Sign in to follow this  
நவீனன்

பெங்களூரு செல்லவில்லை; கூவத்தூர் செல்கிறேன்! முதல்வர் பழனிச்சாமி பேட்டி

Recommended Posts

பெங்களூரு செல்லவில்லை; கூவத்தூர் செல்கிறேன்! முதல்வர் பழனிச்சாமி பேட்டி

6_10167.jpg

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்திக்க பெங்களூரு சிறைக்குச் செல்லவில்லை, கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களைச் சந்திக்கச் செல்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே அதிகாரப்போட்டி நடந்துவரும் நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அ.தி.மு.க சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை,  ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆட்சியமைக்க அழைத்ததோடு, பதினைந்து நாள்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் முப்பது பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியில் நீடிப்பாரா என்று தெரிந்துவிடும்.

இதனிடையே, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் இன்றுவரை தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்நிலையில், சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வாழ்த்துப் பெறுவதற்காக முதல்வர் பழனிச்சாமி பெங்களூரு செல்லவிருப்பதாகத் தகவல் வெளியானது.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு முதல்வர் பழனிச்சாமி அளித்த பேட்டியில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்திக்க இன்று பெங்களூரு செல்லவில்லை; கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களைச் சந்திக்கச் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81099--no-plans-to-visit-bengaluru-today-will-go-to-kuvathur-resort--edappadi-palanisamy.html

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this