற்றுத்திறனாளிகளை போலீஸார் ஒடுக்கினர். இப்படி பல உதாரணங்கள் இருக்கின்றன. ஜெயலலிதா, போலீஸாரை நம்பியது பெரிய பிழை.

7) ஜெயலலிதா எப்போதுமே ஊடகங்களில் இருந்து விலகியே இருந்தார். 1991-ம் ஆண்டு ஆட்சிக் காலக் கட்டத்தில் ஆட்சியின் தவறுகளை ஊடகங்கள் கடுமையாகக் குற்றஞ்சாட்டின. இதனால், ஜெயலலிதாவுக்கு ஊடகங்கள் மீது கடும் வெறுப்பு ஏற்பட்டது. 2001- ஆட்சி காலத்திலும் ஊடகங்களைப் பொருட்படுத்தவில்லை. 2011 ஆட்சி காலத்தின்போது இனி ஊடகங்களை வாரம் ஒருமுறை சந்திக்கிறேன் என்றார். ஆனால், சொன்னபடி அவர் நடந்து கொள்ளவில்லை. ஆட்சிக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்த ஊடகங்கள் மீது வழக்கம்போல வழக்குகள் தொடுத்தார். இதனால், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையும் அவர் சந்தித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81887-7-mistakes-of-jayalalithaa-did-in-her-lifetime.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலமரம் என்ற ஒப்புவமை ஜெயலலிதாவுக்குக் கொஞ்சம் ஓவர்!

பறவைகள் பசியாறவும், மிருகங்கள் வெயிலில் நிழலாறவும், மனிதர்கள் ஊஞ்சலாடவும்  உதவுவது ஆலமரம்!

அது தனக்கென எதுவும் சேர்த்து வைப்பதில்லை!

யாரிடமிருந்தும் பலவந்தமாக எதையும் பிடுங்குவதுமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

ஆலமரம் என்ற ஒப்புவமை ஜெயலலிதாவுக்குக் கொஞ்சம் ஓவர்!

பறவைகள் பசியாறவும், மிருகங்கள் வெயிலில் நிழலாறவும், மனிதர்கள் ஊஞ்சலாடவும்  உதவுவது ஆலமரம்!

அது தனக்கென எதுவும் சேர்த்து வைப்பதில்லை!

யாரிடமிருந்தும் பலவந்தமாக எதையும் பிடுங்குவதுமில்லை!

இது தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒருவருக்கு ஒருமுறை சொன்னது ........

அந்த "ஆலமரத்திட்கு" அண்ணே ஒரு கெட்ட குணம் ...
தனுக்கு கீழே ஒரு மரத்தையும் வளரவிடாது.

ஜெலலிதா தன்னோடு சேர்த்தே வளர்த்திருக்கிறார் 
ஆலமரமாக இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎/‎02‎/‎2017 at 4:49 AM, Maruthankerny said:

இது தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒருவருக்கு ஒருமுறை சொன்னது ........

அந்த "ஆலமரத்திட்கு" அண்ணே ஒரு கெட்ட குணம் ...
தனுக்கு கீழே ஒரு மரத்தையும் வளரவிடாது.

ஜெலலிதா தன்னோடு சேர்த்தே வளர்த்திருக்கிறார் 
ஆலமரமாக இருக்க முடியாது.

உண்மையாகவே தலைவர் இப்படி சொன்னாரா மருதர்?...சொல்லீருந்தால் தன்னை நினைத்து சொல்லீருப்பாரோ:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

உண்மையாகவே தலைவர் இப்படி சொன்னாரா மருதர்?...சொல்லீருந்தால் தன்னை நினைத்து சொல்லீருப்பாரோ:mellow:

தனக்கு கீழே தலைவர் வர்க்காமலா ....
இத்தனை போராளிகள் தளபதிகள் எல்லாம் வந்தார்கள்?
கூடவே சேர்த்து கருணா .... கே பி .... மாத்தையா போன்ற துரோகிகளையும் 
வளர்த்ததுதான் தப்பு ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

தனக்கு கீழே தலைவர் வர்க்காமலா ....
இத்தனை போராளிகள் தளபதிகள் எல்லாம் வந்தார்கள்?
கூடவே சேர்த்து கருணா .... கே பி .... மாத்தையா போன்ற துரோகிகளையும் 
வளர்த்ததுதான் தப்பு ! 

ஆலமரம் தான் வீழ்ந்தவுடன் தன் கூட இருந்தவர்களை கூட வீழ்த்திக் கொண்டதாக்கும்<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஆலமரம் தான் வீழ்ந்தவுடன் தன் கூட இருந்தவர்களை கூட வீழ்த்திக் கொண்டதாக்கும்<_<

ஆலமரம் இல்லையெண்டாலும் விழுதுகளாவது முளைச்சு விளைஞ்சு வருமெண்டு பாத்தன்....

ஆனால் அதுகள் தாங்கள் மட்டும் விளைஞ்சு அங்காலை இஞ்சாலை அரக்கேலாமல் நிக்குதுகள்.

Link to comment
Share on other sites

ஜெயலலிதா கருணாநிதி எல்லாம் ஆலமரங்கள் கிடையாது. அவர்கள் கருவேல மரங்கள். கருவேல மரங்கள் எப்படி நீர்வளங்களை உறிஞ்சி வளங்களை அழித்து நிலத்தை பாலைவனமாக்குமோ அப்படியே இவர்கள் ஊரைக் கொள்ளையடித்து உலையில் போடுகின்றவர்கள். ஒரு பெரும் விருட்சங்களுக்கான ஒப்பீட்டுக்கு மாறாக சிறு பல விருட்சங்கள் போன்றவர்கள். தாமும் தம்மைச் சார்ந்த கூட்டமும் என கோஸ்டியாக கொள்ளையடிப்பவர்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.