Jump to content

வடக்கு,தெற்கு அடிப்படைவாதிகளிடம் எழுதப்படாத ஒப்பந்தம் காணப்படுகிறது


Recommended Posts

வடக்கு,தெற்கு அடிப்படைவாதிகளிடம் எழுதப்படாத ஒப்பந்தம் காணப்படுகிறது

p10-8264c84349a21ae624697dc32624ff0ee393cdce.jpg

 

இனவாதத்திற்கு ஒருபோதும் இடமில்லை என்கிறார் மனோ 

 (ஆர்.ராம்)

வடக்­கிலும் தெற்­கிலும் உள்ள  அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்­கி­டையில் எழு­தப்­ப­டாத ஒப்­பந்தம் காணப்ப­டு­வ­தாக குற்றம் சாட்­டிய தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ­க­ணேசன் இன­  வா­தத்­திற்கு ஒரு­போதும் இட­  ம­ளிக்­கப்­போ­வதில்லை என்றும் உறு­தி­படத் தெரி­வித்­துள்ளார். 

 தேசிய சக­வாழ்வை மேம்­ப­டுத்தும் வகையில் 'இலங்­கையர் எம் அடை­யாளம் பல இனங்கள் எம் சக்தி' எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான தேசிய வேலைத்­திட்­டத்தின் ஓரங்­க­மாக கொழும்பு பிர­தான பஸ் தரிப்­பி­டத்தில் இலங்கைப் போக்­கு­வ­ரத்துச் சேவைக்குச்  சொந்­த­மான பஸ்­வண்­டி­க­ளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு  நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்­றது. 

 இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்ட அமைச்சர் மனோ­க­ணேசன் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில், தற்­போது நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் வெவ்­வேறு பதா­கை­களை தாங்­கி­ய­வாறு மீண்டும் குழப்­பங்­களை உரு­வாக்­கு­வ­தற்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­படும் இவ்­வே­ளையில் தேசிய வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்­தி­ருக்­கின்றோம். 

'இலங்­கையர் எம் அடை­யாளம் பல இனங்கள் எம் சக்தி' என்ற தொனிப்­பொ­ருளில் அநத வேலைத்­திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வேலைத்­திட்­டத்தின் மூலம் 'நாம் இலங்­கையர்' என்ற மன­நிலை அனை­வ­ரி­டத்­திலும் தோற்­று­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த வேலைத்­திட்­டத்தின் மூல­மாக இன, மத, மொழி ரீதி­யான வேறு­பா­டு­களை மக்­க­ளி­டத்­தி­லி­ருந்து களை­வ­தற்­கான விழிப்­பூட்­டல்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. ஆதன் முதற்­கட்­ட­மாக கொழும்­பி­லி­ருந்து அந்த பணி ஆரம்­ப­மா­கின்­றது. கொழும்­பி­லி­ருந்து வடக்­கிற்கும், கிழக்­கிற்கும், மத்­திக்கும், வட­மத்­திற்கும் உரக்கச் சொல்லும் செயற்­பாடு ஆரம்­ப­மா­கின்­றது. எதிர்­கா­லத்தை உறு­திப்­ப­டுத்தும் வேலைத்­திட்­ட­மா­கவும் இது காணப்­ப­டு­கின்­றது.

 எமது நாட்டில் இது­வ­ரையில் 19 இனங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அதே­போன்று சிங்­களம் தமிழ் என்­பன அரச கரும மொழி­க­ளாக காணப்­ப­டு­கின்­றன. ஆங்­கிலம் தொடர்­பாடும் மொழி­யாக காணப்­ப­டு­கின்­றது. மதங்கள் நான்கு காணப்­ப­டு­கின்­றன. இதனை யாரும் புறந்­த­மு­டி­யாது என்ற செய்­தியை நாடு பூரா­கவும் அனுப்ப ஆரம்­பித்­துள்ளோம். இந்த நாட்டில் எங்கும் ஒரு இன, மத, மொழியை மட்டும் முன்­னி­லைப்­ப­டுத்தி பேச முடி­யாது.

 அவ்­வாறு பேசிய காலத்­தை­யெல்லாம் நாம் கடந்து வந்­து­விட்டோம். ஆகவே நாட்டில் மீண்டும் பிரி­வி­னை­வா­தத்தை, அடிப்­ப­டை­வா­தத்தை, இன­வா­தத்தை, பயங்­க­ர­வா­தத்தை தோற்­று­விப்­ப­தற்கு எவ­ருக்கும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. இந்த நாட்டில் அடிப்­படை வாதிகள் இருக்­கின்­றார்கள். வடக்­கிலும் இருக்­கின்­றார்கள். தெற்­கிலும் இருக்­கின்­றார்கள். அடிப்­படை வாதிகள் வேண்­டி­ய­ளவு இனத்­தொ­டர்­பு­களைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

வடக்கில் உள்ள அடிப்­ப­டை­வ­திகள் வாய்­தி­றந்தால் தெற்கு அடிப்­படை வாதி­க­ளுக்கு மதிப்­பெண்கள் கிடைக்­கின்­றன. தேற்கில் உள்ள அடிப்­படை வாதிகள் வாய்­தி­றந்தால் வடக்கில் உள்ள அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு மதிப்­பெண்கள் கிடைக்­கின்­றன. இவர்­க­ளுக்­கி­டையில் எழு­தப்­ப­டாத ஒப்­பந்தம் காணப்­ப­டு­கின்­றது. இந்த சூட்­சு­மத்தை நாம் விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

 ஜன­நா­யக மர­பு­க­ளுக்கு உட்­பட்ட அர­சி­யலின் ஊடாக இந்த நாட்டின் நிரு­வாத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்கு அனை­வரும் உரித்­து­டை­ய­வர்கள். ஜனா­தி­ப­தி­யாக, பிர­த­ம­ராக, அமைச்­சர்­க­ளாக, பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளாக வரு­வ­தற்கு இலங்­கை­யர்கள் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்கும் அனைவருமே உரித்துடையவர்கள். அதனை யாரும் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என்றார்.

 அமைச்சர் பௌசி

 இன, மத, மொழியால் வேறுபட்டு நிற்காது அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் புரிந்துணர்வுடன் ஒற்றுமைப்படவேண்டும். அதுவே எதிர்கால சந்தியினருக்கும் சுபீட்சமான காலத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். ஆகவே அனைவரும் இலங்கையர்களாக ஒருமித்து ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-18#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.