Jump to content

தி.மு.க போராட்டத்தில் முதல்வர் பங்கேற்பு


Recommended Posts

தி.மு.க போராட்டத்தில் முதல்வர் பங்கேற்பு

_11497.jpg

தி.மு.க சார்பில் புதுச்சேரியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

பிப்ரவரி 18--ம் தேதி தமிழக சட்டப்பேரவையில், நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் வலுக்கட்டாயமாக பேரவையில் இருந்து வெளியேற்றினர். இதனைக் கண்டித்து, தி.மு.க சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தலைமையில், அந்தந்த மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான தி.மு.க தொண்டர்களும், தி.மு.க தலைவர்களும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் பங்கேற்றனர். திருச்சி, தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தைப் பகுதியில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தி.மு.க சார்பில் புதுச்சேரியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

http://www.vikatan.com/news/politics/81638-puducherry-chief-minister-narayansamy-participate-in-dmk-lead-hunger-strike.html

Link to comment
Share on other sites

தி.மு.க உண்ணாவிரதத்தில் களம் இறங்கினார், உதயநிதி ஸ்டாலின்!

udanithi_11124.jpg

 

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். சென்னையில் நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி பங்கேற்றுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக கடந்த 18-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்தக் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். இதனால், சட்டப்பேரவையில் திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுக்கட்டாக அவைக்காவலர்கள் தூக்கி வெளியேற்றனர். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சில திமுக எம்எல்ஏக்களின் சட்டைகள் கிழிக்கப்பட்டன.

stalin_wife_fasting_11501.jpg

சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு குறித்து ஆளுநரிடம், திமுக நேரில் முறையிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் திடீர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறை கைது செய்தது. இதனிடையே, சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி உள்ளிட்ட திமுக மகளிர் அணியினர் பங்கேற்றுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/81627-udhayanithi-stalin-participates-in-dmk-hunger-strike.html

Link to comment
Share on other sites

சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு கண்டனம்: தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதப் போராட்டம்

 

 
 
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி. படம்: கிருஷ்ணகுமார்
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி. படம்: கிருஷ்ணகுமார்
 
 

"சட்டப் பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை அடிமைகளைப் போல் அழைத்துவந்து வாக்களிக்க வைத்தால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?" என உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள திமுக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (புதன்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெறும் போராட்டத்தில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 18-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரிய திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனைக் கண்டித்து இன்று (புதன்கிழமை) திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

திருச்சி, தென்னூர் உழவர் சந்தையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 8.50 மணியளவில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திருச்சி சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்துள்ளனர்.

திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது, இளைஞர் மற்றும் பொதுமக்களுக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர சிறப்பு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள், திமுக நிர்வாகிகளோடு ஏராளமான கல்லூரி மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.

2_3136316a.jpg

திருச்சி, தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், பெண்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்

காஞ்சிபுரத்தில் துரைமுருகன் பங்கேற்பு

காஞ்சிபுரத்தில் நடைபெறும் போராட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் துரை முருகன் பங்கேற்கிறார். அவரின் தலைமையில் காஞ்சிபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இதில் கலந்துகொண்டுள்ளனர். திமுக தொண்டர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ''எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கு தீர்மானமே தவறு. அரபு நாட்டு அடிமைகளை, பிணைக்கைதிகளைப் பிடித்து வருவது போல, அதிமுக எம்எல்ஏக்களைத் தனிக்காட்டில் கொண்டுபோய் விட்டு, வீட்டினருடன் பேசமுடியாத வகையில் போனைப் பிடுங்கிக்கொண்டனர். வேறு வகைகளில் கவனம் செல்லாத வகையில் வேண்டியவற்றை சப்ளை செய்து அங்கேயே இருக்கச் செய்து, நம்பிக்கை வாக்கெடுப்பன்று வண்டி ஒன்றைத் தயார் செய்து, நேராக சட்டமன்றத்தில் கொண்டுவந்து இறக்கு விட்டுவிட்டு, ஓட்டுப்போடு என்பது, துப்பாக்கி முனையில் மிரட்டுவது போன்றது'' என்றார்.

சென்னையில் 4 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் வைத்தியநாதன் பாலம் சந்திப்பு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தங்கசாலை மணிகூண்டு, சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடல் ஆகிய இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

வள்ளுவர் கோட்டத்தில் ஜெ. அன்பழகன் தலைமை

சென்னையில் வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. போராட்டம் குறித்துப் பேசிய ஜெ.அன்பழகன், ''மக்கள் மன்றத்தில் நடந்த பிரச்சனைக்கு மக்களுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஊழலுக்கே நீதிவழங்கியது நீதிமன்றம்தான். இதனால் சட்டப்பேரவையில் நடந்த ஜனநாயகப் படுகொலைக்கும் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும். அதனால்தான் வழக்குத் தொடர்ந்துள்ளோம்'' என்றார்.

திமுக மகளிரணி சார்பில் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், மு.க.முத்துவின் மனைவி, ஸ்டாலினின் தங்கை ஆகியோர் களத்தில் உள்ளனர்.

durga_3136341a.jpg

சென்னை வள்ளுவர் கோட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் படம்: எல்.சீனிவாசன்

சென்னை ஆதம்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்ள விளையாட்டுத் திடலில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின், வாகை சந்திரசேகர் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இங்கு 1000 பேர் உட்காரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிண்டி அருகே போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால் வாகன நெரிசலைத் தடுக்க, தனி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏராளமான திமுக நிர்வாகிகளோடு, இளைஞர்களும் ஆதம்பாக்கத்தில் கணிசமான அளவில் திரண்டுள்ளனர். தமிழகத்தில் பினாமி ஆட்சி நடைபெறுவதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

udaya_3136375a.jpg

சென்னை ஆதம்பாக்கம் போராட்டத்தில் சைதை மா.சுப்ரமணியன், உதயநிதி ஸ்டாலின், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்பு. படம்: எல்.சீனிவாசன்

விருதுநகரில் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஐஜேகே ஆதரவு

விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு, விருதுநகர் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியன் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்துக்கு காங்கிரஸ், ஐஜேகே கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக நிர்வாகிகளோடு காங்கிரஸ் மாவட்ட தலைவர் வேலாயுதம் பங்கேற்றுள்ளார். காலை 10.30 மணி நிலவரப்படி, திமுக தொண்டர்கள், பெண்கள் என சுமார் 1000 பேர் இங்கு திரண்டுள்ளனர்.

viruthu_3136320a.jpg

விருதுநகரில் திமுகவினர் போராட்டம். படம்: ஈ.மணிகண்டன்

கோவை நிலவரம்

கோயம்புத்தூரில் பவர் ஹவுஸ் பகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. திமுகவுடன் காங்கிரஸ், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கொமதேச பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சிங்காநல்லூர் எம்எல்ஏ கார்த்தி ஆகியோர் போராட்டக் களத்தில் இணைந்துள்ளனர்.

'எங்களுடைய போராட்டம் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் காதுகளை எட்டும். விரைவில் சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்' என்று பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்தார். திமுக, காங்கிரஸ், கொமதேக தொண்டர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என 3,000-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

covai_3136322a.jpg

கோவையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம். படம்: கிருஷ்ணகுமார்

சேலத்தில் வணிகர் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் ஆதரவு

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்துவருகிறது. இதில் சேலம் எம்எல்ஏ ராஜேந்திரன், கொமதேச இணைச் செயலாளர் சூரிய மூர்த்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மேகநாதன், இந்திய யூனியன் முஸ்லீன் லீக் முதன்மைத் தலைவர் அப்துல் ரகுமான், துணைத் தலைவர் காதர் உசேன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் சேலம் வணிகர் சங்கத்தினர், சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கமும் இணைந்துள்ளது. போராட்டத்தில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர்.

selam_3136339a.jpg

சேலத்தில் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம். படம்: எஸ்.குருபிரசாத்

திருப்பூர் மற்றும் தாராபுரத்தில் போராட்டம்

திருப்பூரில் ரயில் நிலையம் அருகே திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செயலாளர் செல்வராஜ், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீன் லீக் மாவட்டப் பொறுப்பாளர்கள் களத்தில் இணைந்துள்ளனர்.

திருப்பூர் தெற்கு மாவட்ட போராட்டம் தாராபுரத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெறுகிறது. இங்கு தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், காங்கிரஸ் எம்எல்ஏ காளிமுத்து, மடத்துக்குளம் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் உள்ளனர்.

tirupur_3136355a.jpg

திருப்பூர் வடக்கு மாவட்ட போராட்டம் மற்றும் செய்தியாளர்களிடம் பேசும் இளைஞரணிச் செயலாளர் | படம்: கார்த்திகேயன்

'அம்பயரே பந்து வீசுவது போல'

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தங்கசாலை மணிகூண்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, ''சட்டமன்றத்தில் சபாநாயகர் செயல்பட்டது, கிரிக்கெட்டில் அம்பயரே பந்து வீசுவது போல் உள்ளது'' என்று கூறினார். இங்கு நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

'சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக்க வேண்டும்'

அதில் கலந்துகொண்டு பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ அபுபக்கர், ''சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உண்ணாவிரதம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், வள்ளியூரில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தலைமையில் உண்ணாவிரதம் நடந்துவருகிறது.

பாளையங்கோட்டையில் மார்க்கெட் திடலில் எம்எல்ஏக்கள் டிபிஎம் மைதீன்கான், ஏஎல்எஸ் லட்சுமணன், பூங்கோதை ஆலடி அருணா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

போராட்டத்தில் பேசிய ஆலடி அருணா, ''சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்த திமுகவின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன் என்று பண்ருட்டியார் பேசிய விதம் சிரிப்பையே வரவழைக்கிறது'' என்றார். என்ன நடந்தது?- சட்டப்பேரவை நிகழ்வுகள்: திமுக புகார்களுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் பதில்

thumbnail_23tilan__3136383a.jpg

திருநெல்வேலி திமுக உண்ணாவிரதம். படம்: லட்சுமி அருண்

மதுரையில் இரு இடங்களில் போராட்டம்

மதுரை பழங்காநத்தத்தில் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ தியாகராஜன் தலைமையில் திமுகவின் உண்ணாவிரதம் நடந்துவருகிறது. இதில் மாவட்டச் செயலாளர்கள் வேலுச்சாமி, தளபதி ஆகியோர் தலைமையில் திமுக தொண்டர்கள் இணைந்துள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 2,000 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

மதுரை புறநகர்ப் பகுதிக்கான போராட்டமாக, திருமங்கலத்தில் எம்எல்ஏ மூர்த்தி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திக்கிறார் ஸ்டாலின்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திப்பதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்றிரவு(புதன்கிழமை) டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவரை மட்டுமின்றி, பிரதமர் மோடியையும் அவர் நாளை(வியாழக்கிழமை) சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/சட்டப்பேரவையிலிருந்து-வெளியேற்றப்பட்டதற்கு-கண்டனம்-தமிழகம்-முழுவதும்-திமுக-உண்ணாவிரதப்-போராட்டம்/article9554621.ece?homepage=true

Link to comment
Share on other sites

அரசியலில் குதிக்கிறாரா துர்கா ஸ்டாலின்?

துர்கா ஸ்டாலின்

 

ம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு குறித்து ஆளுநரிடம் தி.மு.க நேரில் முறையிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே மு.க.ஸ்டாலின், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் திடீர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல் துறை கைதுசெய்தது. இதனிடையே, சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் மு.க.ஸ்டாலின் இன்று (22-2-17) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனால் திருச்சியில் நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனி இருக்கைகள் ஏற்பாடு செய்யபட்டிருந்தன. அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கலாம் என்ற நிலையில்... துர்கா ஸ்டாலின், செல்வி ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர். சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி உள்ளிட்ட தி.மு.க மகளிர் அணியினர் பங்கேற்றுள்ளனர். இதுவரை ஸ்டாலின் நிகிழ்வு என்றால், அந்த ஊருக்கு மட்டுமே சென்று வந்துள்ளார் துர்கா ஸ்டாலின். அப்படியிருக்கையில், தற்போது அவர் உண்ணாவிரதத்திலும் பங்கேற்றுள்ளார்.

தி.மு.க-வில் இதுவரை கருணாநிதி குடும்பத்து பெண்களில் கனிமொழி மட்டுமே அரசியல் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது  துர்கா ஸ்டாலின் மற்றும் செல்வி ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகளிடம் பேசியபோது, "ஸ்டாலின் பங்கேற்கும் தி.மு.க-வின் நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களுக்கு உடன் சென்றுள்ளார். அங்கு, அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

தளபதி சென்னையில் இல்லாத காரணத்தால் அவர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதுமட்டுமின்றி இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து நடக்கும் போராட்டம் என்பதால், அனைவரும் பங்கேற்கலாம் என்ற அடிப்படையில்கூட அவர் பங்கேற்றிருக்கலாம். இன்றையச் சூழ்நிலையில் சில பெண்கள் கட்சியை வளர்ப்பதற்காகத் தன் கணவரோடு இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அப்படி இவரும் உறுதுணையாக இருக்க நினைத்திருக்கலாம். பொதுவாக தி.மு.க-வில் கனிமொழி அளவுக்கு வேறு பெண்கள் அவ்வளவாக பிரபலம் ஆகவில்லை. அதனால் பெண்களிடம் செல்வாக்கைப் பெறுவதற்காக போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கலாம்." என்றனர்.

பெரும்பாலும் கருணாநிதி பங்கேற்கும் நிகழ்வுகள், போராட்டங்களுக்கு தயாளு அம்மாள் உடன் செல்வார். கருணாநிதிக்குத் தேவையான உதவிகளையும் அவர் செய்துகொடுப்பார். அதேபோன்று ஸ்டாலின் பங்கேற்ற போராட்டம் மற்றும் நிகழ்வுகளிலும் துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார். அவர்,கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்காக வாக்குக்கேட்டு கொளத்தூர் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் ஏறி இறங்கினார் .

இதனைத்தொடர்ந்து தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் துர்கா ஸ்டாலின் மற்றும் செல்வி இருவரும் பங்கேற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

http://www.vikatan.com/news/coverstory/81660-will-durga-stalin-enter-politics.html

Link to comment
Share on other sites

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணைக்கு முதல் கையெழுத்து போடுவேன்- திருச்சியில் ஸ்டாலின்

M.K.Stalin

சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.  திருச்சியில் நடக்கும் உண்ணாவிரதப்போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இதற்காக கடந்த இரண்டு நாளில், திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்துக்கான பணிகள் முழுவீச்சில் நடந்தது. ஒரே நாளில் பெரிய மைதனத்தில் பெரிய பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த போராட்டத்துக்காக நேற்று நள்ளிரவு திருச்சி வந்த ஸ்டாலின் திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தவர், இன்று காலை 8.40 மணிக்கு  திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானம் அருகே அமைக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்துவிட்டார். 

சரியாக 9 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் துவங்கிய உண்ணாவிரதப்போராட்டத்தில் ஸ்டாலினுடன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சரும் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர்  கே.என்.நேரு எம்.எல்.ஏ, காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், ஆர்.சி.பாபு, வீரமுத்திரயர் பேரவை நிறுவனர் செல்வகுமார்,  திமுக எம்.எல்.ஏக்கள் லால்குடி சவுந்தர்ராஜன், துறையூர் ஸ்டாலின் குமார், திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், மாநகரச் செயலாளர் அன்பழகன்,  தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்கத் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன்  ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

M.K.Stalin
 

இறுதியாக சிறப்புரையாற்றிய ஸ்டாலின்,

’தமிழகத்தைக் காப்பாற்றுவது திமுகவின் கடமை. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமையத்தான் மக்கள் வாக்களித்தனர். தற்போதுள்ள ஆட்சி மக்களுக்குப் பிடிக்கவில்லை. இந்த போராட்டத்தில் திமுகவின் சுயநலம் இல்லை. மற்ற கட்சியினரும் போராட்டத்தில் பங்குபெற்றுள்ளனர். ஜெயலலிதா மறைந்த பிறகு திமுக நினைத்திருந்தால் ஆட்சியைக் கலைத்திருக்க முடியும். ஆனால் மக்கள் தேர்தெடுத்த ஆட்சியைத் தான் திமுக நடத்தும். இந்த ஆட்சியின் ரிமோட் கண்ட்ரோல் பெங்களூரு சிறையில் உள்ளது. ஒருபோதும் இந்த பினாமி ஆட்சியை ஏற்க மாட்டோம். திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறோம்.

ஜெயலலிதா மரணத்தில் பல முரண்பாடுகள் உள்ளது. ஓ.பி.எஸ் சொன்னதைப்போல ஜெ மரணம் குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றால் இதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரித்து இருக்கனும், இல்லை இதை ஓ.பி.எஸ் முன்னமே அறிவித்திருக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி தில் இருந்தால் திராணி இருந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த முடியுமா. அப்படி நடத்தினால் பெங்களூரு சிறையில் உள்ளவர்கள் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்..

இந்த ஆட்சி நீடித்து நிலைக்காது. விரைவில் மக்கள் உங்களைத் தூக்கி வீசுவார்கள். அப்படி தூக்கி எறிந்ததும் திமுக ஆட்சி அமைந்தால் எங்கள் முதல் கையெழுத்து ஜெயலலிதா மரணத்தின் மீதான நீதிவிசாரணை நடத்தப்படும். இது உறுதி' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81677-dmks-duty-is-to-protect-tamil-nadu--mkstalin.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.