Jump to content

போராட்டத்தின் தாற்பரியத்தை புரிந்துகொள்ளுங்கள்


Recommended Posts

போராட்டத்தின் தாற்பரியத்தை புரிந்துகொள்ளுங்கள்

 

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் கேப்­பாப்­பு­லவு மக்கள் அப­க­ரிக்கப்­பட்ட தமது காணி­களை மீளப் பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு வலி­யுறுத்தி போராட்­டங்­களை நடத்திவரு­கின்­ற­ போ­திலும் அர­சாங்கம் அது தொடர்பில் அக்­கறை கொள்­வ­தாக தெரி­ய­வில்லை. குறிப்­பாக இந்த மக்கள் தமது நிலங்­களை மீட்­டுத்­த­ரு­மாறு வலி­யு­றுத்தி தொடர் போராட்­டங்­களை நடத்­தி­வ­ரு­கின்­ற ­போதும் அது தொடர்பில் அரசாங்கம் பாரிய கவ­னத்தை செலுத்­து­வதைக் காண­மு­டி­ய­வில்லை.

மக்கள் தொடர்ச்­சி­யாக இரவு – பகல் பாராது வெயி­லிலும் பனி­யிலும் தவித்­துக்­கொண்டு போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­போ­திலும் பிரச்­சி­னையைத் தீர்க்­க­வேண்­டிய அர­சாங்கம் அதனைக் கவ­னத்தில் கொள்­ளாது அலட்­சி­யப்­போக்கைக் கடைப்­பி­டித்து வரு­கி­றது. விமா­னப்­ப­டை­யினர் வசம் இருக்­கின்ற தமது காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி கேப்­பாப்­பு­லவு மக்கள் கடந்த 17 தினங்­க­ளாக தொடர் போராட்­டத்தை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இந்தப் போராட்­டத்­துக்கு நாட்டின் பல்­வேறு பகு­தி­களி­லு­முள்ள தரப்­பினர் தொடர்ச்­சி­யாக ஆத­ரவு தெரி­வித்து வரு­கின்­றனர். சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் கேப்­பாப்­பு­லவு மக்­களின் போராட்­டத்­துக்கு முழு­மை­யான ஆத­ரவை தெரி­வித்­துள்­ள­துடன், போராட்டம் நடை­பெறும் இடத்­துக்கு நேர­டி­யாக சென்று அந்த மக்­க­ளுக்கு தமது ஆத­ரவுக்கரத்தை நீட்­டி­யுள்­ளனர். அது­மட்­டு­மன்றி, யாழ். மற்றும் கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும் கேப்­பாப்­பு­லவு மக்­களின் காணி மீட்புப் போராட்­டத்­துக்கு தமது முழு­மை­யான ஆத­ரவைத் தெரி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை தொடர் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்கள் தமது காணிகள் மீளக் கைய­ளிக்­கப்­ப­டும்­வரை போராட்­டத்தை இடை ­நிறுத்தப் போவ­தில்லை என்றும் தமது கால்கள் காணி­களை தொடும்­வரை போராட்டம் தொட­ரு­மென்றும் அறி­வித்­துள்­ளனர். முல்­லைத்­தீவு மாவட்ட செய­லாளர் ஜனா­தி­ப­தி­யி­னதும் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­க­ளி­னதும் உறு­தி­மொ­ழியை கேப்­பாப்­பு­லவு மக்­க­ளுக்கு அறியத்தந்த­போ­திலும் அந்த மக்கள் போராட்­டத்தை கைவி­டு­வ­தற்கு மறுத்­து­விட்­டனர். அது­மட்­டு­மன்றி தமது போராட்­டத்தின் நியா­ய­மான கார­ணத்தை கேப்­பாப்­பு­லவு மக்கள் தொடர்ச்­சி­யாக வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

எனினும் மக்­களின் போராட்­டங்கள் இந்­த­ளவு தூரம் தீவி­ர­மடைந்தும் வலுப்­பெற்றும் வரு­கின்ற நிலை­யிலும் அர­சாங்­க­மா­னது அது தொடர்பில் அதிக அக்­கறை காட்­டாமல் ஏனோ தானோ என்று கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. விசே­ட­மாக, காணி­களை உட­ன­டி­யாக விடு­விக்க முடி­யா­தென்றும் படிப்­ப­டி­யா­கவே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட முடி­யு­மெ­னவும் அரசாங்கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் தொடர்ச்­சி­யாகக் கூறிவரு­வதை காணமுடி­கி­றது.

அந்­த­வ­கையில் கேப்­பாப்­பு­லவு மக்கள் தொடர் போராட்­ட­மொன்றை நடத்திவரு­வ­தாக அறி­கின்றோம். ஆனால் அவர்கள் ஒரு ­வி­ட­யத்தை புரிந்­து­கொள்ள வேண்டும். அர­சாங்கம் காணி­களை தொடர்ச்­சி­யாக விடு­வித்து வரு­கின்­றது. தொடர்ந்தும் காணி­களை விடு­விப்போம். இந்­நி­லையில் அர­சாங்கம் காணி­களை விடு­விக்கும் என்று தெரிந்­து­கொண்டே மக்கள் போராட்டம் நடத்­திக்­கொண்­டி­ருப்­பதை நாங்கள் காண்­கின்றோம்.

இந்நிலையில் அர­சாங்கம் காணி­களை விடு­விக்க படிப்­ப­டி­யாக நட­வ­டிக்கை எடுக்கும். ஒரே தட­வையில் இவற்றை செய்­து­விட முடி­யாது. அர­சாங்கம் இது தொடர்பில் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

மக்கள் இரவு–பக­லாக போராட்டம் நடத்­து­கின்­றனர் என்­ப­தற்­காக ஒரே இரவில் காணி­களை மீள­ வ­ழங்­கி­விட முடி­யாது. அதற்­கென்று ஒரு முறைமை காணப்­படு­கின்­றது. அதற்­கேற்­பவே காணி­களை விடு­விக்க முடியும். நாங்கள் காணி­களை விடு­வித்து வரு­கின்றோம். உரிய ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு மக்­களின் காணி­களை விடு­விப்போம். எனினும் அவ­ச­ர­மாக எத­னையும் செய்­து­விட முடி­யாது. கடந்த ஆட்சிக் காலத்தில் போராட்­டங்­களை நடத்­து­வ­தற்கு அஞ்­சிக்­கொண்­டி­ருந்த மக்கள் இன்று நல்­லாட்சி அர­சாங்­கத்தில் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர் எனவும் அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இது இவ்­வா­றி­ருக்க, மக்கள் காணிகள் தொடர்­பான ஆவ­ணங்­களை உரிய முறை யில் கைய­ளித்தால் காணி­களை ஒப்­ப­டைக்க முடி­யு­மென கடந்த வாரம் தெரி­வித்­தி­ருந்த இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ரொஷான் சென­வி­ரத்ன, தற்­போது இந்தக் காணிகள் வன­வளத் திணைக்­க­ளத்­துக்குச் சொந்­த­மா­னது என மீண்டும் தெரி­வித்­தி­ருக்­கிறார். இது தொடர்பில் நேற்று முன்­தினம் அர­சாங்­கத்தின் சார்பில் கருத்து வெளி­யிட்ட இரா­ணுவப் பேச்­சாளர், விரைவில் இது தொடர்பில் சாத­க­மான தீர்வு எட்­டப்­ப­டு­மென தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்தன் பின்னர் தற்­போ­து­வரை மௌன­மாக இருந்த இந்த மக்கள் இப்­போது திடீ­ரென காணி­களை கோரி போராட்டம் நடத்­து­கின்­றனர். இந்த விட­யத்தில் நிலை­மையை புரிந்­து­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இந்தக் காணிகள் வன­வளத் திணைக்­க­ளத்­திற்கு சொந்­த­மா­னவை என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது. ஆனால் மக்கள் தமது காணிகள் என உரிமை கோரு­கின்­றனர்.

இந்­நி­லையில் இது­தொ­டர்பில் விமா­னப்­ப­டை­யி­ன­ருடன் தொடர்ச்­சி­யாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு வரு­கி­றது. விமா­னப்­ப­டை­யி­னரும் இது­தொ­டர்பில் ஆராய்ந்து வரு­கின்­றனர். விரைவில் இந்த மக்­க­ளுக்கு நல்­ல­தொரு தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்­பு­கிறோம் எனவும் இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ரொஷான் சென­வி­ரத்ன சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார். இவ்­வாறு கேப்­பாப்­பு­லவு மக்­களின் போராட்­ட­மா­னது தொடர்ந்து தீர்வு எட்­டப்­ப­டாத நிலை­யி­லேயே வாக்­கு­று­தி­க­ளுக்குள் மட்டும் அடங்­கி­ய­தாக நீடிக்­கி­றது. இந்­நி­லையில் மக்­களும் தமது காணிகள் கிடைக்­கும்­வரை போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்லை என தெரி­வித்­துள்­ள­மை­யா­னது நிலை­மையை மேலும் பார­தூ­ர­மான நிலைக்கு க்கொண்­டு­செல்­லு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

தமது காணி­களை விடு­விக்­கு­மாறு வலி­யு­றுத்தி மக்கள் சுழற்சி முறை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இவ்­வாறு வடக்கில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது காணி­களை மீள ­வ­ழங்கக் கோரி தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை முன்­னெ­டுக்க ஆரம்­பித்­துள்­ளனர். இந்த இடத்தில் அர­சாங்­க­மா­னது மக்கள் இந்த ஆட்­சி­யி­லேயே போராட்­டங்­களை நடத்­து­வ­தா­கவும் கடந்த ஆட்சிக்காலத்தில் போராட்­டங்­களை நடத்­த­வில்லை எனவும் தெரி­விக்­கின்­றது. இந்த இடத்தில் அர­சாங்கம் ஒரு விட­யத்தை நன்­றாக புரிந்­து­கொள்ள வேண்டும்.

அதா­வது, யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் அர­சாங்கம் தமது பிரச்­சி­னை­களை தீர்க்­கு­மென்றும் அப­க­ரிக்­கப்­பட்ட தமது காணி­களை மீள வழங்­கு­மென்றும் மக்கள் தொடர்ச்­சி­யாக காத்­துக்­கொண்­டி­ருந்­தனர். எனினும் 6 மற்றும் 7 என வரு­டங்கள் கடந்­து­கொண்­டி­ருந்­த­னவே தவிர மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை என்­ப­துடன் காணி­களும் மீள­வ­ழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் பொறுமை இழந்­துள்ள மக்கள் தற்­போது போராட்­டங்­களை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றனர். எனவே அர­சாங்­க­மா­னது மக்கள் இந்த ஆட்­சியில் தான் போராட்­டங்­களை மேற்­கொள்­வ­தா­கவும் கடந்த ஆட்­சியில் மௌன­மாக இருந்­த­தா­கவும் கூறிக்­கொண்டு மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்­காமல் இழுத்­த­டிப்­பது சிறந்­த­தல்ல.

இது தொடர்பில் அர­சாங்கம் மக்­களின் நியா­யத்தின் பக்கம் நின்று சிந்­திக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். மக்கள் தமது பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டா­விடின் அல்­லது தமது காணிகள் மீள கையளிக்­கப்­ப­டா­விடின் ஏதோ­வொரு கட்­டத்தில் போராட்­டங்­களை கையி­லெ­டுப்­பார்கள். அவற்றை தவிர்க்க முடியாது. அந்தவகையில் தற்போது வரை இந்த மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததன் காரணமாகவே மக்கள் போராட்டத்தை மேற்கொள்வதற்கு ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் அம்மக்களின் பிரச்சினைகளை உண்மையாகப் புரிந்துகொண்டு செயற்படவேண்டியது அரசாங்கத்தின் கடமை யாகும்.

ஜெனிவா கூட்டத்தொடரும் நெருங்கிவருகின்ற நிலையில் இவ்வாறு மக்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் போது வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பது அரசாங்கத்துக்கு ஆரோக்கியமாக அமையாது. எனவே விரைந்து கேப்பாப்புலவு மக்களின் காணிகளை மீள வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மக்களின் போராட்டத்துக்கு நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஆதரவுக் கரங்கள் நீட்டப்பட்டு வருவதை அரசாங்கம் புரிந்து கொண்டு இந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதை சுட்டிக்காட்ட விரும்பு கின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-17#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.