Jump to content

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் என்ன செய்யப்போகிறது அரசாங்கம்


Recommended Posts

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் என்ன செய்யப்போகிறது அரசாங்கம்

 

ரொபட் அன்டனி

யுத்­தக்­குற்ற நீதி­மன்­றங்­களை அமைப்­பது குறித்து இப்­போ­தைய கால­கட்­டத்தில் பேசு­வ­தற்கு ஆரம்­பித்தால் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் சாத்­தி­ய­மில்­லாமல் போய்­விடும். எனது ஆட்­சிக்­கா­லத்தில் இருந்­ததை விடவும் சவால்கள் தற்­போது அதிகம் 

"நாட்டில் ஜன­நா­யகம் உறு­திப்­ப­டுத்­தப்­பட் டால் ஆர்ப்­பாட்­டங்கள் நடப்­பது இயல்­பா­கி­விடும். அதுதான் தற்­போது நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. முன்னாள் பிர­தமர் பண்­டா­ர­நா­யக்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் வரு­டத்தில் 365 நாட்­களில் 362 நாட்கள் ஆர்ப்­பாட்­டங்கள் நடந்­தன. அந்­த­வ­கையில் கடந்த 9 வரு­டங்­க­ளாக ஆர்ப்­பாட்டம் செய்ய முடி­யாமல் கிடந்த நாட்டு மக்கள் தற்­போது சுதந்­தி­ர­மாக ஆர்ப்­பாட்டம் செய்ய ஆரம்­பித்­துள்­ளனர். சுதந்­திரம் இருக்­கின்­ற­மையின் கார­ண­மாக நன்­றாக ஆர்ப்­பாட்டம் செய்­கின்­றனர். அக்­கா­லத்தில் ஆர்ப்­பாட்­டங்கள் நடக்­கும்­போது வெள்­ளை­வேன்கள் வந்­தன. ஆனால் தற்­போது இல்லை""

இவ்­வாறு அர­சாங்­கத்தின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன அண்­மையில் தெரி­வித்­துள்ளார். இந்த இடத்தில் அமைச்சர் ஏன் இந்த கருத்தை இவ்­வாறு பதிவு செய்­துள்ளார் என்­ப­தனை பார்க்­க­வேண்டும். அதா­வது நாட்டில் ஆர்ப்­பாட்­டங்­களும் போராட்­டங்­களும் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­துள்ள நிலையி­லேயே அர­சாங்­கத்தின் பேச்­சாளர் இந்த விட­யத்தை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஒரு­புறம் ஆர்ப்­பாட்­டங்கள் மற்றும் போராட்­டங்கள் மறு­புறம் புதிய அர­சி­ய­ல­மைப்பை காட்டி பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை தவிர்த்து விடு­வார்­களா என்­ற­தொரு நிலை நாட்டில் காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லை­யி­லேயே ஆர்ப்­பாட்­டங்கள் தற்­போது மக்­களின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளன.

உண்­மையில் அவ்­வாறு என்­னதான் நடக்­கின்­றன நாட்டில் என்று அல­ச­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. தென்­னி­லங்­கையை பொறுத்­த­வரை தமது உரி­மை­களை வலி­யு­றுத்தி அரச ஊழி­யர்கள், விசேட தேவை­யு­டைய ஓய்­வு­பெற்ற இரா­ணுவ வீரர்கள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் என பல்­வேறு தரப்­பினர் முன்­னெ­டுக்கும் போராட்­டங்கள் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

தலை நகரில் அவ்­வப்­போது ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை கலைப்­ப­தற்கு நீர்த் தாரை பிர­யோ­கமும் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு தென்­னி­லங்­கையில் தொடர்ச்­சி­யாக ஆர்ப்­பாட்­டங்கள் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

இதே­வேளை வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளிலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது உரி­மை­களை பெற்­றுத்­த­ரக்­கோரி ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் போராட்­டங்­க­ளையும் நடத்­தி­வ­ரு­கின்­றனர். அவை எவ்­வா­றான ஆர்ப்­பாட்­டங்கள் என்று பார்த்தால் யுத்த காலத்தில் தம்­மிடம் இருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை மீளப்­பெறும் நோக்­கி­லான ஆர்ப்­பாட்­டங்கள், போராட்­டங்கள், காணா­மல்­போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தனை கேட்டு முன்­னெ­டுக்­கப்­படும் ஆர்ப்­பாட்­டங்கள் என அவற்றை வகைப்­ப­டுத்­தலாம். இந்த சூழ­லி­லேயே அமைச்­ச­ரவை பேச்­சாளர் நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் ஆர்ப்­பாட்­டங்கள் தொடர்பில் கருத்து வெ ளியிட்­டுள்ளார்.

எவ்­வா­றெ­னினும் தற்­போது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் மக்கள் தமது உரி­மை­க­ளையும் உறு­தி­ப்ப­டுத்­தக்­கோ­ரியும் தம்­மிடம் இருந்து அப­க­ரிக்­கப்­பட்­ட­வற்றை பெற்­றுத்­த­ரக்­கோ­ரியும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் போராட்­டங்­க­ளையும் நடத்த ஆரம்­பித்­துள்­ள­துடன் அவற்றை தொடர்ச்­சி­யா­கவும் முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர்.

குறிப்­பாக கேப்­பாபுலவு மக்கள் தமது காணி­களை விடு­விக்­கக்­கோரி தொடர்ச்­சி­யான போராட்­டங்­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர். வெயி­லிலும் பனி­யிலும் துன்ப துய­ரங்­களை அனு­ப­வித்­துக்­கொண்டே மக்கள் இந்தப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர்.

எனினும் இந்த ஆர்ப்­பாட்டம் தொடர்பில் மக்­க­ளுக்கு முழு­மை­யான உத்­த­ர­வாதம் எதுவும் இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் மக்கள் தொடர்ச்­சி­யாக போராட்­டத்தை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர். புதுக்­கு­டி­யி­ருப்பு மக்­களும் தமது காணி­களை விடு­விக்­கு­மாறு வலி­யு­றுத்தி சுழற்சி முறை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர்.

 காணாமல்போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தனை அறி­விக்­கு­மாறு கோரி யாழ்ப்­பா­ணத்தில் பாதிக்­கப்­பட்ட மக்கள் எதிர்­வரும் 20 ஆம் திகதி முதல் தொடர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மின்றி சில வாரங்­க­ளுக்கு முன்னர் வவு­னி­யாவில் காணாமல் போனோரின் உற­வுகள் தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த நிலையில் அர­சாங்­கத்தின் தலை­யீட்­டை­ய­டுத்து அந்த போராட்டம் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனால் இது­வரை அந்தப் பிரச்­சி­னைக்கும் இது­வரை தீர்­வு­கா­ணப்­ப­ட­வில்லை.

மேலும் இவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­படும் போராட்­டங்­க­ளுக்கு வடக்கு, கிழக்கு பகு­தி­களில் பல்­வேறு தரப்­பி­னரும் ஆத­ரவை தெரி­வித்­து­வ­ரு­கின்­றனர். அந்­த­வ­கையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் மக்கள் தமது உரி­மை­களை வலி­யு­றுத்தி ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­வ­ரு­வதை அதி­க­ரித்­துள்­ளனர்.

உண்­மையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது உரி­மை­களை வலி­யு­றுத்தி அகிம்சை ரீதியில் போராட்டங்­களை நடத்­து­வதை தவறு என்று கூற முடி­யாது. அர­சாங்கம் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் என்று நம்­பிக்­கொண்­டி­ருந்த மக்கள் தற்­போது நம்­பிக்­கை­யி­ழந்து தமது உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக போராட்­டங்­களை நடத்த ஆரம்­பித்­துள்­ளனர்.

அதா­வது அர­சாங்கம் உரிய முறையில் நல்­லி­ணக்க மற்றும் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட்­டி­ருந்தால் மக்கள் இவ்­வாறு தொடர் போராட்­டங்­களை முன்­னெ­டுக்கும் நிலை ஏற்­பட்­டி­ருக்­காது. எனினும் அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யத்தில் அதிக கவ­னத்தை செலுத்­தாமல் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்தே அதிக கவனம் செலுத்­து­வ­தாக தெரி­கின்­றது.

இந்த விடயம் அண்­மையில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க வெ ளியிட்­டி­ருந்த கருத்­தி­லி­ருந்து தெளிவாக தெரி­கின்­றது. அதா­வது """ யுத்­தக்­குற்ற நீதி­மன்­றங்­களை அமைப்­பது குறித்து இப்­போ­தைய கால­கட்­டத்தில் பேசு­வ­தற்கு ஆரம்­பித்தால் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் சாத்­தி­ய­மில்­லாமல் போய்­விடும். எனது ஆட்­சிக்­கா­லத்தில் இருந்­ததை விடவும் சவால்கள் தற்­போது அதிகம். அந்த காலத்தில் கடும்­போக்கு அமைப்­புகள் இருக்­க­வில்லை.

முன்னாள் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி போன்ற பிரி­வு­களும் அப்­போது இருக்­க­வில்லை. அந்த வகையில் புதிய அர­சாங்­கத்­திற்கு சவால்கள் அதிகம் உள்­ளன. எவ்­வா­றா­யினும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக வெண்­தா­மரை திட்டம் போன்று மக்கள் ஆத­ரவு திரட்டும் திட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். இது­தொ­டர்பில் விரைந்து செய­லாற்­று­வது தற்­கா­லத்தின் தேவை­யாகும்.

அர­சாங்­கத்­திடம் உள்ள பல­ரிடம் புதிய அர­சி­ய­ல­மைப்பு மீது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­து­வது குறித்து அச்சம் காணப்­ப­டு­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அனைத்­துமே மக்­களின் நல­னுக்­காக மட்­டுமே கொண்­டு­வ­ரப்­பட்­ட­வை­யாகும். . அதில் எவ்­வித சுய இலா­பமும் இல்லை. அத­னைப்­போ­லவே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான கருத்­தா­டல்­களும் பய­னுள்­ள­தாக இருக்க வேண்டும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டால் அத­னூ­டாக இலங்கை இரண்­டாகப் பிள­வு­படும் என்றும், தமிழ்த் தலை­வர்கள் எதிர்­பார்க்­கின்­ற­படி சமஷ்டி தீர்வும், வடக்கு, கிழக்கு இணைப்பும் வழங்­கப்­பட்­டு­விடும் எனவும் தென்­னி­லங்­கை­யி­லுள்ள சில பேரி­ன­வாத அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் சில அர­சி­யல்­வா­தி­களும் கூறி­வ­ரு­கின்­றனர்""

இவ்­வாறு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்­பான விட­யத்தை எடுத்­து­ரைத்­துள்ளார். இதன் மூலம் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் அர­சா­ங்கம் அந்­த­ள­வுக்கு ஆர்வம் காட்­ட­வில்லை என்­பது தெ ளிவா­கின்­றது.

காரணம் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் அவ­தானம் செலுத்­தினால் புதிய அர­சி­ய­ல­மைப்பை முன்­னெ­டுப்­பது கடி­ன­மா­கி­விடும் என்­பது அர­சாங்­கத்தின் கருத்­தா­க­வுள்­ளது. ஆனால் இவ்­வாறு கூறு­வதன் மூலம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வதை அர­சாங்கம் புறக்­க­ணித்­து­விட முடி­யாது. காரணம் பாதிக்­கப்­பட்ட மக்கள் நீண்­ட­காலம் நீதிக்­காக காத்­தி­ருக்­கின்­றனர்.

விசே­ட­மாக காணாமல் போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்­மையை மக்கள் அறிந்­து­கொள்­ள­வேண்டும். அத்­துடன் யுத்த காலத்தில் பொது மக்­க­ளிடம் இருந்து பெறப்­பட்ட காணிகள் மீள் கைய­ளிக்­கப்­ப­ட­வேண்டும். இவற்றை முன்­னெ­டுக்­க­வேண்­டு­மாயின்

  பொறுப்­புக்­கூறல் பொறி­முறை உரிய முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டுதல் அவ­சி­ய­மாகும்.

ஆனால் அர­சாங்­க­மா­னது புதிய அர­சி­யல்­மைப்பு விவ­கா­ரத்தை காட்டி பொறுப்­புக்­கூ­றலை தட்­டிக்­க­ழித்­து­வி­டக்­கூ­டாது. இது மிகவும் உணர்­வு­பூர்­வ­மான விட­யம்தான் என்­ப­தனை அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.

அதா­வது பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்பில் தென்­னி­லங்­கையின் கடும்­போக்­கு­வாத சக்­திகள் மக்கள் மத்­தியில் தவ­றான பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்தால் அனைத்து விட­யங்­களும் குழம்­பி­விடும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

எனவே மிகவும் அவ­தா­ன­மா­கவும் கவ­ன­மா­கவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாக இது காணப்­ப­டு­கின்­றது. சற்று குழம்­பி­னா­லேயே அனைத்து விட­யங்­களும் சீர்­கு­லைந்­து­விடும் அபாயம் இதில் காணப்­ப­டு­கின்­றது. எனவே பொறுப்­பான முறையில் இதனை முன்­னெ­டுக்­க­வேண்டும்.

இதனால் அர­சாங்கம் ஆபத்­தான கட்­டத்­துக்கு செல்­ல­வேண்டும் என்ற நிலை ஏற்­ப­டலாம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் இந்த விட­யத்தில் அர்ப்­ப­ணிப்­புடன் இருந்­தாலும் கடும்­போக்­கு­வாத சக்­திகள் இந்த நிலை­மையை மாற்றி அதனை பூதா­க­ர­மாக்­கி­விடும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது.

ஆனால் இவற்றை காரணம் காட்டி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டை தவிர்த்­து­விட முடி­யாது. அது மட்­டு­மின்றி பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றைக்கு பின்னால் சென்று கொண்­டி­ருந்தால் புதிய அர­சி­ய­ல­மைப்பை முன்­னெ­டுக்க முடி­யாமல் போய்­விடும் என்று அர­சாங்கத் தரப்­பினர் தெரி­விக்­கின்­றனர்.

ஆனால் இவ்­வாறு கூறு­கின்ற அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான முழு­மை­யான அதி­காரப் பகிர்­வுடன் கூடிய தீர்­வுத்­திட்டம் கிடைக்­குமா என்­பதும் சந்­தே­க­மா­ன­தாகும். காரணம் பொறுப்­புக்­கூறல் செயற்பாட்டை கடும்போக்குவாதிகள் எவ்வாறு எதிர்க்கின்றனரோ அதற்கு சற்றும் சலைக்காத வகையிலேயே புதிய அரசியலமைப்பு விவகாரத்துக்கும் கடும்போக்குவாதிகள் எதிர்ப்பு வெ ளியிட்டுவருகின்றனர்.

குறிப்பாக இதுவரை உருவாக்கப்படாத தயாரிக்கப்படாத பேச்சு மட்டத்தில் மட்டுமே இருக்கின்ற புதிய அரசியலமைப்பு விடயத்தையே கடும்போக்குவாதிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிரிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துவருவதாக கூட்டு எதிரணியினர் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

எனவே புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவது என்பதும் பாரிய சவால்களுக்கு உட்பட்டதுடன் கடினமானதுமாகும். எனவே அரசியலமைப்பின் ஊடாக தீர்வை வழங்குவது என்பதும் கடினமானதாகவே அமையும். இந்நிலையில் அரசாங்கம் மக்களின் காணி பிரச்சினை மற்றும் காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் ஆராயவேண்டும்.

மக்களின் போராட்டங்களை நடத்த ஆரம்பித்திருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். ஐக்கிய நாடுகள் சபை அனைத்து விடயங்களையும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் தற்போதைய போக்குகளை பார்க்கும்போது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அரசாங்கம் எவ்வாறு என்ன செய்யப்போகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-18#page-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.