Jump to content

மட்டு. காணி ஆணையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் 5 குழுக்கள் விசாரணை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு


Recommended Posts

மட்டு. காணி ஆணையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் 5 குழுக்கள் விசாரணை

p20-b0646b5036ceb74c4a342210d2623e85632a1c1c.jpg

 

20 பேரிடம் வாக்குமூலம் பதிவு
(எம்.எப்.எம்.பஸீர்)

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேச குமார் விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப்  பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான விசார  ணைகளுக்கு 5 பொலிஸ் குழுக்கள் கடமை  யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆரச்சியின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த ஐந்து பொலிஸ் குழுக்களும் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.  

அதன்படி நேற்று மாலை வரை இந்த சிறப்பு விசாரணைக் குழுக்கள் நேசகுமார் விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் 20 பேரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் அதில் வெளிப்படுத்தப்பட்ட பல்வேறு தகவல்கள் ஊடாக துப்பாக்கிதாரிகளைக் கண்டறிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரியிடம் தெரிவித்தார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது நேற்று முன் தினம் இரவு 7.15 மணியளவில் துப்பககிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பககிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் அங்கு தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார். அவரது உடல் நிலைமை பாரதூரமானதாக இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அவரது கை பகுதியிலேயே துப்பாக்கிச் சன்னங்களால் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் தேரி வருவதாகவும் மட்டக்களப்பு போதன அவைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

களுதாவளை 4 ஆம் பிரிவில் அமைந்துள்ள சோமசுந்தரம் வீதியிலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் வீட்டுக்கு வந்த இனம் தெரியாத நபர்கள் அவரை வெளியே அழைத்து அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

 எவ்வாறாயினும் நேற்று மாலை வரை சந்தேக நபர்களோ அல்லது துப்பக்கிச் சூட்டுக்கான காரணமோ துல்லியமாக அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.

 எனினும் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் சந்தேக நபர்களை அடையாளம் காணும் அளவுக்கு பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொருப்பான் ஔயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.

பலாத்காரமான காணி அபகரிப்புக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டில் இருந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் அண்மையில் ஏறாவூர் - புன்னக்குடா பகுதியில் கடமையில் இருந்த போது சிலர் அவரை தகக முர்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதனைவிட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் துப்பாககிப் பிரயோகத்துக்கு உட்பட்ட நாளான நேற்று முன் தினமும் பலாத்காரமக அரச இடங்களை அபகரிப்போருக்கு எதிராக நீதிமன்ர உத்தரவு ஒன்ரினைப் பெற்றுக்கொள்ள ஏறாவூர் நீதிமன்றுக்கு சென்றிருந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளன.

 இந் நிலையில் அந்த தகவல்கள் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜுக்கு வந்த தொலைபேசி அழைப்பு உள்ளிட்ட பல்வேறு தடயங்கள் ஊடாக தற்போதைய விசாரணைகள் இடம்பெறுகின்றன.

9 மில்லி மீற்றர் ரக துப்பககியொன்றே துப்பாக்கிப் பிரயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. இந் நிலையில் மேலதிக விசாரணைகளை கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிச் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் மேற்பார்வையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆரச்சியின் நேரடி கட்டுப்பாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்திரத்னவின் வழி நடத்தலில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சிசிர பெட்ரிதந்திரி, களுவாஞ்சிக் குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நந்தலால் ஆகியோரின் கீழான ஐந்து பொலிஸ் குழுக்கள் முன்னெடுத்துள்ளன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-24#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.