Jump to content

பிப்.17-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

Recommended Posts

பிப்.17-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

கோப்புப் படம்.| க.ஸ்ரீபரத்.
கோப்புப் படம்.| க.ஸ்ரீபரத்.
 
தமிழக முதல்வராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடத்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து பிற 30 அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆளுநர் அவர்களுக்கு ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு திருப்பங்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) அரங்கேறி வருகின்றன. தமிழக அரசியலின் இன்றைய அதிர்வுகள் குறித்த செய்திகளை அறிய இந்தப் பக்கத்தை தொகுப்பு.

11.40 pm:

11.22 am: நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்கஅதிமுக எம்எம்ஏ நட்ராஜ் முடிவு செய்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

11. 15 am: "பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்ற பேச்சுக்கே இடமில்லை. நாளை ஒற்றுமையாக இங்கிருந்து ஒன்றாக செல்வோம். அதற்காகவே கூவத்தூரில் தங்கியிருக்கிறோம்" அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மனியன்

11.00 am: தற்போது ஆட்சி அமைந்துள்ள அரசு முதல்வரின் கட்டுபாட்டில் இருக்காது. நாளைவரை இந்த அரசு தொடருமா என்பதே சந்தேகமே என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

10.45 am: நாளை( சனிக்கிழமை) நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் எம் எல் ஏக்கள் பங்கேற்க வேண்டும் என்றும், திமுக ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும். அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கொறடா விஜய தாரணி தெரிவித்துள்ளார்.

10.40 am: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இன்று(சனிக்கிழமை) மாலை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.30am: திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்17ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9548460.ece?homepage=true

Link to comment
Share on other sites

சபாநாயகருடன், பன்னீர்செல்வம் அணியினர் திடீர் சந்திப்பு!

pandiyarajan_long_1_12136.jpg

சபாநாயகர் தனபாலை, பன்னீர்செல்வம் அணியினர் இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததோடு, பதினைந்து நாள்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் பிப்ரவரி 18ம் தேதி (நாளை) நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதின் நேற்று அறிவித்தார். முதல்வர் பழனிசாமி நாளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று திடீரென சந்தித்து பேசினர்.

தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை இன்று எம்.எல்.ஏ.க்கள் மாஃபா பாண்டியன், செம்மலை மற்றும் பொன்னையன் ஆகியோர் சந்தித்து பேசினர். சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/81116-opanneerselvam-camp-members-met-assembly-speaker.html

Link to comment
Share on other sites

பிப்.17-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

கோப்புப் படம்.| க.ஸ்ரீபரத்.
கோப்புப் படம்.| க.ஸ்ரீபரத்.
 
தமிழக முதல்வராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடத்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து பிற 30 அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆளுநர் அவர்களுக்கு ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு திருப்பங்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு (தமிழக அரசியலின் இன்றைய அதிர்வுகள் குறித்த செய்திகளை அறிய அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

13. 20 pm: கூவத்துரில் இன்று மாலை 3 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

13.15 pm: நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஓ. பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜனும் பங்கேற்குமாறும் கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

13.05 pm: சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் அணியினர் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக மனு ஒன்றையும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12.56 pm: "நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுப்போம்" என்று முன்னாள் அமைச்சரும், ஓ. பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளருமான மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

12.48 pm: நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பில் ஓ. பன்னீர்செல்வத்துடன், முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், மாஃபா பாண்டியராஜன் உடன் சென்றுள்ளனர்.

12.30 pm: சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். விவரம்> சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவிப்பு

12.00 pm: தமிழக முதல்வர் செயல்பாட்டை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

11.40 am: எடப்பாடி பழனிசாமி முதல்வரானதை கண்டித்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் முன்பு, ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

79tam_3134351a.jpg

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் | படம்: எஸ்.குரு பிரசாத்

11.22 am: நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்கஅதிமுக எம்எம்ஏ நட்ராஜ் முடிவு செய்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்17ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9548460.ece?homepage=true

Link to comment
Share on other sites

பிப்.17-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

ஆர்.நட்ராஜ் | கோப்புப் படம்
ஆர்.நட்ராஜ் | கோப்புப் படம்
 
ஓ.பி.எஸ். அணிக்கே ஆதரவு:

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ் அறிவிப்பு

தமிழக முதல்வராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடத்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து பிற 30 அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆளுநர் அவர்களுக்கு ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு திருப்பங்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு (தமிழக அரசியலின் இன்றைய அதிர்வுகள் குறித்த செய்திகளை அறிய அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

14.43 pm: சட்டப் பேரவை அவை முன்னவராக அதிமுகவின் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலிலதா ஆட்சியில் சட்டப் பேரவை அவை முன்னவராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

13.45 pm: "மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதே எனது கடமை. மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதான் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களின் கடமை. அந்த அடிப்படையில் எனது ஆதரவு, ஓ.பன்னீர்செல்வம் அணிக்குதான். இதை எதிரொலிக்கும் வகையில்தான் சட்டப்பேரவை வாக்கெடுப்பில் எனது வாக்கை செலுத்துவேன்" என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ் கூறியுள்ளார்.

மயிலாப்பூர் தொகுதி மக்களின் கருத்தை அறிந்து நல்ல முடிவெடுப்பேன் என்று அத்தொகுதியின் எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இப்போது அவர் தன் முடிவை வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இவரது ஆதரவு யாருக்கு என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர். நட்ராஜின் ஆதரவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 10 ஆக (ஓ. பன்னீர்செல்வத்தை தவிர்த்து) அதிகரித்துள்ளது. இதுவரை 12 எம்பிக்கள் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்17ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9548460.ece?homepage=true

Link to comment
Share on other sites

5.30 pm: சென்னை அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

5.25 pm: கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

5.17 pm: தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறும் நிலையில், சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

5.08 pm: சசிகலாவை நீக்க மதுசூதனனுக்கு அதிகாரம் கிடையாது என்று அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

4.43 pm: "திமுக மட்டுமே திராவிடக் கட்சி. அதிமுக திராவிடக் கட்சியின் வழித் தோன்றல் கிடையாது. தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் நடத்தினால் திமுகவே வெற்றி பெறும்" என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

4.13 pm: "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றி வைத்திருந்தார். அந்த நிலைமையை காவல்துறையினரே மாற்றிவிட வேண்டாம் என்று அன்போடு காவல்துறையினரை வேண்டிக்கொள்கிறேன்'' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விவரம்> அமைதிப்பூங்காவான தமிழகத்தை காவல்துறையினரே மாற்றிவிட வேண்டாம்: ஓபிஎஸ் கோரிக்கை

3.33 pm: "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தற்காலிக அரசாகவும், பினாமி அரசாகவும் செயல்படக் கூடாது" என்று விடுதலை சிறுதைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்17ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9548460.ece?homepage=true

Link to comment
Share on other sites

6.25: சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க திமுகவும், காங்கிரஸும் முடிவு செய்துள்ளன.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்17ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9548460.ece?homepage=true

எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க திமுக, காங்கிரஸ் முடிவு!

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.  இந்நிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு, அக்கட்சி செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

DMK

இந்தக் கூட்டத்தில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்து கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது. இன்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/81173-dmk-congress-decides-to-vote-against-edappadi-palanisamy.html

Link to comment
Share on other sites

பிப்.17-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

ஓபிஎஸ் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் | கோப்புப் படம்: ம.பிரபு
ஓபிஎஸ் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் | கோப்புப் படம்: ம.பிரபு
 
தமிழக முதல்வராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடத்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து பிற 30 அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆளுநர் அவர்களுக்கு ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு திருப்பங்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு (தமிழக அரசியலின் இன்றைய அதிர்வுகள் குறித்த செய்திகளை அறிய அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

8.50 pm: அதிமுக எம்எல்ஏக்கள் நல்ல முடிவெடுக்க வேண்டும்: ஓபிஎஸ் பேட்டி

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளார்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ''தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெறக் கூடாது என்பதற்காக உடல்நிலையைக் கூட பாராமல் ஜெயலலிதா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்குத்தான். அவரது எண்ணங்கள் நிறைவேற அதிமுக எம்எல்ஏக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும்'' என்றார்.

7.30 pm ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்தது கட்சியின் விதிகளுக்குப் புறம்பானது. அவர் அதிமுகவில் செய்த நியமனங்கள் செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் புகாருக்கு வரும் 28-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் விவரம்: சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

7.20 pm திருநாவுக்கரசர் வேண்டுமென்றே திரித்துக் கூறுகிறார். அவர் விரைவில் அதிமுகவில் சேருவதாகத் தகவல் வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். அதன் விவரம்: சசிகலாவுக்கு ஆதரவாகவே திருநாவுக்கரசர் பேசி வருகிறார்: ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

7:10 pm: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காங். வாக்களிக்கும் என சமூகவலைதளத்தில் வெளியான தகவல் தவறானது. காங்கிரஸ் தலைமை அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் - திருநாவுக்கரசர்

thirunavukarasar_3127306a.jpg

6:45 pm: ரகசிய வாக்கெடுப்பு நடந்தால் திமுக வரவேற்கும்: ஸ்டாலின்

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், ''அதிமுக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாக்களிப்போம். ரகசிய வாக்கெடுப்பு நடந்தால் திமுக வரவேற்கும்'' என்றார். அதன் விவரம்: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுகவின் 89 உறுப்பினர்களும் வாக்களிக்க முடிவு: ஸ்டாலின்

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்17ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9548460.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.