Jump to content

ஐ.நா தீர்மானத்தில் மாற்றம் செய்யவேண்டாம்-சுமந்திரன்


Recommended Posts

ஐ.நா தீர்மானத்தில் மாற்றம் செய்யவேண்டாம்-சுமந்திரன்
 
 
ஐ.நா தீர்மானத்தில் மாற்றம் செய்யவேண்டாம்-சுமந்திரன்
திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று நடைபெற்ற இரு முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொண்டார்.
 
இதன்போது "ஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கி ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே ஐ.நா. தீர்மானத்தில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டாம்" என்று வலி யுத்தியுள்ளார்.
 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்றுக் காலை முதலாவது சந்திப்பும், அதன் பின்னர் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐ.நா.வுக்கான பிரதிநிதிகளுடன் இரண்டாவது சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
 
இந்தச் சந்திப்புக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவிக்கையில்
 
இலங்கை அரசு 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியக் கிடைத்தது. போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்குதல் உள்ளிட்ட சில மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கின்றது. இதனை அறிந்து இது தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவே அவசரமாக ஜெனிவா வந்தேன்.
 
பிரிட்டன் இந்த முறை தீர்மானத்தைக் கொண்டு வரும்போது 2015 ஆம் ஆண்டு ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியே தீர்மானத்தைக் கொண்டு வருமாறு கோரினேன். அதற்கு ஆதரவு வழங்குவதாக பிரிட்டன் உறுதியளித்தது. அத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்ட 18 மாத காலப் பகுதியில் இலங்கை அரசு தான் இணங்கிய விடயங்களைச் செயற்படுத்தவில்லை. எனவே, மேற்பார்வைப் பொறிமுறை மிக இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், ஆணையாளர் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்போகும் அறிக்கையில், இலங்கை அரசு 2015 ஆம் ஆண்டு இணங்கிய விடயங்கள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கோரினேன். காணாமற்போனோர் அலுவலகம் நிறுவப்படவில்லை, காணி விடுவிப்புக்கள் நடைபெறவில்லை, அரசியல் கைதிகள் விடுவிப்பு நடைபெறவில்லை, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை.
 
இதனை விட முற்றுமுழுதாக உள்நாட்டு பொறிமுறையூடான விசாரணைக்கு இலங்கை அரசு முயற்சிக்கின்றது. இதற்கு ஆணையாளர் எதிர்ப்பு வெளியிட வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டதான பொறிமுறையே அமைக்கப்பட வேண்டும். அதனை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டும். பொறுப்புக் கூறல் அரசியல் தீர்வு விடயங்களிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதனை விரைந்து நிவர்த்திப்பதற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆணையாளரின் அறிக்கை அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்" - என்றார்.

http://www.onlineuthayan.com/news/24069

Link to comment
Share on other sites

34ஆவது ஜெனிவா கூட்­டத்­தொ­டரில் கால அவ­கா­சத்தை வழங்­கா­தீர்கள்

111-ba6310e08324e95f1a66823e5507db097e6143c9.jpg

 

ஜெனி­வாவில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்தல்
(ஆர்.ராம்)

இலங்கை அர­சாங்கம் இணை அனு ச­ரணை வழங்­கி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக மேலும் கால அவ­கா­சத்தை வழங்க வேண்­டு­மென எதிர்­வரும் 27 ஆம் திகதி ஆரம்­ப­மா­கவுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேர வைக் கூட்­டத்­தொ­டரில் அர­சாங்­கத்­தினால் விடுக்­கப்­படும் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத் தியுள்ளது. 

ஐ.நா.தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு 18 மாத காலத்தில் அதில் கூறப்­பட்ட எத்­த­னையோ விட­யங்­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தி­யி­ருக்க முடியும். அவ்­வா­றான செயற்­பா­டுகள் இடம்­பெ­றாத பட்­சத்தில் மேலும் கால அவ­காசம் வழங்­கு­வதில் எமக்கு நம்­பிக்கை இல்லை எனவே மேலும் கால அவ­காசம் வழங்­கக்­கூ­டாது.  

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யா­ளரால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள அறிக்­கையில் அர­சாங்கம் மேற்­

கொள்ள வேண்­டிய

விட­யங்கள் கடு­மை­யான தொனியில் குறிப்­பி­டப்­ப­ட­வேண்டும் என்று கூட்­ட­மைப்பு ஜெனீ­வாவில் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 34ஆவது கூட்­டத்­தொடர் எதிர்­வரும் 27ஆம் திகதி ஆரம்­பித்து மார்ச் மாதம் 24ஆம் திகதி வரையில் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் குறித்து குற்றச்­சாட்­டுக்­குள்­ளா­கி­யுள்ள இலங்கை தொடர்­பாக எழுத்து மூல­மான அறிக்­கை­யொன்றை சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்­டத்­தொ­டரின் போது அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்டு இலங்கை அர­சாங்­கமும் இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையில் பரிந்­து­ரைக்­கப்­பட்ட விட­யங்­களை அர­சாங்கம் அமுல்­ப­டுத்­தி­யுள்­ளதா? அதில் எவ்­வா­றான அடைவு மட்­டங்­களைக் கொண்­டி­ருக்­கின்­றது என்­பது தொடர்­பி­லான விரி­வான அறிக்­கை­யொன்றை அவர் வெளியி­ட­வுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி ஆட்சி மாற்றம் இடம்­பெற்ற பின்னர் ஆட்­சிக்கு வந்த தேசிய அர­சாங்கம் குறித்த பிரே­ர­ணையை முழ­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருக்கும், சர்­வ­தே­சத்­திற்கும் உறுதி மொழியை வழங்­கி­யி­ருந்­தது.

இருப்­பினும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு 18 மாதங்கள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் குறித்த தீர்­மா­னத்தில் உள்ள பரிந்­து­ரைகள் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என பாதிக்­கப்­பட்ட தரப்பின் ஆணையைப் பெற்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­நாட்­டிலும், சர்­வ­தே­சத்­திலும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இத்­த­கைய நிலையில் இம்­முறை ஆரம்­ப­மா­க­வுள்ள ஜெனீவா கூட்­டத்­தொ­டரில் மேலும் கால அவ­கா­சத்­தினை பெற்­றுக்­கொள்­வ­தற்கு தற்­போ­தைய அர­சாங்கம் பல்­வேறு முயற்­சி­களை இரா­ஜ­தந்­திர ரீதி­யாக மேற்­கொண்டு வரு­கின்­றது.

குறிப்­பாக பிரித்­தா­னியா உள்­ளிட்ட மேற்­குல நாடு­களில் உள்ள அர­சாங்­கத்தின் இரா­ஜ­தந்­திர துறை­யினர் கால அவ­கா­சத்­திற்­கான கோரிக்­கையை மையப்­ப­டுத்­திய ஐ.நா உறுப்பு நாடு­க­ளி­டத்தில் பல்­வே­று­பட்ட அணு­கு­மு­றை­களை முனைப்­புடன் ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

இம்­மு­யற்­சிகள் குறித்து தக­வல்கள் கசிந்­தி­ருந்த நிலையில் பாதிக்­கப்­பட்ட தரப்பின் ஆணையைப் பெற்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் அக்­கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் மற்றும் வட­மா­காண சபை உறுப்பினர் அயுப் அஸ்மின் உள்­ளிட்ட சில சட்­டத்­து­றையைச் சேர்ந்த பிர­தி­நி­திகள் அவ­ச­ர­மாக ஜெனீ­வா­வுக்கு கடந்தவாரம் விரைந்­தி­ருந்­தனர்.

இதன்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் அங்கம் வகிக்கும் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, சுவிட்ஸ்­லாந்து உள்­ளிட்ட 12நாடு­களைச் சேர்ந்த முக்­கிய பிர­தி­நி­தி­க­ளுடன் விசேட சந்­திப்­பொன்றை இவர்கள் நடத்­தி­யி­ருந்­தனர்.

இச்­சந்­திப்புக்களையடுத்து நேற்று நாடு திரும்பியிருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் கூறு­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் கடந்த கூட்­டத்­தொ­டரில் அமெ­ரிக்­கா­வினால் கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு இலங்கை அர­சாங்­கமும் இணை அனு­ச­ர­ணையை வழங்­கியே அந்த தீர்மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

அத்­தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு 18 மாதங்கள் கடந்­தி­ருக்­கின்­றன. அவ்­வா­றான நிலையில் அத்­தீர்­மா­னத்தில் கூறப்­பட்ட பல விட­யங்­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும். ஆனால் அதில் பல்­வேறு தாம­தங்கள் காணப்­ப­டு­கின்­றன.

இத்­த­கைய நிலையில் மீண்டும் அர­சாங்கம் கால அவ­கா­சத்தை வழங்குவதற்கான கோரிக்­கையை முன்­வைக்க முயல்­கின்­றது. அர­சாங்­கத்தின் கால அவ­காச கோரிக்­கையை எத்­த­கைய நம்­பிக்­கையில் ஏற்­றுக்­கொள்ள முடியும். ஆகவே கால அவ­காச கோரிக்­கையை நாங்கள் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

பாதிக்­கப்­பட்ட மக்­களின் சார்­பாக பிரி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் எமது நியா­ய­மான கோரிக்­கையை தாங்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என ஜெனிவாவில் நான் கோரினேன்.

இதன்­போது 12 உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களும் எமது நியா­ய­மான கோரிக்­கையை சாதா­க­மாக பரி­சீ­லிப்­ப­தாக உறு­தி­படத் தெரி­வித்­துள்­ளனர். குறிப்­பாக பிரித்­தா­னியா நாட்டின் பிரதி­நி­தியும் அதற்­கான ஒப்­பு­தல்­களை வழங்­கி­யுள்ளார்.

அதே­நேரம் அமெ­ரிக்க நாட்டின் பிர­தி­நிதி எம்­மி­டத்தில் கூறு­கையில், அமெ­ரிக்­காவில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டுள்ள போதும் வெளியு­றவுக் கொள்­கையில் எவ்­வி­த­மான மாற்­றங்­களும் ஏற்­ப­ட­வில்லை. இலங்கை விட­யத்தில் நாம் கரி­ச­னை­யு­டனே உள்­ள­தாக குறிப்­பிட்டார் என்றார்.

இத­னை­ய­டுத்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் முக்­கி­யஸ்­தர்­க­ளு­ட­னான சந்­திப்பு இடம்­பெற்­றது. இச்­சந்­திப்பு குறித்து கருத்து வௌியிட்ட சுமந்­திரன் எம்.பி,

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யா­ளரால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள எழுத்து மூல­மான அறிக்கை கடு­மை­யா­ன­தாக அமை­ய­வேண்டும். குறிப்­பாக அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­டா­தி­ருக்கும் விட­யங்கள் தௌிவாக சுட்­டிக்­காட்­டப்­பட வேண்டும்.

மேலும் அர­சியல் கைதி­களின் விடயம், காண­மல்­போ­னோரின் விடயம், கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு விடு­விக்­கப்­ப­டா­துள்ள பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை விடு­வித்தல் ஆகிய விட­யங்­களில் எந்­த­வி­த­மான விட்­டுக்­கொ­டுப்­பையும் எமது தரப்பு செய்­வ­தற்கு ஒரு­போதும் தயா­ரில்லை.

ஆகவே இந்த விட­யங்­களை ஆணை­யா­ளரின் அறிக்­கையில் கடு­மை­யாக சுட்­டிக்­காட்ட வேண்டும் எனவும் எம்மால் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

எமது கோரிக்­கைளை ஏற்­றுக்­கொள்­வ­தோடு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுப்­பதில் ஐ.நா பார­பட்­ச­மின்றி செயற்­படும் எனவும் அலு­வ­லக முக்­கி­யஸ்­தர்கள் குறிப்­பிட்­டனர் என்றார்.

இதே­வேளை ஜெனீ­வா­வுக்குச் சென்­றி­ருந்த வட­மா­காண சபை உறுப்­பினர் அஸ்மின் கூறுகையில்,

2009ஆம் ஆண்டிற்கு முன்னதாக காணிகள் கையகப்படுத்தப்பட்ட போது பாதுகாப்பையே காரணம் காட்டப்பட்டது. ஆனால் அதன் பின்னரான காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலிலேயே கையகப்படுத்தப்படுகின்றது.

உதாரணமாக கூறுவதாயின் வில்பத்து பகுதியில் தமிழ், முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு பகுதி காணிகள் படைமுகாம்கள் அமைக்கப்பட்டதால் கையப்படுத்தப்பட்டு விட்டன. எஞ்சியுள்ள பகுதியை சரணாலய விஸ்தரிப்பு என்ற பெயரில் கையப்படுத்த முயற்சிகப்படுகின்றது.

ஆகவே இவ்வாறான விடயத்தை வைத்துப் பார்க்கையில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுவதாக தோன்றுகின்றது. இதனால் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நம்பிக்கையீனமே நிலவுகின்றது எனச் சுட்டிக்காட்டியிருந்தேன் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-20#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.