Jump to content

'அ.தி.மு.க.வை மற்றவர்கள் அழிக்க விட மாட்டேன்!’ - ஆவேச வைகோ


Recommended Posts

'அ.தி.மு.க.வை மற்றவர்கள் அழிக்க விட மாட்டேன்!’ - ஆவேச வைகோ

வைகோ

சுவாரஸ்யமான திருப்பங்கள், சம்பவங்களை நிகழ்த்துவதன்மூலம் தமிழக அரசியலை பரபரப்பாக வைத்திருப்பவர்களில் ஒருவர், வைகோ. மத்திய அரசின் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து கூட்டணிக் கட்சியினர் போராடிக்கொண்டிருந்தபோது, அந்தத் திட்டத்தை ஆதரித்து கூட்டணியைவிட்டு வெளியேறியவர். இப்போது, மிகப்பெரும்பாலான கட்சிகள் அ.தி.மு.க.வை எதிர்த்துப் பேசிவரும் நிலையில், அதற்கு மாறான பேச்சு, அறிக்கையின்மூலம் கவனிக்கப்பட்டு வருகிறார் வைகோ.

சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளரானது, சட்டமன்றக்குழுத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டது, ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக இயங்கியது, கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் அடைப்பு என கடந்த சில தினங்களாக அரசியல் பேசாமல் இருந்த வைகோ, சட்டமன்றத்தில் எழுந்த அமளியை அடுத்து அரசியல் பேசத்துவங்கி இருக்கிறார். தன் பேச்சு முழுக்க தி.மு.க.வை மட்டுமே விமர்சிக்கிறார் வைகோ. திருமண நிகழ்வுகளில்கூட தி.மு.க.வை விடாமல் விமர்சிக்கிறார்.

வைகோ

நாகர்கோவிலில் ம.தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் திருமண விழாவில் பங்கேற்று வைகோ பேசுகையில், "எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்குகிறபோது, நான் உள்ளம் உடைந்து கண்ணீர் விட்டேன்.ஒருமுறை அண்ணா நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில், டீ குடிக்க கடையில் நிறுத்தினார். அப்போது, கறுப்பு சிவப்பு தி.மு.க. கொடியைப் பார்த்த கடைக்காரர், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார். 'அவர் வரவில்லை, இன்னொரு நாள் வருவார்' என்று அண்ணா சொன்னார். அப்போது அருகில் இருந்தவர், 'உங்களிடமே எம்.ஜி.ஆரைத்தானே கேட்கிறார்கள்?' என்றார். அதற்கு அண்ணா, 'எம்.ஜி .ஆரை கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இதயங்களிலே வைத்திருக்கிறார்கள். அது இந்த இயக்கத்துக்குத் தேவை. அது நம் இயக்கத்தை வளர்க்கும்' என்றார்.

ஆனால், இன்று என்ன சொல்கிறார்கள்?. "சட்டமன்றத்திலே உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வில்லை. எடப்பாடி பழனிசாமியை ஆதரித்துவிட்டார்கள். இவர்கள் ஊருக்குள்ளே போக முடியாது ஆட்சியைக் கலைக்க வேண்டும். ஜனாதிபதியின் ஆட்சி வர வேண்டும்" என தி.மு.க. செயல் தலைவரின் கூடாரம் கூக்குரலிடுகிறது. நான் நடுநிலையோடு இருப்பவன். இரண்டு கட்சி ஆட்சிகளிலும் ஆற்றுமணல் சுரண்டப்பட்டு தமிழகம் நாசக்காடானது என பகிரங்கமாக குற்றம் சாட்டுபவன். ஆனால், எம்.எல்.ஏ க்கள் ஊருக்குப் போக முடியாது என்கிறார்களே ஏன்?. தி.மு.க.வினர் ஒவ்வொரு  இடத்திலும் ஆட்களைத் தயார்செய்துள்ளனர். அவர்களுக்கு கரை வேட்டி கிடையாது. பேன்ட் சர்ட்டிலே வந்து பொதுமக்களைப்போல கூச்சலிடுகிறார்கள். இதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடுகிறார்கள்.

வைகோ

எம்.எல்.ஏ. வீட்டுக்கு போக முடியாவிட்டால் ஆட்சியை கலைத்து விடுவார்களா?.1972 அக்டோபர் 10-ம் தேதி, எம்.ஜி.ஆர்.மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தெருவுக்குள் போக முடியவில்லை. அந்த காலகட்டத்தில் நடந்த பொதுக்கூட்டங்களைப் பத்து நிமிடத்தில் பொதுமக்கள் கல்லெறிந்து விரட்டினார்கள். அதைக்  கேள்விபட்டு, மனம் உடைந்தவனாக நெல்லைக்கு வந்தேன். அங்குள்ள 36 வார்டுகளிலும் கொடியேற்றிவிட்டு கூட்டத்தை நடத்தினேன். அப்போது, என் மீது அ.தி.மு.க. தாக்குதல் நடத்தியது. நூலிழையில் தப்பினேன்.

இப்போது எதிர்கட்சி செயல் தலைவர் எந்தச் சங்கடத்திலும் சிக்கமாட்டார்; தப்பிவிடுவார், அவர் சுகவாசி. நான் சாதாரண தரைப்படை சிப்பாய். அப்படித்தான் தி.மு.க.வில் இருந்தேன். அந்த காலகட்டத்தில், தி.மு.க. எம்.எல்.ஏ. யாரும் வெளியே வரமுடியவில்லை. அப்போது ஆட்சியைக் கலைக்கச் சொன்னார்களா? இல்லையே.

இப்போது என்னை மிகவும் இழிவுபடுத்தி சோஷியல் மீடியாவில் போடுகிறார்கள். இது, இரண்டு மாதமாக அதிகமாகி இருக்கிறது. கேவலமான மிருகத்தின் தலையில் என் முகத்தை வைத்து, இழிவான வார்த்தைகளைப் போட்டு ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் போடுகிறார்கள். அதுபோல என் வீட்டு முகவரியைப் போட்டு, தொலைபேசி எண்ணைப் போட்டு, நெருப்பால் இவனைச் சுடுங்கள் என்று சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள். இதற்காக நான் கவலைப்படவில்லை. அதற்காக,  கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஒரு லைக்குக்கு 300 ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால், இவைகள் என்னை ஒன்றும் செய்யாது . நான் பிரளயங்களையும், எரிமலைகளையும் நேரடியாகச் சந்தித்துவிட்டு வாழ்கிறவன்.

வைகோ

பெரியார், அண்ணா போன்றவர்கள் வளர்த்த திராவிட இயக்கம் அழிந்துவிடக்கூடாது என நினைப்பவன் நான். எம்.ஜி.ஆர், அண்ணாவின் படத்தைக் கொடியிலே போடவில்லை என்றால், அண்ணாவின் படமே உலகுக்குத் தெரிந்திருக்காது. அண்ணா தி.மு.க. என்பதால், அண்ணா இருக்கிறது. ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியில் அ.தி.மு.க.வை அழித்துவிடலாம் என்பது நமது திராவிட இயக்கத்தின் ஜென்ம விரோதிகளின் இலக்கு. அதற்கு, நான் விடமாட்டேன். எனக்கு எந்தப் பதவி ஆசையும் கிடையாது," எனப் பேசிய வைகோ, இறுதியில் மணமக்களை வாழ்த்தி, பேச்சை நிறைவுசெய்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "சட்டமன்றத்தில் தற்போதைய  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது சொந்தத் தொகுதிகளுக்குச் செல்லும்போது மக்களைத்  தூண்டிவிட்டு  தி.மு.க. குழப்பத்தை  ஏற்படுத்திவருகிறது. தி.மு.க. மோசமான செயல்களில் முழுமூச்சுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். தற்போது  500 கடைகள் அடைக்கப்படும்  என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. ஆனால், தமிழகத்தில்  உள்ள மொத்த  கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என்பதே தங்களது  இலக்கு. அண்ணா உருவாக்கிய  இயக்கமான தி.மு.க. இன்று அழிவுப் பாதைக்குச் சென்றுகொண்டிருக்கிறது," என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81628-i-wont-allow-anyone-to-destroy-admk-says-mdmk-general-secretary-vaiko.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.