Jump to content

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அனுபவப் பகிர்வு நெடுக்க்ஸ். நீங்கள் சட்டரீதியாக இலங்கையை வெளியேறி இருந்தால் உங்கள் தரவுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

மேலும் மிக நீண்ட கலம் கழித்து இலங்கைக்கு வருவதனால் அல்லது உங்களது பெயர், பிறந்த திகதி மாற்றப்பட்டு இருந்தால் இந்தப்பிரச்சினை எற்பட்டு இருக்கலாம்.

ஆனலும் இந்த ஸ்கொலர்ஷிப் உண்மை எனக்கு தெரிந்தாகனும் சாமி tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 349
  • Created
  • Last Reply
4 hours ago, MEERA said:

ஆனால் சிறீலங்காவிலிருந்து 250/= மட்டுமே வெளியில் எடுத்து செல்லலாம்.

இல்லை மீரா

ஆனால் இலங்கைப் பணத்தை கொண்டுபோவதற்கு சட்டம் கொஞ்சம் இறுக்கமானது - விபரம் தெரியாது. இந்தியாவில் இந்திய பணத்தை உள்ளே கொண்டுவரவோ வெளியே கொண்டு போகவோ அனுமதி இல்லை. தெரியாமல் போனமுறை அங்கு மாத்தினத்தில் கொஞ்சம் இன்னமும் இருக்கு. அடுத்தமுறை போகும்போது கொண்டுபோகாமல் மாத்திட வேண்டியதுதான்.

இப்போது $25 000 உள்ளே கொண்டு வரலாம் என்று கேள்விப்பட்டேன் - உண்மை தெரியாது 

Foreign Currency Declaration Limits

1.            A person may bring any sum of money in foreign currencies into Sri Lanka. This sum  could be in TCs, Bank drafts or currency notes. However, if the total of such sum  exceeds US$ 15,000 such sum should be declared to the Sri Lanka Customs.

2.            If a person whishes to take out from Sri Lanka any sum in exceeds of US$ 5000 in  currency notes out of the sum brought in as per (1) above, such person should  declare the entirety of the sum brought in, even if it is less than US$15,000.

3.            Any person may take out from Sri Lanka a total of legally acquired foreign currency in  any form up to US$10,000 without any declaration. However, if the sum in currency  notes exceeds US$5,000, the entirety of the sum must also be declared.

4.            Any person can bring in any sum of foreign currency earned from employment,  profession or business abroad and upon declaration of such foreign currency to  Customs as per (1) above and may retain such sum in his/her possession for 90 days  before changing in to Sri Lanka rupees.

5.            Any person who has obtained foreign currency from a Bank, Authorized Travel Agent or  Authorized Money Changer for overseas travel may retain in his/her possession the  unused sum for 90 days before changing into Sri Lanka Rupees.

6.            Foreign currency retained by any person as per (4) and (5) above may be used for  subsequent visits abroad for permitted transactions within the allowed period of  retention.

7.            Any person returning after travel abroad may retain without any time limit. US$ 2000 out  of foreign currency purchased for such travel or earned by him/her outside Sri Lanka for  his use during future travels.

The foreign currency amounts indicated in US $ may be in equivalent amounts in other convertible foreign currencies.

Public Notice By

Exchange Control Department

Central Bank of Sri Lanka

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஜீவன் சிவா said:

இல்லை மீரா

ஆனால் இலங்கைப் பணத்தை கொண்டுபோவதற்கு சட்டம் கொஞ்சம் இறுக்கமானது - விபரம் தெரியாது.

இல்லை & விபரம் தெரியாது - குழப்புகிறீர்கள் ஜீவன்,

விமானநிலைய அறிவிப்பு பலகைகளில் பார்த்த ஞாபகம். எதற்கும் அடுத்த தடவை பயணம் செய்யும் போது பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nedukkalapoovan said:

இங்கு சிலரின் கருத்தைப் பார்க்க சிரிப்புச் சிரிப்பா வருகுது. சொறீலங்கா போகாமல் கருத்தெழுதினால்.. போயிட்டு வந்து எழுதென்பார்கள். போயிட்டு வந்து எழுதினால்.. வெட்கம் ரோசம் இல்லாமல் போயிட்டு வந்து எழுதுது என்பார்கள். இப்படியான பாலர் வகுப்புக் கூட்டம் எல்லாம் யாழில இருப்பது எங்களுக்கு நன்கு தெரியும்.

சொறீலங்காவுக்கு என்று இந்தப் பயணம் அமையவில்லை. தென்கிழக்காசிய நாடு ஒன்றுக்கான பயணத்தின் இடைத்தங்கல் தான் சொறீலங்கா. மேலும் சொறீலங்காவின் எந்த விமான சேவைகள் வசதிகளை பாவிச்சு.. நாங்க பயணிக்கவும் இல்லை. 

சொறீலங்கா சொர்க்காபுரின்னு போயிட்டு வந்து போலியாக வகுப்பெடுப்பவர்களுக்கு மத்தியில்.. அங்குள்ள  உண்மையின் தரிசனத்தையும்.... சொறீலங்கா சிங்கள பெளத்த.. இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் கீழ் சொந்த ஊர்கள் இருக்கும் நிலவரத்தை சொல்லவுமே இந்தப் பதிவு என்பதை விளங்கக் கூடியவர்கள் விளங்கி இருக்கிறார்கள்.

சொறீலங்கா.. இன்னும் 21ம் நூற்றாட்டில்.. நாகரிகமடைந்த மனிதர்கள் வாழத்தக்க தேசமாக இல்லை. இன்னும் பல மாற்றங்கள்.. அங்குள்ள மனிதர்களின் மனங்களில் இருந்து பிறந்தால்.. அன்றி... சொறீலங்கா.. கெடுபிடி தேசமாகவே உலகில் சுழலும். தமிழர்கள் அங்கு அடிமை இனமாகவே இருக்கும். :rolleyes:

நெடுக்ஸ்,உண்மையை சொல்றன்,தோலுரித்துக் காட்டுகிறேன் என ரொம்ப பீத்த வேண்டாம். உங்கள் முதல் பதிவில் முதல் இங்கு எல்லோரையும் குழப்பும் விதத்திலேயே இருந்தது...நீங்கள் ஏமாந்து விட்டு,போறவர்கள் எல்லோருக்கும் ஏதோ தமிழர்கள் என்ட காரணத்தால் பிரச்சனை இருக்குது என்ட காட்ட முனைந்தீர்கள்...கொஞ்சப் பேர் வந்து சுட்டிக் காட்டியவுடன் அதை ஒத்துக் கொண்டு விட்டு அதுக்கு ஒரு சாட்டும் சொல்கிறீர்கள்.
 
தயவு செய்து இனி மேலாவது உண்மையை[யாதார்த்தத்தை]எழுதுங்கள்.முடியா விட்டால் அது பற்றிய திரிகளில் கருத்து எழுத வேண்டாம்...உங்கள் சொந்த,பந்தம் ஊரில் இருக்குது எனத் தெரிந்தும் ஊருக்குப் போக மாட்டேன் என பீலா விட்டீர்கள்...இப்ப கூட விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி வேற நாட்டுக்கு போகேக்கு முதல் இடையில் போனேன் என்டு பீலா...ஏன் இனி மேல் ஊருக்குப் போகவே மாட்டீங்களா?..எதுக்கு இந்த சால்ஜாப்பு:unsure:
 
14 hours ago, பெருமாள் said:

மறுபடியும் தப்பாக சொல்கிறிர்கள் சகோ சொரிலன்காவில் ஈழம் இல்லை ஈழத்தை சொறிலங்கா அடாத்தாக அடிமை படுத்தி வைத்துள்ளது என்பதே உண்மை 

பெருமாள்,சிங்கள் அரசு மனம் திருந்தி சகலருக்கும் சக உரிமை,வெட்டுப்புள்ளி முறையை நீக்குவோம்.....என்டு சொன்னால் இல்லை தனி நாடு தான் வேண்டும் என சொல்வீர்களா?
 
உங்களைப் போன்றவர்களுக்கு ஊரில் ஒருத்தரும் இல்லை.போக வேண்டிய அவசியமும் இல்லை...காணியை அவன் தந்தால் போல அதில போய் இருக்கவா போறீங்கள் விக்கத் தானே போறீங்கள்...பொறுங்கள் கொஞ்சம்,கொஞ்சமாய் விடுவான் அதற்கு பிற்கு என்ன சொல்கிறீர்கள் எனப் பார்ப்போம்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

அதே மந்தைகளை மேய்க்க நான் வரமாட்டன் யாரும் மெய்ச்சால் சரிதான் எனும் சுயநலம் இங்குள்ளவர்களுக்கு பரவியது போன்று எனக்கும் உள்ளது நினைத்து வெக்கமாய் உள்ளது காலம் கடந்து விட்டது இருந்த ஒரு மேப்பானையும் குடும்பத்துடன் ஆகுதியாக்கிவிட்டு புதியவனை தேடிக்கொண்டு இருக்கிறம்.

ஒன்றுபட்ட இலங்கையினுள் தீர்வு என்பது அரசியல்வாதிகளுக்கு சரியாக இருக்கலாம் அங்கு புலியும் இல்லை பூனையும் இல்லை தீர்வை எப்போ தருவார்கள் இன்னும் 100 வருடம் கழித்தா?

30 வருடம் யுத்தம் நடைபெற்ற நாட்டில் தீர்வு என்பது அள்ளித்தந்துவிடமாட்டார்கள் பெருமாள் அண்ணை அவர்கள்  இது தொடரலாம் அல்லது ஏதாவது தீர்வை தந்து திணிக்கலாம்  காலம் தான் பதில் சொல்ல வேண்டும் நாம் சொல்ல இயலாது சிங்கள மக்கள் , தமிழ் ம்க்கள் ,முஸ்லீம் மக்க்கள்  தங்களின் இருப்பிடத்தை பெற்றுக்கொள்ளவே முண்டி அடிக்கிறார்கள் உதட்டளவில் ஒற்றுமை என பேசிக்கொண்டாலும் உள்ளத்தளவில்  பிரிவு என்பது ஆழ்மனதில் அடிக்கப்பட்ட ஒன்று அதனால் விட்டுகொடுக்கமாட்டார்கள் அவர்களும் சரி நாங்களும் சரி மற்ற முஸ்லீம்களும் சரி  ஆக இது தொடரலாம் 

அதற்க்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டியவர்கள்   அலவாங்கை விழுங்கியவர்கள் போல் நிமிர்ந்து கொண்டுதான் திரிகிறார்கள் தீர்வு கிடைத்த பாடு இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழனை இனி கடவுள் தான் காப்பாத்த வேணும்"...
யாழ் களத்தில் "கருத்து" எழுதும் சிலரை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
சிங்கள இனத்தவரே அங்கு நடக்கும் திருகு தளங்களை வெளிப்படையாக கதைக்கும் போது எதுக்கு அப்பா நீங்கள் இப்படி விழுந்தடித்துக்கொண்டு வெள்ளை அடிக்கிறீர்கள்? 
இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம், அது பிழை , இது சரி .... உங்களில் தான் பிழை !!
இப்போ கடைசியில் நீ எப்படி நாட்டை விட்டு போனாய்? நீயும் அகதி தானே ? என்ற ரேஞ்சுக்கு கதை வந்து நிட்கின்றது ... என்ன கருமமுடா சாமி!!!
ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு விதம். 
நீங்கள் சொல்வது போல நெடுக்கர் தட்டி கேட்டிருக்கலாம், அழகிய பிரிட்டிஷ் ஆக்ஸெண்ட்டில் மூணு வசனம் பேசி இருக்கலாம்...ஒரு வேலை அதில் எதுவும் விபரீதம் வந்து அந்த பகிர்வை இங்கே இட்டு இருந்தால் ... "உனக்கென்ன அவன் கேட்ட ஒரு கொஞ்சத்தை கொடுத்துப்போட்டு பேசாமல் வர வேண்டியது தானே ...உனக்கு வெள்ளைக்காரன் என்ற நினைப்பு" என்கிற ரேஞ்சுக்கும் ஒரு சிலர் கதை எழுதத்தான் போகிறீர்கள்.
  
எதோ பிரிட்டீஸ்   பாஸ்போர்ட்டை வைத்திருந்தால் லஞ்சம், ஊழலை ஒழிக்கலாம் போல கதை.
ஆள விடுங்கடா சாமி..
இலங்கை சர்வதேச விமான நிலையம் ஆசியாவில் உள்ள விமான நிலையங்களோடு தரப்படுத்தப் படுகையில் 
மிக மோசமான விமான நிலையங்களில் 10ஆம் இடமாம்.

இது உண்மையோ பொய்யோ தெரியாது ..நான் வாக்கெடுப்பு நடத்தவில்லை இணைய தளம் ஒன்று சொல்கிறது.
இதோ இரண்டு வெவ்வேறு செய்திகள் ..

http://intca.org/2016/09/bia-10th-worst-asian-airport/

http://intca.org/2016/08/srilankan-drunk-pilot-controversy/
 
இரண்டையும் எழுதியவர்கள் சிங்களவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. 
இது போல இன்னும் பல இணைப்புகள் இருக்கின்றது.
நானும் ஸ்ரீ லங்கா விமான சேவையில் ஒரு கட்டத்தில் பணியாற்றியவன்... 
அங்குள்ள அதிகாரிகளின் மன நிலை ஓரளவுக்கு அறிந்தவன்..

என் நாட்டில் நடக்கும் லஞ்சம், ஊழல் , சீர்கேடுகளை பார்த்து  குறை சொல்வது ...

இப்படி இருக்காமல் இப்படியும் இருக்கலாமே என்ற ஒரு நோக்கத்தில் தானே தவிர  இனத்துவேசமாக பார்க்காதீர்கள்.

நெடுக்காலபோவான், பெருமாள்: - "ஸ்ரீ லங்காவை" சொறி லங்காவாக விளிப்பது உங்கள் நிலைப்பாடு, மனதில் இடம் இருந்தால் "இலங்கை" என்றாவது எழுதலாம் என்பது எனது அபிப்ராயம்.
துவேசத்தின் வெளிப்பாடு போன்ற ஒரு தோற்றம் தரும் பிரயோகம்.

சிங்களவர் பலரும் இன்னும் கூட "ஈழம்" என்ற பதத்தை "பீலம்" என்றும் அழைப்பதை நான் பார்த்திருக்கிறேன். இதை என்னால் ஜீரணிக்க முடிவதில்லை.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்  தாயகத்துக்கு போகவேண்டிவந்தால்

ஏதாவது சிக்கல் ஏற்பட்டு பணம் கேட்டால்

கொடுத்து விட்டுத்தான் வருவேன்

காரணம்

பயங்கரவாதச்சட்டம் அமுலில் உள்ள ஒரு  நாட்டில்

கிண்டினால் தட்டுப்படும் ஆளாக இருக்கும் என்னால்

வேறு எவ்வாறு தப்பிக்க முடியும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

நான்  தாயகத்துக்கு போகவேண்டிவந்தால்

ஏதாவது சிக்கல் ஏற்பட்டு பணம் கேட்டால்

கொடுத்து விட்டுத்தான் வருவேன்

காரணம்

பயங்கரவாதச்சட்டம் அமுலில் உள்ள ஒரு  நாட்டில்

கிண்டினால் தட்டுப்படும் ஆளாக இருக்கும் என்னால்

வேறு எவ்வாறு தப்பிக்க முடியும்???

பயப்படவேண்டாம்.

கருணா அம்மானின் ஃபோன் நம்பரை கொண்டுப்போங்கள். ஒரு பிரச்சினையும் வராது.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, colomban said:

இந்த ஸ்கொலர்ஷிப் உண்மை எனக்கு தெரிந்தாகனும் சாமி

கொலசிப் எல்லாம் பாஸ்போட்டில குந்தியே அனுப்பிறவங்கள். உங்களுக்கும் கற்பனை அதிகமாகிவிட்டது. அவங்கட சிஸ்டம் பழைய தரவுகளை தேடிப் பார்க்கும் நிலையில்.. பழைய தரவுகளை சொறீலங்கா சேமிச்சிருக்கோ என்பது சந்தேகம். அதுபோக.. லண்டனில் உள்ள சொறீலங்கா தூதரகம் மீது சொறீலங்காவுக்கு சந்தேகம் பாருங்கோ.  அந்தளவுக்கு இருக்கு சொறீலங்காவும் அதன் குடிவரவு குடியகழ்வுத்துறையும். tw_blush:

Link to comment
Share on other sites

15 hours ago, ஜீவன் சிவா said:

போறபோது பேசாம Debit கார்ட்டையும் + Credit கார்ட்டையும் + Travel Insurance கார்ட்டையும் + கை செலவுக்கு ஒரு 200 டொலரையும் தூக்கி பொக்கட்டுக்குள்ள போட்டுட்டு போகாம கரன்சியை கட்டிப் பிடிச்சிட்டு போனா இப்படித்தான்.:grin:

இதை நான் நக்கலுக்காக எழுதவில்லை 

நோர்வேயில் இருந்து வெளியே அல்லது நோர்வேக்குள்ளே 25000 குரோனர் பெறுமதியான பணத்துக்கு மேல் யாருமே எடுத்து செல்ல முடியாது. பிடிபட்டால் அனைத்தும் பறிமுதல் + அபராதம். இதே போன்று ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும். அதனை ஆராய்ந்து மினக்கிடாம பேசாம மேலே நான் கூறிய 3 கார்ட்டுக்களையும் கொண்டு செல்வதே உசிதம்.

ஆனால் கார்ட்டுகளை எங்கே பாவித்து பணம் எடுப்பது என்பது உங்கள் திறமை. பொதுவாக விமான நிலயத்திலோ அல்லது வங்கிகளுக்குள்ளே உள்ள தானியங்கிகளில் எடுப்பது நன்று.

பணமாக கொண்டு சென்றால் அதை கறுப்பில் மாற்றுவது என்பது இலகுவான விடயமில்லை. வங்கிகளில்தான் மாற்றுவதென்றால் அதற்கு கார்ட்டை பாவிக்கலாமே!!! 

நான் வழமையாக இலங்கை போகும் போது AUD 5000 யிலும் குறைந்த தொகையையே காசாக கொண்டு சொல்வதுண்டு. இலங்கை ATM இல் அவுஸ் காட்டைப் போட்டு காசு எடுப்பதில்லை ஆனால் இலங்கை வங்கி Debit காட்டுகளை பாவிப்பதுண்டு, பிரச்சனைகள் வந்ததில்லை. எனது அவுஸ் கிரெடிட் காட்டை காமா நைட் கிளப்பில் இருந்து ஹில்டன் வரைக்கும் தேய்த்திருக்கிறேன் குறிப்பிட்ட தொகையை விட கூட ஒருபோதும் வெட்டியதில்லை.

இலங்கைக்கு வெள்ளையடிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை, ஆனால் இலங்கையில பிறந்து 20 வருஷமாவது வளர்ந்து வெளிநாடு போய் திரும்பி விசிட் வாறவர்கள், சோ டெர்ட்டி, டூ ஹோட், ட்ராபிக் இஸ் கிரேஸி, ஹொவ் டூ யு லிவ் ஹியர் எண்டு செய்யும் அலப்பறைகள் தான் தாங்க முடிவதில்லை. இலங்கை ஒரு மூன்றாம் உலக நாடு, முப்பது வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடு, இப்போதுதான் குணமடைந்து வருகிறது. நான் பார்த்த வரையில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளை விட பாதுகாப்பானது, சுத்தமானது, படித்த கண்ணியமான பெரும்பான்மையான மக்களைக் கொண்டது.

சொறிலங்கா சொறிலங்கா என்று சொல்லிவிட்டு வருசத்துக்கு ஒருதடவையாவது இலங்கை போய் வருபவர்கள் சுரணையற்றவர்கள். இப்பவே சொல்லிவிடுகிறேன், இலங்கை திறமான தேசம் அல்ல, அங்கு மாறவேண்டிய எவ்வளவோ விடயங்கள் உண்டு, இன்னும் நூறு வருடங்களுக்கு மாற்றமுடியாத ஏராளம் விடயங்களும் உண்டு. அங்கு போய் வருவது ஒருவகை சலஞ். எம்மில் பலர் சலஞ்சகளை விரும்புவது இல்லை. இலகுவான ஹொலிடே போக வேண்டுமா? தாய்லாந்து தொடங்கி பல நாடுகள் உங்களை வரவேற்க காத்திருக்கின்றன, அந்தப் பட்டியலில் இலங்கை இல்லை.  

எனது அம்மாவைவிட அவளது வயதில் இருக்கும் எவ்வளவோ பெண்கள், அழகானவர்கள், படித்தவர்கள், பெரிய பதவிகளில் இருப்பவர்கள். ஆனால் எனக்கு இவர்கள் எல்லாரிலும் எனது தாயே மேலானவள். அவளிடம் பல குறைபாடுகள் உண்டு. ஆனால் அவளின் அணைப்பின் கதகதப்பில் இவையெல்லாம் பறந்து போய் விடுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:
நெடுக்ஸ்,உண்மையை சொல்றன்,தோலுரித்துக் காட்டுகிறேன் என ரொம்ப பீத்த வேண்டாம். உங்கள் முதல் பதிவில் முதல் இங்கு எல்லோரையும் குழப்பும் விதத்திலேயே இருந்தது...நீங்கள் ஏமாந்து விட்டு,போறவர்கள் எல்லோருக்கும் ஏதோ தமிழர்கள் என்ட காரணத்தால் பிரச்சனை இருக்குது என்ட காட்ட முனைந்தீர்கள்...கொஞ்சப் பேர் வந்து சுட்டிக் காட்டியவுடன் அதை ஒத்துக் கொண்டு விட்டு அதுக்கு ஒரு சாட்டும் சொல்கிறீர்கள்.
 
தயவு செய்து இனி மேலாவது உண்மையை[யாதார்த்தத்தை]எழுதுங்கள்.முடியா விட்டால் அது பற்றிய திரிகளில் கருத்து எழுத வேண்டாம்...உங்கள் சொந்த,பந்தம் ஊரில் இருக்குது எனத் தெரிந்தும் ஊருக்குப் போக மாட்டேன் என பீலா விட்டீர்கள்...இப்ப கூட விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி வேற நாட்டுக்கு போகேக்கு முதல் இடையில் போனேன் என்டு பீலா...ஏன் இனி மேல் ஊருக்குப் போகவே மாட்டீங்களா?..எதுக்கு இந்த சால்ஜாப்பு

உங்களுக்கும் கற்பனை ஜாத்தி என்பது எங்களுக்கு நன்கு தெரியும். மேலும் விமான நிலைய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி சொறீலங்கா அதிகாரி என்று தான் சொல்லி இருக்கே தவிர தமிழோ.. முஸ்லீமோ.. சிங்களமோன்னு கூடச் சொல்லேல்ல. 

மேலும்.. நாங்க இங்கு பகிர்ந்து கொள்ளும் விடயங்கள் ஒரு பொது இடத்தில் பகிர்ந்து கொள்ளக் கூடிய வகையில் தான் இருக்கும். தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்து கொள்வதில்லை.. முழுமையாக. அதில் உடன்பாடும் இல்லை. எனவே நீங்கள் உங்கள் கற்பனைக் குதிரையில் வேண்டிய தூரம் வரை சவாரி செய்யலாம். அவற்றிற்கு விளக்கம் சொல்லி மிணக்கட நாங்க கேணப்பயலுகள் கிடையாது. ஆனால்.. எங்கள் கருத்துக்களை எங்க வைக்கனும் எங்க வைக்கக் கூடாது எப்படி வைக்கனும் என்பதை தீர்மானிப்பது எப்பவும் நாங்களாகத்தான் இருக்க முடியும். அடுத்தவரோ.. அவர்களின் கற்பனையோ அல்ல.  tw_blush:

இங்கு சிலர் சொறீலங்கா.. என்ற தேசம்... சீரழியனும் என்பதை நாங்க எல்லாம் விரும்பிற மாதிரியும் தாங்கள்.. சொறீலங்கா மாதாவின் புதல்வர்கள் என்றும் பிரகடனம் செய்ய இந்தத் தலைப்பை பாவிக்கினம்.

சொறீலங்கா... எங்களின் தேசம் அல்ல. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தலைப்பில் கூட ஊர் போய் வந்த அனுபவம் என்று தான் போட்டிருக்கிறோம். சொறீலங்கா போய் வந்த அனுபவம் என்றில்லை. ஏனெனில்.. எனது தாய் மண்ணான தமிழீழத்தை அடைய நாங்க.. இன்னும் சொறீலங்கா என்ற ஒரு ஆக்கிரமிப்பு நாட்டின் எல்லைக்கூடாகவே பயணிக்க வேண்டி இருக்கிறது. அந்த வகையில்.. எங்கள் ஊரை அடைய.. நாங்கள்.. பட்ட அனுபவங்களில் சொறீலங்காவும் அதன் கெடுகுடி நிர்வாக அமைப்புக்களும் வந்து போவது இயல்பானது. 

மேலும்.. ஒரு ஆக்கிரமிப்பாளன்.. தன் சொந்த தேசத்தையும் உருப்படியா வைச்சிருக்க முடியாமல்.. அடுத்தவனின் தேசத்தையும் உருப்பட விடாமல் இருப்பதையும் எங்கள் அனுபவத்தைப் படிப்பவர்கள் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். 

மேலும் சொறீலங்கா.. என்ற தேசம்.. உலகில் நாகரிகமான மனிதர்கள் நிம்மதியாக வாழக் கூடிய ஒரு இடமில்லை என்பதை தான் இந்த அனுபவங்கள் சொல்லி நிற்கின்றன. அந்த சொறீலங்காவின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் எம் ஊர்களும் அப்படி ஆக்கப்பட்டிருப்பதையும் இங்கு இனம்காட்டி நிற்கிறோம். இதுதான் அங்கு கள யதார்த்தமும் ஆகும். மற்றும்படி சொறீலங்காவின் சீரழிவுகளை மறைத்து.. அது ஒரு சிறப்பான தேசம் என்று புகழ எங்கள் அனுபவம் எங்களுக்கு இடமளிக்கவில்லை. ஏன் சொறீலங்காவை தாய் நாடாக்கி வைத்திருக்கும் சிங்களவர்களுக்கே முடியவில்லை.

இதே சம்பவத்தை வேறு ஓர் இடத்தில் பகிர்ந்து கொண்ட போது..  எயார் போட்டில் இருந்து.. எங்கும் காசு பறிக்கும் ஒரு அதிகார துஸ்பிரயோகமுள்ள..  ஏழ்மை பாராட்டும்.. நாடு தான் சொறீலங்கான்னு.. சிங்களவர்களே சொல்லுகிறார்கள். ஆனால் நம்மவர்கள் சிலர்.....................???! இவர்கள் சொறீலங்காவையும் முன்னேற விடமாட்டர்கள்.. தாங்களும் முன்னேறமாட்டர்கள் போல இருக்கு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Thumpalayan said:

நான் வழமையாக இலங்கை போகும் போது AUD 5000 யிலும் குறைந்த தொகையையே காசாக கொண்டு சொல்வதுண்டு. இலங்கை ATM இல் அவுஸ் காட்டைப் போட்டு காசு எடுப்பதில்லை ஆனால் இலங்கை வங்கி Debit காட்டுகளை பாவிப்பதுண்டு, பிரச்சனைகள் வந்ததில்லை. எனது அவுஸ் கிரெடிட் காட்டை காமா நைட் கிளப்பில் இருந்து ஹில்டன் வரைக்கும் தேய்த்திருக்கிறேன் குறிப்பிட்ட தொகையை விட கூட ஒருபோதும் வெட்டியதில்லை.

இலங்கைக்கு வெள்ளையடிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை, ஆனால் இலங்கையில பிறந்து 20 வருஷமாவது வளர்ந்து வெளிநாடு போய் திரும்பி விசிட் வாறவர்கள், சோ டெர்ட்டி, டூ ஹோட், ட்ராபிக் இஸ் கிரேஸி, ஹொவ் டூ யு லிவ் ஹியர் எண்டு செய்யும் அலப்பறைகள் தான் தாங்க முடிவதில்லை. இலங்கை ஒரு மூன்றாம் உலக நாடு, முப்பது வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடு, இப்போதுதான் குணமடைந்து வருகிறது. நான் பார்த்த வரையில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளை விட பாதுகாப்பானது, சுத்தமானது, படித்த கண்ணியமான பெரும்பான்மையான மக்களைக் கொண்டது.

சொறிலங்கா சொறிலங்கா என்று சொல்லிவிட்டு வருசத்துக்கு ஒருதடவையாவது இலங்கை போய் வருபவர்கள் சுரணையற்றவர்கள். இப்பவே சொல்லிவிடுகிறேன், இலங்கை திறமான தேசம் அல்ல, அங்கு மாறவேண்டிய எவ்வளவோ விடயங்கள் உண்டு, இன்னும் நூறு வருடங்களுக்கு மாற்றமுடியாத ஏராளம் விடயங்களும் உண்டு. அங்கு போய் வருவது ஒருவகை சலஞ். எம்மில் பலர் சலஞ்சகளை விரும்புவது இல்லை. இலகுவான ஹொலிடே போக வேண்டுமா? தாய்லாந்து தொடங்கி பல நாடுகள் உங்களை வரவேற்க காத்திருக்கின்றன, அந்தப் பட்டியலில் இலங்கை இல்லை.  

எனது அம்மாவைவிட அவளது வயதில் இருக்கும் எவ்வளவோ பெண்கள், அழகானவர்கள், படித்தவர்கள், பெரிய பதவிகளில் இருப்பவர்கள். ஆனால் எனக்கு இவர்கள் எல்லாரிலும் எனது தாயே மேலானவள். அவளிடம் பல குறைபாடுகள் உண்டு. ஆனால் அவளின் அணைப்பின் கதகதப்பில் இவையெல்லாம் பறந்து போய் விடுகின்றன.

மிக அழகான விளக்கம்.
பட்டுக்குஞ்சந்திற்கு ஏதோ ஒன்று குறைகின்றது போலிருக்கின்றது....

சில வேளை தேசியகீதமாய் இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Thumpalayan said:

எனது அம்மாவைவிட அவளது வயதில் இருக்கும் எவ்வளவோ பெண்கள், அழகானவர்கள், படித்தவர்கள், பெரிய பதவிகளில் இருப்பவர்கள். ஆனால் எனக்கு இவர்கள் எல்லாரிலும் எனது தாயே மேலானவள். அவளிடம் பல குறைபாடுகள் உண்டு. ஆனால் அவளின் அணைப்பின் கதகதப்பில் இவையெல்லாம் பறந்து போய் விடுகின்றன ... well said. :108_metal:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலுக்கு போறவன் .... அங்குபோய் ஜீவசிவன் என்கிறான்.
ஜீவன்தான் சிவன் என்றால் ஏன் கோவில்வரை போகிறாய் ?
என்று கேட்டால் ......... நீ நாத்திகன். உனக்கு சமயம் விளங்காது என்கிறான். 

தானாகவே குழம்பியது ஒரு கூட்டம் ...
குழப்பத்தில் சிக்கியது இன்னொரு கூட்டம். 

இல்லாத கடவுளவுளையே இவளவு எடுப்பாய் ஆக்கியவர் நாங்கள் 
இலங்கை ? 

இப்ப எனக்கு போறதில்லை பிரச்சனை இல்லை 
வரத்திலைதான்  பிரச்சனை!
(எனக்கு தனிப்பட இல்லை பொதுவாக அமேரிக்கா வருபவர்கள்) 

வீட்டுக்கு வீடு வாசல் படி ! 

இந்த லட்ஷணத்தில் உள்ளதை உள்ளபடி எழுதும் உத்தமர் 
சங்க அங்கத்தவர்கள் அடையாளம் வேற !! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

நான்  தாயகத்துக்கு போகவேண்டிவந்தால்

ஏதாவது சிக்கல் ஏற்பட்டு பணம் கேட்டால்

கொடுத்து விட்டுத்தான் வருவேன்

காரணம்

பயங்கரவாதச்சட்டம் அமுலில் உள்ள ஒரு  நாட்டில்

கிண்டினால் தட்டுப்படும் ஆளாக இருக்கும் என்னால்

வேறு எவ்வாறு தப்பிக்க முடியும்???

அம்மா ஆணை,

இவ்வளவு நாள் நான் நினைத்தேன் நீங்கள் ஓர் சிங்கம் என்று. தொரசிங்கம் சிங்கம் எர்போட்டுக்கு வந்தவுடன், அதிகாரிகள் யூடிபில் தட்டி நீங்கதான் டானியல் குடுகாரனை சவுத் ஆபிரிக்கவில் அடித்து இழுத்து வந்த தொடசிங்கம் என்று கண்டபின் சல்யூட் அடித்து உங்களை வரவேற்பார்கள் என நம்பியிருந்தேன், நீங்களோ இப்படி சொல்கின்றீர்களே வாப்பா.

Link to comment
Share on other sites

விமானநிலையத்தில் அதிகாரிகள் சட்டத்திற்கு முரணான வகையில் செயற்படுகின்றார்கள் என்றால் அவர்கள் மீது காவல்துறையில் முறைப்பாடு செய்யலாம். மேலதிகமாக பல்வேறு அமைப்புக்கள் (உ+ம்: மனித உரிமை) இருக்கின்றன. தவிர, பயணிகளின் குடியுரிமை உள்ள நாட்டின் தூதரகங்கள் உள்ளன. அவற்றின் உதவியை நாடலாம், முறைப்பாடு செய்யலாம்.

போர் நிறைவடைந்துவிட்டது. இப்போது இலங்கையில் மீள் கட்டமைப்பு நடைபெறுகின்றது. இங்கு பலர் எழுதும் கருத்துக்களை பார்த்தால் விமானநிலையத்தில் அதிகாரிகள் முறைகேடான முறையில் பயணிகளிடம் பணம் பறிக்கமுயலும்போது அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் இல்லாவிட்டால் பயணிகள் ஆபத்துக்களை எதிர்கொள்ளவேண்டிவரும் என்று தெரிகின்றது. இது உங்கள் அடிமனதில் உள்ள அடிமைத்தனத்தையே காட்டுகின்றது. ஒவ்வொரு பயணியும் விமானநிலையத்தில் அதிகாரிகள் செய்கின்ற முறைகேடுகளை முறைப்பாடு செய்தால் அங்கே பணியாற்றும் அதிகாரிகள் முறைகேடுகள் செய்வதற்கு அஞ்சுவார்கள். அதைவிடுத்து அதிகாரிகள் காட்டுகின்ற பூச்சாண்டிகளுக்கு அஞ்சி மூத்தா அடித்துவிட்டு பின்னர் மற்றவர்களுக்கும் நீங்கள் பூச்சாண்டி காட்டி பயனில்லை.

17 வருடங்களின் பின் நானும் அடுத்தமாதம் இலங்கை செல்கின்றேன். இலங்கை விமானநிலையத்தில் நான் பெறுகின்ற அனுபவத்தை உங்களுடன் பின்னர் பகிர்ந்துகொள்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன், நாங்கள் உரையாடும் பதிவு பற்றிய பொருள் சார்ந்து "அடிமனதில் உள்ள அடிமைத்தனத்தை" என்பதற்கான உங்கள் விளக்கத்தை தந்து உதவுங்கள்.

பதினேழு வருடம் வெளிநாட்டில் கணனி புரட்சி செய்துவிட்டு 15 நாள் லீவில் போறவன் 
காவல்துறை + பல்வேறு அமைப்புக்கள் (உ+ம்: மனித உரிமை) + பயணிகளின் குடியுரிமை தூதரகங்கள் இதுக்கெல்லாம் ஓடி ஓடி முறைப்பாடு வைத்து மாற்றங்களை கொண்டு வர போகிறீர்கள். சபாஷ் !!
முறைப்பாடு கொடுப்பதற்கும் ஒரு கொஞ்சம் செலவாகும். அதையும் நீங்கள் வெட்டி வீழ்த்துவீர்கள்.
அப்படியே போற வழியில நிறைய இங்கொன்றும் அங்கொன்றுமாக சின்ன சின்ன அநியாயங்கள் நடக்கும்; அதற்கும் ஏதாவது ஆணைக்குழு , பூனைக்குழு இருக்கும் அங்கேயும் ஒரு முறைப்பாடு வையுங்கள்.
நீங்கள் விடுமுறை முடித்து உங்கள் புகுந்த நாட்டுக்கு வந்ததன் பின்னர் ஒரு 10 நாள் கழித்து விசாரணைக்கு வரச் சொல்வார்கள். நீங்கள் யாரு...உடனே டிக்கெட் போட்டு ஸ்ரீ லங்கா போய் ஒரு முடிவு கண்டு போட்டுத்தான் வருவீர்கள். 
"பூச்சாண்டிகளுக்கு அஞ்சி மூத்தா அடித்துவிட்டு .." திரும்பினால் ..அதுக்கும் காசு  புடுங்க ஒரு கொஞ்சப்பேர் நிற்பார்கள். 

இதையெல்லாம் சரிபண்ண விடிஞ்சி வெண்கல ...... ஆயிடும்.
இருப்பினும் வாழ்த்துக்கள்.

15 hours ago, nedukkalapoovan said:

சொறீலங்கா... எங்களின் தேசம் அல்ல. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தலைப்பில் கூட ஊர் போய் வந்த அனுபவம் என்று தான் போட்டிருக்கிறோம். சொறீலங்கா போய் வந்த அனுபவம் என்றில்லை. ஏனெனில்.. எனது தாய் மண்ணான தமிழீழத்தை அடைய நாங்க.. இன்னும் சொறீலங்கா என்ற ஒரு ஆக்கிரமிப்பு நாட்டின் எல்லைக்கூடாகவே பயணிக்க வேண்டி இருக்கிறது. அந்த வகையில்.. எங்கள் ஊரை அடைய.. நாங்கள்.. பட்ட அனுபவங்களில் சொறீலங்காவும் அதன் கெடுகுடி நிர்வாக அமைப்புக்களும் வந்து போவது இயல்பானது. 

நீங்கள் இன்னும் போராட்ட காலத்தில் இருந்து மீளவில்லை. 
தேசத்துக்கு போராடியவன் இன்று ஒரு நாள் சோற்றுக்கு போராடுகிறான்.
நீங்கள் வேற.. தனி நாடு, அயல் நாடுன்னு காமெடி பண்ணிக்கிட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Sasi_varnam said:

கலைஞன், நாங்கள் உரையாடும் பதிவு பற்றிய பொருள் சார்ந்து "அடிமனதில் உள்ள அடிமைத்தனத்தை" என்பதற்கான உங்கள் விளக்கத்தை தந்து உதவுங்கள்.

பதினேழு வருடம் வெளிநாட்டில் கணனி புரட்சி செய்துவிட்டு 15 நாள் லீவில் போறவன் 
காவல்துறை + பல்வேறு அமைப்புக்கள் (உ+ம்: மனித உரிமை) + பயணிகளின் குடியுரிமை தூதரகங்கள் இதுக்கெல்லாம் ஓடி ஓடி முறைப்பாடு வைத்து மாற்றங்களை கொண்டு வர போகிறீர்கள். சபாஷ் !!
முறைப்பாடு கொடுப்பதற்கும் ஒரு கொஞ்சம் செலவாகும். அதையும் நீங்கள் வெட்டி வீழ்த்துவீர்கள்.
அப்படியே போற வழியில நிறைய இங்கொன்றும் அங்கொன்றுமாக சின்ன சின்ன அநியாயங்கள் நடக்கும்; அதற்கும் ஏதாவது ஆணைக்குழு , பூனைக்குழு இருக்கும் அங்கேயும் ஒரு முறைப்பாடு வையுங்கள்.
நீங்கள் விடுமுறை முடித்து உங்கள் புகுந்த நாட்டுக்கு வந்ததன் பின்னர் ஒரு 10 நாள் கழித்து விசாரணைக்கு வரச் சொல்வார்கள். நீங்கள் யாரு...உடனே டிக்கெட் போட்டு ஸ்ரீ லங்கா போய் ஒரு முடிவு கண்டு போட்டுத்தான் வருவீர்கள். 
"பூச்சாண்டிகளுக்கு அஞ்சி மூத்தா அடித்துவிட்டு .." திரும்பினால் ..அதுக்கும் காசு  புடுங்க ஒரு கொஞ்சப்பேர் நிற்பார்கள். 

இதையெல்லாம் சரிபண்ண விடிஞ்சி வெண்கல ...... ஆயிடும்.
இருப்பினும் வாழ்த்துக்கள்.

உண்மை  தான் சசி

இப்படித்தான்  கொஞ்ச நாளைக்கு முன்னர்

லண்டனிலிருந்து போனவர்

யாழ்ப்பாணத்தில் காவல்த்துறையிடம் விளக்கம் கேட்டு கம்பி  எண்ணி

அரைகுறை உயிரில வெளியில  வந்தவர்

அதுக்கும் இங்க எழுதுபவர்கள்

இவருக்கேன் தேவையற்ற கேள்வி

பொத்திக்கொண்டு வர ஏலாதோ என்றவர்கள்

தேடிப்படிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே யாரோ சொன்னதை போன்று பல நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை எவ்வளவோ மேல். 
ஆனாலும் அப்படியெல்லாம் நடப்பதில்லை என்ற வாதாட்டத்திற்கு இடமே இல்லை.

Sri Lanka’s Inconclusive Corruption Investigations

http://www.huffingtonpost.com/taylor-dibbert/sri-lankas-inconclusive-c_b_9831288.html

http://www.business-anti-corruption.com/country-profiles/sri-lanka

http://www.ipaidabribe.lk/reports/bribe-fighter#gsc.tab=0

1. Judicial System

Sri Lanka's judiciary is subject to corruption and manipulation by the political elite (BTI 2014). Businesses report the judiciary is not independent, public trust in politicians is low, and government policymaking is not transparent (GCR 2014-2015). The independence of the judiciary is undermined by the harassment, the attacks and threats to judges (FitW 2014).

2. Police

Police impunity is a problem in Sri Lanka, particularly in cases of police corruption, and there are continued high-levels of bribery and corruption complaints against police personnel (HRR 2013). Companies lack confidence in the reliability of police services to protect business from crime (GCR 2014-2015). The police force is perceived as the most corrupt public institution in Sri Lanka (GCB 2013).

3. Public Services

Companies indicate it is common to make irregular payments or bribes in connecion with public utilities and the awarding of licences (GCR 2014-2015). Aprroximately 8 percent of enterprises that deal with government licensing agencies make unofficial payments, which amounted to 5-6 percent of the official fee (World Bank, 2013). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய செய்தித் தலைப்பு  ஐலண்ட் பத்திரிகை 
    
  • Sigiriya toilets out of order; tourists asked to go to jungle...
  • Mahinda openly encouraged elected govt representatives to be corrupt: Chandrika

Sigiriya toilets out of order; tourists asked to go to jungle.......

How civilised a nation is can perhaps be judged by the cleanliness of its public toilets. Sri Lankans boast of a glorious past and what is described as a hydraulic civilisation. They also take pride in the fascinating engineering feats of their forebears such as vast irrigation reservoirs and huge dagobas. Excavations in the archeological sites continue to throw up many surprises. Interestingly, ruins of ancient toilets have been unearthed in places like Anuradhapura and Polonnaruwa.

http://www.island.lk/index.php?page_cat=news-section&page=news-section&code_title=55

Sadly, we learn that foreigners who visit Sigiriya or the Lion Rock cannot use toilets, which have been in a state of disrepair for a long time. An apparently jerrybuilt public convenience with cesspits overflowing was shown on television the other day. Some members of the cleaning staff were heard telling a group of resentful tourists in a callous manner, ‘Go to the jungle!’ So, these workers and their bosses seem to think decent men, women and children come all the way from faraway lands, spending their hard earned money and pay a hefty entry fee to relieve themselves behind bushes! This is certainly not the way to treat humans whether they are foreigners or Sri Lankans.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

பயப்படவேண்டாம்.

கருணா அம்மானின் ஃபோன் நம்பரை கொண்டுப்போங்கள். ஒரு பிரச்சினையும் வராது.?

எனக்கு எப்பொழுதும் ஓரே  தொலைபேசி  இலக்கம்  தான்

அது அவரிடமுண்டு

ஆனால் அவர் அடிக்கடி மாற்றுபவர்

உங்கபாணியிலேயே பதில்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் வேற என்ன நெடுக்ஸ்,நீங்கள்,விசுகு அண்ணா போன்றோர் மற்றவரை எதிர்த்து போராட மாட்டீர்கள்.மற்றவர்களை உசுப்பேத்தி,யாராவது போராடி எடுத்துத் தந்தால் சந்தோசமாய் அனுபவிப்பீர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே...யாழ் கொஞ்ச நாளாய் அமைதியாய் இருந்தது. சூடாக்கினத்திற்கு நன்றிகள் :mellow:

Link to comment
Share on other sites

18 hours ago, nedukkalapoovan said:

கொலசிப் எல்லாம் பாஸ்போட்டில குந்தியே அனுப்பிறவங்கள். உங்களுக்கும் கற்பனை அதிகமாகிவிட்டது. அவங்கட சிஸ்டம் பழைய தரவுகளை தேடிப் பார்க்கும் நிலையில்.. பழைய தரவுகளை சொறீலங்கா சேமிச்சிருக்கோ என்பது சந்தேகம். அதுபோக.. லண்டனில் உள்ள சொறீலங்கா தூதரகம் மீது சொறீலங்காவுக்கு சந்தேகம் பாருங்கோ.  அந்தளவுக்கு இருக்கு சொறீலங்காவும் அதன் குடிவரவு குடியகழ்வுத்துறையும். tw_blush:

Sorry நெடுக்ஸ் 
இதுவும் பொய்
'
நான் ரெசிடெண்ட் பெர்மிட்டுக்கு விண்ணப்பித்தபோது எனக்கு நேர்முக பரீட்ச்சையும் நடந்தது. அதில் அவர்கள் கேட்ட கேள்வியில் ஒன்று நான் எப்போது இலங்கையை விட்டு வெளியேறினேன் என்பது. அதற்கு நான் 30 ம் திகதி என்று கூற இல்லை 29 என்கிறார்கள். இலங்கை கடவுசீட்டில் மூன்றுமுறை இலங்கை திரும்பினாய் ஏன் 1991 இற்கும் 2011 இற்கும் இடையே வரவில்லை என்றும் கேட்டார்கள்.

பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டும்

இப்பவும் எனது ரெசிடெண்ட் பெர்மிட்டுக்கு உரிய ஸ்டிக்கரில் நான் நோர்வேஜியன் பாஸ்போர்ட்டில் எத்தனை தரம் இலங்கை வந்தேன் என்ற விபரம் இருக்குதே
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

மேலே யாரோ சொன்னதை போன்று பல நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை எவ்வளவோ மேல். 
ஆனாலும் அப்படியெல்லாம் நடப்பதில்லை என்ற வாதாட்டத்திற்கு இடமே இல்லை.

Sri Lanka’s Inconclusive Corruption Investigations

http://www.huffingtonpost.com/taylor-dibbert/sri-lankas-inconclusive-c_b_9831288.html

http://www.business-anti-corruption.com/country-profiles/sri-lanka

http://www.ipaidabribe.lk/reports/bribe-fighter#gsc.tab=0

1. Judicial System

Sri Lanka's judiciary is subject to corruption and manipulation by the political elite (BTI 2014). Businesses report the judiciary is not independent, public trust in politicians is low, and government policymaking is not transparent (GCR 2014-2015). The independence of the judiciary is undermined by the harassment, the attacks and threats to judges (FitW 2014).

2. Police

Police impunity is a problem in Sri Lanka, particularly in cases of police corruption, and there are continued high-levels of bribery and corruption complaints against police personnel (HRR 2013). Companies lack confidence in the reliability of police services to protect business from crime (GCR 2014-2015). The police force is perceived as the most corrupt public institution in Sri Lanka (GCB 2013).

3. Public Services

Companies indicate it is common to make irregular payments or bribes in connecion with public utilities and the awarding of licences (GCR 2014-2015). Aprroximately 8 percent of enterprises that deal with government licensing agencies make unofficial payments, which amounted to 5-6 percent of the official fee (World Bank, 2013). 

     இந்த விசாரணைகள் ஸ்ரீலங்காவில் நடந்தது என்பதட்கு 
ஏதாவது மேலதிக ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா ?

ஒரு யாழ் இணைய வாசகனாக இருக்கும் என்னால் இதை நம்ப முடியவில்லை!

23 minutes ago, ஜீவன் சிவா said:

Sorry நெடுக்ஸ் 
இதுவும் பொய்
'
நான் ரெசிடெண்ட் பெர்மிட்டுக்கு விண்ணப்பித்தபோது எனக்கு நேர்முக பரீட்ச்சையும் நடந்தது. அதில் அவர்கள் கேட்ட கேள்வியில் ஒன்று நான் எப்போது இலங்கையை விட்டு வெளியேறினேன் என்பது. அதற்கு நான் 30 ம் திகதி என்று கூற இல்லை 29 என்கிறார்கள். இலங்கை கடவுசீட்டில் மூன்றுமுறை இலங்கை திரும்பினாய் ஏன் 1991 இற்கும் 2011 இற்கும் இடையே வரவில்லை என்றும் கேட்டார்கள்.

பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டும்

இப்பவும் எனது ரெசிடெண்ட் பெர்மிட்டுக்கு உரிய ஸ்டிக்கரில் நான் நோர்வேஜியன் பாஸ்போர்ட்டில் எத்தனை தரம் இலங்கை வந்தேன் என்ற விபரம் இருக்குதே
 
இதைத்தான் மரம் தெரியாதவனுக்கு இலை புடுங்கி காட்டுவது என்பது.

சிறிலங்காவில் பிறந்து வளர்ந்த நாம் ....
சிறிலங்கா பார்ர்கிறது இப்படித்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி அண்ணர்,
மேலே உள்ள இணைப்புகள் இலங்கையில் லஞ்சம், ஊழல், வெறுட்டல். மிரட்டல் இப்படி எல்லாம் நடக்கிறது என்பதற்கான ஆதாரங்களே அன்றி வேறொன்றும் இல்லை. 
இணைப்புகளை தந்துள்ளேன். மேலதிகமாக வாசித்துக்கொள்ளம்.
நீங்கள் பெரிய மனது பண்ணி எனக்கும் எனது குடும்பத்துக்கும் விமான சீட்டை போட்டு தந்தீர்களே ஆனால் 
நாட்டுக்கே போய் மேலதிக விபரங்களை விலாவாரியாக தரலாம்.
வசதி எப்படி?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.