Jump to content

சட்டப்பேரவையின் முதல் அரை மணிநேர பரபரப்பு விவரம்


Recommended Posts

சட்டப்பேரவையின் முதல் அரை மணிநேர பரபரப்பு விவரம்

 
 
சட்டப்பேரவை வளாகம்.
சட்டப்பேரவை வளாகம்.
 
 

அமளி, முழக்கம், வேண்டுகோள், நிராகரிப்பு என சட்டப்பேரவையின் முதல் அரைமணி நேரம் பரபரப்பாக இருந்தது.

சட்டப்பேரவையில் பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர். இந்நிலையில் திமுகவினருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணியினர் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக சட்டப்பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பிரிவுகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். முதல் மூன்று பிரிவுகளில் அதிமுகவினரும், மற்ற மூன்று பிரிவுகளில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமர்ந்தனர்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஓபிஎஸ் அணி கொறடா செம்மலை கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் செம்மலை வேண்டுகோள் விடுத்தார்.

உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும், எம்.எல்.ஏக்களின் உரிமை, மாண்பு பாதுகாக்கப்படும் என்று சபாநாயகர் தனபால் கூறினார். சபாநாயகர் தவிர, சட்டப்பேரவையில் 230 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ''ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும். வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்க வேண்டும்'' என்றார்.

ஸ்டாலின் கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

முன்னதாக, சிறைக்கைதிகள் போல் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/சட்டப்பேரவையின்-முதல்-அரை-மணிநேர-பரபரப்பு-விவரம்/article9549838.ece?homepage=true

Link to comment
Share on other sites

சட்டப்பேரவையில் பன்னீர் அணிக்கு தாவிய எம்.எல்.ஏ.க்கள்?

7_12381.jpg

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து கொண்டிக்கும்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேர் திடீரென பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராமசாமி, பன்னீர்செல்வம், செம்மலை ஆகியோர் பேசினர்.

பன்னீர்செல்வம் பேசிக்கொண்டிருந்தபோது, அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர், அவரை துரோகி என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பன்னீர் செல்வம் அணியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கிடையே வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, 38 பேர் எழுந்துநின்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு என்றனர். இதனால், எதிர் அணியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த அமளிக்கிடையே, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேர் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பு திடீரென நிறுத்தப்பட்டது.

http://www.vikatan.com/news/tamilnadu/81228-5-edappadi-supporters-might-have-joined-the-camp-of-ops-in-assembly-says-sources.html

Link to comment
Share on other sites

பேரவையில் அமைதி காத்த எடப்பாடி பழனிசாமி அணியினர்

 

சட்டப்பேரவை வளாகத்தில் எம்.எல்.ஏக்கள் | படம்: எல்.சீனிவாசன்
சட்டப்பேரவை வளாகத்தில் எம்.எல்.ஏக்கள் | படம்: எல்.சீனிவாசன்
 
 

பலத்த அமளிக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் பேரவையில் அமைதி காத்தனர்.

சட்டப்பேரவையில் பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர்.

இந்நிலையில் திமுகவினருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணியினர் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக சட்டப்பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பிரிவுகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். முதல் மூன்று பிரிவுகளில் அதிமுகவினரும், மற்ற மூன்று பிரிவுகளில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமர்ந்தனர்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஓபிஎஸ் அணி கொறடா செம்மலை கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் செம்மலை வேண்டுகோள் விடுத்தார்.

உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும், எம்.எல்.ஏக்களின் உரிமை, மாண்பு பாதுகாக்கப்படும் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.

சபாநாயகர் தவிர, சட்டப்பேரவையில் 230 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், '' ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும். வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்க வேண்டும். ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்திருக்கும்போது அவசரமாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு காரணம் என்ன? " என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் அளித்த அவகாசத்தை கருத்தில் கொண்டே இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாகக் கூறி ஸ்டாலின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.

முன்னதாக, சிறைக்கைதிகள் போல் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

பேரவையில் ஓபிஎஸ் பேசுகையில், ''கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டதை அனைவரும் அறிவர். மக்களின் குரல் பேரவையில் ஒலிக்க, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதிக்குச் சென்று வந்த பிறகே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சபாநாயகர் தனபால் கூறினார். மேலும், வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவு, என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்றார்.

மக்களை சந்திக்க சட்டப்பேரவை உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என்று மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நட்ராஜ் கோரிக்கை விடுத்தார்.

இவ்வாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதால் பேரவை தொடங்கி ஒருமணிநேரம் ஆகியும் வாக்கெடுப்பு தொடங்கவில்லை.

இந்நிலையில், வேண்டும் வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர், எதிர்க்கட்சியினர் சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இதனால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருக்கைகளை தட்டியும், காகிதங்களைக் கிழித்தெறிந்தும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார்.

பேரவைத் தலைவர் தனபால் மைக், இருக்கையும், பேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் உடைக்கப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பலத்த அமளிக்கு இடையிலும், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/பேரவையில்-அமைதி-காத்த-எடப்பாடி-பழனிசாமி-அணியினர்/article9549878.ece?homepage=true

Link to comment
Share on other sites

போர்க்களமானது தமிழக சட்டப்பேரவை! ஆரம்பம் முதல் என்ன நடந்தது?

assembly_1a_13506.jpg


தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிரணியில் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரின் நாற்காலி, மைக்கை  உடைத்தனர். சட்டப்பேரவை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டதால் தலைமைச் செயலகத்தில் துணை ராணுப்படையினர் குவிக்கப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை பதினொரு மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. காலை 9.30 மணி முதல் உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தலைமைச் செயலகத்துக்கு வரத்தொடங்கினர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சட்டப்பேரவைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நேப்பியர் பாலத்துக்கு முன்பே சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் பின்னர் கோட்டை சாலையில் செல்ல காவல்துறையினர் வாகனங்களை அனுமதித்தனர்.

ஒவ்வொரு வாகனங்கள் தலைமைச் செயலகத்துக்கு வந்து கொண்டிருந்தன. காலை 10 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் வாகனத்தில் வந்தனர். அப்போது, அனைத்து வாகனங்களையும் காவல்துறையினர் சோதனை செய்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த மு.க.ஸ்டாலின், கோட்டைக்கு முன்பு உள்ள பிரதான நுழைவு வாயிலுக்கு முன்பே காரை நிறுத்தி விட்டு எம்.எல்.ஏ.க்களுடன் சட்டப்பேரவைக்கு நடந்தே சென்றார். இதன் பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்ம் வந்தார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். மு.க.ஸ்டாலினுடன் வந்த எம்.எல்.ஏ.க்கள், பன்னீர்செல்வத்துடன் வந்த எம்.எல்.ஏ.க்கள் சிரித்துக் கொண்டு கை குலுக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் பேரவைக்குள் சென்றனர்.

assembly_1_13165.jpg

காலை 11 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது. அப்போது, செம்மலை பேசியபோது அமளி ஏற்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர், "பொறுமையாக இருங்கள். நான் சபையை அமைதியாக நடத்த விரும்புகிறேன்" என்றார். இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அமைதி காத்தனர். பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் தொடங்கி வைத்தார். அப்போது, எதிரணி உறுப்பினர்கள், 'வாக்கெடுப்பு நடத்தக்கூடாது' என்று கோரி அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கிடையே, சபாநாயகர், எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்கள் நிற்கும்படி கேட்டுக் கொண்டார். அப்போது, ஒவ்வொரு பிளாக்காக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து, ஆதரவு, ஆதரவு என்று கூறினர். மூன்றாவது பிளாக்கில் 33 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் எழுந்து நிற்க முயன்றபோது, அவையில் கடும் அமளி ஏற்பட்டது. "வாக்கெடுப்பு நடத்தக்கூடாது. நாங்கள் இன்னும் பேசவேயில்லை. எப்படி வாக்கெடுப்பு நடத்த அனுமதிப்பது" என்று கூறி எதிரணியினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, தி.மு.க உறுப்பினர் பூங்கோதை, மேஜையின் மீது ஏறி கோஷமிட்டார்.

அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "உறுப்பினர்கள் அனைவரும் தொகுதி மக்களை சந்திக்க வேண்டும். 19 நாள்கள் ஏன், எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்திருந்தார்கள்" என்று பேசினார். இதற்கு சபாநாயகர், "எந்த எம்.எல்.ஏ.க்களும் அடைத்து வைக்கப்படவில்லை. அதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது. நீங்கள் ஆதரவா, எதிர்ப்பா என்பதை மட்டும் இங்கே தெரிவியுங்கள்" என்றார். "இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம். வாக்கெடுப்பை ஒத்திவையுங்கள். இன்னொரு நாள் வாக்கெடுப்பு நடத்துங்கள்" என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

assembly_police_13405.jpg

அடுத்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி பேசுகையில், "வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். ஆனால், சபாநாயகர், "இது என்னுடைய முடிவு. இன்று காலையில் எடுத்த முடிவு கிடையாது. இரண்டு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அப்போது யாரும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. வாக்கெடுப்பில் கலந்து கொள்கிறோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றுதான் கூறினீர்கள். இப்போது, வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று சொல்கிறீர்கள். இது என்னோட முடிவு" என்றார்.

ஆனாலும், "ரகசிய வாக்கெடுப்புத்தான் நடத்த வேண்டும்" என்று எதிரணியினர் கூறினர். இந்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததால் அவையில் அமளி நிலவியது. இதனிடையே, எடடிப்பாடிக்கு ஐந்து உறுப்பினர்கள்தான் ஆதரவு தேவை. ஆனால், எதிரணியில் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரை முற்றுகையிட்டு நாற்காலி மற்றும் மைக்கை உடைத்தனர். அப்போது, நேரம் 12 மணியாக இருந்தது. கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை அவர் அவையில் இருக்க மாட்டார். இந்த சூழ்நிலையில், அவையை ஒரு மணி வரை ஒத்திவைப்பதாக கூறிவிட்டு சபாநாயகர் அவையில் இருந்து வெளியேறினார். ஒன்று, இரண்டு, மூன்று பிளாக் எண்ணிக்கை முடிவடைந்துவிட்டது. இன்னும் நான்கு, ஐந்து பிளாக் எண்ணிக்கை மட்டும்தான் முடியவேண்டும். அதற்குள் அவை ஒத்திவைக்கப்பட்டது. நான்கு, ஐந்து பிளாக்குகள் பன்னீர் ஆதவுர மற்றும் திமுக உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், தலைமைச் செயலகத்துக்கு துணை ராணுப்படை, அதிவிரைப்படையினர் எட்டு வாகனங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தலைமைச் செயலக வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/81240-tense-situation-in-todays-assembly-as-opposition-parties-indulge-in-violence.html

Link to comment
Share on other sites

Stalin, DMK MLAs stage dharna in Tamil Nadu assembly

சட்டசபைக்குள் தர்ணா செய்த ஸ்டாலின் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

 

 

சட்டப்பேரவையிலிருந்து குண்டுக்கட்டாக மு.க.ஸ்டாலின் வெளியேற்றம்

Secratriat

தி.மு.க.-வினர் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் 20 பேர் காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட தி.மு.க.-வினர் சட்டப்பேரவையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வெளியேற்றப்பட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவைக்குச் செல்லும் பாதையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதைத் தொடர்ந்து, அவைக்காவலர்களால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ள அவை 3 மணிக்குக் கூடும் என்று அவைத் தலைவர் தனபால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com/news/tamilnadu/81245-dmk-candidates-stage-dharna-protest-inside-assembly.html

Link to comment
Share on other sites

M.K.Stalin headed towards Governor Vidyasagar Rao

ஷூ காலால் உதைத்தனர்.. ஆளுநரிடம் புகார் அளிக்க கிழிந்த சட்டையுடன் கிளம்பினார் ஸ்டாலின்

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/m-k-stalin-headed-towards-governor-vidyasagar-rao-274516.html

M.K.Stalin headed towards Governor Vidyasagar Rao

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரவுடிகளை.. கோமாளிச் சினிமாவின் நடிகர் நடிகைகள்.. தமக்கான ஆட்சியாளர்களாக.. பிரதிநிதிகளாக தெரிவு செய்யும் எம் தமிழ் வாக்காளர்களின் அறிவீனம் தான்.. இந்தக் காட்சிகளுக்கான உண்மையான  பின்னணி. இதில் எந்த வியப்புமே இல்லை. tw_blush:

Link to comment
Share on other sites

மு.க.ஸ்டாலின் மீது தாக்குதல்! சட்டை கிழிக்கப்பட்டதால் பரபரப்பு

assembly_stalin_attack_1_15352.jpg

சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அவைக் காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தனது சட்டையை காவலர்கள் கிழித்து, ஷூவால் மிதித்தனர் என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஈடுபட்டார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, அவை நடவடிக்கையை பிற்பகல் 3 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். இதனிடையே, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி சபாநாயகரை, மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

assembly_stalin_attack_1a_15079.jpg

இந்த கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதையடுத்து, பேரவையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். சட்டை கிழிந்தபடி மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார்.

இதைத் தொடர்ந்து, பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "வலுக்கட்டாயமாக தூக்கிய காவலர்கள் எங்களை  பலமாக அடித்து துன்புறுத்தினர். கூடுதல் கமிஷனர் சேஷசாய் உத்தரவின்பேரில் காவலர்கள் எங்களை குண்டுக்கட்டாக தூக்கி ஷூ காலால் மிதித்து, எனது சட்டைகளை கிழித்தனர்.

assembly_stalin_attack_15409.jpg

தற்போதைய நிலையில் வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். சட்டப்பேரவையில் நடந்தவற்றை ஆளுநரிடம் முறையிட உள்ளோம். சபாநாயகர் வேண்மென்றே தனது சட்டையை கிழித்துக் கொண்டார். 500 காவலர்களை அவைக்குள் அனுப்பி திமுகவினரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்" என்றார்.

பின்னர், தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின், காரில் ஏறினார். செய்தியாளர்கள் அவரை, சார், சார் என்று கூப்பிட காரில் இருந்து இறங்கிய மு.க.ஸ்டாலின் சாலையில் நின்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டை கிழிந்த நிலையில் இருந்த மு.க.ஸ்டாலினை புகைப்பட கலைஞர்கள் படம் எடுத்தனர். இதையடுத்து, ஆளுநரை சந்திக்க மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81253-we-have-been-attacked-violently-says-stalin.html

Link to comment
Share on other sites

பழனிசாமிக்கு வாக்களித்த எம்.எல்.ஏக்களே..! பன்னீர்செல்வம் ஆவேசம்

9_16028.jpg

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், "சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்களை ஜனநாயக மரபுக்கு விரோதமாக வெளியேற்றியுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக வாக்களிக்கும்போது மிகப்பெரிய மாற்றம் வரும். தர்மம் வெல்ல இன்னும் காலம் இருக்கிறது. நாங்கள் சபாநாயகரை சந்தித்து இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தோம்.

ஒன்று, 15 நாள்களாக அடைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களை தொகுதிக்கு அனுப்பிவையுங்கள். ஒரு வாரம் கழித்து சட்டப்பேரவை கூட்டுங்கள் என்றோம். வாக்காளர்களை சந்தித்துவிட்டு மீண்டும் வந்த பிறகு சட்டப்பேரவையை கூட்டுங்கள். அதன் பிறகு அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும் என்றோம்.

இரண்டாவது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றோம். எவ்வளவோ வலியுறுத்தினோம். சபாநாயகர் ஒத்துக்கொள்ளவில்லை.

ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு எதிராக வாக்களித்துள்ள எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்கும் போது கேள்வி கேட்கப்படும். எந்த குடும்பத்தை ஜெயலலிதா ஒதுக்கிவைத்தாரோ, இந்த குடும்பத்தின் ஆட்சி தற்போது வெற்றி பெற்றுள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமையும்" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81258-o-panneerselvam-slams-mlas-who-have-voted-in-favour-of-edappadi-palanisamy.html

Link to comment
Share on other sites

அமளிதுமளி சட்டமன்றம்... 1988-லும் 2017-லும் என்ன நடந்தது?

 

ஜெயலலிதா

மிழகத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று கூடியிருந்த சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். சட்டசபையில் இன்று நடந்த களேபரம்போல் அன்று நடந்தது என்ன? அங்கு, அன்றும் இன்றும் நடந்த சம்பவங்கள் இதோ... 

சட்டசபை அன்று...

சட்டமன்றம்

*அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் காலத்தில் ஜெயலலிதா மற்றும் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் இருந்த கோஷ்டிப்பூசல், 24-12-1987-க்குப் பிறகு... எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் உச்சகட்டமடைந்தது.  

*தற்காலிக முதல்வராக பதவியேற்ற நெடுஞ்செழியன், 28-12-1987 அன்று முதலமைச்சர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

*31-12-1987 அன்று, அ.தி.மு.க-வில் உள்ள பெரும்பான்மை நிர்வாகிகள் வற்புறுத்தலினால்.... முதலமைச்சர் பொறுப்புக்கு, தான் போட்டியிடப்போவதாக எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையார் அறிவித்தார். 

*ஜானகி அம்மையார் சார்பில் கவர்னர் குரானாவிடம் தங்களுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறிஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார் ஆர்.எம்.வீரப்பன்.

*அதிருப்தியில் இருந்த நெடுஞ்செழியன், பன்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் நிர்வாகிகள் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை தேர்வு செய்ததாக அறிவித்தனர். இதை, ஜானகி அணி ஏற்கவில்லை. 

*ஜெயலலிதா அணியில் 29 எம்.எல்.ஏ-க்கள் இடம்பெற்றிருந்தனர்.

*அ.தி.மு.க-வின் 97 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக்கடிதம் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டது.

*தொடர்ந்து ஆட்சியமைக்க ஜானகிக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர் குரானா.

 *இடைக்கால முதல்வர் பதவியை இழந்தார் நெடுஞ்செழியன்.

 *6-1-1988 அன்று ஜானகி மந்திரிசபை பதவியேற்பு. 25-ம் தேதி கவர்னர் உரையும் அதைத் தொடர்ந்து  28-ம் தேதி ஜானகி அணி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என கவர்னர் அறிவிப்பு செய்தார்.

*முன்னதாக தனது அணியின் 29 எம்.எல்.ஏ-க்கள் ஜானகி அணிக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அவர்களை ரகசிய இடத்தில் தங்கவைத்தனர் ஜெயலலிதா அணியினர். கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தனக்குச் சொந்தமான மில்லில் எம்.எல்.ஏ-க்களை அடைத்துவைத்திருப்பதாக புகார் எழுந்தது.

*இதற்கிடையே டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது அணியை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார் ஜெயலலிதா. ஆனால் ஒன்றுபட்ட அ.தி.மு.க-வுக்கே மட்டும் தாங்கள் ஆதரவு அளிக்கமுடியும் என ராஜீவ் மறுப்பு.

சட்டமன்றம்*28-ம் தேதி இரு கோஷ்டிகளும் பலப்பரீட்சைக்குத் தயாராகி சட்டசபைக்கு வந்தனர். பரபரப்பான எதிர்பார்ப்புகளுக்கிடையில் சபாநாயகர் கூட்டத்தைத் தொடங்கினார். அப்போது இரு தரப்பிலும் பேச்சு வலுத்து அடிதடியானது. சட்டசபையில் அதுவரையில்லாத அளவுக்கு கலவரம் மூண்டது. இருதரப்பிலும் மோசமாக மோதிக்கொண்டனர். ஒலிபெருக்கிகள் ஆயுதங்களாகின. எதிர்பாராதவிதமாக சோடாபாட்டில்கள் வீசப்பட்டன. ஒரு போர்க்களம் போன்று சட்டசபை காணப்பட்டது. 

*அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் போர்வையில் வந்த சில அடியாட்கள் பெரும் வன்முறையை அங்கு நிகழ்த்தினர். இருதரப்பிலும் எம்.எல்.ஏ-க்கள் பலருக்கும் மண்டை உடைந்தது. இருக்கைகளில் ஆங்காங்கே ரத்தம் வழிந்துகிடந்தது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் கட்சித்தாவிய 33 எம்.எல்.ஏ-க்களை பதவிநீக்கம் செய்வதாகவும் ஜானகி அம்மையார் கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறுவதாகவும் தலையில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தபடி அறிவித்தார் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன்.

*ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சட்டமன்றத்தில் நடந்த கலவரத்தின் எதிரொலியாக ஜானகி அம்மையாரை மந்திரிசபையை  30-1-1988  அன்று மத்திய அரசு கலைத்தது. தமிழகத்தில் கவர்னர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. 

*தொடர்ந்து ஏறத்தாழ ஒரு வருடம் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி தொடர்ந்தது.

தமிழக சட்டசபை

சட்டசபை இன்று....

*அ.தி.மு.க-வில் தற்போது ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றோர் அணியும் மோதி வருகின்றன. இந்த நிலையில், சசிகலா தரப்பு கட்டாயப்படுத்தி வாங்கிய பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்ததால் ஆளுநரிடம் ஆட்சியமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

*சசிகலாவும், பன்னீர்செல்வமும் தனித்தனியாக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். அதன் பிறகு சசிகலா அணியில் இருந்த சில எம்.எல்.ஏ-க்களும், எம்.பி-க்களும் பன்னீர்செல்வம் அணிக்குத் தாவினர். இதனால், தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை... கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அடைத்துவைத்தார்.

*அந்தக் கட்சி நிர்வாகிகளால் தற்காலிகப் பொதுச் செயலாளாராக நியமிக்கப்பட்டிருந்த சசிகலா, ''நான் முதல்வராவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது'' என்று சபதமிட்டார். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். 

*இதனையடுத்து, சசிகலா, சிறைக்குச் செல்வதற்கு முன் கூவத்தூரிலிருந்த எம்.எல்.ஏ-க்களிடம் கலந்தாலோசித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டதுடன், அவரை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கைவைக்கப்பட்டது.

*தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் கவர்னர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து... ஆட்சியமைக்க உரிமை கோரினார், எடப்பாடி பழனிசாமி. அதனால், அவருக்கு ஆளுநர் ஆதரவளித்ததுடன் கடந்த 16-ம் தேதி பதவிப் பிரமாணமும் செய்துவைத்தார். அவருடன், அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதனையடுத்து, ''15 நாட்களுக்குள் தங்களுடைய பெரும்பான்மையைக் காட்ட வேண்டும்'' என்று எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் உத்தரவிட்டார். 

*இந்த நிலையில், பெரும்பான்மையைக் காட்டுவதற்காக சட்டசபைக்கு இன்று (18-2-17) எம்.எல்.ஏ-க்கள் (அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ்) சென்றனர். இறந்துபோனதால் ஜெயலலிதா, உடல்நலமில்லாததால் கருணாநிதி, யாருக்கும் வாக்களிக்க விரும்பாததால் அருண்குமார் போன்றவர்களைத் தவிர, மற்ற எம்.எல்.ஏ-க்கள் இதில் கலந்துகொண்டனர்.

*காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தி.மு.க., காங்கிரஸ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். 

*இதனால், சபாநாயகர் தனபாலை தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சூழ்ந்துகொண்டு அமளியில் ஈடுபட்டனர். மைக், இருக்கை முதலியன உடைக்கப்பட்டன. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மிகவும் அமைதியாகவே இருந்தனர். 

*சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டதால், சபாநாயகர் வாக்கெடுப்பை 1 மணிக்கு ஒத்திவைத்தார். அந்த நேரத்தில் சபை ஊழியர் ஒருவர் மயக்கமடைந்தால், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

*பின்னர் 1 மணிக்குக் கூடிய வாக்கெடுப்பில், சபாநாயகர் தனபால்... அமளியில் ஈடுபட்ட தி.மு.க-வினரை வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், அவர்கள் கலைந்துசெல்லாமல் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர்... வாக்கெடுப்பை 3 மணிக்கு ஒத்திவைத்தார்.

*பின்னர் 3 மணிக்குக் கூடிய வாக்கெடுப்பில், தி.மு.க-வினர் சட்டசபையிலிருந்து வெளியேறாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவைக் காவலர்களுக்கும், தி.மு.க-வினருக்கும் மோதல் ஏற்பட்டது. தி.மு.க-வினரை வெளியேற்றியபோது... எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், ''தன் சட்டையைக் காவலர்கள் கிழித்துவிட்டதாக''த் தெரிவித்தார்.

*தி.மு.க வெளியேறிய பின் நடந்த வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக தன் பெரும்பான்மையை நிரூபித்தார் எடப்பாடி பழனிசாமி. பன்னீர்செல்வத்துக்கு 11 வாக்குகள் கிடைத்தது.

http://www.vikatan.com/news/coverstory/81255-similarities-between-1988-and-2017-trust-vote.html

Link to comment
Share on other sites

'எங்களை நொறுக்கிவிட்டு அவர்கள் நொறுக்குத்தீனி சாப்பிட்டார்கள்!'  -கொதிக்கும் தி.மு.க பெண் எம்.எல்.ஏ. #FloorTest #OPSvsEPS #VikatanExclusive

ஸ்டாலின்

மிழக சட்டமன்றத்தில் நடந்து முடிந்த காட்சிகளை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் தமிழக மக்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நடத்திய போராட்டங்கள் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ' பன்னீர்செல்வம் அதிர்ச்சியை கொடுப்பார் என எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது தி.மு.க. இப்படியொரு ட்விஸ்ட்டை எடப்பாடி தரப்பில் எதிர்பார்க்கவில்லை' என்கின்றனர் அரசியல் பிரமுகர்கள். 

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், ' 15 நாளில் பெரும்பான்மையை நிரூபியுங்கள்' என உத்தரவிட்டார். ' கால அவகாசம் எடுத்துக் கொண்டால் நிலைமை கைமீறிப் போய்விடும்' என்பதை உணர்ந்து, ஒரேநாள் இடைவெளியில், 'பெரும்பான்மையை இன்று நிரூபிப்பதாக' அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இன்று காலை கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏக்கள் மிகுந்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். ' சபைக்குள் பெரும் கலவரம் உருவாக இருக்கிறது. அனைவரும் அமைதியாக இருங்கள்' என முன்கூட்டியே அ.தி.மு.க எம்.எல்.ஏக்களிடம் எச்சரிக்கை செய்துவிட்டனர் அ.தி.மு.க சீனியர்கள். காலையில் சபை கூடியவுடன், ' ரகசிய வாக்கெடுப்பு நடத்துங்கள்' என்றுகூறி அமளியில் ஈடுபட்டனர் தி.மு.க உறுப்பினர்கள். இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதிக்காததால், அவரது இருக்கைக்கு முன்பு கூடி கூச்சல் எழுப்பினர் தி.மு.க எம்.எல்.ஏக்கள். ஒருகட்டத்தில், மைக் உடைப்பு, தாள் கிழிப்பி, சேர் சேதம் என நிலைமை மோசமடைந்தது. ' எனக்கு நடந்த கொடுமைகளை நான் யாரிடம் சொல்ல?' என வேதனையை வெளிப்படுத்தினார் சபாநாயகர். தற்போது ஆளுநரை சந்தித்து முறையிட்டுவிட்டு, காந்தி சிலை முன்பு உண்ணாவிரதத்தில் அமர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். 

பூங்கோதை ஆலடி அருணா'சட்டசபையில் என்ன நடந்தது?' என தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணாவிடம் பேசினோம். 

" எங்களுடைய ஒரே கோரிக்கை, 'ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்பதுதான். எம்.எல்.ஏக்களைக் கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்திருந்ததால், 'ஒரு வாரம் கழித்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும்' என சபாநாயகரிடம் தெரிவித்தோம். இதையே பன்னீர்செல்வமும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினார்கள். 'ரகசிய வாக்கெடுப்பு என்பது விதியில் இல்லை' என சபாநாயகர் தெரிவித்தார். அப்படியானால், ' வாக்கெடுப்பை ஒருவாரம் தள்ளி வைக்க உங்களால் முடியும். அனைவரும் சென்று மக்களைச் சந்தித்துவிட்டு வரட்டும். அதன்பிறகு வாக்கெடுப்பை நடத்துங்கள்' என்றோம். 'ஒரு குற்றவாளியால் நியமனம் செய்யப்பட்ட முதல்வரை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன' என எங்கள் கருத்தை முன்வைத்தோம். மூன்று மணி வரையில் அவையை ஒத்திவைத்துவிட்டு, சபைக்குள் நுழைந்தார் சபாநாயகர். அடுத்த நொடியே, எங்களை அவையில் இருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார்". 

நீங்கள் ஏன் சட்டசபை பென்ச்சில் ஏறி நின்றீர்கள்? 

"எங்கள் கட்சித் தலைமை முன்வைத்த கோரிக்கைகளை நானும் வலியுறுத்தினேன். நாங்கள் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அவர் எப்போதுமே நடுநிலையாக நடந்து கொண்டதில்லை. அ.தி.மு.க உறுப்பினர் போலவே நடந்து கொள்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பென்ச்சில் ஏறி நின்றேன்". 

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டபோது என்ன நடந்தது? 

"சபை மீண்டும் கூடியதும் ஆயிரக்கணக்கான போலீஸார் எங்களைச் சூழ்ந்துவிட்டனர். ஐ.பெரியசாமி அண்ணன், துரைமுருகன் அண்ணன் போன்றோருக்கு எல்லாம் என்ன நடந்தது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் கட்சியின் செயல் தலைவருக்கு அடி விழுந்தது. எம்.எல்.ஏ ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்திலும், அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு நொறுக்குத் தீனிகள் கொண்டு வந்து கொடுத்தார்கள். 'அவர்கள் கலைந்துவிடக் கூடாது' என்பதில் அ.தி.மு.க அமைச்சர்கள் உறுதியாக இருந்தார்கள்". 

சபையில் பன்னீர்செல்வம் ஏன் அமைதியாக இருந்தார்? 

"அதைப் பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். இது ஒரு குற்றவாளி அரசு. எங்களுக்கு பன்னீர்செல்வமும் எடப்பாடியும் ஒன்றுதான். அ.தி.மு.க ஆட்சி அகல வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்". 

சபையில் நீங்கள் நடந்து கொண்டதைப் பார்த்தால், முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு அவைக்குள் நுழைந்தீர்களா? 

" அப்படி இல்லை. ஒரு வாரம் கழித்து வாக்கெடுப்பு நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதை அவர்கள் செய்யாததால், எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தோம்". 

http://www.vikatan.com/news/tamilnadu/81263-they-bet-us-up-and-then-had-snacks-with-out-any-remorse-slams-dmk-mla-poongothai-aladi-aruna.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.