Jump to content

உலகின் 8 ஆவது கண்டமாக புதிய கண்டம் கண்டுபிடிப்பு


Recommended Posts

உலகின் 8 ஆவது கண்டமாக புதிய கண்டம் கண்டுபிடிப்பு

 

 

நியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகின் 8 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் 7 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு சமுத்திரத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் புதிய நிலப் பகுதியொன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை 8 ஆவது புதிய கண்டமாகக் கருத முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

zealandia.jpg

ஸீலான்டியா என அழைக்கப்படும் அந்தக் கண்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் நியூஸிலாந்துக்கு அருகில் கடலுக்கு மேலாக வெளித் தோன்றிய நிலையில் காணப்படுகிறது. அதன் ஏனைய 94 சதவீதமான பகுதி கடலுக்குள் மூழ்கிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தக் கண்டப் பகுதி உயரமான மலைகளைக் கொண்டமைந்துள்ளது எனவும் அதன் பரப்பளவு 5 மில்லியன் சதுர கிலோமீற்றர் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவுஸ்திரேலிய கண்டத்துடன் அதன் பரப்பளவை ஒப்பிடுகையில் மூன்றில் இரண்டு மடங்கு அளவானதாகும். 

http://www.virakesari.lk/article/16764

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்கடா உளறுறாங்க...

தண்ணி இல்லாது போனால் உலகம் முழுவதுமே ஒரு கண்டம் தான்.... அதாவது தண்ணிக்கு கிழே, நிலப் பகுதி தான்.

இதில புதுசா என்ன கண்டு பிடித்தார்கள்?

Link to comment
Share on other sites

ஸீலாண்டியா எட்டாவது கண்டமாக மாறுமா?

 

ஸீலாண்டியா என்று அழைக்கப்படும் புதிய கண்டம் ஒன்றை கண்டுபிடித்திருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சியாலாண்டியாபடத்தின் காப்புரிமைAFP

நியூசிலாந்து மற்றும் நியூ கலிடோனியா தீவுக் கூட்டத்தோடு, இந்த கண்டத்தின் பெரும்பாலான நிலப்பகுதி நீருக்கடியில் உள்ளது.

இது ஒரு கண்டத்திற்கான எல்லா பண்புகளையும் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் எண்ணினாலும், அதை சுற்றியுள்ள பகுதியில் மேலே, தனித்தன்மையான நிலவியலோடு இது அமைந்துள்ளது.

சியாலாண்டியாபடத்தின் காப்புரிமைESA/NASA

கண்டங்களை முறையாக அங்கீகரிக்கின்ற விஞ்ஞானிகள் அமைப்பு என்று எதுவும் இல்லை.

எனவே, ஸீலாண்டியாவை ஒரு கண்டமாக ஏற்றுகொள்ளுவதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கலாம்.

http://www.bbc.com/tamil/global-39005148

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை...  200 வருடத்துக்கு முன்பு,
கொலம்பஸ் கண்டு பிடித்ததை... நம்பிய  நீங்கள், 
இதனையும்... நம்பித் தான் ஆக வேண்டும். 

சரித்திரம் தெரியாதவர்களுக்கு....... அமெரிக்காவில், ஏற்கெனவே.. செவ்விந்தியர்கள்  வாழ்ந்து வந்தவர்கள்.
அவுஸ்திரேயாவை கண்டு பிடித்தவன், இங்கிலாந்து காரன்.
இலங்கையை கண்டு பிடித்தவன்... விஜயன் என்றால், இதுகும்... உண்மைதான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவை...  200 வருடத்துக்கு முன்பு,
கொலம்பஸ் கண்டு பிடித்ததை... நம்பிய  நீங்கள், 
இதனையும்... நம்பித் தான் ஆக வேண்டும். 

சரித்திரம் தெரியாதவர்களுக்கு....... அமெரிக்காவில், ஏற்கெனவே.. செவ்விந்தியர்கள்  வாழ்ந்து வந்தவர்கள்.
அவுஸ்திரேயாவை கண்டு பிடித்தவன், இங்கிலாந்து காரன்.
இலங்கையை கண்டு பிடித்தவன்... விஜயன் என்றால், இதுகும்... உண்மைதான். :)

 

அமெரிக்காவை...  200 வருடத்துக்கு முன்பு,......500 வருடத்துக்கு முன்பு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அமெரிக்காவை...  200 வருடத்துக்கு முன்பு,......500 வருடத்துக்கு முன்பு.....

நான், படிக்கும் காலத்தில்... 200 வருசம் என்று தான்,  
வாத்தியார் சொல்லித் தந்தவர். அதை.... மாற்ரிலால், பெயில் போட்டு விடுவார்.
200 என்றே... இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலவேளைகளில்  கண்டுபிடித்தார் என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருந்தாது. ஏற்கனவே இருந்த ஒன்றை உதாரணமாக அமெரிக்கா கண்டம் அவுஸ்திரேலியா கண்டம் என்பன இருந்தன அவற்றில் மனிதர்களும் வசித்திருந்தார்கள். அமெரிக்காவை கொலம்பசும் அவுஸ்திரேலியாவை கப்டன் கூக்கும் கண்டார்கள் தாங்கள் கண்டதை வெளியுலகத்திற்கு சொன்னார்கள் என்று தான் கொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/02/2017 at 10:56 PM, தமிழ் சிறி said:

நான், படிக்கும் காலத்தில்... 200 வருசம் என்று தான்,  
வாத்தியார் சொல்லித் தந்தவர். அதை.... மாற்ரிலால், பெயில் போட்டு விடுவார்.
200 என்றே... இருக்கட்டும்.

 

அமேரிக்க கண்டத்தினை கண்டறிந்தவர் கொலம்பஸ் 1492ம் ஆண்டு.

அமரிக்கா உருவானது 1776ம் ஆண்டு. 

வாத்தியார் சரியாத்தான் சொல்லி இருப்பார். சிரியர் பிராக்குப் பாத்திருப்பார். கலவன் பள்ளிக்கூடமோ என்னமோ என்று யோசிக்கிறேன்.

Link to comment
Share on other sites

10 hours ago, Nathamuni said:

அமேரிக்க கண்டத்தினை கண்டறிந்தவர் கொலம்பஸ் 1492ம் ஆண்டு.

திரிக்கு சம்பந்தமில்லாததுதான்

என்றோ வாசித்தது - நினைவுக்கு வந்தது 

சிரிப்பதா இல்லை சிந்திப்பதா - முடிவு உங்களிடம். 

 

When asked by an anthropologist

“what the Indians called America before the white man came”

An Indian said simply, 'Ours.'

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.