Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு


Recommended Posts

இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு

 

 
 
கமல் | கோப்பு படம்: எல்.சீனிவாசன்
கமல் | கோப்பு படம்: எல்.சீனிவாசன்
 
 

தனது இயக்கப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வன்மத்தைக் காட்டுகிறது என கமல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக அரசியலில் நிலவி வரும் சூழல் குறித்து உடனடியாக கருத்துகளைத் தெரிவித்து வருபவர் கமல். அரசியலில் நிலவிவுள்ள மாற்றத்துக்கு ஆளுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதங்கத்தை அனுப்புமாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் கமல்.

இதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுக கட்சியினரை கடுமையாக சாடினார். இது தொடர்பாக, கமல் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் "இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது.

தமிழக ஜல்லிகட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இது எமது பெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது.

நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கைமாறாது. எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி பொதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்ளவரை செய்வோம். அவர் பலமுறை வருவார் போவர். நிரந்தரம் நம்நாடு" என்று காட்டமாக தெரிவித்துள்ளார் கமல்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/இயக்கப்-பொறுப்பாளர்-கைது-அரசியல்-வன்மம்-என-கமல்-குற்றச்சாட்டு/article9554786.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.