Jump to content

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் 1. 

இன்னும் இளையவனாக இருப்பதாலும்.. தனியப் போக வேண்டி இருந்ததாலும்.. எங்கும் இல்லாத அனுபவம் சொறீலங்கா மண்ணை தொட்டதுமே வரத்தொடங்கிவிட்டது.

சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்..  சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது.  இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள்.  இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

அனுபவம் 2.

சொறீலங்கா சர்வதேச விமான நிலையம்.. ஒரு மீன் சந்தை. ஆட்கள் வெளியேற பல மணி நேரமாகும். பொதிகள் வந்து சேர... காத்துக்கிடக்க வேண்டும். வெளிய போனால்.. ஓடு ஓடுன்னு அடித்து விரட்டாத குறையாக தற்போது அங்கு நிகழும் திருத்தவேலைகளால் எழுந்துள்ள நெருக்கடியை சரிவரக் கையாளத் தெரியாமல்.. பயணிகளை அவலப்படுத்துகிறார்கள்.

அரச ரக்சிகள் இயங்குகின்றன.. விமான நிலையத்தில் இருந்து தூர இடத்துக்கு. அவை ஓரளவு செலவு குறைவானவை. மேலும் வேக வீதியில் செல்ல 250 ரூபா சிறிய வாகனங்களுக்கும் 300 ரூபா வான் வகைகளுக்கும் மேலதிகமாக வாங்கிறார்கள். 

அனுபவம் 3.

வீதிகளில் பயணிக்கும் போது இராணுவ வாகனங்களில்... செல்வோர்.. கையடக்கத் தொலைபேசிகளால்.. ஆட்களை படமெடுக்கிறார்கள். என்ன மண்ணாங்கட்டிக்கு என்பது தெரியவில்லை. யாரை எடுக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

அனுபவம் 4.

வடக்கில்.. சிங்கள காவல்துறையின் செயற்பாடுகள்.. மக்கள் சிநேகிதத்தை விட பெரும்பான்மை.. அதிகாரத் திமிரில் இருப்பதை அப்பட்டமாகக் காண முடிகிறது.

அனுபவம் 5. இன்ரசிற்றி குளிரூட்டி தொடரூந்து வெள்ளவத்தை ஊடாகப் போகிறது. ஆளுக்கு 1500 ரூபா.. யாழ் போவதற்கு. அது வெள்ளவத்தை தொடரூந்து நிலையத்தில்.. அவதி அவதியாக நின்று அவதி அவதியாகவே போகும். சனங்களின் தொகைக்கு ஏற்ப ஒரு மரியாதை நேர ஒதுக்கம் இல்லை.. பயணிகள் செளகரியமாக ஏற. அத்தோடு அது ஒவ்வொரு தடவையும் நின்று இயங்கும் போது இடிமுழக்கச் சத்தத்தோடு தான் கிளம்பும். 

அனுபவம் 6. யாழ் நகரில்.. வாகனங்களின் நெருக்கடி அதிகம். மக்களிடம் வீதி ஒழுங்கை பின்பற்றும் பண்பு வெகு குறைவு.  வாகனங்கள்.. சிற்றூர்திகள் எதுக்கு கோர்ன் அடிக்கினம் என்றே தெரியாது. ஒரே கோர்ன் சத்தம்.

அனுபவம் 7. ஓட்டோக்கள் ஏராளம். பல முஸ்லீம்களின் தொழில் அதுவாகவும் உள்ளதை அவதானிக்க முடியுது. இவை தாம் அதிகம் போதைப்பொருள் சப்பிளையில் இருக்காம்.. என்று உள்ளூர் மக்கள் அங்கலாய்க்கினம்.

அனுபவம் 8. அத்தியாவசிய பொருட்களின் விலை அசுர வளர்ச்சி கண்டிருக்க.. ஆடம்பரப் பொருட்களின் விலை அவ்வளவாக மாறி இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு கொத்துரொட்டி.. 200 ரூபா. ஒரு லட்டு 60 ரூபா. 

அனுபவம் 9. நவீன அங்காடிகள் மேற்கத்தைய தரப் பொருட்களோடு சேவைகள் வழங்குகின்றன. யாழிலும் கொழும்பிலும். விலையும் பறுவாயில்லை.

அனுபவம் 10. கே எவ் சியில்.. சிக்கன் புரியாணி 350 ரூபா. காசுக்கு ஏற்ற உணவும் சுகாதாரத்தையும் காண முடிந்தது. சேவையும் நன்று.

அனுபவம் 11. நவீன மருத்துவ வசதிகள் யாழ் நகரில் கொழுப்பில் பெருக்கம் அடைந்துள்ளன.  நவீன கட்டடங்களுக்கும் வசதிகளுக்கும் குறைவில்லை.

அனுபவம் 12. யாழ் நகர் வீதிகளில் பெண்களும் ஸ்கூட்டியும் கூடப் பிறந்தவை ஆகி இருப்பது கண்கூடு.

அனுபவம் 13. ரியூசன் கொட்டில்களும்.. சைக்கிளில் சமாந்திரமாக வீதியில் போவதும்.. பழைய முறை போலவே நடக்குது. ஆனால் சில வீதிகளில் சைக்கிளில் பயணிக்க வீதி ஒழுங்கை அமைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக.. ஆரிய குளத்தை அண்டி.. பலாலிவீதியில்.. இதனைக் கவனிக்கலாம்.

அனுபவம் 14.

யாழ் தொடரூந்து நிலையத்தை அதிகம் மக்களை விட இராணுவம்.. சிங்களப் பயணிகளும்.. இதர படைத்தரப்பும் பாவிப்பது அப்படியே தெரிகிறது. இதனை கிளிநொச்சி.. வவுனியாவிலும் காண முடியுது.

அனுபவம் 15. இராணுவ நிரந்தர நிலைகள் எல்லாம் மாடமாளிகைகளாக எழுதுள்ளதுடன் அதனை அண்டி தடாகங்களும்.. பூங்காக்களும்.. வீதி அலங்கரிப்புகளும்.. சுத்தப்படுத்தல்களும்.. சொல்லி வேலை இல்ல. எங்கும் வெற்றிப் பிரதாபம்.. அடையாளப்படுத்தப்படுகுது.

அனுபவம் 16. வன்னிப் பெருநிலப் பரப்பினூடாக.. தொடரூந்தில் செல்லும்.. போது எப்படி இந்த நிலத்தை நாம் இழந்தோம் என்ற ஏக்கமே இருந்தது. அந்தளவுக்கு பச்சைப் பசேல் என்று காடுகள் அடங்கி இயற்கை செழிக்கக் கிடக்குது.

அனுபவம் 17. வன்னிப் பெரு நிலத்தில்.. வவுனியாவை தாண்டினால்.. நில மட்ட காவலரண்கள் எல்லாம் சீமெந்தால் அமைக்கப்பட்டு.. நிரந்தர இராணுவ இருப்புக்களை காண முடிகிறது. பெரு வீதிகளை அண்டிய மக்கள் நடமாட்டம் தவிர அங்கு மக்கள் நடமாட்டம் குறைவு.

அனுபவம் 18. வன்னி நிலப்பரப்பில் இராணுவம் சைக்கிள் சவாரியில் போகிறது. ஆனையிறவை அண்டி இதனை அவதானிக்க முடிந்தது.

அனுபவம் 19. வடக்கில்.. விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா வழமைக்குத் திரும்புது. 

அனுபவம் 20. யாழ் நகரப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் வெளிநாட்டுக் காசில்.. செழிப்புற நிற்கின்றன. யாழ் நகர்.. சாவகச்சேரி நகர்.. என்று எல்லா நகர்களும்.. புதுப்பொலிவை காட்டி நிற்கின்றன. ஆனால் வன்னி நிலப்பரப்பில் தப்பி உள்ள வீடுகளை எல்லாம் பார்த்தால்.. ஓடுகளில்.. செஞ்சிலுவை சங்க அடையாளம் இன்னும் இருப்பதை காணலாம். அவை தான் தப்பி இருக்கின்றன. சிலவற்றின் மீது செல்லும் விழுந்து பாதிப்படைந்த சாட்சியமும் கிடக்கு.

அனுபவம் 21. வன்னி நிலப்பரப்பில் காட்டுப்பகுதிகளை அண்டி.. பழுதடைந்த நிலையில் சில இடங்களில் பேரூந்துகள் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன.  எங்கிருந்து வந்தன என்று தெரியவில்லை. ஏன் அங்கு கிடக்கின்றன என்றும் புரியவில்லை. 

அனுபவம் 22. சிங்களப் பகுதி தொடரூந்து நிலையங்கள்.. எந்த அபிவிருத்தியும் இன்றி அப்படியே காலங்காலமாகக் கிடப்பது தெரிகிறது. ஆனால்.. வடக்கில் வவுனியாவை தாண்டினால்.. நவீன தொடரூந்து நிலையங்கள்.. போரின் பலனாகக் கிடைத்துள்ளன.

அனுபவம் 23. சில ரயில் சேவைகளை தவிர மிச்ச எல்லாம்.. கறள் கட்டிய நிலையில் ஓடுகின்றன. ஒரு சில நவீன ரயில்களை விட்டு.. அரசியல் நடத்தியது அப்பட்டமாகத் தெரிகிறது. சிங்களப் பகுதிகளில் அது கூட இல்லை. அங்கு இன்னும் கறள் கட்டின ரயில் தான். 

அனுபவம் 24. இப்ப எல்லாம் தமிழ் பாட்டு போட்டுக் கொண்டு மொரட்டுவ தமிழ் மாணவ சமூக.. ஆக்கள் வாரத்துக்கு ஒருக்கா ஊருக்கு போய் வர ரயிலை பாவிக்கினம். சோடி சோடியா லப்டப்பும் கையுமா திரியினம். 

அனுபவம் 25. வெள்ளையளும் உல்லாசப் பயணம் போகினம் யாழ்ப்பாணம். யாழ் பண்ணை வீதி நன்கு திருத்தப்பட்டு வீதி இரு மருங்கிலும் நடைபாதை அமைக்கப்பட்டு.. ஒரு உருப்படியான வேலை அதில் நடந்தது தெரியுது.

அனுபவம் 26. இப்ப எல்லாம் யாழ்ப்பாண நகரில் என்றில்லை.. எல்லா சிற்றூரிலும் ஓட்டோ தான். மக்கள் நடக்க சரியான பஞ்சி.

அனுபவம் 27. சிறீலங்கா முப்படை ஆட்களும் யாழ் நகரில் சர்வ சாதாரணமாக திரியினம்.. போகினம்.. வ்ருகினம்.. பொருள் கொள்வனவு செய்யினம்.. எம்மவர்களும் மதிப்பு மரியாதையோட தான் நடத்தினம்.

அனுபவம் 28. மக்கள் இப்ப எல்லாம்.. விடுதலைப் புலிகளைப் பற்றி வெளிப்படையா தமக்குள் கதைக்கினம். அவர்கள் இல்லாத ஏக்கம் பலரிடம். சிலரிடம் அதுவே அட்டகாசத்தின் உச்சத்துக்கு அவர்களை தள்ளி விட்டிருக்குது.

அனுபவம் 29. கோவில்கள் பல நிறைவடைந்து.. கம்பீரமாக எழுந்து நிற்பதோடு.. மின்விளக்குகளால் எரியூட்டி நிற்கின்றன.

அனுபவம் 30. இப்ப மின்சாரம் தடையின்றி வருகிறது. லக்ஸபான மின்சாரம் என்று சொல்லினம். மின்சாரச் செலவு பொருட் செலவோடு ஒப்பிடும் போது அதிகமாகத் தெரியவில்லை.

அனுபவம் 31. வீதி அகட்டிப்பு என்று.. மக்களின் காணிகள்.. மதில்கள்.. வேலிகள்.. எல்லாம் பறிபோய்க்கிட்டு இருக்குது. மக்கள்.. ஏதோ வீதி அகலுது என்று கதைக்கப் பேச ஆளின்றி.. மெளனித்துக் கிடக்கிறார்கள்.

அனுபவம் 32. யாழில்... பெண் பிள்ளைகள் எல்லாம்.. சில புலம்பெயர்.. உள்ளூர் ஊடகங்கள் சொல்லுற மாதிரி ஆடிக்கிட்டுத் திரிவதாகத் தெரியவில்லை. ஒரு சிலது திரியலாம். பொரும்பான்மை பிள்ளைகள் நல்லாத்தான் இருப்பதாகத் தெரியுது.

அனுபவம் 33. படி.. படின்னு.. இப்ப முன்னிலைப் பாடசாலைப் பிள்ளைகளையும் ரியூசனுக்கு விடுவது அவலம். 

அனுபவம் 34. யாழ் நகர.. கொழும்பு.. பள்ளிப் பிள்ளைகளிடம் நல்ல ஆங்கில மற்றும் கணணி அறிவும் நவீன தொழில்நுட்பக் கையாடல் அறிவும் வளர்ந்திருப்பது.. வளர்ந்து வருவது ஆரோக்கியம்.

அனுபவம் 35. யாழ் பல்கலைக்கழகம் அப்படியே கிடக்கு. வர்ணம் மட்டும் பூசி இருக்காங்க.

அனுபவம் 36. யாழ் நகர ஒழுங்கைகள் எல்லாம் புது வீடுகளால் நிரம்பி இருக்குது. ஆனால் சில இடங்கள் அதே தகர வேலிகளோடு தான். 

அனுபவம் 37. யாழ் நகர்.. மற்றும் அதனை அண்டி நவீன வியாபார நிலைகள் பெருகி வருகின்றன. முதலீட்டாளர்களுக்கு அங்கு நல்ல வாய்ப்புள்ளது. கொழும்பில்.. காலி வீதி நவீனமாகி இருக்குது.

அனுபவம் 38. கொழும்பில் இன்னும் வீதி போக்குவரத்து நெருசல் குறையவில்லை. காலையும் மாலையும்.. பல மணி நேரம் தாமதங்கள். ஓட்டோக்கள்.. கடற்கரை வீதியை இப்ப பாவிக்கினம். மற்றும்படி காலி வீதி பிசி.

அனுபவம் 39. கொழும்பு வாழ் எம்மவர்கள் வெளிநாட்டுத் தமிழர்களை கொப்பி பண்ணுவதில்.. அதாவது வீடுகளில் பாத்ரூம் அமைப்பதில் இருந்து.. பிள்ளைகளை பள்ளிக்கூடம் கொண்டு போய் விட்டு கூட்டிக் கொண்டு வருவது உள்ளிடங்க.. துடியா துடிச்சுச் செய்கிறார்கள். தப்பில்லை. நல்ல வழிக்கு போனால் நல்லது.

அனுபவம் 40. நம்ம வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அங்க வந்தால்.. அங்கலாய்க்கலாமே தவிர.. அங்க உள்ள மக்கள் இவர்களைப் பார்த்து அங்கலாய்த்த காலம் மலையேறிவிட்டது. இப்ப வெளிநாட்டுக்காரரை.. அங்குள்ள இளையவர்கள்.. கணக்கிலும் எடுப்பதில்லை. அதனால்.. அங்கு போனதும்.. லோக்கலா மிங்கிள் ஆகிடுவது நல்லது. tw_blush:

அனுபவம் 41. காலநிலை மழை. ஊரிலும் மழை கொழும்பிலும் பிற்பகலில் மழை. ஊரில் நுளம்புத் தொல்லை அதிகமாக இருந்தது. நுளம்பு வலை நல்ல தூக்கத்துக்கு உதவும். நுளம்பு வத்தி தலையிடிக்கும். ஆனால்.. நுளம்பு ஸ்பிரே பறுவாயில்லை.  மற்றும் பள்ளிக்கூடங்கள்.. 7:30 காலை தொடங்கி 1:30 முடியுது. பெற்றோரில் பெரும்பான்மையானோர் இதனை வரவேற்கினம்.

அனுபவம் 42. திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஒரு புடுங்குப்பாடும் இல்லை.  சுமூகமாக வந்து சேர்ந்தம். உள்ள போகும் போது தான் கறப்பது நிகழும் கவனம். குறிப்பாக தனிய போய் வரும் இளையவர்களுக்கு. tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 349
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் என்ன போராட்டம் வெற்றி தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் என்ன போராட்டம் வெற்றி தானே?

ஆயுதம் தூக்கினாலும் தூக்காட்டிலும் தமிழன் தமிழனாக தன்ர நிலத்தில் நிற்கப் பிரியப்படுகிறான். அது போராட்டத்தின் வெற்றி தான்... என்ன தான் ஆயுதங்களும் ஆயுத முனைகளும் ரகசிய அழுத்தங்களும் இருந்தாலும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகும் போது குடிவரவு குடியகல்வு பகுதிகளில் நடந்தவைகளை இன்னும் கொஞ்சம் விபரமாக எழுதலாமே?

தம்பி கடல்கரை பக்கம் குளிக்க போகலையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 6. யாழ் நகரில்.. வாகனங்களின் நெருக்கடி அதிகம். மக்களிடம் வீதி ஒழுங்கை பின்பற்றும் பண்பு வெகு குறைவு.  வாகனங்கள்.. சிற்றூர்திகள் எதுக்கு கோர்ன் அடிக்கினம் என்றே தெரியாது. ஒரே கோர்ன் சத்தம்.

Bildergebnis für please horn

Bildergebnis für please horn

Bildergebnis für please horn

உங்கள் அனுபவங்களை... எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... நெடுக்ஸ். :)
இலங்கையில் மட்டுமல்ல... ஆசிய நாடுகளில், கோர்ன் அடித்துக் கொண்டு ஓடுவது... ஒரு வித வருத்தம்.
ஆபிரிக்காவில் கூட... இவ்வளவு மோசமாக கோர்ன் அடிப்பதில்லை. 
இந்தியாவில்... சில வாகனங்களுக்கு பின்,  "கோர்ன் அடி"  என்றே எழுதி வைத்திருப்பார்கள். 
இது என்ன டிசைனோ.... ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 40. நம்ம வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அங்க வந்தால்.. அங்கலாய்க்கலாமே தவிர.. அங்க உள்ள மக்கள் இவர்களைப் பார்த்து அங்கலாய்த்த காலம் மலையேறிவிட்டது. இப்ப வெளிநாட்டுக்காரரை.. அங்குள்ள இளையவர்கள்.. கணக்கிலும் எடுப்பதில்லை. அதனால்.. அங்கு போனதும்.. லோக்கலா மிங்கிள் ஆகிடுவது நல்லது. tw_blush:

அனுபவத்தில் பிடித்த அனுபவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ்....!

அகலம் குறைவான வீ திகளாய் இருந்தால் கோர்ன் அடிக்கத்தான் வேண்டும். சில சமயங்களில் வாகனத்தில் கோர்ன் இருக்கா , விழுந்து வீட்டதா, களவுபோய் விட்டதா என்பதை உறுதி செய்யவும் கோர்ன் அடித்துப் பார்க்கலாம்....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெரிசல் கூடிய நகரமாக யாழ்ப்பாணம் மாறுவது முன்னேற்றத்தைத்தானே காட்டுகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னியும் கிழக்கும் முன்னேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அதிகாரத்தில் உள்ளவர்கள் குழப்பாவிட்டால் எல்லாம் தானாகவே நடக்கும்.

விமான நிலையத்தில் காசைப் பிடுங்கிவிட்டார்கள் என்பது உறுத்தலாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

14 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 1. 

இன்னும் இளையவனாக இருப்பதாலும்.. தனியப் போக வேண்டி இருந்ததாலும்.. எங்கும் இல்லாத அனுபவம் சொறீலங்கா மண்ணை தொட்டதுமே வரத்தொடங்கிவிட்டது.

சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்..  சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது.  இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள்.  இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

இங்குள்ள சில கள உறவுகள் எனக்கு தெரிந்து ஒவ்வொரு வருடமும் பலமுறைகள் வந்து போவார்கள் - அவர்கள் எழுதட்டும்.

எனது பாஸ்போர்ட்டிலேயே விசாவில் எழுதியுள்ளார்கள் நான் 2011 இற்கு பின்னர் 9 தடவை வந்ததாக - எனக்கு அப்படி ஒன்றுமே நடக்கவில்லையே

உண்மையாக நேர்மையாக இருப்பவனுக்கு பயமில்லை - மற்றவர்களுக்கு பிரச்சனைதான்.

14 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 2.

சொறீலங்கா சர்வதேச விமான நிலையம்.. ஒரு மீன் சந்தை. ஆட்கள் வெளியேற பல மணி நேரமாகும். பொதிகள் வந்து சேர... காத்துக்கிடக்க வேண்டும். வெளிய போனால்.. ஓடு ஓடுன்னு அடித்து விரட்டாத குறையாக தற்போது அங்கு நிகழும் திருத்தவேலைகளால் எழுந்துள்ள நெருக்கடியை சரிவரக் கையாளத் தெரியாமல்.. பயணிகளை அவலப்படுத்துகிறார்கள்.

முழுப்பொய் 

இதை இங்கு வந்து போன கள உறவுகளே தீர்மானிக்கட்டும்.

14 hours ago, nedukkalapoovan said:

அரச ரக்சிகள் இயங்குகின்றன.. விமான நிலையத்தில் இருந்து தூர இடத்துக்கு. அவை ஓரளவு செலவு குறைவானவை. மேலும் வேக வீதியில் செல்ல 250 ரூபா சிறிய வாகனங்களுக்கும் 300 ரூபா வான் வகைகளுக்கும் மேலதிகமாக வாங்கிறார்கள். 

ஐயோ ஐயோ - அது டோல் காசப்பா

லண்டனில் கார் ஓடினதே இல்லை போலத்தான் இருக்குது.

14 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 3.

வீதிகளில் பயணிக்கும் போது இராணுவ வாகனங்களில்... செல்வோர்.. கையடக்கத் தொலைபேசிகளால்.. ஆட்களை படமெடுக்கிறார்கள். என்ன மண்ணாங்கட்டிக்கு என்பது தெரியவில்லை. யாரை எடுக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

நான் இதுவரை கண்டதில்லை.
இலங்கை முழுவதுமே பல இடங்களை சுற்றி உள்ளேன் 
நீங்கள் மட்டும் கண்டிருந்தா - நோ கொமெண்ட்ஸ் 

14 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 4.

வடக்கில்.. சிங்கள காவல்துறையின் செயற்பாடுகள்.. மக்கள் சிநேகிதத்தை விட பெரும்பான்மை.. அதிகாரத் திமிரில் இருப்பதை அப்பட்டமாகக் காண முடிகிறது.

நிச்சயமாக இல்லை
இப்பவெல்லாம் கொச்சை தமிழில் "அடோ எங்கடா போகுது " என்றெல்லாம் அவர்கள் கதைப்பதே இல்லை.
வாகனத்தை விட்டு இறங்க சொல்வதும் இல்லை
ஆனாலும் ஓட்டுனர்கள் தானாக இறங்கி பொய் கதைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 5. இன்ரசிற்றி குளிரூட்டி தொடரூந்து வெள்ளவத்தை ஊடாகப் போகிறது. ஆளுக்கு 1500 ரூபா.. யாழ் போவதற்கு. அது வெள்ளவத்தை தொடரூந்து நிலையத்தில்.. அவதி அவதியாக நின்று அவதி அவதியாகவே போகும். சனங்களின் தொகைக்கு ஏற்ப ஒரு மரியாதை நேர ஒதுக்கம் இல்லை.. பயணிகள் செளகரியமாக ஏற. அத்தோடு அது ஒவ்வொரு தடவையும் நின்று இயங்கும் போது இடிமுழக்கச் சத்தத்தோடு தான் கிளம்பும். 

உண்மைதான்
ஆனாலும் இது ஐரோப்பா இல்லை சொறி இலங்கை என்பதை சொறிய மறந்து விட்டார் நண்பர்.

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 6. யாழ் நகரில்.. வாகனங்களின் நெருக்கடி அதிகம். மக்களிடம் வீதி ஒழுங்கை பின்பற்றும் பண்பு வெகு குறைவு.  வாகனங்கள்.. சிற்றூர்திகள் எதுக்கு கோர்ன் அடிக்கினம் என்றே தெரியாது. ஒரே கோர்ன் சத்தம்.

உண்மைதான்

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 7. ஓட்டோக்கள் ஏராளம். பல முஸ்லீம்களின் தொழில் அதுவாகவும் உள்ளதை அவதானிக்க முடியுது. இவை தாம் அதிகம் போதைப்பொருள் சப்பிளையில் இருக்காம்.. என்று உள்ளூர் மக்கள் அங்கலாய்க்கினம்.

ஓட்டோக்கள் ஏராளம் - உண்மைதான்
 பல முஸ்லீம்களின் தொழில் அதுவாகவும் உள்ளதை அவதானிக்க முடியுது - இல்லை

சென்ற வருடத்தில் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டவர்களின் லிஸ்டை ஒருக்கா பார்வை இடுங்கோ. 
உங்கள் பொய்களையும் புலுடாவையும் வேறு எங்காவது வைத்திருங்கோ

பத்து பிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கி காட்டினாளாம் என்ற பழமொழி ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.

தொடரும்........

Link to comment
Share on other sites

Sorry நெடுக்ஸ் 
உண்மை உண்மைதான் - பொய் சொல்வதால் உண்மை பொய்யாகி விடாது.

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 8. அத்தியாவசிய பொருட்களின் விலை அசுர வளர்ச்சி கண்டிருக்க.. ஆடம்பரப் பொருட்களின் விலை அவ்வளவாக மாறி இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு கொத்துரொட்டி.. 200 ரூபா. ஒரு லட்டு 60 ரூபா. 

அத்தியவசிய பொருட்களும் பணவீக்கத்துக்கேற்ற விலை உயர்வைத்தான் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆடம்பர பொருள்களின் விலைதான் அதிகம் - பணப்புழக்கம் அதிகம் + கேள்வி அதிகம் என்பது காரணமாம் 

சாதாரணமான கடைகளில் லட்டு 30 ரூபாய். வெள்ளவத்தை ஷண்முகாஸில் 70 ரூபாய். நீங்கள் எங்கு வாங்கினீர்கள் என்று எழுதலாமே.

கொத்து ரொட்டியை சில இடங்களில் 450 ரூபாய்க்கும் விற்கிறார்கள்.

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 9. நவீன அங்காடிகள் மேற்கத்தைய தரப் பொருட்களோடு சேவைகள் வழங்குகின்றன. யாழிலும் கொழும்பிலும். விலையும் பறுவாயில்லை.

No comments

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 10. கே எவ் சியில்.. சிக்கன் புரியாணி 350 ரூபா. காசுக்கு ஏற்ற உணவும் சுகாதாரத்தையும் காண முடிந்தது. சேவையும் நன்று.

அதை சிக்கன் புரியாணி என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன் - நீலாம்பரியில் வாங்கியிருந்தால் அருமை தெரியும்

அது சரி இங்கு வந்தும் கென்டக்கியிலதான் சாப்பிடுவேன் என்றால் பந்தா பவிசு நல்லா இருக்குது.
முன்பெல்லாம் நான் இங்கு வரும்போது எங்கட சாப்பாடு எங்க கிடைக்கும் என்றுதான் தேடுவேன்.

Sorry நெடுக்ஸ் - உங்கள் தேடல் புரிகிறது.

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 11. நவீன மருத்துவ வசதிகள் யாழ் நகரில் கொழுப்பில் பெருக்கம் அடைந்துள்ளன.  நவீன கட்டடங்களுக்கும் வசதிகளுக்கும் குறைவில்லை.

யாழ் வைத்தியசாலையின் சுற்றுப்புறமும் அங்குள்ள நாற்றமெடுக்கும் கால்வாய்களும் கண்ணுக்கு தெரியவில்லையாக்கும்.

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 12. யாழ் நகர் வீதிகளில் பெண்களும் ஸ்கூட்டியும் கூடப் பிறந்தவை ஆகி இருப்பது கண்கூடு.

உண்மை

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 13. ரியூசன் கொட்டில்களும்.. சைக்கிளில் சமாந்திரமாக வீதியில் போவதும்.. பழைய முறை போலவே நடக்குது.

உண்மை

15 hours ago, nedukkalapoovan said:

ஆனால் சில வீதிகளில் சைக்கிளில் பயணிக்க வீதி ஒழுங்கை அமைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக.. ஆரிய குளத்தை அண்டி.. பலாலிவீதியில்.. இதனைக் கவனிக்கலாம்.

நான் காணவேயில்லையே!!!!
இதுதானே அந்த வீதி
 
Sorry நெடுக்ஸ் - இதுவும் பொய்தானே - இதைத்தான் சொல்வார்களோ குருடர்கள்யானை பார்த்த கதை என்று.

IMG_8687_2.jpg

Link to comment
Share on other sites

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 14.

யாழ் தொடரூந்து நிலையத்தை அதிகம் மக்களை விட இராணுவம்.. சிங்களப் பயணிகளும்.. இதர படைத்தரப்பும் பாவிப்பது அப்படியே தெரிகிறது. இதனை கிளிநொச்சி.. வவுனியாவிலும் காண முடியுது.

இங்குள்ள மக்கள் தொகையுடன் இராணுவத்தின் தொகையை கணக்கிட்டால் - ஆச்சரியம் வராது
சிங்களவர்கள் அவரது சொந்த பணத்தில் வந்து போகிறார்கள் - இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை.

நீங்கள்கூடத்தான் கொழும்புக்கு போனீர்களே - அது என்ன தமிழ் இடமா 

,

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 15. இராணுவ நிரந்தர நிலைகள் எல்லாம் மாடமாளிகைகளாக எழுதுள்ளதுடன் அதனை அண்டி தடாகங்களும்.. பூங்காக்களும்.. வீதி அலங்கரிப்புகளும்.. சுத்தப்படுத்தல்களும்.. சொல்லி வேலை இல்ல. எங்கும் வெற்றிப் பிரதாபம்.. அடையாளப்படுத்தப்படுகுது.

உண்மை

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 16. வன்னிப் பெருநிலப் பரப்பினூடாக.. தொடரூந்தில் செல்லும்.. போது எப்படி இந்த நிலத்தை நாம் இழந்தோம் என்ற ஏக்கமே இருந்தது

உண்மை

16 hours ago, nedukkalapoovan said:

அந்தளவுக்கு பச்சைப் பசேல் என்று காடுகள் அடங்கி இயற்கை செழிக்கக் கிடக்குது.

ஜூலை ஆகஸ்டில் வந்து பாருங்கள் காய்ந்து கருவாடாக இருக்கும். 

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 17. வன்னிப் பெரு நிலத்தில்.. வவுனியாவை தாண்டினால்.. நில மட்ட காவலரண்கள் எல்லாம் சீமெந்தால் அமைக்கப்பட்டு.. நிரந்தர இராணுவ இருப்புக்களை காண முடிகிறது. பெரு வீதிகளை அண்டிய மக்கள் நடமாட்டம் தவிர அங்கு மக்கள் நடமாட்டம் குறைவு.

உண்மை

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 18. வன்னி நிலப்பரப்பில் இராணுவம் சைக்கிள் சவாரியில் போகிறது. ஆனையிறவை அண்டி இதனை அவதானிக்க முடிந்தது.

உண்மை

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 19. வடக்கில்.. விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா வழமைக்குத் திரும்புது. 

உண்மை

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 20. யாழ் நகரப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் வெளிநாட்டுக் காசில்.. செழிப்புற நிற்கின்றன. யாழ் நகர்.. சாவகச்சேரி நகர்.. என்று எல்லா நகர்களும்.. புதுப்பொலிவை காட்டி நிற்கின்றன.

உண்மை

16 hours ago, nedukkalapoovan said:

ஆனால் வன்னி நிலப்பரப்பில் தப்பி உள்ள வீடுகளை எல்லாம் பார்த்தால்.. ஓடுகளில்.. செஞ்சிலுவை சங்க அடையாளம் இன்னும் இருப்பதை காணலாம். அவை தான் தப்பி இருக்கின்றன. சிலவற்றின் மீது செல்லும் விழுந்து பாதிப்படைந்த சாட்சியமும் கிடக்கு.

பல வீடுகள் கட்டப்படத்தொடங்கியும் அரைகுறையா இருப்பதுதான் முதலில் தெரிந்திருக்கும் - கண்களுக்கு. 

கண்டிருந்தால் காரணத்தை நீங்களே தேடுங்கள் 

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 21. வன்னி நிலப்பரப்பில் காட்டுப்பகுதிகளை அண்டி.. பழுதடைந்த நிலையில் சில இடங்களில் பேரூந்துகள் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன.  எங்கிருந்து வந்தன என்று தெரியவில்லை. ஏன் அங்கு கிடக்கின்றன என்றும் புரியவில்லை. 

அவை போரின் அல்லது இராணுவத்தினரின் எச்சங்கள் 

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 22. சிங்களப் பகுதி தொடரூந்து நிலையங்கள்.. எந்த அபிவிருத்தியும் இன்றி அப்படியே காலங்காலமாகக் கிடப்பது தெரிகிறது. ஆனால்.. வடக்கில் வவுனியாவை தாண்டினால்.. நவீன தொடரூந்து நிலையங்கள்.. போரின் பலனாகக் கிடைத்துள்ளன.

வெளியில சொல்லிப் போடாதேங்கோ - சிங்களவர்களுக்கு பொறாமை வந்திடும்.:grin:

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 23. சில ரயில் சேவைகளை தவிர மிச்ச எல்லாம்.. கறள் கட்டிய நிலையில் ஓடுகின்றன. ஒரு சில நவீன ரயில்களை விட்டு.. அரசியல் நடத்தியது அப்பட்டமாகத் தெரிகிறது. சிங்களப் பகுதிகளில் அது கூட இல்லை. அங்கு இன்னும் கறள் கட்டின ரயில் தான். 

Sorry நெடுக்ஸ் 
இதுதான் சிறிலங்கா என்று தெரியாமல் இங்கு கால் வைத்த உங்களில்தான் பிழை.

தொடரும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

அனுபவம் 40. நம்ம வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அங்க வந்தால்.. அங்கலாய்க்கலாமே தவிர.. அங்க உள்ள மக்கள் இவர்களைப் பார்த்து அங்கலாய்த்த காலம் மலையேறிவிட்டது. இப்ப வெளிநாட்டுக்காரரை.. அங்குள்ள இளையவர்கள்.. கணக்கிலும் எடுப்பதில்லை. அதனால்.. அங்கு போனதும்.. லோக்கலா மிங்கிள் ஆகிடுவது நல்லது

11 hours ago, அக்னியஷ்த்ரா said:

அனுபவத்தில் பிடித்த அனுபவம் 

உங்களை போல் யாரும் வந்தால் நாங்கள் ஏன் பார்க்க முழங்காலுக்கு மேலே டைட்டா காற்சட்டையும் மேலே ஒரு டி சேட்டுடன் வந்தால் நாங்கள் பார்ப்போம் ஆக்கும்   ஆனாலும் முதல் இருந்த மவுசு இப்ப இல்லை  உன்மையே

அது சரி நெடுக்கு ஊர் வந்து போனியள் என்ன செய்த்துட்டு போயிருக்கையள்  இங்கே எனக்கு தெரிந்தவ்வர்கள் சிலர்  வந்து ஊரில் தங்களுக்கு தெரிந்ட்கவ்ர்களுக்கு சில காணிகளை வாங்கி அதில் ப்யிர் செய்து வாழுமாறும்  தென்னை தோப்புக்களை பராமரிக்குமாறும்  சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் நீங்கள்  ஏதாவது உங்கள் சொந்த காரர்களுக்கு அல்லது வேற ஏதாவது உங்கள் ஊரில் செய்த நீங்களா?? சும்மா ஒரு கேள்விதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, முனிவர் ஜீ said:

நாங்க எதையும் செய்ய வேண்டியதில்லை.. செய்யச் சொல்லவும் இல்லை அங்கு. அங்குள்ள மக்களுக்கு தெரிந்திருக்குது.. தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது பற்றி. மேலும் அவர்கள் வெளிநாட்டு காசுக்கு வேலை செய்யும் கூலிகளாக இப்ப இல்லை. அன்பளிப்பாக கொடுத்தால் வாங்குவார்கள்.. எதையாவது எதிர்பார்த்துக் கொடுத்தால்.. வாங்குவார்கள்.. எதிர்பார்ப்பை நிறைவு செய்ய உத்தரவாதம் அளிக்கமாட்டார்கள். அவ்வளவு பிசி. tw_blush:

IMG_8687_2.jpg

சைக்கிள் லேன் (சைக்கிள் வீதி ஒழுங்கை) தான் வீதியின் இரு மருங்கிலும்.. தடித்த வெள்ளைக் கோட்டுக்கு இப்பால்  அமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தமிழை விளங்கிக் கொள்வதில் பெரிய பிரச்சனை இருக்கிறது ஜீவன் அங்கிள்.

ஜீவன் அங்கிள்.. குடும்பஸ்தர்கள்..  தலைநரைத்தவர்கள் போனால்.. சொறீலங்கா... குடிவரவு எதுவும் கேட்காது. இளையவர்கள் போனால் குறிப்பாக நீண்ட காலத்தின் பின் தனியப் போகும் இளையவர்கள் அதுவும் நல்ல தொழில்துறையில் இருப்பவர்கள் என்று கண்டால்.. காசு பறிக்காமல் அனுப்பமாட்டார்கள் போலவே தெரிகிறது.

எங்களுக்கு மட்டுமல்ல.. எங்களுக்குத் தெரிய சிலருக்கும் எங்கள் அனுபவம் கிடைத்திருக்குது.

மேலும்..  தற்போதைய விமான நிலைய சீர்கேடுகளை ஒருக்காப் போய் பார்த்து அறியுங்கள். சனம்.. பயணிகள் படும் அவலம் அப்போது தான் தெரியும். குறுகிய நேர காலத்துக்குள் பல விமானங்களை தரையிறக்கி ஏற்றுவதால்.. நெருக்கடியை சமாளிக்க முடியாமல்.. மாடு ஆடுகள் போல பயணிகளை மக்களை நடத்துகிறார்கள். மீன் சந்தை போலவே இருக்குது. ஒரே சத்தமும்.. நில்லாத ஓடு ஓடு என்று விரட்டுவதும்.............. சொறீலங்கா அதிகாரிகளுக்கு மனிதப் பண்புகள் வளரனும். tw_blush:

மற்றும்படி.. எங்கள் அனுபவம் எங்களைப் பொறுத்த வரை 100% உண்மை. உங்களுக்கு அதில் பொய் இருப்பதாகத் தெரியலாம். அது நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்தது. சிலருக்கு.. விமான நிலையத்துக்குள் எந்தப் பாதுகாப்புக் கெடிபிடியும் இன்றி வர முடியுது. அப்படியான சிங்களவனுக்கு "வேண்டிய" ஆக்களும் இருக்கினம். அவைட அனுபவம் வேற. tw_blush:

Link to comment
Share on other sites

Quote

ஜீவன் அங்கிள்.. குடும்பஸ்தர்கள்..  தலைநரைத்தவர்கள் போனால்.. சொறீலங்கா... குடிவரவு எதுவும் கேட்காது. 

ஓ அது தான் ஜீவனுக்கு பிரச்சனை வரவில்லை போல Related image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für white hair tamil man

ஊருக்குப் போகும் போது.... 
தலைக்கு, "வெள்ளை  டை"  அடித்து விட்டுப் போவது, பாதுகாப்பானது போலுள்ளது. :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

நாங்க எதையும் செய்ய வேண்டியதில்லை.. செய்யச் சொல்லவும் இல்லை அங்கு. அங்குள்ள மக்களுக்கு தெரிந்திருக்குது.. தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது பற்றி. மேலும் அவர்கள் வெளிநாட்டு காசுக்கு வேலை செய்யும் கூலிகளாக இப்ப இல்லை. அன்பளிப்பாக கொடுத்தால் வாங்குவார்கள்.. எதையாவது எதிர்பார்த்துக் கொடுத்தால்.. வாங்குவார்கள்.. எதிர்பார்ப்பை நிறைவு செய்ய உத்தரவாதம் அளிக்கமாட்டார்கள். அவ்வளவு பிசி. tw_blush:

நீங்கள் மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு போகவில்லை போல் யாழ்ப்பாணம் மட்டும் போன நீங்கள் போல  யாழ்ப்பாணம் பெரிதாக பாதிக்கப்படவில்லை அதனால் மக்கள் வாழ்க்கை தெரியாமல் போயிருக்கும் :unsure::unsure:

Link to comment
Share on other sites

18 hours ago, nedukkalapoovan said:

ஜீவன் அங்கிள்.. குடும்பஸ்தர்கள்..  தலைநரைத்தவர்கள் போனால்.. சொறீலங்கா... குடிவரவு எதுவும் கேட்காது. இளையவர்கள் போனால் குறிப்பாக நீண்ட காலத்தின் பின் தனியப் போகும் இளையவர்கள் அதுவும் நல்ல தொழில்துறையில் இருப்பவர்கள் என்று கண்டால்.. காசு பறிக்காமல் அனுப்பமாட்டார்கள் போலவே தெரிகிறது.

எங்களுக்கு மட்டுமல்ல.. எங்களுக்குத் தெரிய சிலருக்கும் எங்கள் அனுபவம் கிடைத்திருக்குது.

15 hours ago, nunavilan said:

ஓ அது தான் ஜீவனுக்கு பிரச்சனை வரவில்லை போல Related image

நெடுக்கு / நுணா,

என் வயது 42 என்பதால் இளைய வயது என்ற பிரிவுக்குள் வர முடியாது. எனக்கு தலை முடி கறுப்பாகத்தான் இருக்கு (உபயம்: டை), தொழில் / வசதி விடயங்களிலும் ஓரளவுக்கு நல்ல நிலையில் தான் உள்ளேன். 2007 இல் இருந்து 2009 வரைக்கும் புலம்பெயர் நாடுகளில் நடந்த பல  போராட்டங்களில் குடும்பத்துடன் பங்குபற்றி உள்ளேன். சொந்தப் பெயரில் இருக்கும் முகனூலில் தலைவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதில் இருந்து பல விடயங்களை நேரிடையாகவே எழுதியும் வருகின்றேன் (சில யாழ் கள உறவுகள் என் முகனூலில் இருப்பதால் அவர்களுக்கும் தெரியும்)

நான் கடந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டு தடவை இலங்கைக்கு சென்று இருக்கின்றேன். போன மாதமும் மாமாவின் மரண சடங்கில் கலந்து கொள்ள அம்மாவுடன் போயிருந்தேன். அதற்கு முதல் செப்ரம்பரில் தனியாகத்தான் இலங்கைக்கு சென்றனான்.

எனக்கு எந்த பிரச்சனையும் இலங்கை செல்லும் போது ஏற்படவில்லை. செப்ரம்பரில் கடவுசீட்டை பார்த்த குடிவரவு அதிகாரி திமிராக 'கப்பலிலா கனடா போனாய்" என்று கேட்க, "ஏன் உன்ர சிஸ்ரத்தில் நான் ஆரு என்று தெளிவாக தகவல் போட்டு இருக்கும்... அதில் அப்படியா இருக்கு?" என்று கேட்டதை தவிர வேறு எதுவும் நிகழவில்லை.

கொழும்பிலும் தனியாகத்தான் ஹோட்டலில் நின்றனான் (ஹோட்டல் பெயரில் இருந்து அறை எண் வரைக்கும் ETA எடுக்கும் போது குறிப்பிட்டு இருந்தனான்) .என்னை விட தீவிரமாக தமிழ் தேசிய விடயத்தில் இயங்குகின்ற / எழுதி வருகின்ற என் பல நண்பர்களும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் தான் பயணிக்கின்றனர் (மகிந்தவின் ஆட்சியின் பின்)

என் அனுபவத்தினை பொறுத்தவரைக்கும் ஹீத் துரு விமான நிலையம் (Heathrow airport), பிராங்க்பேட் விமான நிலையம் ஆகியவற்றை விட இலங்கை விமான நிலையம் வசதி குறைவாயினும் மனிதாபிமானத்துடன் மென்மையாகவே பயணிகளை அணுகுகின்றனர்.

நெடுக்கு, உங்களுக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சனையை கொஞ்சம் தெளிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் அது தொடர்பாக சர்வதேச அமைப்புகளிலும் முறையிடலாம்.

நுணா,
நீங்கள் 2009 இன் பின் இலங்கைக்கு போகவில்லையா? போயிருப்பின் தலைமுடிக்கு வெள்ளை டை அடித்துக் கொண்டா போனீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

நீங்கள் மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு போகவில்லை போல் யாழ்ப்பாணம் மட்டும் போன நீங்கள் போல  யாழ்ப்பாணம் பெரிதாக பாதிக்கப்படவில்லை அதனால் மக்கள் வாழ்க்கை தெரியாமல் போயிருக்கும் :unsure::unsure:

யாழ் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டிருக்கா விட்டாலும்.. யுத்தத்தால் சீரழித்த தேசம். இப்ப இப்ப தான் மக்கள் இயல்பு நிலைக்கு வருகிறார்கள். அந்த மக்களிடம் எங்களின் கடமைகளை பொறுப்புக்களை ஒப்படைப்பது அபந்தம்.  அதனை நாங்க தான் செய்யனும் சிறுகச் சிறுக. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஜீவன் சிவா,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
இந்த பதிவு உங்களின் பல பதிவுகளை வாசித்ததின் பின்னர் எனக்குள் ஏற்பட்ட மனஅங்கலாய்ப்பினால் எழுத வேண்டி வந்தது.

தவிர உங்களுடன் பிணக்குகளை வளர்ப்பதற்காக அல்ல.

பல கருத்துக்களங்களில் மற்றவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபத்தின்  அடிப்படையில் அல்லது ஆய்வின் /அனுபவ முதிர்ச்சியின் அடிப்படையில் வைக்கும் பல நல்ல கருத்துக்களை நீங்கள் அப்பட்டமாக நிராகரித்தும், தூற்றியும் எழுதுவது மிகவும் கவலைக்குரியதொன்று.

இது ஒரு வலைத்தளத்தில் பண்புள்ள ஒருவருடைய கருத்தாக பார்க்கவும் முடியாது.

இதை நான் "பொறுத்து வீடு" தொடர்பான கருத்தாடல்களிலும் , வேறு சில திரிகளிலும் கண்டுள்ளேன்.
இது நெடுக்கால போவான் என்ற தனி நபர் எதிர்கொண்ட அனுபவங்கள். அதை இது புளுகு, பொய், ரீல் என்று சொல்வது சிறுபிள்ளை தனமாக இருக்கிறது.

நெடுக்கரின் பதிவை வாசிக்கும் பொது இலங்கை அரசை ஒரு பிடி பிடித்து எல்லாக் குற்றங்குறைகளையும் பட்டியலிடப் போகும் ஒரு பதிவாகத் தெரிந்தாலும், அவரின் நிறைய அவதானிப்புகள் பிழை இல்லை என்று நானும் சொல்வேன்.

இலங்கை அரசை மேற்கத்திய வளர்ச்சி அடைந்த நாட்டின் செயல்பாடு, பண்புகளோடு ஒத்துப்பார்க்க முடியாது என்பதில் எள்ளளவுக்கும் கருத்து பேதம் இல்லை. இருந்தாலும் இன்று உலகம் சுருங்கி, மக்கள் முதல் மன்னர் வரை அனைத்தும் அறிந்து கொள்ளும் சாத்தியங்கள் இருக்கின்றன. 

சரளமாக சிங்கள கதைக்க, வாசிக்க தெரிந்த எனக்கும் கூட சில சம்பவங்கள் நடந்துள்ளன. 
அதானால் மட்டும், நம் நாட்டையும் , அரசியல் வாதிகளையும்   நான் திட்டவும் மாட்டேன். அதே போல் எதுவுமே நடக்கவில்லை என்று பூசி மெழுகவும் மாட்டேன்.

எது எப்படியோ, நான் எங்கே கூற வந்தது நெடுக்கரின் பதிவு உங்களின் அத்தாட்ச்சியையோ, சான்றிதல்களையோ நோக்கி எழுதப்பட்டதல்ல.

உங்கள் அனுபத்தை போல எல்லோரின் அனுபவங்களும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
அப்படி இன்னும் ஒருவரின் அனுபவம் உங்களுக்கு விசித்திரமாக படும் பொழுது அப்படியா செய்தி என்று விட்டு  
(நிழலி போன்று) உங்கள் அனுபவ பதிவை இடுங்கள்.

இப்படி எழுதியது அதிகப் பிரசங்கி தனமென்றால்  மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நிழலி said:

செப்ரம்பரில் கடவுசீட்டை பார்த்த குடிவரவு அதிகாரி திமிராக 'கப்பலிலா கனடா போனாய்" என்று கேட்க, "ஏன் உன்ர சிஸ்ரத்தில் நான் ஆரு என்று தெளிவாக தகவல் போட்டு இருக்கும்... அதில் அப்படியா இருக்கு?" என்று கேட்டதை தவிர வேறு எதுவும் நிகழவில்லை.

இதே வகையான ஒரு பிரச்சனை தான். சிஸ்டத்தில் இலங்கையை விட்டு போன திகதி காட்டுதில்லை.. உள்ள அனுமதிக்க முடியாது..என்று தான் தொடங்கினவர். இலங்கையை விட்டு வெளியேறி நீண்ட காலம் பாஸ்போட்டும் நாடும் மாறிவிட்டது என்று விளக்கியும் தன்ர நிலையில்.. விடாப்பிடியாக நின்றார். அந்நியச் செலவாணிப் பறிப்பில் நாட்டமுள்ள அதிகாரி போல. சி ஐ டி அதுஇதென்று வெருட்டினார். நாங்க அசறவில்லை. திருப்பி திருப்பி பதில் சொல்லிக்கிட்டே நிற்க வேறு வழியில்லாமல்.. தான்  உதவி செய்யுறன்.... பதிலுக்கு நீயும் உதவனும் என்றார். அவர் என்ன உதவி கேட்கிறார் என்று புரியவில்லை ஆரம்பத்தில். இறுதியில் சிறிய தொகையை கொடுத்திட்டு வெளியேறினது தான். சி ஐ டி  அதுஇதென்னு கூட்டிக் கொண்டு போய் எல்லாருமா சேர்ந்து கொள்ளை அடித்து பங்குபோட அனுமதிப்பதிலும்.  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டி நிறையக் காசு கொண்டு,நுனி நாக்கில ஆங்கிலம் கதைத்து பந்தா காட்டினால் காசு பறிப்பான் தானே!...பார்லிமென்ட்டுக்கு முன்னாலே போய் ஆர்ப்பாட்டம் செய்து போட்டு அந்த வருடமே ஊர் போய் வந்த கணக்கப் பேர் இருக்கினம். முக்கியமாக இள வயது மாணவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடவுச்சீட்டில் பயணம் செய்யும் போது எனக்கு ஒரு பிரச்சனையும் ஏற்பட்டதில்லை, முதன் முதலாக பிரித்தானிய கடவுச்சீட்டில் பயணிக்கும் போது இங்கு எம்பசியில் எடுத்த 3 மாத விசாவுடன் ( 30 நாட்களுக்கு அதிகமாக நின்றதால்) சென்றேன், 

குடிவரவு அதிகாரி சிஸ்டத்தில் இலங்கையைவிட்டு வெளியேறிய திகதி காட்டுதில்லை என்று இழுத்த உடனேயே " இத்தனையாம் திகதி இன்ன கிழமை, மாதம் வந்து இத்தனை நாள் நின்று இத்தனையாம் திகதி வெளிக்கிட்டன்" என்று கூறியவுடன் சட்டென குத்தித்தந்தார் கடவுச்சீட்டை.

பெண் குடிவரவு அதிகாரி இருக்கும் பக்கம் செல்லுங்கள், இப்படியான சில்லறைத்தனமான விடயங்கள் செய்வது குறைவு.

(முன்னர் தனித்தனியான வரிசை இருந்தது இப்போது 3 அதிகாரிகளுக்கு ஓர் வரிசை என்று மாற்றிவிட்டார்கள்).

8 minutes ago, ரதி said:

பெட்டி நிறையக் காசு கொண்டு,நுனி நாக்கில ஆங்கிலம் கதைத்து பந்தா காட்டினால் காசு பறிப்பான் தானே!...பார்லிமென்ட்டுக்கு முன்னாலே போய் ஆர்ப்பாட்டம் செய்து போட்டு அந்த வருடமே ஊர் போய் வந்த கணக்கப் பேர் இருக்கினம். முக்கியமாக இள வயது மாணவர்கள்.

அப்படி சென்று வந்த இள வயது மாணவர்கள் இங்கு செய்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

இலங்கை கடவுச்சீட்டில் பயணம் செய்யும் போது எனக்கு ஒரு பிரச்சனையும் ஏற்பட்டதில்லை, முதன் முதலாக பிரித்தானிய கடவுச்சீட்டில் பயணிக்கும் போது இங்கு எம்பசியில் எடுத்த 3 மாத விசாவுடன் ( 30 நாட்களுக்கு அதிகமாக நின்றதால்) சென்றேன், 

குடிவரவு அதிகாரி சிஸ்டத்தில் இலங்கையைவிட்டு வெளியேறிய திகதி காட்டுதில்லை என்று இழுத்த உடனேயே " இத்தனையாம் திகதி இன்ன கிழமை, மாதம் வந்து இத்தனை நாள் நின்று இத்தனையாம் திகதி வெளிக்கிட்டன்" என்று கூறியவுடன் சட்டென குத்தித்தந்தார் கடவுச்சீட்டை.

பெண் குடிவரவு அதிகாரி இருக்கும் பக்கம் செல்லுங்கள், இப்படியான சில்லறைத்தனமான விடயங்கள் செய்வது குறைவு.

(முன்னர் தனித்தனியான வரிசை இருந்தது இப்போது 3 அதிகாரிகளுக்கு ஓர் வரிசை என்று மாற்றிவிட்டார்கள்).

அப்படி சென்று வந்த இள வயது மாணவர்கள் இங்கு செய்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

மீரா, ஊர் போய் வந்த பிற்கு அவர்கள் செய்ததைப் பற்றி நான் கதைக்க வரேல்ல...எப்படி அவர்கள் ஊருக்குப் போனார்கள் என்பதையே சொன்னேன்:mellow:.தவிர நெடுக்கு இப்படி நடக்கவில்லை என்றும் சொல்ல வரேல்ல.நடந்திருக்கு அதற்கான காரணத்தைத் தான் சொன்னேன்...அவர் பல வருடம் கழித்துப் போவதால் எல்லாம் மாறி இருக்கும்...வெருண்டு கொண்டு நின்டு இருக்கலாம்:rolleyes:, தவிர அந்த அதிகாரிக்கு நெடுக்கரின் முகத்தைப் பார்த்தவுடனேயே ஏமாத்தலாம் என்டு தெரிஞ்சிருக்குtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

தவிர அந்த அதிகாரிக்கு நெடுக்கரின் முகத்தைப் பார்த்தவுடனேயே ஏமாத்தலாம் என்டு தெரிஞ்சிருக்குtw_blush:

பச்சை இதற்குத்தான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது.
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்) அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.