Sign in to follow this  
Followers 0
நவீனன்

ஆஸ்திரேலியா - இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

7 posts in this topic

ஆஸிக்கெதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்குகிறது இலங்கை

 

இலங்கை மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

259082.jpg

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அந்­நாட்டு அணி­யுடன் மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரில் விளை­யா­டு­கி­றது.

இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடை­பெ­று­கின்­றது.

259097.jpg

தென்­னா­பி­ரிக்க அணி­யு­ட­னான தொடரை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பாமல் அங்­கி­ருந்து அவுஸ்­தி­ரே­லியா சென்றடைந்தது இலங்கை அணி.

பெரும் நம்­பிக்­கை­யுடன் இருக்கும் இளம் இலங்கை அணி, அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான இந்தத் தொடரை நிச்­சயம் வெல்­லு­ம் என்ற எதிர்­பார்ப்பு அதி­க­மா­கவே இருக்­கி­றது. 

259097.jpg

காரணம் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, இரு­ப­துக்கு 20 தொடரை மாத்திரம் வென்­றெ­டுத்­தது.

அதேபோல் இலங்கை அணியில் ஒன்றரை வரு­டங்­க­ளுக்குப் பிறகு நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க இணைக்­கப்­பட்­டுள்ளார்.

259083.jpg

அவுஸ்திரேலியாவில் உபுல் தரங்க தலை­மை­யி­லான அணி பயிற்சிப் போட்­டி­யிலும் வெற்­றி­பெற்­றி­ருந்­தது.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை அணி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

259091.jpg

http://www.virakesari.lk/article/16738

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

ஆஸ்திரேலியா - இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

 

 
 

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

 
 
 
 
ஆஸ்திரேலியா - இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது
 
மெல்போர்ன் :

மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள் அனைவரும் தற்போது டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்தியாவுக்கு வந்து விட்டனர். இதனால் இது 2-ம் தர அணியாகவே பார்க்கப்படுகிறது. கேப்டன் ஆரோன் பிஞ்ச், ஜேம்ஸ் பவுல்க்னெர், கம்மின்ஸ் ஆகியோர் மட்டுமே ஓரளவு அனுபவ சாலிகள்.

இருப்பினும் டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், கிளைஞ்சர், பென் டங் போன்ற வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கே உரிய அதிரடி காட்டுவதில் திறமைசாலிகள். இதனால் ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட முடியாது.

இலங்கை அணியில் கேப்டன் மேத்யூஸ் காயத்தால் விலகி விட்டதால் அந்த அணியை உபுல் தரங்கா வழிநடத்துகிறார். காயத்தால் ஒதுங்கி இருந்த ‘யார்க்கர் மன்னன்’ 33 வயதான மலிங்கா ஒரு ஆண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறார். அவரது பந்து வீச்சு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இலங்கை அணியிலும் பெரும்பாலான வீரர்கள் அனுபவமற்றவர்கள் என்றாலும், வெற்றியுடன் தொடங்க முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

தரங்கா கூறுகையில், ‘ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் சமீபத்தில் பிக்பாஷ் 20 ஓவர் போட்டியில் விளையாடியவர்கள். நன்றாகவும் செயல்பட்டு உள்ளனர். இன்னும் அந்த அணி சிறந்ததாக இருப்பதாக நினைக்கிறேன்’ என்றார்.

இவ்விரு அணிகளும் இதுவரை பத்து 20 ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 4-ல் ஆஸ்திரேலியாவும், 6-ல் இலங்கையும் வெற்றி கண்டுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மைக்கேல் கிளைஞ்சர், பென் டங், டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், டிம் பெய்ன், ஆஷ்டன் டர்னர், ஜேம்ஸ் பவுல்க்னெர், பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஆண்ட்ரூ டை.

இலங்கை: நிரோஷன் டிக்வெலா, உபுல் தரங்கா (கேப்டன்), முனவீரா, குணரத்னே, ஸ்ரீவர்த்தனே, கபுகேதரா, சீக்குகே பிரசன்னா, குலசேகரா, உதனா, மலிங்கா, விகும் சஞ்ஜெயா.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/17102508/1068835/Australia-Sri-Lanka-first-Twenty20-cricket-match-going.vpf

Share this post


Link to post
Share on other sites

இலங்கைக்கு 169 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது ஆஸி

 

இலங்கைக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் ஆஸி அணி 6 விக்கட்டுகளை இழந்த 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

ஆஸி அணி சார்பில் அணித்தலைவர் ஆரோன் பின்ச் 43 ஓட்டங்களையும், கிலிங்கர் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் லசித் மலிங்க 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் இலங்கை அணி வெற்றிபெறவேண்டுமாயின் 20 ஓவர்களுக்கு 169 ஓட்டங்களை பெற வேண்டும்.

http://www.virakesari.lk/article/16766

Share this post


Link to post
Share on other sites

இறுதி பந்துவரை தொடர்ந்த பரபரப்பு : திரில் வெற்றிபெற்றது இலங்கை

 

 

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

259165.jpg

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

C43esB0WYAAgO2w__1_.jpg

இலங்கை அணி சார்பில் இருபதுக்கு-20 போட்டியில்  தனது முதலாவது அரைச்சதத்தை அசேல குணரத்ன பூர்த்திசெய்து 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், நீண்ட நாட்களுக்கு பின்னர் அணியில் இணைந்த முனவீர அபாரமாக துடுப்பெடுத்தாடி 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

C43bagZXUAMcB3j.jpg

இந்நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக அசேல குணரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.

3 இருபதுக்கு-20 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது

http://www.virakesari.lk/article/16775

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

 

கடைசி ஓவர்

Inside Melbourne Metro Train Lankan fans

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

நேற்றைய போட்டியின் இறுதி ஓவரில் மலிங்க கூறியது என்ன? : வைரலாகும் காணொளி

 

 

ஆஸி அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் இறுதிப்பந்து ஓவரில் இலங்கை அணியின் லசித் மலிங்க  துடுப்பாட்ட ஆலோசனை வழங்கும் காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

 

இந்த போட்டியில் இலங்கை அணி ஒரு பந்து ஓவருக்கு 6 ஓட்டங்களை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இதன்போது மலிங்க அணி வீர்கள் இருக்கும் இடத்திலிருந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதுமாத்திரிமன்றி போட்டி நிறைவுபெறும்வரை மலிங்க அங்கும் இங்கும் சென்றவாறு கடும் பதற்றத்தில் இருந்தமை காணொளியில் வெளியாகியுள்ளது.

 

http://www.virakesari.lk/article/16797

 
 
1 person likes this

Share this post


Link to post
Share on other sites

மலிங்கவின் காற்ச்சட்டையில் இருந்த மர்மம் :  17 ஆவது ஓவரில் வெளியானது

 

 

 இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில், லசித் மலிங்கவின் காற்ச்சட்டை பையில் வைத்திருந்த மர்மப்பொருள் தொடர்பில் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மலிங்க பந்து வீசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி கையை தனது காற்ச்சட்டை பையில்  வைத்துக்கொண்டிருந்தார்.

அதனை ஒளிப்பதிவு கெமராக்கள் மூலம் பார்வையிட்ட மூன்றாவது நடுவர், கள நடுவருக்கு அறிவித்து மலிங்கவின் காற்ச்சட்டை பையில்  என்ன இருக்கின்றது என்பது தொடர்பில் ஆராயுமாரு கூறினார்.

3D567BE400000578-4235032-Malinga_in_the_

இதனையடுத்து கள நடுவர் ஆராய மலிங்கவின் காற்ச்சட்டை பையில்  இருந்த “கை சூடாக்கியை” மலிங்க எடுத்துக்காட்டினார்.

எம்.சி.ஜி. மைதானத்தில் குளிராக இருந்ததால் குறித்த கை சூடாக்கியை மலிங்க வைத்திருந்தார். இதேவேளை குளிராக இருந்தால் கை சூடாக்கியை வீரர்கள் பயன்படுத்த முடியும் என போட்டி வர்ணனையாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

3D567BED00000578-4235032-Umpires_momenta

3D567BFC00000578-4235032-Malinga_showed_

 
 

http://www.virakesari.lk/article/16805

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0