Jump to content

'எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் என்பதை ஏற்க மாட்டோம்!' - தமிழர்களின் ஒருமித்த குரல் #SurveyResults #ShockResult #VikatanExclusive


Recommended Posts

'எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் என்பதை ஏற்க மாட்டோம்!' - தமிழர்களின் ஒருமித்த குரல் #SurveyResults #ShockResult #VikatanExclusive

எடப்பாடி பழனிசாமி

 

 “குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.”

குடிமக்களின் கருத்தை மதித்து, அவர்களை  அன்போடு அணைத்துக்கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். இது, செங்கோன்மை குறித்த திருவள்ளுவர் வாக்கு.  இந்த ஆண்ட்ராய்டு யுகத்தில்  அரசியல், அரசு குறித்த விழுமியங்கள்... மதிப்பீடுகள் மாறி இருக்கலாம். ஆனால், ஓர் அரசு ஸ்திரமாக இருக்க வேண்டுமென்றால், அது மக்களின் கருத்துக்குக் கொஞ்சமேனும் செவிசாய்க்க வேண்டும்.

சரி... அரசின் கொள்கைகள் மக்களின் கருத்தைக் கேட்டபின் கட்டியெழுப்பப்படுவது பின்னர் இருக்கட்டும்... இந்த அரசு வேண்டுமா... வேண்டாமா  என்று  விகடன் இணையதளத்தில் ஒரு கருத்துக்கணிப்பை நேற்று வெளியிட்டிருந்தோம்... அதில் பிப்ரவரி 21-ந் தேதி மாலை 4 மணி வரையில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் மக்கள் கலந்துகொண்டு, கருத்து தெரிவித்திருந்தார்கள். எப்போதும் களத்தில் எடுக்கப்படும் கருத்துக்கணிப்புக்கும், தளத்தில் எடுக்கப்படும் கருத்துக்கணிப்புக்கும் வித்தியாசம் இருக்கும். ஆனால், இந்தமுறை களத்தில் என்ன குரல் கேட்டதோ... அதுவே தளத்திலும் கேட்டது.  அந்தக் கருத்துக்கணிப்பின், ஆச்சர்ய முடிவுகள் கீழே...

SurveyResults

 

எடப்பாடி பழனிசாமிதான் தமிழக முதல்வர் என்பதை நான்...

ஏற்றுக்கொள்கிறேன் : 1.92%

ஏற்றுக்கொள்ளவில்லை : 96.26%

கருத்து இல்லை : 1.82%

 

 

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை தமிழக ஆளுநர் 

ஏற்றுக் கொள்ளலாம் : 8.55%

ஏற்றுக் கொள்ளக் கூடாது : 89.85%

கருத்து இல்லை : 1.60 %
 

 

தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென்று ஒரு கருத்து உலாவுவதை நான்...

ஆதரிக்கிறேன் : 86.59%

எதிர்க்கிறேன்: 4.08%

ஆறு மாதங்கள் கழித்து முடிவு செய்யலாம் : 9.34%

 

சசிகலா மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சமூக ஊடகங்களில் எதிராக உள்ள கருத்துகள்...

பெரும்பான்மை மக்களின் எண்ணம் : 94.33 %

எதிரணியினரால் கட்டமைக்கப்பட்டஒன்று : 2.24%

கருத்து இல்லை : 3.43%

 

 

...

http://www.vikatan.com/news/coverstory/81559-people-opinion-about-tn-contemporary-politics-surveyresults.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.