Sign in to follow this  
நவீனன்

முதல்வர் பழனிசாமி அணியில் இன்னொரு விக்கெட் வீழ்ந்தது!

Recommended Posts

முதல்வர் பழனிசாமி அணியில் இன்னொரு விக்கெட் வீழ்ந்தது!

Natraj

சட்டசபையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் கூறியுள்ளது கட்சித் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே அதிகாரப்போட்டி நடந்து வரும் நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து முதல்வர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். மேலும், பதினைந்து நாள்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வருக்கு, ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களிடம் நேற்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இன்றும் அவர் எம்.எல்.ஏக்களை சந்தித்து பேச உள்ளார். இந்த சூழ்நிலையில், மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர்.நட்ராஜ், பெரும்பான்மை எங்கே இருக்கிறதோ அந்த அணிக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறியிருந்தார். நட்ராஜ் சொன்ன மாதிரி, எடப்பாடி பழனிசாமி அணிக்கே பெருபான்மை இருந்து வருகிறது. இந்நிலையில், பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக எம்.எல்.ஏ நட்ராஜ் இன்று அறிவித்துள்ளார். 'மக்கள் விருப்பத்துக்கு ஏற்றது போல வாக்களிப்பேன். கட்சித் தாவல் சட்டத்தால் எனது எம்.எல்.ஏ பதவி போனானலும் தனக்கு கவலை இல்லை' என்று நட்ராஜ் கூறியுள்ளார்.

நட்ராஜின் எதிர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 124-ல் இருந்து 123-ஆக குறைந்துள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/81101-i-will-vote-against-edappadi-palanisamy-in-floor-testing-says-natraj.html

Share this post


Link to post
Share on other sites

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான முடிவு ஏன்?  நட்ராஜ் பரபரப்பு பேட்டி 

natraj_ips_600_1_12283.jpg

 ஓ.பன்னீர்செல்வமே முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மக்களின் விருப்பப்படியே நாளை நடக்கும் வாக்கெடுப்பில் வாக்களிப்பேன் என்று நட்ராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய இரண்டு அதிகார மையங்கள் உருவாகின. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டசபையில் நாளை நடைபெற உள்ள வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி, மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே முதல்வராக தொடர முடியும். இந்த சூழ்நிலையில் கூவத்தூர் முகாமுக்கு செல்லாமல் மயிலாப்பூர் தொகுதி அலுவலகத்தில் மக்களின் குறைகளைக் கேட்டறியும் பணியில் ஈடுபட்டார் முன்னாள் டி.ஜி.பி.யும், எம்.எல்.ஏ.வுமான நட்ராஜ். அவரை ஓ.பன்னீர்செல்வத்தின் அணியிலிருக்கும் முன்னாள் அமைச்சர் மாஃபா. க.பாண்டியராஜன் சந்தித்து பேசினார். அப்போதே அவர் பன்னீர்செல்வம் அணிக்கு வரவுள்ளதாக தகவல் பரவியது. இதை பாண்டியராஜனும் சூசகமாக உறுதிப்படுத்தினார்.

முதல்வர் பழனிச்சாமி தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நட்ராஜ் அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி:
 
நீங்கள் முதல்வர் எடப்பாடி  பழனிசாமிக்கு எதிராக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வருகிறதே?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான் முதலில் இருந்தே கட்சி இரண்டாக பிளவுப்படக்கூடாது என்று சொல்லி வருகிறேன். அதுவே என்னுடைய விருப்பம். இரண்டு பேரும் இணைய வேண்டும். ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி மக்கள் தங்களின் உணர்வுகளை என்னிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு மதிப்பளிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. 

நீங்கள் நாளை நடக்கும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வீர்களா?

மக்களின் விருப்பம்படியே நான் வாக்களிப்பேன்

மக்கள் என்ன கருத்தை உங்களிடம் தெரிவித்தார்கள்?

பழையபடி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். 

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீங்கள் ஆதரவு என்று சொல்லலாமா?
 
அப்படி நீங்கள்தான் சொல்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் கட்சி இரண்டாக உடையக்கூடாது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நட்ராஜ் வாக்களித்தாலும், அல்லது வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்றாலும் அது ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமான முடிவை ஏற்படுத்த வழிவகுக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 

இதற்கிடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்காத எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை இழப்பார்கள் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எச்சரித்துள்ளார். இதனால் நட்ராஜ் எம்.எல்ஏ. எடுக்கும் முடிவுக்கு பிறகு அவர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக சசிகலா அணியினர் தெரிவித்துள்ளனர்.  

http://www.vikatan.com/news/tamilnadu/81105-i-will-vote-against-palanisamy-says-mylapore-mla-natraj.html

Share this post


Link to post
Share on other sites

பன்னீர்செல்வத்துக்குத்தான் என் வாக்கு! எம்.எல்.ஏ நட்ராஜ் அதிகாரபூர்வ அறிவிப்பு

மயிலாப்பூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ நட்ராஜ், நம்பிக்கை வாக்கெடுப்பில்  எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால், பன்னீர்செல்வத்துக்கும் வாக்களிக்க மாட்டேன் என்று கூறிவந்த நிலையில், அவரின் நிலைப்பாட்டை இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவுபடுத்தி உள்ளார்.

Mylapore Natraj

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நட்ராஜ், ’அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். என் தொகுதி மக்களால்தான் இங்கு நிற்கிறேன். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன். ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். எனவே, ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் என் வாக்கு’ என்றார்.  ஓபிஎஸ்க்கு வாக்களிப்பேன் என்று நட்ராஜ் கூறியுள்ள நிலையில், ஓபிஎஸ் அணியில் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/81124-mylapore-mla-natraj-extends-his-support-to-opaneerselvam.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this