Sign in to follow this  
நவீனன்

திருநாவுக்கரசரை விளாசும் இளங்கோவன்!

Recommended Posts

திருநாவுக்கரசரை விளாசும் இளங்கோவன்!

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை திருநாவுக்கரசர் மறுத்தார். 'வாக்களிப்பது குறித்து நான் எதுவும் கூறவில்லை. அதுகுறித்து கட்சி மேலிடம்தான் முடிவு எடுக்கும்'. என்று திருநாவுக்கரசர் கூறினார்.

Elangovan

இந்நிலையில் திருநாவுக்கரசரின் கருத்துக்கு, இளங்கோவன் அவரை கடுமையாக சாடியுள்ளார்.  இதுகுறித்து கூறிய இளங்கோவன், 'திருநாவுக்கரசர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். திமுகவின் நிலையே காங்கிரஸின் நிலை என ராகுல்காந்தி ஏற்கெனவே கூறியிருந்தார். திருநாவுக்கரசர் வேண்டுமென்றே திரித்துக் கூறுகிறார். அவர் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். அவர்  விரைவில் அதிமுகவில் இணைந்து விடுவார். நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகதான் வாக்களிப்பார்கள்' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81189-elangovan-slams-thirunavukkarasar.html

Share this post


Link to post
Share on other sites

சும்மா கோயில் கோயிலாக ஏறி தேவாரம் திருவாகசம் பாடிக்கொண்டு இருந்த திருநாவுக்கரசர் தேவையில்லாமல் அரசியலுக்குள் நுழைந்தால் இப்படித்தான் பேச்சு வாங்க வேண்டி வரும் :117_eyes:

Share this post


Link to post
Share on other sites

திருநாவுக்கரசரின் எடப்பாடி ஆதரவு மன நிலை.. நடராஜன் தரப்பினருடனான சமூக ரீதியிலான நட்பு காரணமா?

 

சென்னை: அதிமுக விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே சசிகலா தரப்புக்கு சாதகமாகவே பேசி நடந்து வருகிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். இதற்கு நடராஜன் தரப்பினருடனான சமூக ரீதியிலான நட்புதான் காரணமா என்ற கேள்விகளை பலரும் எழுப்பத் தொடங்கி விட்டனர்.

காரணம் ஆரம்பத்திலிருந்தே சசிகலா தரப்பைச் சேர்ந்தவர் போலவே திருநாவுக்கரசர் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சிக்காரர் போலவே அவர் செயல்படவில்லை என்ற பெரும் குற்றச்சாட்டை இளங்கோவன் போன்றோர் வலுவாக வைத்து வருகினறனர். அதற்கு விளக்கம் கூட கொடுப்பதில்லை திருநாவுக்கரசர்.

The reasons behind Thirunavukkarasar's pro Edappadi govt

 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சசிகலா தரப்புடன் படு நெருக்கமானார் திருநாவுக்கரசர். அப்போதே அதை இளங்கோவன் விமர்சித்தார். பழைய அதிமுககாரராக மாறி விட்டாரா திருநாவுக்கரசர் என்றும் கேள்வி எழுப்பினார். திருநாவுக்கரசரும் கூட கிட்டத்தட்ட சசிகலா தரப்புக்கு உதவிகள் செய்வது போலவே நடந்து வந்தார்.

 

தற்போது கூட கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களை கொண்டு போய் அடைத்து வைத்திருப்பதும் கூட திருநாவுக்கரசர் கொடுத்த ஐடியாதான் என்றும் சிலர் சொல்கிறார்கள். முன்பு ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாக அதிமுக உடைந்தபோதும் திருநாவுக்கரசர் மற்றும் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர்தான் ஜெ. ஆதரவு எம்.எல்.ஏக்களை பஸ்களில் ஏற்றிப் பதுக்கி வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.

சசிகலா சிறைக்குப் போன பின்னரும் கூட திருநாவுக்கரசரின் நிலைப்பாடு மாறவில்லை. தற்போது அவர் எடப்பாடி அரசைக் காக்க தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதனால்தான் இன்று கூடிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி அரசுக்கு எதிரான முடிவை அவர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

திருநாவுக்கரசர் தொடர்ந்து இதுபோல சசிகலா தரப்புக்கு ஆதரவாக செயல்பட, நடராஜன்- சசிகலாவுடனான சமூக ரீதியிலான நட்புதான் காரணமா.. அதனால்தான் இப்படி எடப்பாடி அணிக்கு சாதகமான மன நிலையில் அவர் உள்ளாரா என்று பொதுமக்கள் உள்பட பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர்.


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/the-reasons-behind-thirunavukkarasar-s-pro-edappadi-govt-274427.html

Share this post


Link to post
Share on other sites

முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்: முகுல் வாஸ்னிக் அறிவிப்பு

சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார்.

 
 
முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்: முகுல் வாஸ்னிக் அறிவிப்பு
 
சென்னை:
 
தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ள 
நிலையில் அவருக்கு எதிராக வாக்களிக்க தி.மு.க முடிவு செய்தது.
 
இருப்பினும், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நாளை தனது முடிவை அறிவிக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் 
திருநாவுக்கரசர் நேற்று தெரிவித்து இருந்தார். இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கல் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று சிறிது குழப்பம் 
 
ஏற்பட்டது.
 
இந்நிலையில், சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் 
 
எம்.எல்.ஏ.க்கள்  வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். துணைத் தலைவர் 
 
ராகுல்காந்தியின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியாவதாக கூறப்படுகிறது
 
திருநாவுக்கரசர் சசிகலாவுக்கு ஆதரவாகவே தொடர்ந்து பேசி வருகிறார் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் 
 
இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
 
இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களிக்க மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் 
 
தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/18002423/1069007/Congress-MLAs-will-vote-against-CM-Palanisami-Mukul.vpf

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this