Jump to content

நடுவானில் தகவல் தொடர்பை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்


Recommended Posts

நடுவானில் தகவல் தொடர்பை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்

 
 

கடந்த வியாழனன்று, மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஜெட் ஏர்வேஸ் விமானம், ஜெர்மனி வான்வெளியில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென ஜெர்மனி நாட்டு விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின.

ஜெட் விமானம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பொதுவான நடைமுறையில், ஒரு விமானம், ஒவ்வொரு நாட்டின் வான்வெளி பகுதியை கடந்து செல்லும் போது, சம்பந்தப்பட்ட நாட்டின் விமான கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளிக்கவேண்டும்.

இந்த சம்பவத்தில், 330 பயணிகளை கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் பயணிகள் விமானம், சுமார் 30 நிமிடங்களுக்கு தகவல் தொடர்பற்று இருந்தது என்று செய்திகள் கூறுகின்றன.

சந்தேகம் நேர்ந்ததும், ஜெர்மனியின் விமானப்படையை சேர்ந்த இரண்டு விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை பின் தொடர்ந்து சென்றன என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பிபிசிக்கு விளக்கம் அளித்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் செய்தி தொடர்பாளர், ''முன்னெச்சரிக்கையாக ஜெர்மனி விமானப்படை விமானம், ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் பாதுகாப்பையும், அதில் உள்ள பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்தது,'' என்றார்.

அவர் மேலும், சில நிமிடங்களில் தகவல் தொடர்பு சரிசெய்யப்பட்டது என்றும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசின் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

விசாரணை நடக்கும் வரை, சம்பந்தப்பட்ட விமானிகள் குழு, வழக்கமான நடைமுறைகளின்படி, பணியிலிருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எந்த அசம்பாவிதம் ஏற்படாமல் பயணிகளை பாதுகாப்பாக லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-39021358

 

Link to comment
Share on other sites

ரேடாரில் இருந்து மறைந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் - வீடியோ இதோ!

கடந்த வியாழன் அன்று, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் போயிங்-777 விமானம், ஜெர்மனி எல்லைக்குள் பறக்கும்போது, திடீரென்று கட்டுப்பாட்டு அறையின் தொடர்ப்பை இழந்தது. இதையடுத்து ஜெர்மனியின் விமானப்படை தனது தேடுதல் பணியை முடுக்கிவிட்டது. 

Jet Airways - German Escort

 

தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால்  ஜெர்மன் போர் விமானங்கள் உடனடியாக பறந்து சென்றன. சில நிமிடங்களில் மீண்டும் விமானத்துடன் தொடர்பு கிடைத்தது. ஆனாலும், பாதுகாப்புக்காக ஜெர்மன் போர் விமானங்கள் எஸ்கார்ட் செய்தன. பின்னர் லண்டனில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. ஜெட் ஏர்வேஸ் விமானிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. 

போர் விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை எஸ்கார்ட் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவாம் இது!

 

 

 

 

 

 

http://www.vikatan.com/news/world/81358-germany-scrambles-fighter-planes-for-jet-airways-flight.html?artfrm=news_most_read

Link to comment
Share on other sites

ஜெட் ஏர்வேஸை ஜெர்மன் போர் விமானங்கள் மடக்கியதன் அதிர்ச்சிப் பின்னணி! #9w118 #jetairways

மும்பையில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற  ஜெட் ஏர்வேஸ் விமானம் காணாமல்போனதற்கான காரணங்கள், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன. 

ஜெட் ஏர்வேசுக்கு வழிகாட்டும் ஜெர்மன் போர் விமானம்

கடந்த 16-ம் தேதி, ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று மும்பையில் இருந்து லண்டனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. ஜெர்மனியின் கோலென் நகரின் மீது பறந்துகொண்டிருக்கும்போது, திடீரென்று தரைக்கட்டுப்பாட்டு அறையுடனான  விமானத்தின் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் கடத்தப்பட்டதாகக் கருதிய ஜெர்மன் அரசு, உடனடியாக இரு போர் விமானங்களைக்கொண்டு காணாமல் போன விமானத்தைத் தேடியது. வானில் பறந்துகொண்டிருந்த இந்திய விமானத்தைக் கண்டுபிடித்துப் போர் விமானங்கள் மடக்கின. இந்த போயிங் 777 ரக விமானத்தில் (எண் 9W 118) 330 பயணிகளுடன் 15 விமான ஊழியர்களும் இருந்தனர். 

ஜெர்மன் போர் விமானங்கள் வழிகாட்ட, இந்திய விமானம் பறந்துசென்ற வீடியோக்கள், இணையங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறித்த நேரத்தில், விமானம் லண்டனைச் சென்றடைந்ததாகச் சொல்லப்பட்டது. விமானம் காணாமல் போனது குறித்து  ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையின் முடிவில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  விசாரணையில்... தலைமை பைலட் உறங்க, துணை விமானி விமானத்தை இயக்கியது தெரியவந்துள்ளது. அவரும் அரைகுறை கிறக்கத்தில் இருந்துள்ளார். செக் குடியரசுக்கு மேல் பறக்கும்போது, பரேக் நகரத் தரைக்கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்துக்குத் தொடர்பு இருந்துள்ளது. ஆனால், ஜெர்மனி வான்வெளிக்குள் நுழைந்ததும்  தரைக்கட்டுப்பாட்டு அறையுடன் தகவல் தொடர்பை இழந்துள்ளது.  

தரைக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழக்க, தவறான அலைவரிசையை செட் செய்துள்ளதும் ஒரு காரணம் எனத் தெரியவந்துள்ளது. துணை விமானி, தனது ஹெட் செட்டில் ஒலி அளவையும் குறைவாக வைத்திருக்கிறார். தவறான சமிக்ஞைகளைக் கையாண்டிருக்கிறார். இப்படி, சுமார் 33 நிமிடங்கள் 500 கி.மீட்டர் தொலைவுக்கு ஜெர்மனி வான்வெளியில் விமானம் பறந்துசென்றுள்ளது. அந்தச் சமயத்தில் டெல்லியில் இருந்து லண்டனை நோக்கிச் சென்ற (எண் 9W 122) என்ற மற்றொரு ஜெட் ஏர்வேஸ் விமானம் செக் குடியரசின் வான் வெளிக்குள் நுழைந்துள்ளது. மற்றொரு இந்திய விமானத்தைக் கண்ட செக் குடியரசின் பரேக் நகரத் தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், அந்த விமானத்தைத் தொடர்பு கொண்டு, மும்பை - லண்டன் விமானம் காணாமல்போனது குறித்து  தகவல் தெரிவித்திருக்கின்றனர். டெல்லி - லண்டன் விமானத்தின் விமானி, இந்திய தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார். 

தரைக்கட்டுப்பாட்டுடன் சுமார் அரைமணி நேரமாக தொடர்பு இல்லாமல், மும்பை - லண்டன் விமானம் பறந்துள்ளது. பின்னர்தான் ஜெர்மனி போர் விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை  வானில் வழிமறித்துள்ளன. இது தொடர்பாக, விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ''தற்போதைய நிலையில் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. காக்பிட்டில் நடந்த வாதங்கள் குறித்து அறிவதற்காக, விமானி அறையில் இருந்து 'வாய்ஸ் ரொக்கார்ட் ' பதிவுகள்  எடுக்கப்பட்டுள்ளன''  எனத் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன், கடந்த 2014-ம் ஆண்டும் இதேபோன்று ஜெர்மன் வான்வெளியில் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று அரை மணி நேரம் தரைக்கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு இல்லாமல் பறந்திருக்கிறது. பொறுப்பற்ற விமானிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பலரிடமிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

http://www.vikatan.com/news/world/81633-the-reasons-behind-why-jet-airways-losses-air-traffic-control-and-german-air-force-get-into-action.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.