• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

கேசட் கடை முதல் கைதி எண் 9234 வரை... சசிகலா வாழ்க்கை சொல்லும் பாடம்!

Recommended Posts

கேசட் கடை முதல் கைதி எண் 9234 வரை... சசிகலா வாழ்க்கை சொல்லும் பாடம்!

தன் வாழ்நாளுக்குள் உலகத்தையே வெல்ல ஆசைப்பட்ட அலெக்ஸாண்டர், இறந்த பிறகு அவர் எப்படி அடக்கம் செய்யப்பட்டார் என்பது உலகத்துக்கே தெரியும். இப்போது, மாவீரன் என்ற பெயர்தான் நிலைத்து நிற்கிறது. 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ இல்லையென்றால்  துயரம்தான் நம்மைத் தேடி வந்து ஆட்கொள்ளும். அதற்குச் சமீபத்திய உதாரணம் சசிகலா.

சுதாகரன் திருமணத்தில் சசிகலா

சசிகலாவின் தந்தை ஒரு சாதாரண கம்பவுண்டர். திருத்துறைப்பூண்டியில் வெறும் 7 ஏக்கர் நிலம் மட்டுமே சொந்தமாக இருந்தது. இன்று தமிழகத்தில் தொட்ட இடமெல்லாம் சசியினுடையதாக இருக்கிறது. அவற்றில் பல மிரட்டி வாங்கப்பட்டவை.  சாதாரண மனிதரில் இருந்து கங்கை அமரன் போன்ற பிரபலங்களும் நிலத்தைப் பறிகொடுத்து விட்டுப் புலம்பிய சம்பவங்கள் ஊரறிந்தவை.

ஜெயலலிதாவின் சொத்துக்களை மட்டும் பார்த்தாலே 100 கோடிக்கு மேல் தேறும். போயஸ் கார்டன் 10 கிரவுண்ட் வீடு. இதன் சந்தை மதிப்பு ரூ.43 கோடியே 96 லட்சம்.போயஸ் கார்டன் 1.5 கிரவுண்ட் வீடு - மதிப்பு ரூ.7 கோடியே 83 லட்சம். சென்னை மந்தவெளியில் 1,206 சதுர அடி வணிக வளாகத்தின் மதிப்பு ரூ.4 கோடியே 32 லட்சம்.  ஹைதராபாத் வீடு ரூ.5 கோடியே 37 லட்சம். செய்யூர் விவசாய நிலம் 3.43 ஏக்கரின் மதிப்பு ரூ. 34 லட்சம். ஆந்திரா ஜிடிமேட்லாவில் 14.50 ஏக்கர் விவசாய நிலத்தின் மதிப்பு ரூ 14 கோடியே 44 லட்சம். இது தவிர சென்னை பார்சன் மேனர் வணிக வளாகம். 

சசிகலாவுடன் ஜெயலலிதா

சொத்துக் குவிப்பு வழக்கின் தொடர்பில் ஜெயலலிதாவின் 21,280 கிராம் தங்கம் (2,660 பவுன்), 1,250 கிலோ வெள்ளி ஆபரணங்கள், ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 10,500 உயர் ரகப் புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் ஆகியவையும் உண்டு. 

ஒரு காலத்தில் சென்னை  நகரின் முக்கிய நகைக் கடையாக விளங்கிய பாலு ஜுவல்லரியை நினைவிருக்கிறதா? வளர்ப்பு மகன் திருமணத்துக்காக இந்த நிறுவனத்தில் இருந்துதான் நகைகள் வாங்கப்பட்டன. பணம் செட்டில் செய்யப்படவில்லை. அந்த ஜுவல்லரி நிறுவனம் அழிந்தும் போனது. அந்த நகைகளை அணிந்துதான் வளர்ப்பு மகன் திருமணத்தில் ஒய்யார பவனி வந்தனர். இனிமேல் அந்த நகைகளை அணியத்தான் மனசு வருமா? 

சசிகலா

தமிழ்நாட்டிலேயே வெயில் அடித்தாலும் குளிரும் பகுதி - கோத்தகிரி. ஆங்கிலேயர்கள்கூட உதகையை விட கோத்தகிரியைத்தான் அதிகமாக விரும்புவார்கள். அப்படி ஒரு இதமான காலநிலை உள்ள கொடநாடு  பங்களாவில்தான் சசிகலா ஓய்வெடுப்பார். கோடை காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இனிமேல் கொடநாடு ஓய்வுக்கு பரோல் கிடைக்குமா?.

போயஸ் தோட்டத்தில் நினைத்த நேரத்தில் நினைத்ததைச் செய்ய ஆட்கள், பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீட்டைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீஸ் பாதுகாப்பு. இதுமட்டும் அப்படியே இருக்கிறது. ஆம்.. சிறையிலும், சுற்றி போலீஸ் பாதுகாப்புதான். 

போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவின் காரில் பின் அமர்ந்து பவனிவந்தவர், ஜெ மறைவுக்குப் பிறகு அந்த சொகுசுக்காரைத்தான் பயன்படுத்தினார். கர்நாடகாவில் கார் பவனி சாத்தியமே இல்லை. 

நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பின்படி 31 நிறுவனங்களில் சசிகலா, ஜெயலலிதாவின் பினாமியாகச் செயல்பட்டுள்ளார். ஜெ பார்ம் ஹவுஸ் முதல் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், ஜெயா டி.வி. என அனைத்திலும் ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள்தான் பங்குதாரர்கள். ஒரே நாளில் 10  போலி நிறுவனங்கள்கூடத் தொடங்கப்பட்டுள்ளன. 

சசிகலா ஜெயலலிதா

ஆரம்பத்தில் வீடியோ கேசட் கடை வைத்திருந்தவர் சசிகலா. இப்போது டாஸ்மாக்குக்கு மது சப்ளை செய்யும் மிடாஸ் நிறுவனத்தின் பங்குதாரர். அதன் வருட டர்ன் ஓவர் 11 ஆயிரம் கோடி என்கிறார்கள். மது விற்பனையில் தமிழகத்தில் முன்னணியில் நிற்கும் நிறுவனம் இது.  

இந்த வழக்கைப் பொறுத்தவரை, நீதிமன்றம் சசிகலாவிடம் காட்டிய கடுமை பலருக்கும் வியப்பை அளித்திருக்கலாம். சரண் அடைய 4 வாரம் கேட்டார்; பின்னர் 2 வாரம் கேட்டார். ஆனால் சசிகலாவின் கோரிக்கையை நீதிமன்றம் அடியோடு மறுத்து விட்டது. ஏனென்றால், குற்றங்கள் நிகழ்த்தப்பட்ட விதம், தீட்டப்பட்ட சதித்திட்டம் அப்படி! சிறையிலும் சசிகலா கேட்ட எந்த ஒரு சலுகையும் தரப்படவில்லை என்றால் குற்றவாளியின் தன்மையை அறிந்து கொள்ளுங்கள். வீட்டு உணவைக் கேட்டதற்குக்கூட நீதிபதிகள், 'சிறை உணவு நீரிழிவு நோய்க்கு உகந்தது' எனச் சொல்லாதது மட்டும்தான் குறை. 

இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியின் பொதுச்செயலாளர், ஆயிரம் கோடி சொத்து, ஏக்கர் கணக்கில் நிலம், ஒரே நாளில் பத்து நிறுவனங்களைத் தொடங்கும் அளவுக்குச் செல்வாக்கு,  எண்ணிலடங்கா அடியாட்கள் - இப்படி எண்ணிக்கையிலேயே வாழ்க்கையை ஓட்டிய சசிகலா, இப்போது  பரப்பன அஹ்ரகார சிறையில் மெழுகுவத்தி உருட்டப் போகிறார். அதற்காக அவருக்குச் சம்பளமாக நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் தரப்பட இருக்கிறது. அப்படி 30 நாட்களுக்கு மெழுகுவத்தி உருட்டினால், மாதம் 1,500 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதையும் பணமாகத் தரமாட்டார்கள். அந்தத் தொகைக்கு ஈடாக  கூப்பன் வழங்கப்படும். அந்தக் கூப்பனை வைத்து, சிறையில் உள்ள கேன்டீனில் தனக்கு வேண்டியவற்றை சசிகலா ஆசை தீர வாங்கிச் சாப்பிட மட்டும்தான் முடியும். 

கைதி எண் 9234 சசிகலா, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வேலை செய்துதான் ஆக வேண்டும். சம்பளத்தை அவர் பெற்றுத்தான் ஆக வேண்டும். பணி வேண்டாம்; பணம் வேண்டாம் என்றும் சொல்ல முடியாது. சொத்து மதிப்பைக் கணக்கிடவே முடியாத சசிகலா, இப்போது கம்பியோடு சேர்த்து தனது மாதச் சம்பளம் 1,500 ரூபாயையும் எண்ணப் போகிறார். 

இந்திய நீதித்துறையின் இந்தச் சாட்டையடித் தீர்ப்பு, ஊழல் செய்த, செய்கிற, செய்யப் போகிற அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.  

http://www.vikatan.com/news/tamilnadu/81125-from-video-cassette-shop-to-prisoner-no-9234--sasikalas-life-lesson.html

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this