Jump to content

ஓ.பன்னீர்செல்வம் வீடு அருகே பதற்றம்!


Recommended Posts

ஓ.பன்னீர்செல்வம் வீடு அருகே பதற்றம்!

காயமடைந்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்

சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றதால் சிறிது நேரம் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று பதவி ஏற்றத்தைத் தொடர்ந்து, சென்னை கீனின்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் கூடியிருந்த, அவரது ஆதரவாளர்களை, அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மிரட்டியதாகவும், கற்களை வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவரும், போலீசார் ஒருவரும் படுகாயம் அடைந்தனர்.

பாதுகாப்பிற்கு நிற்கும் போலீஸார்

இதனால், அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. 

http://www.vikatan.com/news/tamilnadu/81040-tense-situation-around-o-panneerselvams-residence.html

Link to comment
Share on other sites

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம்!

o.panneerselvam

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் உட்பட அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய ஓ.பி.எஸ், 'சசிகலாவைத் தவிர அவரது குடும்பத்தினர் வேறு யாரையும் அனுமதிக்க மாட்டேன் என ஜெயலலிதா கூறினார். ஆனால், அவர்களே கழகத்தை இயக்கும் ஒரு துர்பாக்கிய சூழல் உருவாகியுள்ளது. மக்கள் விரோத ஆட்சியை விலக்கி வைக்கும் வரை ஓயமாட்டேம். உறங்க மாட்டோம். குடும்ப ஆட்சியை நீக்க ஜெயலலிதா சமாதியில் சபதம் ஏற்றுள்ளோம்' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81063-opanneerselvam-speaks-at-jayalalithas-memorial.html

Link to comment
Share on other sites

பதவியேற்ற அரை மணி நேரத்தில் அராஜகம்
பன்னீர்செல்வம் வீடு மீது கல் வீசி தாக்குதல்
 

 

  • gallerye_235413384_1712212.jpg

 

 
 

சென்னை:புதிய முதல்வராக, சசிகலா ஆதரவா ளர் இடைப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற அரை மணி நேரத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டின் மீது, ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியது; இதில், அ.தி.மு.க., தொண்டரின் மண்டை உடைந்தது.

 

Tamil_News_large_1712212_318_219.jpg

முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அமைச்சர்களுக்கான பங்களா ஒன்றில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே, அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீடு உள்ளது. நேற்று மாலை, புதிய அமைச்சரவையில், அவரும்
பதவியேற்றார்.

புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற அரை மணி நேரத்தில், சி.வி.சண்முகம் வீட்டிற்கு வெளியே நின்ற மர்ம நபர்கள், பன்னீர்செல்வம் வீட்டின் மீது, சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

அதை தடுக்க முயன்ற, சங்கர் நாராயணன் என்ற போலீஸ்காரர் காயம் அடைந்தார்.பன்னீர் ஆதரவாளரான, கோவில்பட்டியைச் சேர்ந்த,

பாலாஜியின் மண்டை உடைந்து, ரத்தம் கொட்டி யது. அவர், சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்தபோலீசாரால், தாக்குதலை தடுக்க முடியவில்லை.

இதனால், 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டனர்.கல்வீசி தாக்கிய கும்பலை, போலீசார் விரட்டி அடித்தனர். பன்னீர்செல்வம் மற்றும் சி.வி.சண்முகம் வீடு முன் குவிந்து இருந்தோர் வெளியேற்றப் பட்டனர்.

தற்போது, பன்னீர்செல்வம் வீட்டின் முன், ஏராள மான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு பாதுகாப்பு பிரிவு போலீசார், தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டுவருகின்றனர்.தாக்குதலில் காயம் அடைந்த பாலாஜி கூறியதாவது:

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்க, அவரது வீட்டிற்கு வந்தோம். கவர்னர் மாளிகையில், புதிய அமைச்சர்கள் பதவி யேற்பு விழா முடிந்ததும், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள், ௧௦ கார்களில் வந்தனர். சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். ஆட்சி அமைத்த, அரை மணி நேரத்தில், அவர்களின் அராஜகம் துவங்கி விட்டது; எங்களுக்கு பாதுகாப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
 

ஓ.பி.எஸ்., ஆபீசில் நாற்காலிகள் உடைப்பு


முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், போடி தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். நேற்று மாலை சசிகலா ஆதரவாளர்கள், அ.தி.மு.க., நகர செயலர் பாலமுருகன் தலைமையில், பட்டாசு வெடித்து ஊர்வலமாக சென்றனர். பின், 30க்கும் மேற்பட்டோர், எம்.எல்.ஏ., அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து,

 

நாற்காலிகளை உடைத்து சூறையாடினர். தடுக்க வந்த மாணவரணி நகர செயலர் ராஜவேலை கம்பு மற்றும்கம்பியால் அடித்து காயப்படுத்தினர். பதிலடியாக, நகர செயலர் பாலமுருகன் வீட்டில் கல் வீசப்பட்டதில், கார் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது. சம்பவத்தை கண்டித்து, ஓ.பி.எஸ்.,ஆதரவாளர் கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 

'எதிர் விளைவுகளை சந்திக்கும் நிலை வரும்'


பன்னீர்செல்வம் வீடு மீதான தாக்குதல் குறித்து, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த வரை, தினமும், ஆயிரக்கணக்கா னோர், அவரை சந்தித்தனர். பக்கத்தில் உள்ள அமைச்சர், சண்முகம் வீட்டின் முன், சிறு சங்கடம் கூட ஏற்பட்டதில்லை. இடைப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று, 30 நிமிடங்களே ஆகிறது. அதற்குள், கட்சிதொண்டனை, கல்லாலும், தடியாலும் அடித்துள்ளனர்.

சொந்த கட்சிக்காரனை தாக்கும் இவர்கள், எப்படி சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுவர். சசிகலா குடும்பத்திடம், அமைச்சரவையை அடமானம் வைத்துள்ளார் இடைப்பாடி. அதை எதிர்த்து, நாங்கள் தர்ம யுத்தத்தை நடத்துகி றோம். நாம் ஒரே குடும்பத்தில் இருக்கிறோம்; இந்த குடும்பத்திற்குள், சசிகலா என்ற ஆமை நுழைந்திருக்கிறது.

அந்த குடும்பத்தை துாக்கி எறிய வேண்டும். உங்கள் பணியை நீங்கள் தொடருங்கள்; நாங்கள், எங்கள் பணியை தொடர்கிறோம். தாக்குதல்கள் வேண்டாம்; தொடர்ந்தால், எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1712212

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.