• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

ஹம்பாந்தோட்டை துறைமுகதிட்டம் இரு நாடுகளுக்கும் முக்கியமானது ; சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

Recommended Posts

ஹம்பாந்தோட்டை துறைமுகதிட்டம் இரு நாடுகளுக்கும் முக்கியமானது ; சீன வெளிவிவகார அமைச்சின்  பேச்சாளர்  

 

 

ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், இலங்கைக்கும் சீனாவுக்கும் முக்கியமான ஒன்று என சீன வெளிவிவகார அமைச்சின்  பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.

W020161011684576921017.jpg

பீஜிங்கில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே சீன வெளிவிவகார அமைச்சின்  பேச்சாளர்  ஜெங் சுவாங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

 ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், இலங்கைக்கும் சீனாவுக்கும் முக்கியமானஒன்று. இது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை செழிப்படையச் செய்யும் நோக்கத்தைக் கொண்டது. சந்தை மற்றும் வர்த்தகக்கொள்கைகளுக்கு ஏற்ப, சமத்துவம் மற்றும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் திட்டத்தை முன்னகர்த்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

அரசியல் மற்றும் சட்டரீதியான தடைகளை இலங்கை அகற்றும் வரையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1.1பில்லியன் டொலர் முதலீடுசெய்யும் திட்டத்தை தாமதிக்க சீனா முடிவுசெய்துள்ளதாக வெளியான செய்தி குறித்தே சீனவெளிவிவகார அமைச்சின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16770

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this