Jump to content

முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் கும்பலின் ஊழலும் திட்டமிட்ட அழிப்பும் வெளிச்சத்திற்குவர ஆரம்பித்துள்ளது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான ஊழல் மீண்டும் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. சுன்னாகம் பிரதேசத்தில் மின் உற்பத்தியை மேற்கொண்டு, யாழ்ப்பாணம் முழுமைக்கும் மின்சார சேவையை மகிந்த ஆட்சிக் காலத்தில் வழங்கிய நிறுவனமான நோதேர்ன்பவர் மற்றும் அதன் தாய் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பெரும் பணத்தொகை பரிமாறப்பட்டுள்ளதாக மல்லாகம் நீதிமன்றம் துணிகரமான தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.

இப் பணப்பரிமாற்றத்தில் வட மாகாண சபை முதலமைச்சர், அவரை பின்னணியில் இயக்கும் நிமலன் கார்த்திகேயன் என்ற அவுஸ்திரேலிய குடியேற்றவாசி, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்களே செயற்பட்டனர் என்ற தகவல்களை இனியொரு ஆரம்பம் முதல் வெளிப்படுத்தி வந்துள்ளது.

வன்னிப் படுகொலைகளின் பின்னர் நடைபெற்ற மிகப்பெரும் சுற்றாடல் அழிவாகக் கருதப்படும் சுன்னாகம் பிரதேசத்தின் நீரையும் நிலத்தையும் மாசுபடுத்திய குற்றவியல் செயற்பாட்டை மூடி மறைத்து அப்பிரதேச மக்களை சிறுகச்சிறுகக் கொல்லும் நடவடிக்கையில் வட மாகாண சபையைச் சார்ந்தவர்கள் செயற்பட்டுள்ளனர்.

இலங்கை அரசின் நீர்ப்பாசனத் திணைக்களமும், பல சமூக ஆர்வலர்களும் மேற்கொண்ட ஆய்வுகளில் சுன்னாகம் நீரில் அதிபார டீசல் மற்றும் கிறீஸ் போன்றவை கலந்துள்ளதாகவும், அது பாவனைக்கு உகந்ததல்ல எனவும் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. தவிர, இலங்கை அரசின் நீர்பாசன வடிகாலமைப்பு அமைச்சர் ராவுப் ஹக்கிம் 20151 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தார். இந்த நிலையில் வட மாகாண சபை போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்து சுன்னாகம் நீரில் மலக் கழிவுகளே கலந்துள்ளது எனவும் கிறீஸ் மற்றும் டீசல் கலந்திருக்கவில்லை எனவும் முடிவிற்கு வந்தது. அந்த நிபுணர்குழுவை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் வட மாகண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்தே அமைத்திருந்தனர்.

தாம் பெற்றுக்கொண்ட பணத்திற்காக இக் கும்பல் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மக்களின் வாழ்க்கையைப் பணயம் வைத்தது. தமது காலடியில் வாழும் மக்களின் வாழ்க்கையை பணயம் வைத்தது. மல்லாகம் நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறியிருப்பதற்கும் அப்பால் பணப் பரிமாற்றத்திற்கும் அப்பால் வேறு ஆபத்தான் அரசியல் நோகங்கள் இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன.

கடந்த 9ம் திகதி வட மாகாண சபை கூடிய போது எதிர்வரும் 23ம் திகதி நீர் நச்சடைந்தமை தொடர்பாகப் பேசுவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் மற்றும் தவராசா ஆகியோர் அவைத்தலைவரிடம் அனுமதி கோரினர். அவர்களது கோரிக்கை கருத்தில் எடுக்கப்பட்டு அவர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. பின்னதாகத் தலையிட்ட வட மாகண சபையின் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், நீர் தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்துகொண்டிருப்பதால் அது தொடர்பாகப் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அவைத்தலைவரிடம் கோரிக்கைவிடுத்தார்.

அதன் போது, பொதுவாக நீர் தொடர்பாகப் பேசுவதற்கு அனுமதி வழங்குவதற்கும் விசாரணைகளுக்கும் தொடர்பில்லை என சிவாஜிலிங்கம் மற்றும் தவராசா ஆகியோர் விவாதித்ததைத் தொடர்ந்து அனுமதி மீண்டும் வழங்கப்பட்டது.

அப்போது நீர் தொடர்பாக எவ்வாறன விடையங்களைப் பேசுவதாகக் குறிப்பிட்டால் மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என விக்னேஸ்வரன் கூறிய போது, அது சட்டப்படி குறிப்பிட வேண்டிய தேவையற்றது என எதிர் விவாதம் செய்யப்பட்டது, அந்த நிலையில் வேறு வழியின்றி விக்னேஸ்வரன் மௌனமாக அவைத் தலைவர் எதிர்வரும் மாகாணசபைக் கூட்டத்தில் நீர் தொடர்பாகப் பேசுவதற்கு அனுமதி வழங்கினார்.

பின்னதாக நீர் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக விக்னேஸ்வரன் குழு நடத்திய மாநாடு ஒன்றின் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்ப்படாத நிலையில் நீர் தொடர்பாக மாகாணசபையில் பேசுவது பொருத்தமற்றது என மீண்டும் விக்னேஸ்வரன் அடம்பிடித்தார். இறுதியாக அவைத்தலவர் அனுமதி வழங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் மருத்துவ விடூப்பை அறிவித்துவிட்டு முதலமைசர் விக்னேஸ்வரன் தனது கொழும்பு இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

cvv-216x300.jpgஇவை தவிர, நீர் மாசடைந்தமை தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் போலி நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக முதலமைச்சரைச் சந்திப்பதற்கு அனுமதி கோரிய கடிதத்தத்திற்குப் பதிலனுப்பிய முதமைச்சர் இது தொடர்பாக பேசுவதை நிராகரித்துவிட்டார்.

தவிர, சுன்னாகம் பகுதியின் நீர் மற்றும் நில வழத்தை அழித்து மக்களை மரணத்துள் வாழ நிர்பந்தித்த அழிப்பு நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்காற்றிய அவுஸ்திரேலியக் குடியேற்றவாசியும், விக்னேஸ்வரனின் சட்டவிரோதப் பங்குதாரருமான நிமலன் கார்த்திகேயனுக்கு வட மாகாண சபையில் ஊழியராகப் பதவி வழங்கப்பட்டுள்ளது. வெறும் 35 ஆயிரம் ரூபா ஊதியத்திற்காக நிமலன் கார்த்திகேயன் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்துள்ளார். நிமலன் கார்த்திகேயன் வடக்கு மாகாண சபையில் பணியாளராக இணைந்துகொள்வார் என கடந்த ஜனவரி மாதத்தில் எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

inioru

Link to comment
Share on other sites

எந்த ஆதாரமும் அற்ற கட்டுக்கதை கிளப்பிவிட்டவர்கள் சுமத்திரன் வகையறா போல் உள்ளது என என்றால் அவரால் மட்டுமே இப்படி முட்டாள் தனமாக வசைபாட முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியொரு குப்பாடிகள்.. சொந்த மலத்தைக் கிளறி மகிழ்வதில் மட்டும் வல்லவர்கள். ஏதாவது உருப்படியா யாரையாவது இதுங்க எழுதி இருக்குதுகளா. :rolleyes:

Link to comment
Share on other sites

Ctrl/Cmd+V)  இந்த விடயம் இத்தனை காலம் ஏன்  நீடித்துக் கொண்டு போகிறது என்பது தெரியவில்லை. மக்கள் இந்தத் தண்ணீரைக் குடிக்கலாமா குடிக்கக் கூடாதா? என ஏன் வட மாகாண சபை முதல்வர் திட்டவட்டமாகச் சொல்லக் கூடாது? இதில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறதுக்கு என்ன ஆதாரம்? ஊகத்தின் அடிபடையில் சொல்லப்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது. முதலமைச்சரின் அரசியல் ஆலோசகர், அலுவலக உதவியாளர் மற்றும் நாட்குறிப்பு செயலாளர் பெயர் நிர்மலன். நிமலன் அல்ல. இவருக்கு ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பு அலுவலராக 5,000 அ.டொலர் சம்பள்த்தில் இருத்துமாறு முதலமைச்சர் கேட்டிருந்தார். அப்படிப்பட்டவர் எப்படி வெறுமனே ருபா 35,000 சம்பளத்தில் வேலை செய்கிறார்?

Link to comment
Share on other sites

நண்டுகளில் யாழ்ப்பாணத்தில் பெருகிய சில நண்டுகள் இன்று நாடு முழுவதும் பரவித் தன் இனத்தையும் ஓரளவு பெருக்கிக் கொண்டுள்ளன. அவை தானும் சுதந்திரமாக வெளியேற விரும்பாது, வெளியேற முயற்சிசெய்பவைகளையும் விடாது. ஆனால் நரிகளை நம்பிப் பின்னால் ஓடி அவைக்கு இரையாகுவதில் இன்பம் காணும். :grin: :shocked: 

Link to comment
Share on other sites

தமிழின விரோத சாத்தான்களின் வேதம் மீண்டும் ஒருமுறை தலைகாட்டியுள்ளது!
 

இதுபோன்ற பொய்களை அவ்வப்போது அவிழ்த்துவிடும் காடையர்களை தமிழர் நன்கு அறிவர்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.